22/06/2022
எச்சரிக்கை பதிவு:
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் என்னும் ஊரில் அருள்மிகு பூமிநாதர் ஆலயம் உள்ளது.. திருமதி பாப்பம்மாள் இந்த கோவிலை 1860 ஆம் ஆண்டு கட்டினார்.அதற்காக 3000 ஏக்கர் விவசாய நிலத்தை தானமாக அளித்து, திருவாவடுதுறை ஆதீனத்தை தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இந்த கோவிலை நிர்வகிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி திருவாவடுதுறை ஆதீனம் மாத்திரம் திருமதி பாப்பம்மாள் சத்திரத்திற்கு முறையே பூஜைகள் பகிரப்படுகின்றன.இந்தப் பகுதியில் கோயில் இல்லை, மக்கள் வழிபட வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும். அதனால் இந்த இடத்தில் கோயில் இல்லாததால் திருமதி பாப்பம்மாள் குடும்ப உறுப்பினர்களுக்காக இந்தக் கோயில் கட்டப்பட்டது.. அதனால்தான் அவர்கள் தர்மசவர்த்தினி (அறம் வளர்த்த நாயகி என்று பொருள்படும்) பூமிநாதர் என்று கடவுளுக்குத் தங்கள் சொந்தப் பெயர்களை வைத்தனர். இது பாடல் பெற்ற தலம் கிடையாது. இங்கு இருக்கும் வன்னி மற்றும் விலுவ மரம் ,சில வருடங்களுக்கு முன்பு தான் வைக்க பட்டது.. இந்த ஆலயம் கட்டிய நாள் முதல் மண் கட்டும் பூஜைகள் இல்லை.. மண் அரக்கன் என்று எந்த ஒரு அரக்கணும் இங்கு வாழவில்லை.. சிவ பெருமான் இங்கு வதம் செய்யவில்லை.. இவை அனைத்தும் அங்கு வேலை பார்க்கும் குருக்கள் திரு .கிரி அவர்களால் இயற்றபட்ட கட்டு கதை.. இதை அவர் தன் வாயலே சொன்னது.. அவருக்கு வருமானம் போதவில்லை என்றும் மேலும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் தான் இப்படி ஒரு பூஜை முறையை செய்கிறேன் என்று சொல்லியுள்ளார்.. அதன் படி 2006 ஆம் ஆண்டில் இந்த கோவிலுக்கு இப்படி ஒரு வரலாறு உள்ளதாக செய்தித்தாள்களிள் விளம்பரம் செய்து அதனால் நல்ல reach கிடைத்து அதிகமாக மக்கள் வருவதாகவும் சொன்னார்.., இதனை அடுத்து தனியார் tv சேனல்களில் ( murasu,vasanth etc) குறும்படமாக திரையிடப்பட்டது .இதன் பிறகு மக்கள் கூட்டம் அதிகரித்தது. மண் எடுக்கும் பூஜைக்கு சுமார் ₹3,000 முதல் ₹15,000 ரூபாய் வரை வசூலிக்க படுகிறது.. இதற்கு ரசீது கொடுப்பது இல்லை.. அது மட்டும் அல்லாமல் சில ஜோதிடர்களி்டம் இந்த கோவிலை பரிந்துரை செய்யும்படி கேட்டுள்ளார்கள்..
இந்த கோவில் பரிகார தலம் இல்லை என்றும் மண் பூஜை செய்யும் முறை இல்லை என்றும் கேட்டு கொள்கிறேன்..
ஜோதிடர் என்பவர் மக்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்., அதனால் தயவு செய்து இந்த கோவிலுக்கு சென்று மண்ணை கட்டி பூஜை செய்யுங்கள் என்று சொல்ல வேண்டாம் என்று திருமதி பாப்பம்மாள் சார்பாக கேட்டு கொள்கிறேன்..
இதில் மிகவும் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான் என்ற காரணத்திற்காக தான் இந்த பதிவு..
மேலும் இந்த கோவில் சோழர்களால் கட்டப்பட்டது இல்லை.., ஏனென்றால் சோழர்களின் காலம் கிபி 12 ஆம் நூ்றாண்டில் முடிந்து விட்டது...
பின்குறிப்பு:1.ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டு, நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் இந்த கோவில் பற்றிய குறும்படம் மற்றும் விளம்பரங்களை நிறுத்த நீதிமன்றம் தடை விதித்தது.
2. கீழே சில ஆதாரங்கள் படங்களாக பதிவிடபட்டுள்ளது .
இனிமேல் தயவு செய்து உண்மையை ஆராயாமல் எதையும் பதிவிடாதீர்கள்
படம்-1: திருமதி பாப்பாம்மாள் , திருவாடுதுறை ஆதீனத்திருக்கு எழுதி கொடுத்த கல்வெட்டு மற்றும் இந்த கோவில் கட்டுவதற்காக அடி கல் வைத்து பூஜை செய்யும் காட்சி ( வர்ணங்களால் வரையப்பட்டது )
படம்-2: இப்போதும் திருவாடுதுறை ஆதீனம் மற்றும் பாப்பம்மாள் சத்திரம் சார்பாக கட்டளை பூஜை செய்ய படுவதற்கான சாட்சி.
இப்படிக்கு
தாரா @ தர்மசவர்தினி.S
திருமதி பாப்பம்மாளின் நேரடி சட்ட வாரிசு
மண்ண்சநல்லூர்