Shri Rama Banam

Shri Rama Banam This page is created to bring together all those who accept Shri Ramachandra Murthy as their leader

ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் நடக்கும் மோசடி.  Not for lighthearted.இந்த புகைப்படத்தில் போடப்பட்டிருக்கும் "முகுந்தாச்சாரிய...
28/05/2026

ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் நடக்கும் மோசடி. Not for lighthearted.

இந்த புகைப்படத்தில் போடப்பட்டிருக்கும் "முகுந்தாச்சாரியார்" என்பவர் கோமடம் வம்சம் என்று சொல்லிக் கொள்கிறார். ஸ்வாமி மணவாள மாமுனிகளின் வம்சத்தவர் என்று சொல்லிக் கொள்கிறார்.

ஆனால், நான் விசாரித்தவரை இவர் அப்படி சொல்லிக் கொள்வது போலியானது.

அப்படி இருக்க, ஸ்ரீரங்கத்தில் வசிக்கும், தன்னை ஸ்ரீவைஷ்ண்வன் என்று சொல்லிக் கொண்டு, ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் ஆணிவேரானதிருவரங்கம் திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் நம்பெருமாளுக்கும் பெரிய பெருமாளுக்கும் நடந்த, நடந்து கொண்டிருக்கிற கணக்கிலடங்கா கொடூரங்களை, குறித்து வாய் திறக்காமல் இருக்கும் கீழே உள்ள புகைப்படத்தில் இருப்பவர்கள், இப்படி ஸ்வாமி "மணவாளமாமுனிகள் வம்ஸம்" என்று ஒருவர் தன்னை முறையில்லாமல் சொல்லிக் கொள்ளும் பொழுது, ஸ்ரீரங்கத்திலேயே இருக்கும் ஸ்வாமி மணவாளமாமுனிகள் வம்ஸத்தவர்கள் (ஸ்வாம் மணவாளமாமுனிகள் சந்நதியை அன்றிலிருந்து இன்றுவரை நிர்வகிக்கும் கோமடத்தார்) ஏற்காத இந்த முகுந்தாசாரியார் நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கு உபந்யாசம் செய்கிறேன் என்று போகின்றனரே!!! அப்படி என்றால் இவர்கள் இவரை அங்கீகரிக்கின்றனரா!!

இந்த கேள்வியை நான் கேட்பதற்கு ஒரே ஒரு வ்யக்தி கூட பதில் சொல்லாது என்பது எனக்கு தெரியும். மாறாக, "இவனுக்கு வேறு வேலை இல்லை. எல்லோரையும் குறை சொல்வான்" என்று சொல்வார்கள் என்பதும் எனக்கு தெரியும்.

என்று ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தினை அதன் ஏற்றத்தை புரிந்து கொண்டு, ஸ்வாமி எம்பெருமானாருக்கு தாஸன் என்று பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டேனோ, அன்றிலிருந்து இந்த ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் நடக்கும் அனைத்து அநீதிகளுக்கும், அக்கிரமங்களுக்கும், அட்டூழியங்களுக்கும், பாதுகாவலனாக, அடிநாயேனாக எம்பெருமானுக்கு என்னை எழுதிக் கொடுத்தவன் நான்.

நேரத்துக்கு, ஆளுக்கும், இடத்துக்கும், சௌகரியத்துக்கும், லாபத்துக்கும், புகழுக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு நிறம் மாறும் பச்சோந்தி இல்லை நான்.

திருமாலிருஞ்சோலையில் இருப்பதாகச் சொல்லும் இவர், அங்கே ஸ்ரீ கள்ளழகர் கோவிலுக்கு உள்ளே சட்டவிரோதமாக ஒரு கொலைக்கூடம் (Slaughterhouse) நடத்திக் கொண்டு, ஒவ்வொரு நாளும் பல கணக்கில்லா மிருகங்களை கோவில் வளாகத்திலேயே கொலை செய்து, அங்கேயே அதை சமைத்து உண்டு கொண்டிருக்கும் கேவலத்தை பற்றி வாய் திறக்காமல், அங்கிருந்து இங்கே ஸ்ரீரங்கத்திற்கு வந்து, "பகவத் தத்துவ ஞான உபதேச உபந்யாஸம்" நடத்துகிறாராம்.

இதற்காக கோடிக்கணக்கில் பசூல் வசூல் வேட்டையும் நடக்கின்றது.

எனக்கு தெரிந்தே, ஒரு பெர்ய செல்வந்தரிடம் இவர் சென்று 75 லக்ஷ ரூபாய் அன்னதானத்திற்கு கேட்டுள்ளார்.

அப்படி என்றால் இப்படி எத்தனை பேரிடம் கேட்டாரோ!! என்ன கணக்கு வழக்கோ!!

பெரிய பெருமாள் திருவடியை சரி செய்ய துப்புகெட்ட ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தவர்கள். அதை பேசக் கூட திராணி இல்லாத ஸ்ரீவைஷ்ணவன் என்று துளியும் வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டிருக்கும் வேஷதாரிகள், பணம் சம்பாதிக்க என்னவெல்லாம் செய்கின்றனர்?!!!

யார் இவர்கள்?!! இவர்களை கேட்பாரே இல்லையே!! எங்கே போகிறது ஸ்ரீவைஷ்ணவம்!!

இரண்டு நாட்களுக்கு முன் என் இல்லத்திற்கு சில ஸ்ரீவைஷ்ணவ பாகவதோத்தமர்கள் வந்திருந்தனர். அவர்கள் சொன்னார்கள், சில அப்ராஹ்மண சன்னியாசிகளை ஒரு ஸ்ரீவைஷ்ணவ ஜீயர், சன்னியாசாசிரமம் கொடுத்து, திரிதண்டத்தை கொடுத்து, ப்ராஹ்மணர் அல்லாதவர்களுக்கு நீங்கள் சமாஸ்ரயணம் செய்யலாம் என்று சொன்னதாகவும், அந்த மனிதரை இவர்கள் நேரில் சென்று "உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?! அப்ராஹ்மணர்கள் எப்படி சன்னியாச ஆசிரமம் பெறலாம்? எப்படி சமாஸ்ரயணம் செய்யலாம்?" என்று சுமார் 4 மணி நேரம் கேட்டதாகவும், "உன்னால் ஆனதைப் பார்" என்று தகாத வார்த்தைகளால் அந்த போலி சன்னியாசி இவர்களை வசைபாடி துறத்தியதாகவும் என்னிடம் முறையிட்டனர்.

இப்படி போலிகள் மலிந்துவிட்ட காலம் இது.

அந்த சமயத்தில் இப்படிப்பட்ட, ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் நன்கு பலராலும் அறியப்பட்ட #விஷ்ணுசித்தன், , , #தேரழுந்தூர்_ராமன், #பராசர_பத்ரிநாராயணன், #பரவஸ்து_வரதராஜன், ிஜயராகவன், ேவராஜன், #கபிஸ்தலம்_ஸ்ரீநிவாசாரியார், அரவிந்தலோசனன், #திருக்கோவலூர்_மணிவண்ணன் (இது ஒரு தனி கதை, க்ருஹஸ்தராக இருக்கும் இவர் எப்படி சன்னியாசிக்கு உரிய ஜீயர் என்கிற பெயரை உபயோகிக்கிறாரோ!!), #அக்காரகனி_ஸ்ரீநிதி, #எம்பார்_கஸ்தூரிரங்கன், #சேஷாத்ரி, #ப்ரதிவாதிபயங்கரம்_ராஜஹம்ஸம்_ஸ்வாமி, ுசூதனன், ேங்கடக்ருஷ்ணன், மற்றும் வேறு சம்ப்ரதாயத்தைச் சேர்ந்த , #கருணாகராச்சாரியார், #வாசு, , அரசியலைச் சார்ந்த , #தாம்ப்ராஸ்_நாராயணன் ( has said loads of things about this fellow) மற்றும், யார் என்ன என்று தெரியாத சிலர் (அத்வைதிகள் உட்பட) இங்கே சென்று உபந்யாசம் செய்கின்றனர்.

மேலே குறிப்பிட்ட பெயர்களைத் தவிற மற்றவர்கள் பெயரோ, அவர்கள் டிவ்ட்டர் அக்கவுண்டோ என்னிடம் இல்லை. இருந்தால் அதை கீழே பதிவிடவும் அவர்களை டேக் செய்யவும்.

என்ன வியப்பான விஷயம் என்றால் இந்த தாம்ப்ராஸ் நாராயணன் என்னவெல்லாம் செய்தான் என்று எழுதிய பிறகும், போன்றவர்கள் அவர்கள் இருக்கும் மேடையில் பகிர்ந்து கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது.

சொல்லப்போனால் போவது மிகவும் வருத்தமான விஷயம்.

இப்படி, யாரோ தன்னை ஸ்வாமி மணவாளமாமுனிகள் வம்ஸம் என்று சொல்லிக் கொண்டு பல கோடிகள் செலவிட்டு ஒரு கூத்தை ஸ்ரீரங்கத்தில் நடத்த அதில், பெரிய பெருமாளை கருவேப்பிலை அளவு கூட மதிக்காதவர்கள், அங்கே சென்று ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தை, நாராயண பரத்வத்தை நிலைநாட்ட போகின்றனர் என்பது தான் இன்றைய நிலை.

இந்த படத்தில் இருப்பவர்கள் இந்த அநியாயத்தை அங்கீகரிப்பதை ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் அறிய வேண்டும்.

4.6.2026 முதல் 10.6.2026 வரை நடக்கும் இந்த தெருக்கூத்தில் பேசப் போகும் ஒரே ஒருவராவது பெரிய பெருமாள் திருவடியை பற்றி பேசுவார்களா என்ன?!

ஒன்று மட்டும் நடக்கும். ஆளாளுக்கு சம்பாவனையை அள்ளிச் செல்வார்கள். குறைந்தபக்ஷம் ரூ. 10000 இருக்கும் என்று என் கணிப்பு. எல்லாம் பிணத்தை தின்னும் பணத்துக்கு சமம் என்பது என் கருத்து.

ஆனால் இவர்கள் பெரிய பெருமாளைப் பற்றி ஆத்து ஆத்து என்று ஆத்துவதை கூர்மையாக நான் கவனிப்பேன்.

எப்பொழுது எதிராசனுக்கு அடிநாயேன்!!

ஜெய் ஸ்ரீ ராம்!

பின் குறிப்பு:

இதை படித்துவிட்டு யுட்யூபர் பத்து சீட்டு முகத்துல காறி உமிழ்ந்ததை துடைத்து வெ.மா.சூ.சொ இல்லாமல் சொன்ன சொல்லை காப்பாற்றும் நேர்மை இல்லாத ⁨⁩ போன்றவர்கள், "ரங்கராஜன் 360 டிகிரீ எல்லோரை பற்றியும் அவதூறு பேசுவார். சம்ப்ரதாயத்தில் இருப்பவர்களின் மீதே கம்பு சுத்துவார்" என்று பேசுவார்கள் என்று தெரிந்தே எழுதுகிறேன்!!

பெரிய பெருமாளுக்கும், எம்பெருமானாருக்கும் அடிமையான நான் மற்ற எவர் சொல்வதையும் பொருட்படுத்தாதவன் என்பதை தெளிவு படுத்துகிறேன்

எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்!! இல்லை எனக்கெதிரே!!!

கீழடி ஆராய்ச்சியில் தெரிந்தது என்ன? தமிழர்களும் வந்தேரிகள்தான் என்பதுதான் அதில் தெரிந்தது.கீழே நான் பதிவிட்டது பல டம்ப்ள...
10/01/2026

கீழடி ஆராய்ச்சியில் தெரிந்தது என்ன? தமிழர்களும் வந்தேரிகள்தான் என்பதுதான் அதில் தெரிந்தது.

கீழே நான் பதிவிட்டது பல டம்ப்ளர்களுக்கு புரியவில்லை என்று தோன்றுகிறது.

கிறுக்கு டம்ப்ளர்களுக்கும் டிராவிடியர்களுக்கும் விளக்க வேண்டாமா!!

அதாவது பாருங்க, பாரிசாலன், உடான்ஸ் மன்னன், போன்ற பல தற்குறிகள் இன்று யுட்யூபில் கதறிக் கொண்டிருக்கின்றன. என்ன கதறுகிறார்கள் என்று கேட்கின்றீர்களா!!

"தமிழர்களை கைபர் கனவாய் வழியாக வந்த ஆரிய பார்ப்பனர்கள் அடக்கி ஒடுக்கி அவர்களிடமிருந்து அனைத்தையும் பறித்துக் கொண்டுவிட்டனர்" என்றூ புதறிக் கொண்டிருக்கின்றனர் என்பது உலகப் பிரசித்தி.

அவர்கள் கதறலுக்கு இடி விழுவது போல கீழடி ஆராய்ச்சி அமைந்திருக்கிறது. எப்படி என்று கேட்கிறீர்களா!!

சமீபத்தில் நடத்தப்பட்ட DNA சோதனையில், கீழடியில் இருந்த "தமிழர்கள்" சிந்து சமவெளியிலிருந்து புலம் பெயர்ந்த வந்தேரிகளே! என்பது தெரிய வந்திருக்கிறது.

இதை இன்னமும் தொல்லியல் துறை ஏற்கவில்லை என்பது உண்மைதான். இருந்தாலும், இந்த கிறுக்கர்கள், "ஐயோ! தமிழர்களின் பெருமையை மறைக்க மத்திய அரசு கீழடி ஆராய்ச்சியில் சதி செய்கிறது" என்று கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அதை அப்படியே ஏற்றால், தமிழர்கள் வந்தேரிகள் என்பது அம்பலப்படும்.

இந்த பாதி பொய் சொல்லும் கிறுக்கர்கள் இதுநாள் வரை "ஆரியர்கள் வந்தேரிகள்! கைபர் கனவாய் வழியாக வந்தார்கள்" என்று கதறிக் கொண்டிருப்பது தெரியும். இவர்கள் மதிக்கும் "சம்ஸ்க்ருதம் தெரியாத" அம்பேத்கரே, இந்த ஆரியன் தியரி குப்பைத் தொட்டிக்குத்தான் லாயக்கு என்று எப்பவோ சொல்லிவிட்டார்.

அதை இவர்கள் சொல்லவே மாட்டார்கள். பாதி உண்மை விளம்பிகள். எப்படி "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதை மட்டும் சொல்லிவிட்டு "சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்" என்று பகவத் கீதையில் ப்ராஹ்மண/க்ஷத்ரிய/வைசிய/சூத்திரர்களின் தொழில் என்ன என்று ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மா விளக்கிய வர்ணாசிரம தர்மத்தை 7 வார்த்தைகளில் அடைத்த பரம ஸ்ரீவைஷ்ணவரான வள்ளுவரின் வாக்கில் பாதி உண்மையை மட்டும் எடுத்துக் கொண்டனரோ, அதே போலத்தான் பல விஷயங்களில் இவர்கல் பாதி உண்மை கூறும் தற்குறிகள்

சொல்லப் போனால், கீழடி ஆராய்ச்சியில் வெளிவந்ததை பார்த்தால், தமிழ்நாட்டிற்கு முதலில் வந்தேரியவர்கள் இன்றைய தமிழர்கள் என்பது தெரிகிறது.

இந்த கிறுக்கர்கள், ராவணனை தமிழன் என்று சொல்கின்றனர் என்பதும் இதே பாதி உண்மைதான். ராவணன், வட தேசத்தில் பிறந்தவன். அவன் அங்கிருந்து தெற்கே சென்று செட்டில் ஆன ஒரு அசுரன் அன்பது தெளிவாக ஸநாதனதர்மத்தில் சொல்லப் பட்டிருக்கின்றன. ஆனா, இந்த பாதி உண்மை விளம்பிகள் அதை சொல்ல மாட்டார்கள் இல்லையா?

நன்னடத்தையில் கேடுகெட்ட ராவணனை இவர்கள் கொண்டாடுவதிலிருந்து இவர்கள் நடத்தை தெளிவாக தெரிகிறதல்லவா!!

நடக்கட்டும். கீழடி ஆய்வை மத்திய தொல்லியல் துறை விரைவில் ஏற்றால் இவர்கள் கதி அதோகதிதான்!!

என்ன பாரிசாலன்?! கீழடி ஆய்வை ஏற்றுக் கொள்ளலாமா? அல்லது அதிலும் பாதி உண்மையை மட்டும் ஏற்பீர்களா!!!

டமிள் டம்ப்ளர்கள் எங்கே முகத்தை கொண்டு வைத்துக் கொள்வார்கள்!!

இல்லாத ஆசீவகம் என்கிற ஒரு கற்பனை குதிரையை பற்றி இவர்கள் புலுத்துவதை மற்றொரு பதிவில் எழுதுகிறேன்.

வர்டா!!!

https://youtu.be/kcg5lWqhsII?si=iCjxZHaLQXVAT4P9

ஜெய் ஸ்ரீ ராம்!!

Uncover the groundbreaking scientific discoveries that are rewriting the history of the Tamil people and the Indian subcontinent. This video explores the stu...

10/01/2026

என் பதிவு ஒன்றுக்கு முகநூலில் அன்பர் கேட்ட கேள்பி நியாயமானது. நாக்கை பிடுங்கிக் கொள்வது பொல இருந்தது...

கேள்வி இதோ!!

தான் நடித்த படத்தையே குறித்த திட்டமிட்டபடி நேரத்தில் சட்டரீதியாக வெளியிட முடியாத நடிகர் விஜய் எப்படி நாட்டின் நிர்வாகத்தை தன் கட்சி மூலம் நடத்த இயலும்?!

இந்த ஒரு படத்துக்காகவே இந்த திறைப்படத்தை தடை செய்யணும்.இப்படித்தான் 4-5 பேர் சேர்ந்து ஒரு அப்பாவியை இதை போன்ற கருமத்தை ப...
09/01/2026

இந்த ஒரு படத்துக்காகவே இந்த திறைப்படத்தை தடை செய்யணும்.

இப்படித்தான் 4-5 பேர் சேர்ந்து ஒரு அப்பாவியை இதை போன்ற கருமத்தை பார்த்துவிட்டு செய்தனர்.

சிறு பிள்ளைகளின் ஆழ்மனதில் வன்முறையை அன்றாடம் திறைப்படங்கள் விதைத்துக் கொண்டிருக்கின்றன.

இதை சென்சார் போர்டு பல சமயம் கண்டும் காணாமல் இருந்துவிட்டு திடீரென்று விழித்துக் கொள்ளும் பொழுது அப்படி விழித்துக் கொண்டதை பாராட்டாமல் மூடக்கூட்டம் அவர்களை குறை சொல்கின்றன.

அவர்கள் யோக்கியர்களா இல்லையா என்பதற்கு சான்றிதழ் வழங்கும் அதாரிடி நான் இல்லை. ஆனால் அவர்கள் அப்பழுக்கற்ற யோக்கியர்களாக இருக்க வேண்டும் என்பது அடிப்படை.

சும்மா யுட்யூபில் வாயை வாடகைக்கு விடும் போன்றவர்களை சென்சார் போர்டில் போட்டால் இப்படித்தான் ஆகும். தென்ன மரத்துல ஒரு குத்து பன மரத்துல ஒரு குத்து. (அவருக்கு அழைப்பு வந்ததை அவரே சொன்னார். இப்ப நான் சொன்னா அதை அவதூறு என்று சொன்னாலும் சொல்லலாம்)

இப்படி மிருகத்தைப் போல ரத்தத்தை நக்கும் காட்சிகளோ புகைப்படமோ வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு ஏ சர்டிபிகேட் மட்டுமே கொடுக்க வேண்டும்.

எல்லாவற்றையும் நீர்த்து போகச் செய்தால் நாட்டில் பேயாட்டம்தான் மிஞ்சும்.

இப்படி நடிக்கும் மனிதர்களுக்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற கனவு வேறு.

குடிகார வாத்தியார், பொறுக்கி போலீஸ் என்று சமூகத்தில் யார் யாரெல்லாம் முன்னோடியாக இருக்க வேண்டுமோ அவர்களை எல்லாம் பொறுக்கிகளாக சித்தரித்து நடித்து சிறு குழந்தைகளின் பிஞ்சு மனதில் நஞ்சைப் பாய்ச்சுபவர்கள், பல கோடி ரூபாய்க்கு கார் வாங்க வரி ஏய்ப்பு செய்ய நீதிமன்றம் போனவர்கள், திருட்டு ரயில் ஏரியவர்கள், 21ஆம் பக்கத்துக்கு பொண்டாட்டியை அனுப்புவான் என்று சொன்னவர்கள், கர்பப்பையை அறுத்துப்போடு என்று சொன்னவர்கால் போன்றவர்களால், ஒரு காலத்தில் உலகிலேயே தலை சிறந்த நாடாக இருந்த இந்தியா இன்று சந்தி சிரிக்கிறது.

கலி சீக்கிரம் முடிவுக்கு வரவேண்டும் என்று பெருமானை ப்ரார்திக்கிறேன்

ஜெய் ஸ்ரீ ராம்!

நானும் இரண்டு நாட்களாக பார்க்கிறேன்.  எங்கே பார்த்தாலும் ஸ்ரீரங்கநாதர் கோவில் ஸ்வீட்ஸ்டால் பத்தி ஒரே சத்தம்.இப்படி சோத்த...
08/01/2026

நானும் இரண்டு நாட்களாக பார்க்கிறேன். எங்கே பார்த்தாலும் ஸ்ரீரங்கநாதர் கோவில் ஸ்வீட்ஸ்டால் பத்தி ஒரே சத்தம்.

இப்படி சோத்துக்கு கதறும் மக்கள், ஏன் பெரிய பெருமாள் சிதைந்ததை பற்றி வாய் திறப்பதில்லையோ! 2015ஆம் ஆண்டு சிதைக்கப்பட்டது.

அதற்கு மூன்று வருடங்களுக்கு முன் 2012ல் நம்பெருமாள் உச்சவர் களவாடப்பட்டார்.

இது குறித்து என் புகாரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு வரணையில் நீநீநீநீநீடித்துக் கொண்டிருக்கிறது.

ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஸ்தலத்தார்கள் தீர்த்தக்காரர்களுக்கு தெரியாமல் இது நிகழ வாய்ப்பில்லை அல்லவா?! ஆனால் ஏன் அவர்களோ, அவர்களை ஒருங்கிணைக்கிறேன் பேர்வழி என்று ஒரு சபையை துவக்கிய பாழ்நெற்றி நாராயணன் இது குறித்து பேசவே இல்லை.

இன்று தகுதியற்ற, உரிமையற்ற, சட்ட விரோதமாக கோவிலை கைப்பற்றிய அறநிலையத் துறைக்கு ஸ்வீட்ஸ்டால் பற்றி புகார் எழுதி ஊடகத்தில் ஒரு சில கேடுகெட்ட ஊடகங்களில் செய்தி போட்டு வசூல் செய்யும் இவர்கள் பெருமாள் திருமேனி பற்றி ஏனோ பேசுவதில்லை?!!

இந்த விஷயத்தை எல்லாம் சரியாக நடக்கிறதா என்று பார்ப்பதற்காகவே ஸ்வாமி ராமாநுஜாசார்யரால் நியமிக்கப்பட்ட ஸ்தலத்தார்கள் தீர்த்தகாரர்கள் இந்த ஸ்வீட்ஸ்டால் விஷயத்தை பற்றி ஏன் பேசவில்லை?!

எதாவது நல்ல நல் பார்த்துக் கோண்டிருக்கிறார்களோ என்னவோ?!

அப்படியே நம்ம பாழ்நெற்றி புதியதாக உறுவாக்க சபைக்கு ஒரு ட்விட்டர் ஐடி போடலாமே! அப்பதான் இவர்கள் செயல்பாடுகளை வெளிச்சம் போட வசதியா இருக்கும்..

ஏன்னா நான் நேரா சம்பந்தப்பட்டவர்களை டேக் செய்து பதுவிடுபவன்.

பின்னால போய் புறம் கூறுபவன் இல்லை.

ஸ்ரீரங்கத்ததில் பல நாதாரிகள் இன்றுவரை பெருமாள் திருமேனி பற்றி தெரிந்தும் நவ துவாரங்களையும் இறுக்கி பொத்திக் கொண்டு, கிடைத்ததை சுருட்டிக் கொண்டு போகலாமா என்று வாழ்கின்றனர்.

நடக்கட்டும் நடக்கட்டும்.

தை பிறந்ததும் வழக்குகள் வேகமெடுக்கும். பார்க்கலாம் யார் யார் சிறை செல்கிறார்கள் என்று.

நான் கொடுத்த புகாரில் ஸ்ரீரங்கத்து ஸ்தலத்தார் தீர்த்தக்காரர்களும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் accused.

ஜெய் ஸ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஸ்ரீ ராம்!
ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஸ்ரீ ரங்கநாதா!!!

10/12/2025

திருப்பரங்குன்ற அரசியல்

திருப்பரங்குன்றத்தில் மாற்று மதத்தவர்கள் ஆடு பலியிடுவது மத நம்பிக்கையை கொச்சை படுத்துவதாக உள்ளது என்று நீதிமன்றம் சென்று, ஆடு பலியிடுவதற்கு தடை பெற்றனர்.

மிகச் சரி!!

ஆனால் பாருங்கள்!! ஒவ்வொரு நாளும், இவர்களே பாண்டி முனீஸ்வரர் கோவிலிலும், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலிலும் சட்டவிரோதமாக உயிர்களை கொல்வதை பார்த்து இவர்களுக்கு துளியும் மத நம்பிக்கையை இழிவு படுத்துவதாக தெரியவில்லை!!

இந்த தனக்கு வந்தா ரத்தம், அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்டினி என்பதுதான் அரசியல்.

ஆன்மீகத்தில், எந்த சாஸ்திரத்திலும் உயிர் பலி அனுமதிக்கப் படவில்லை.

பல நேர்காணல்களில் தமிழ் மானில முஸ்லீம் லீக் என்ற கட்சியோ/அமைப்போ அதைச் சேர்ந்த ஷெய்க் தாவூத் என்பவர், தங்கள் மதத்திலும் ஆடு பலி கொடுப்பதெல்லாம் கூடாது என்று சொல்கிறார். அதுவும் அவர்கள் மத நம்பிக்கைக்கு விரோதமானது என்றும் சொல்கிறார்!!

ஆக மொத்தம், இரண்டு மதங்களும் பலி கூடாது என்று சொல்லும் பொழுது, ஒரு மதத்தவர் கொடுக்கும் பலி தன் மத நம்பிக்கையை குலைக்கிறது என்று வாதாடுபவர்கள், தங்கள் மதத்தவர்களே தங்கள் மத கோவில்களில் பலி கொடுப்பதை பற்றி வாய் திறக்காமல் எப்படி இருக்கின்றனர்?!

இதுதானே அரசியல்?!!!!!!

தமிழக தொல்லியல்துறை திருப்பரங்குன்றத்தில் ஆய்வு நடத்துவதாக ் செய்தி பார்த்தேன்.இந்த துறைதான் மானம்பாடி நாகநாத ஸ்வாமி கோவ...
10/12/2025

தமிழக தொல்லியல்துறை திருப்பரங்குன்றத்தில் ஆய்வு நடத்துவதாக ் செய்தி பார்த்தேன்.

இந்த துறைதான் மானம்பாடி நாகநாத ஸ்வாமி கோவிலை புனரமைக்கிறேன் பேர்வழி என்று தரைமட்டமாக இடித்துத் தள்ளியது.

இப்பொழுது இது ஆய்வு செய்ய கிளம்பிவிட்டது.

தூண் இருக்குமா?! போய்விடுமா?!!

அந்த மலையில், எது என்று வந்தது என்று உண்மையைச் சொன்னால் பரவாயில்லை. ஆனால் இதுகளும் கைநாட்டுகளாயிற்றே. எழுதிக் கொடுத்ததில் கையெழுத்து போட்டுத்தான் இதுகளுக்கு பழக்கம்.

நடத்தட்டும்!! என்ன நடத்தினாலும், அந்த தூணில் தீபம் ஏற்றப்படும். ஏனென்றால் அது மத உரிமை. இந்த கிறுக்கு துறை அங்கே சென்று அதை என்னவென்று சொன்னாலும், அங்கே தீபம் ஏற்றியே தீரவேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை!!

சநாதன தர்மத்தினை தக்க வைக்க வேண்டும் என்றால், அடையாளமாக நம் உரிமையை நிலைநாட்ட அந்த தூணில் தீபம் ஏற்றியே தீர வேண்டும். ஆனால் அது சைவ கோவில். சைவ ஸம்ப்ரதாயத்தவர்கள்தான் இதை செயல்படுத்த வேண்டும்.

அடிப்படை உரிமை என்ன என்று தெரியாமல், தெரிந்தாலும் அரசியல்வாதிகளின் காலை நக்கி பிழைத்துக் கொண்டிருக்கும் சிலர் இருக்கும்வரை இது சாத்தியமா என்ற கேள்வி எனக்குள் இருக்கின்றது!!

ஒரு வேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இது நடக்கலாம்!! ஆம், நடக்கலாம் என்றுதான் சொல்கிறேன். நடக்கும் என்று திண்ணமாக சொல்லகூடிய அளவிற்கு இங்கே எல்லா அரசியல்கட்சிகளும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகளாகத்தான் இருக்கின்றனர்.

ஆஸ்திகர்கள், பெருமானை நோக்கி ப்ரார்தனை செய்தாலே ஒழிய இது நடக்காது. அரசியல்வாதிகளை மேலே தூக்கிவைத்து மதகுருமார்களை கீழே தள்ளிக்கொண்டிருந்தால், நீங்களும் அதே குழியில்தான் விழுவீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை!!

நம்மை காப்பது நதமிழக தொல்லியல்துறை திருப்பரங்குன்றத்தில் ஆய்வு நடத்துவதாக

ல் செய்தி பார்த்தேன்.

இந்த துறைதான் மானம்பாடி நாகநாத ஸ்வாமி கோவிலை புனரமைக்கிறேன் பேர்வழி என்று தரைமட்டமாக இடித்துத் தள்ளியது.

இப்பொழுது இது ஆய்வு செய்ய கிளம்பிவிட்டது.

தூண் இருக்குமா?! போய்விடுமா?!!

அந்த மலையில், எது என்று வந்தது என்று உண்மையைச் சொன்னால் பரவாயில்லை. ஆனால் இதுகளும் கைநாட்டுகளாயிற்றே. எழுதிக் கொடுத்ததில் கையெழுத்து போட்டுத்தான் இதுகளுக்கு பழக்கம்.

நடத்தட்டும்!! என்ன நடத்தினாலும், அந்த தூணில் தீபம் ஏற்றப்படும். ஏனென்றால் அது மத உரிமை. இந்த கிறுக்கு துறை அங்கே சென்று அதை என்னவென்று சொன்னாலும், அங்கே தீபம் ஏற்றியே தீரவேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை!!

சநாதன தர்மத்தினை தக்க வைக்க வேண்டும் என்றால், அடையாளமாக நம் உரிமையை நிலைநாட்ட அந்த தூணில் தீபம் ஏற்றியே தீர வேண்டும். ஆனால் அது சைவ கோவில். சைவ ஸம்ப்ரதாயத்தவர்கள்தான் இதை செயல்படுத்த வேண்டும்.

அடிப்படை உரிமை என்ன என்று தெரியாமல், தெரிந்தாலும் அரசியல்வாதிகளின் காலை நக்கி பிழைத்துக் கொண்டிருக்கும் சிலர் இருக்கும்வரை இது சாத்தியமா என்ற கேள்வி எனக்குள் இருக்கின்றது!!

ஒரு வேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இது நடக்கலாம்!! ஆம், நடக்கலாம் என்றுதான் சொல்கிறேன். நடக்கும் என்று திண்ணமாக சொல்லகூடிய அளவிற்கு இங்கே எல்லா அரசியல்கட்சிகளும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகளாகத்தான் இருக்கின்றனர்.

ஆஸ்திகர்கள், பெருமானை நோக்கி ப்ரார்தனை செய்தாலே ஒழிய இது நடக்காது. அரசியல்வாதிகளை மேலே தூக்கிவைத்து மதகுருமார்களை கீழே தள்ளிக்கொண்டிருந்தால், நீங்களும் அதே குழியில்தான் விழுவீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை!!

நம்மை காப்பது நம் இறைவன் ஒருவனே என்ற திண்ணமான உணர்வு வந்த நாள், நாம் உய்வு பெறுவோம். அதுவரை..................................

ஜெய் ஸ்ரீ ராம்!ம் இறைவன் ஒருவனே என்ற திண்ணமான உணர்வு வந்த நாள், நாம் உய்வு பெறுவோம். அதுவரை..................................

ஜெய் ஸ்ரீ ராம்!

10/12/2025

எங்கே போகிறோம்!!!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விஷயம் ஆன்மீகத்திலிருந்து மொத்த மொத்த அரசியலாக மாறிவிட்டது.

ஆதரவு, எதிர்ப்பு என்று, இது நாள் வரை கோவில் பக்கம் தலை வைத்து படுக்காத தற்குறிகள் சமூக வலைத்தளங்களில் பிதற்றிக் கொண்டிருக்கின்றன!

கடவுளை நம்புபவம் முட்டாள், காட்டுமிராண்டி என்று தினமும் பேசுபவர்கள், சநாதனத்தை ஒழிப்போம் என்று சொல்பவர்கள், சநாதனத்தை டெங்கு மலேரியா என்று பேசுபவர்கள் மற்றும் அவர்களுடைய ரூ.200 கொத்தடிமைகள், இப்பொழுது, “தீபத்தூணில் தீபம் ஏற்றுவது ஆகம விரோதமான செயல்” என்று ஆகமத்தை கொண்டாடுகின்றன!

மற்றொரு பக்கம், ஆகமம் என்றால் என்ன என்று தெரியாத, இந்து ஓட்டுக்களுக்காக, சநாதனதர்மத்தை அடகுவைக்கும் கூட்டம். தீபம் எங்கே ஏற்றுவது என்பது ஆகமத்தின் படி சரி என்று பேத்தல்.

ஒரு தீபத்தை ஏற்ற முடியவில்லை அல்லது ஏற்றக் கூடாது என்று போர்கொடி தூக்கும் இரண்டு பக்கமும் மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் 2004ஆம் வருடம் மயிலுருவில் இருந்த பார்வதி தேவியின் திருவுருவத்தை களவாடிய “இந்து”வை பற்றி பேசுவதே இல்லை. மானம்பாடி நாகநாத ஸ்வாமி கோவிலில், கோவிலே இல்லாமல் செய்த பொழுது அதை எதிர்க்காத இந்த தற்குறிகள், இன்று கோவில் இருந்தால்தானே தீபம் என்று தெரிந்தும் அவைகளும் அரசியலாதாயம் தேடிக் கொண்டிருக்கின்றன.

இது போதாதென்று, தமிழ் என்றால் என்ன என்றே தெரியாத பல வடக்கிந்திய தற்குறிகளும் ஆதரவாகவும் எதிராகவும் செய்தி ஊடகங்களில் சண்டை போட்டுக் கொண்டு கத்திக் கொண்டு நம் நாட்டின் மானத்தை வாங்கிக் கொண்டிருக்கின்றன.

ஒரு தற்குறிக்கு தீபத்தூண் என்றால் என்ன என்றே தெரியாமல், அதை எதிர்த்துக் கொண்டு இருக்கின்றது. மற்றொரு தற்குறி திருப்பரங்குன்றம் என்று ஒழுங்காக சொல்ல கூட தெரியாமல், அந்த கோவிலில் இருக்கும் பெருமானை பற்றியோ அந்த கோவிலின் ஆன்மீக சிறப்பு பற்றியோ துளியும் தெரியாமல் ஆதரவாக பேசுவதாக நினைத்துக் கொண்டிருக்கின்றன.

இவை ஒரு பக்கம் என்றால், இதை பற்றி பேச வேண்டிய மதகுருமார்கள் வாய் திறக்காமல் இருக்கின்றனர். ஒருவர், இதை ஏற்றுவதால் தன் மதத்திற்கு எப்படி குந்தகம் விளையும் என்று சொல்லாமலும், மற்றொருவர் இதை ஏற்றாவிட்டால் தன் மத உரிமை எப்படி போகும் என்றும் உலகிற்கு விளக்க முன்வரவில்லை.

விளக்கு ஏற்றுவதன் தாத்பர்யம் என்ன, அதை ஏன் நாம் செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், இப்படி தடைகள் வந்தால், ஆஸ்திகர்கள் அதை எப்படி அணுக வேண்டும், இதை செய்ய முடியாமல் போனால் என்ன என்ன ப்ராயச்சித்தங்கள் செய்ய வேண்டும் போன்றவற்றை சொல்ல ஒரு மதகுருமாரும் முன் வரவில்லை.

கோவிலில், அறங்கெட்டதுறையின் அராஜகத்தில் தத்தளிக்கும் அர்ச்சகர்கள், பயத்தால், “அதிகாரிகள்” சொல்வதைப் போல எழுதி கையெழுத்து போட்டுக் கொண்டு திரிகின்றனர். அந்த கோவிலுக்கு சம்பந்தமில்லாத சில குருக்கள், தங்களை ஆகம மேதைகள் என்று சொல்லிக் கொண்டு, ஒரு பிரமாணமும் இல்லாம, தங்கள் “அபிப்ராயத்தை” சொல்லிக் கொண்டு, கையெழுத்து போட்டுவிட்டு, “ஏன் போட்டீர்கள்?” என்று கேட்டால், பூசி மொழுகி பதில் சொல்லுகின்றன.

ஆக மொத்தம், பெருமான் நம் அனைவரையும் பார்த்து கைகொட்டி சிரித்துக் கொண்டிருக்கிறான். இவை எல்லாம், நம் நாட்டு மக்களின் மனதை ஒவ்வொரு நாளும் சிதைத்துக் கொண்டு, நாட்டின் அமைப்புகளின் மீது நம்பிக்கையை வேகமாக குறைத்துக் கொண்டு வருவதை என்னால் பார்க்க முடிகின்றது.

நாட்டின் அமைப்புக்களில் நம்பிக்கை இழந்தால் என்ன ஆகும் என்று சமீபத்தில் நம் அண்டை நாடுகளில் பார்த்தோம். அந்த நாளை வெகு விறைவில் நம் நாட்டிற்கும் வரும் என்று நான் கருதுகிறேன். வரக்கூடாதுதான். ஆனால், யாரால் இந்த மாப் மெண்டாலிடியை தடுக்க இயலும்!?!!!!!!!

சுய அறிவில்லாமல், சுய நினைவில்லாமல் கதறிக்கொண்டு அரசியலாக்கிக் கொண்டு, குழம்பிய குட்டையில் மீன் பிடித்துவிடலாம் என்று, இல்லாத மீனுக்கு தூண்டில் போட்டுக் கொண்டிருந்தால், இந்த நிலை சமூகத்தை எப்பொழுது பிளக்குமோ என்று அச்சத்தோடு நான் நோக்குகிறேன்.

அடுத்த வீட்டில் இருப்பவர் மாற்று மதத்தவராக இருந்தால், நம் வீட்டில் நம் பண்டிகையை கொண்டாடக் கூடாது என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டிருப்பது வேதனையை கொடுக்கிறது. இதற்கு முழு பொறுப்பு அறிவுகெட்ட அரசியல்வாதிகள்.

இவர்கள் சம்பாதித்தது போதாதா? அனுபவித்தது போதாதா? நம் நாட்டை பிளந்து எரித்து சாம்பலாக்கினால்தான் இவர்களுக்கு நிம்மதி வருமா? அப்படி நாடு எரிந்தால், இவர்களும் சேர்ந்து எரிந்து போகமாட்டார்களா?! என்ன கொடுமையடா இது!

கத்தியை எடுத்தவனுக்கு கத்தியிலேயே சாவு என்பார்கள். அரசியலை எடுத்தவர்களுக்கு அரசியலே முடிவுகட்டும் நிலை.

இரண்டு மதத்தவர்களும் சுமுகமாக இருக்க, ஒரு அரசியல்வாதி வேண்டுமென்றே மேலே சென்று அசைவம் உண்பதும், மற்றொரு அரசியல்வாதி அங்கே சென்று அயோத்தியை போல என்று சொல்வதும், என்னய்யா நடக்குது இங்க?!! எங்களை துண்டாடாமல் உங்களுக்கு உறக்கம் வராதா?!

கடந்த 5 நாட்களாக, நாட்டில் நடக்கும் பல இன்னல்களை பற்றி யாருமே பேசாமல், விளக்கேற்றலாமா வேண்டாமா என்று பேசிக் கொண்டிருக்கின்றீர்களே!!! உங்கள் வீட்டில் விளக்கேற்றினீர்களா?!

அரசியல்வாதிகளை முன்னுக்கு வைத்து அவர்கள் முதுகுக்கு பின் ஒளிந்து கொண்டு, அவர்கள் போடும் எலும்புத்துண்டுகளுக்கு மதகுருமார்கள் வாலாட்டிக் கொண்டிருந்தால், இப்படித்தான் நம் நாடு அழிந்து போவதை நம் கண்முன் பார்த்துக் கொண்டு கையறுநிலையில் நாம் இருக்க வேண்டும்!!

ஜெய் ஸ்ரீ ராம்

14/11/2025

காஞ்சீபுரம் ஶ்ரீ தேவராஜ பெருமாள் கோவிலில் தங்க பல்லி திருட்டு முயற்சி குறித்து இடம் வலம் யுட்யூப் சேனலில் என்னுடைய நேர்காணல்

ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஶ்ரீ ராம்!
ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!

11 மாதங்களுக்கு பிறகு இன்று என்னுடைய லேப்டாப், ஐபேட், மொபைல் போன், சிசிடிவி கேமரா முதலியவைகள் நீதிமன்றத்தின் உத்தரவின் ப...
14/11/2025

11 மாதங்களுக்கு பிறகு இன்று என்னுடைய லேப்டாப், ஐபேட், மொபைல் போன், சிசிடிவி கேமரா முதலியவைகள் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் திரும்ப கிடைக்கப் பெற்றேன்.

நம் இனிய இந்திய நாட்டின் பிரஜையாக இருப்பதற்கான விலை இது

ஜெய் ஶ்ரீ ராம்

Address

Tiruchirappalli
620006

Alerts

Be the first to know and let us send you an email when Shri Rama Banam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Shri Rama Banam:

Share