St.Sebastian Church,Kottapalayam

St.Sebastian Church,Kottapalayam அஞ்ஞான இருளில் மெய்யான ஒளிக்கதிராய் இருந்த புனித செபஸ்தியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

வரலாறு :
இடம்: திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கோட்டப்பாளையம்


ஆலய வரலாறு :

1901 ம் ஆண்டு சிறிய கூரை கோவில் ஆக கட்டப்பட்டது 1903 ல் ஓட்டுக்கோவில்லாகவும் பிறகு 1907 முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டது 1917ம் ஆண்டு பின் பகுதி கோபுரதில் 6 அடி சிலுவை நிறுவப்பட்டது
புனித செபஸ்தியார் கோவில் முக்கியமானது பீடமாகும் இது பழங்கால கட்டக் கலைக்கு ஒரு சான்று ஆகும். பீடத்தின் மத்தியில் செபஸ்தியார் சுருபம்

வைபதற்கு இடமும் இரு புறம் காவல் சம்மனசு மற்றும் மாதா வை பதற்க்கான இடமும் உள்ளது இந்த அமைப்பு படிக்கட்டுகளை போன்றது ஆகும் .அதற்க்கு கீழ் மெழுகுத்திரிகள் வை பதற்கு இடமும் உள்ளது.......
கோவிலின் வெளிபுரம் சரியாக பராமரிக்காமல் ரொம்ப நாளாக இருந்தது அப்போதய பங்குதந்தை அருள்தந்தை.தனராஜ் அவர்களின் முயற்சியாலும் செபஸ்தியார் கோவில் பகுதி இறைமக்களின் கடுமையான முயற்ச்சியாலும் சீரும் சிறப்பும் மாக 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ம் நாள் அப்போதய பங்குதந்தை V.I.பீட்டர் அவர்களாலும் அப்போதய ஆயர். பேரருள்திரு.பீட்டர் ரெமிஸியூஸ் அவர்களால் மந்திரிக்கப்பட்டு புதுமை படுத்தப்பட்டது.....

குறிப்பாக செபஸ்தியார் கோவில் பகுதி இறைமக்கள் ,இளைஞர்கள் மற்றும் சிலரின் நன்கொடையாலும் ஆலயம் கட்டப்பட்டது....

கடந்த ஆண்டு 2013 ல் இளைஞர்களின் முயற்சியால் கோவிலின் உட்புற சுவர்களில் வெள்ளை அடிக்கப்பட்டு பாடுட்ட சுருபம் இருக்கும் சுவர்ரின் படம் வரையப்பட்டது சிலுவையின் இருபுறமும் மாதாவும் புனிதரின் படங்களும் வரையப்பட்டது ...

2001 ம் ஆண்டு வரை திருவிழா பாஸ்கா காலத்திற்கு முதல் வாரத்தில் நடத்தப்பட்டது ஆனால் அதற்கு பிறகு வந்த பங்குதந்தை V.I.பீட்டர் அவர்களின் அறிவுருத்தலின் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 12 ம் தேதி கொடியேற்றப்பட்டு அதே மாதம் 18,19,20 ஆகிய தேதிகளில் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.......

புனித செபஸ்தியார் இளைஞர் அணி உருவாக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது


ஆண்டு திருவிழா:
கொடியேற்றம்: ஜனவரி 12ம் தேதி மாலை 6 மணி
திருவிழா:
18 ம் தேதி நவநாள் திருப்பலி
19 ம் தேதி நவநாள் திருப்பலி திருப்பலி முடிந்த பிறகு இளைஞர்களின் நன்கொடையில் அன்னதானம் நடைபெறும்

இரவு 10 மணியளவில் மின் விளக்கு மற்றும் மலர் அலங்காரத்துடன் சப்பர பவணி நடைபெறும்
20 ம் தேதி காலை 7 மணி க்கு திருவிழா திருப்பலி மதியம் 2 மணி அளவில் மலர் அலங்காரத்துடன் சப்பர வீதியுலா நடை பெறும்

23 ம் தேதி கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.........

கோவில் வளர்ச்சிக்காக நன்கொடை வரவேற்க்கப்படுகின்றன
தொடர்புக்கு:
ராஜீ ஆசிரியர்,தலைவர்,
ம.ஆரோக்கியசாமி,பொருளாளர்,
செபஸ்தியார் கோவில் கிராமம்,
கோட்டப்பாளையம்-621003
துறையூர் வட்டம்,திருச்சி மாவட்டம்

Address

St. Sebastian Church † † , Kottapalayam (po) , Thuraiyur (Tk) Trichy
Tiruchirappalli
621003

Website

Alerts

Be the first to know and let us send you an email when St.Sebastian Church,Kottapalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to St.Sebastian Church,Kottapalayam:

Shortcuts

Share