Om Sivamayam ஓம் சிவமயம்

Om Sivamayam ஓம் சிவமயம் நல்லதே நடக்கும்

தினந்தோறும் திருப்புகழ்திருப்புகழ்  1   கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி     கப்பிய கரிமுகன்.....அடிபேணிகற்றிடும் அடிய...
12/05/2026

தினந்தோறும் திருப்புகழ்
திருப்புகழ் 1

கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி
கப்பிய கரிமுகன்.....அடிபேணி
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை.....கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய.....மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டு அவிழ் மலர்கொ(ண்)டு.....பணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய.....முதல்வோனே
முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம்
அச்சு அது பொடிசெய்த.....அதிதீரா
அத்துயர் அது கொ(ண்)டு சுப்பிரமணி படும்
அப்புனம் அதனிடை.....இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கணம் மணம் அருள்.....பெருமாளே.
........ சொல் விளக்கம் .........

கரதலத்தில் நிறைந்துள்ள பழம், அப்பம், அவல், பொரி (இவைகளை) வாரி உண்ணும் யானை முகக் கடவுளின் திருவடிகளை விரும்பி, அறிவு நூல்களைக் கற்கும் அடியவர்களுடைய மனதில் நீங்காது வாழ்பவனே, நினைத்தவற்றை அளிக்கும் கற்பக விருட்சமே, என்று உன்னைத் துதி செய்தால் வினைகள் யாவும் விரைவில் ஓடிப் போய்விடும். ஊமத்த மலரும், (பிறைச்) சந்திரனும் சடையில் தரித்த சிவபெருமானுடைய மகனும், மற்போருக்குத் தக்க திரண்ட தோள்களையுடையவனும், மத யானையை ஒத்தவனும், மத்தளம் போன்ற பெருவயிறு உடையவனும், உத்தமியாகிய பார்வதியின் மகனும் ஆகிய கணபதியைத் தேன் துளிர்க்கும் புது மலர்களைக் கொண்டு நான் வணங்குவேன். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நூல் முறைமையை, மலைகளுள் முற்பட்டதான மேரு மலையில் முதல் முதலில் எழுதிய முதன்மையானவனே, (அசுரர்களின்) திரி புரங்களையும் எரித்த அந்தச் சிவ பெருமான் எழுந்தருளிய ரதத்தின் சக்கர அச்சை ஒடித்துத் தூளாக்கிய மிகுந்த தீரனே, (வள்ளி மீது கொண்ட காதலாகிய) அந்தத் துயரத்தோடு (உன் தம்பியாகிய) சுப்பிரமணியன் நடந்த அந்தத் தினைப் புனத்திடையில் யானையாகத் தோன்றி, அந்தக் குற மகளாகிய வள்ளியுடன் அந்தச் சிறிய முருக வேளை அத்தருணத்திலேயே மணம் புரியுமாறு திருவருள் பாலித்த பெருமாளே

https://youtu.be/JH-3gBBv5vI
15/10/2025

https://youtu.be/JH-3gBBv5vI

🙏🔥Om Sivamayam ஓம்சிவமயம் Youtube Channel | Om Sivamayam Youtube Channel | Om Sivamayam ஓம்சிவமயம் ்சிவமயம் Social Media: http...

https://youtu.be/Gr6nl2dK9hk
15/10/2025

https://youtu.be/Gr6nl2dK9hk

ஓஷோவின் போதனைகள் | ஓஷோவின் தத்துவங்கள் | Osho Quotes Tamil | Om Sivamayam ஓம் சிவமயம் ்சிவமயம் So...

தியானம் செய்யும்போதுஎண்ண இடையூறுகளைதவிர்ப்பது எப்படி????என்று கேட்கும் நண்பர்களுக்காகஒரு எளிமையான ஜென் தியானம்.ஜென் தியா...
06/10/2025

தியானம் செய்யும்போது
எண்ண இடையூறுகளை
தவிர்ப்பது எப்படி????
என்று கேட்கும் நண்பர்களுக்காக
ஒரு எளிமையான ஜென் தியானம்.

ஜென் தியானம் ஒருவனை உள்நோக்கிப் பயணம் செய்யச் சொல்கிறது.

உள்ளே நடக்கும் அனைத்திற்கும் ஒரு பார்வையாளனாக இருக்க வலியுறுத்துகிறது.

எண்ணங்களை எந்த விதமானமான தணிக்கைகளும், தீர்ப்புகளும் இன்றி கவனிப்பது முக்கியம்.

இனி இந்த எளிய தியான முறைக்குச் செல்லலாம்.

1) அமைதியான இடத்தில் சௌகரியமாக அமர்ந்து கொள்ளுங்கள்.

2) இயல்பாக மூச்சு விட்டு மூச்சு சீராகும் வரை மூச்சில் கவனம் செலுத்துங்கள்

3) இனி உங்கள் எண்ணங்களை விருப்பு வெறுப்பு இல்லாமல் கண்காணியுங்கள். இந்த எண்ணம் நல்லது, இந்த எண்ணம் கெட்டது என்ற பாகுபாடுகள் வேண்டாம். வெறுமனே கவனியுங்கள். உங்கள் எண்ணங்களுக்கு நீங்கள் பார்வையாளனாக இருங்கள்.

4) கூர்மையாக கவனிக்கப்பட, கவனிக்கப்பட மனதின் எண்ணங்களின் எண்ணிக்கை, வேகம் குறைய ஆரம்பிக்கும்.

ஒரு பார்வையாளனின் தொடர்ந்த கண்காணிப்பில் எவர் செயல்களும் சற்று குறையவே செய்யும். மனமும் அதற்கு விதிவிலக்கல்ல.

5) ஒரு எண்ணம் மனதில் எழுகிறது. அதைக் கவனிக்கிறீர்கள். இன்னொரு எண்ணம் எழுகிறது. அதையும் கவனிக்கிறீர்கள். எண்ணங்கள் குறையக் குறைய இன்னொரு அழகான அனுபவமும் நிகழும். அது என்ன தெரியுமா?

ஒரு எண்ணம் முடிந்து இன்னொரு எண்ணம் எழுவதற்கு இடையே உள்ள இடைவெளி. அதையும் கவனியுங்கள். அந்த இடைவெளியில் தான் மனம் மௌனமாகிறது. அது தான் மனமில்லா நிலை. அது மிக அழகான அனுபவம்.

6)எண்ணம்-இடைவெளி-எண்ணம்-இடைவெளி என ஒவ்வொன்றையும் எந்த விமரிசனமும் இன்றி கவனியுங்கள்.

ஆரம்பத்தில் சில மைக்ரோ வினாடிகள் தான் அந்த இடைவெளி இருக்கும். உங்கள் தியானம் ஆழமாக ஆழமாக அந்த இடைவெளிகளின் கால அளவும் அதிகரிக்கும். அந்த மனமில்லா நிலை தான் தியானத்தின் உச்சக்கட்டம்.

7) ஆனால் இடைவெளிகளையே அதிகம் நீங்கள் எதிர்பார்த்தால் தோற்றுப் போவீர்கள். ஏனென்றால் இடைவெளியின் மீது உங்களுக்கு விருப்பம் ஏற்பட்டு விட்டது என்றால் விருப்பு வெறுப்பற்ற பார்வையாளனாக இருக்க உங்களுக்கு முடியாது. அது முடியா விட்டால் தியானமும் நிகழாது.

8) எண்ணம் எழுவதைக் கவனிப்பதும் ஒன்று தான். இடைவெளி வருவதைக் கவனிப்பதும் ஒன்று தான் என்கிற சமமான மனோபாவமே இங்கு முக்கியம்.

சூரிய ஒளியை ரசிக்கிறீர்கள். அடுத்ததாக மேக மூட்டம் வருகிறது. அதையும் ரசிக்கிறீர்கள். இதில் நீங்கள் எதையும் தேர்ந்தெடுப்பதில்லை. நிகழ்வதைக் கவனிக்கும் சம்பந்தமில்லாத பார்வையாளனாக இருக்கிறீர்கள்.
இது தான் சரியான மனநிலை.

9) தியானம் ஆழப்பட்ட பின் பேரமைதியை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். விருப்பு வெறுப்பில்லாத அந்த பார்வையாளனின் மனோபாவம் உங்களிடம் உறுதிப்பட ஆரம்பிக்கும்.

அது தியான சமயங்களில் பூரணமடைந்தால் மற்ற நேரங்களிலும் உங்களிடம் தங்க ஆரம்பிக்கும். தினசரி வாழ்க்கையே தியானம் ஆக ஆரம்பிக்கும். ஆரவாரங்களுக்கு நடுவேயும் நீங்கள் தியான நிலையில் இருக்க முடியும். ஜென் தியானத்தின் குறிக்கோளே அது தான்.

ஓஷோ.

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் தனிச்சந்நிதியில் கோலோச்சும் ஸ்ரீபிரம்மாவை, கண் குளிரத் தரிசிப்போம்; மனம் குளிரப்...
05/10/2025

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் தனிச்சந்நிதியில் கோலோச்சும் ஸ்ரீபிரம்மாவை, கண் குளிரத் தரிசிப்போம்; மனம் குளிரப் பிரார்த்திப்போம்.

05/10/2025

🌹 புரட்டாசி மாதம்...

இந்த மூன்று விஷயங்களை செய்பவர்களுக்கு மாற்றம் நிச்சயம்...!!

புரட்டாசி மாதம்... இந்த மூன்று விஷயங்களை செய்தாலே போதும்...!!

🙏 மனிதர்களாக பிறந்த அனைவரது வாழ்க்கையிலும் ஏற்படக்கூடிய கஷ்டங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் அவரவர் செய்த கர்ம வினைகள் தான் காரணம். நாம் செய்த பாவ புண்ணிய கணக்குகளுக்காக தான் கடவுள் நமக்கான தண்டனையை கொடுக்கின்றார்.

🙏 நாம் செய்த கர்ம வினைகளை... பாவங்களை கழிப்பதற்கு சாஸ்திர ரீதியாக நமக்கு நிறையவே வழிபாட்டு முறைகள் சொல்லப்பட்டுள்ளன. அதில் ஒரு சுலபமான பெருமாள் வழிபாட்டினை பற்றி இங்கு காண்போம்...!!

🙏 பெருமாள் வழிபாடு புண்ணியத்தை சேர்ப்பது. பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு வந்தாலே போதும். நமக்கு அது புண்ணியம் தான்.

🙏 இருப்பினும் பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை வணங்குவதற்கு என்று சாஸ்திரத்தில் சில வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. முறைப்படி நம் பெருமாள் கோவிலுக்கு சென்றால் இந்த மூன்று விஷயங்களை கட்டாயம் செய்தே ஆகவேண்டும். அது என்னென்ன விஷயங்கள்?

🍷 முதலாவது பெருமாள் கோவில் தீர்த்தம். நம்முடைய உடலில் கண்ணுக்கு தெரியாத எந்த பிணி இருந்தாலும் அதை தீர்க்கக்கூடிய சக்தி, இந்த பெருமாள் கோவில் தீர்த்தத்திற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. தீர்த்த ரூபத்தில் நம் கையில் வருவது அந்த பெருமாள் தான். ஆக பெருமாள் கோவிலுக்கு சென்றால் கட்டாயமாக தீர்த்தத்தை வாங்கி பருகிக் கொள்ளுங்கள்.

🌿 இரண்டாவதாக துளசி. பெருமாளுக்கு சூடியிருக்கும் துளசியை நம் கையில் வாங்கி நம் கண்களில் ஒற்றிக் கொண்டாலே போதும் பெருமாளின் அன்பினை நாம் முழுமையாகப் பெற்று விடலாம். பெருமாளின் அன்பை பரிபூரணமாக பெற வேண்டும் என்றால் பெருமாள் கோவில் துளசியை கட்டாயம் நம் கைகளில் வாங்கி, நம் வீட்டிற்கு எடுத்து வர வேண்டும். பெருமாள் கோவிலில் கொடுக்கும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

🎩 இறுதியாக சொல்லப்படுவது சடாரி. இதுதான் நம்முடைய தலையெழுத்தை மாற்றக்கூடியது. அந்த பிரம்மா நம்முடைய தலை எழுத்தை எப்படி கிறுக்கி வைத்திருந்தாலும் சரி, அதை சரி செய்யக்கூடிய சக்தி இந்த சடாரிக்கு உண்டு. சடாரிக்கு 'பாதுகை" என்ற மற்றொரு பெயரும் இருக்கின்றது. 'பா" என்றால் பாவத்தை விளக்குவது என்று பொருள். 'து" என்றால் துன்பங்கள் விலகும் என்பதும் பொருள். 'கை" என்றால் அந்த பெருமாளே நம்முடைய வாழ்க்கையை கை கொடுத்து மேலே தூக்கி விடுவார் என்பது பொருளாக சொல்லப்பட்டுள்ளது.

🙏 இவ்வாறு நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் பாவங்கள் விலகி, துன்பங்கள் விலகி, வாழ்க்கையில் மேலே ஏறி வர வேண்டும் என்றால் பெருமாள் வழிபாட்டை தூய்மையான மனதோடு, ஆத்மார்த்தமாக வழிபாடு செய்தாலே போதும். பல நன்மைகள் நம்மை தேடி வரும்.

🙏 இந்த புரட்டாசி மாதத்தில் ஒரு நாளாவது பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாள் கோவில் தீர்த்தத்தைப் பருகி, பெருமாள் கோவில் துளசியை உங்கள் கையால் வாங்கி, சடாரியை உங்களுடைய தலையில் வைத்து கொள்ளுங்கள். நிச்சயமாக வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும்.

அருட்பிரகாச  #வள்ளலார்  201வது ஆண்டு அவதார தினம் இன்று ❤️🇮🇳🙏 #தனிப்பெருங்கருணைதினம்  #நமசிவாயவாழ்க ஜோதி அருட்பிரகாச வள்ள...
05/10/2025

அருட்பிரகாச #வள்ளலார் 201வது ஆண்டு அவதார தினம் இன்று ❤️🇮🇳🙏
#தனிப்பெருங்கருணைதினம்
#நமசிவாயவாழ்க
ஜோதி அருட்பிரகாச வள்ளலார் கூறிய அறவழி அன்பு வாழ்வை கடைபிடிப்போம் 🙏
1- நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே

2-தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே

3-மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே

4-ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே

5-பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே

6-பசித்தோர் முகத்தைப் பாராதிராதே

7-இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே

8-குருவை வணங்கக் கூசி நிற்காதே

9-வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே

10-தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.

11-பிறரை இகழ்ந்து பேசாதே..

12-பிற ௨யிர்களிடமும் ௮ன்பு கொள்க 🙏

🙏🙏கருப்பசாமி இருக்க பயமேன் 🙏🙏🙏Follow our page 👍👍
04/10/2025

🙏🙏கருப்பசாமி இருக்க பயமேன் 🙏🙏🙏
Follow our page 👍👍

சிவன்மலை ஆண்டவர் உத்தரவு கண்ணாடி பெட்டியில்  #கடல்நீர்
04/10/2025

சிவன்மலை ஆண்டவர் உத்தரவு
கண்ணாடி பெட்டியில் #கடல்நீர்

வள்ளலார் சுவாமிகள் ஜெயந்தி🌼 (5_10_25)தன்னை பரிசுத்தமாக்கும் திருவருட்பா பாடல்🌼 தத்துவ வெற்றி - திருவருட்பா 🌷வள்ளலார் சுவ...
04/10/2025

வள்ளலார் சுவாமிகள் ஜெயந்தி🌼 (5_10_25)

தன்னை பரிசுத்தமாக்கும் திருவருட்பா பாடல்🌼

தத்துவ வெற்றி - திருவருட்பா 🌷
வள்ளலார் சுவாமிகள் அருளியது🌼

ஓம் ராமலிங்க வள்ளலார்சுவாமியே போற்றி போற்றி 🌼
ஓம் சற்குருவே போற்றி போற்றி 🌻

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி 🔥

(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

திருச்சிற்றம்பலம்🙇

1. திருவளர்பே ரருளுடையான் சிற்சபையான் எல்லாம்
செய்யவல்ல தனித்தலைமைச் சித்தன்எல்லாம் உடையான்
உருவமுமாய் அருவமுமாய் உபயமுமாய் அலவாய்
ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி ஒருவனுண்டே அவன்றான்
பெருமையினால் எனையீன்றான் நான்ஒருவன் தானே
பிள்ளைஅவன் பிள்ளைஎனப் பெரியரெலாம் அறிவார்
இருமையுறு தத்துவர்காள் என்னைஅறி யீரோ
ஈங்குமது துள்ளலெலாம் ஏதும்நட வாதே.

2. மனம்எனும்ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்
மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்
இனமுறஎன் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்
இருந்திடுநீ என்சொல்வழி ஏற்றிலைஆ னாலோ
தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம்
சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே
நனவில்எனை அறியாயோ யார்எனஇங் கிருந்தாய்
ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே.

3. பன்முகஞ்சேர் மனம்எனும்ஓர் பரியாசப் பயலே
பதையாதே சிதையாதே பார்க்கும்இடம் எல்லாம்
கொன்முகங்கொண் டடிக்கடிபோய்க் குதியாதே எனது
குறிப்பின்வழி நின்றிடுநின் குதிப்புநட வாது
என்முனம்ஓர் புன்முனைமேல் இருந்தபனித் துளிநீ
இம்மெனும்முன் அடக்கிடுவேன் என்னைஅறி யாயோ
பின்முன்என நினையேல்காண் சிற்சபையில் நடிக்கும்
பெரியதனித் தலைவனுக்குப் பெரியபிள்ளை நானே.

4. விரிந்தமனம் எனும்சிறிய விளையாட்டுப் பயலே
விரிந்துவிரிந் தலையாதே மெலியாதே விடயம்
புரிந்தநெறி புரிந்தவமே போகாதே பொறிவாய்ப்
புரையாதே விரையாதே புகுந்துமயங் காதே
தெரிந்துதெளிந் தொருநிலையில் சித்திரம்போல் இருநீ
சிறிதசைந்தால் அக்கணமே சிதைத்திடுவேன் கண்டாய்
பரிந்தெனைநீ யார்என்று பார்த்தாய்சிற் சபைவாழ்
பதிதனக்கே அருட்பட்டம் பலித்தபிள்ளை நானே.

5. பாய்மனம்என் றுரைத்திடும்ஓர் பராய்முருட்டுப் பயலே
பல்பொறியாம் படுக்காளிப் பயல்களொடும் கூடிச்
சேய்மையினும் அண்மையினும் திரிந்தோடி ஆடித்
தியங்காதே ஒருவார்த்தை திருவார்த்தை என்றே
ஆய்வுறக்கொண் டடங்குகநீ அடங்கிலையேல் உனைத்தான்
அடியொடுவேர் அறுத்திடுவேன் ஆணைஅருள் ஆணை
பேய்மதியா நீஎனைத்தான் அறியாயோ எல்லாம்
பெற்றவன்தன் செல்வாக்குப் பெற்றபிள்ளை நானே.

6. மயங்குபுத்தி எனும்உலக வழக்காளிப் பயலே
வழிதுறையீ தென்றறியாய் வகைசிறிதும் அறியாய்
உயங்கிவிசா ரித்திடவே ஓடுகின்றாய் உணரும்
உளவறியாய் வீணுழைப்பிங் குழைப்பதில்என் பயனோ
வயங்குமனம் அடங்கியவா றடங்குகநீ இலையேல்
மடித்திடுவேன் கணத்தில்உனை வாய்மைஇது கண்டாய்
இயங்கஎன்னை அறியாயோ யார்எனஎண் ணினையோ
எல்லாஞ்செய் வல்லவனுக் கினியபிள்ளை நானே.

7. கலையறியாச் சித்தம்எனும் கனமோசப் பயலே
கால்அறியாய் தலைஅறியாய் காண்பனகண் டறியாய்
நிலையறியாய் ஒன்றைஒன்றா நிச்சயித்திவ் வுலகை
நெறிமயங்க மயக்குகின்றாய் நீயோஇங் குறுவாய்
அலையறியாக் கடல்போலே அசைவறநின் றிடுநீ
அசைவாயேல் அக்கணத்தே அடக்கிடுவேன் உனைத்தான்
அலைவறிவாய் என்றனைநீ அறியாயோ நான்தான்
ஆண்டவன்தன் தாண்டவங்கண் டமர்ந்தபிள்ளை காணே.

8. அகங்காரம் எனும்பொல்லா அடவாதிப் பயலே
அடுக்கடுக்காய் எடுக்கின்றாய் அடுத்துமுடுக் கின்றாய்
செகங்காணத் தலைகாலும் தெரியாமல் அலைந்து
திரிகின்றாய் நின்செபந்தான் சிறிதும்நட வாது
இகங்காண அடங்குகநீ அடங்காயேல் கணத்தே
இருந்தஇடம் தெரியாதே எரிந்திடச்செய் திடுவேன்
சுகங்காண நின்றனைநீ அறியாயோ நான்தான்
சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றபிள்ளை காணே.

9. மான்எனும்ஓர் சகச்சாலச் சிறுக்கிஇது கேள்உன்
வஞ்சகக்கூத் தெல்லாம்ஓர் மூட்டைஎனக் கட்டி
ஈனம்உற நின்தலைமேல் ஏற்றெடுத்துக் கொண்டுன்
ஏவல்புரி பெண்களொடே இவ்விடம்விட் டேகிக்
கானடைந்து கருத்தடங்கிப் பிழைத்திடுநீ இலையேல்
கணத்தில்உனை மாய்ப்பேன்உன் கணத்தினொடுங் கண்டாய்
ஏன்எனைநீ அறியாயோ சிற்சபையில் நடஞ்செய்
இறைவன்அருட் பெருஞ்ஜோதிக் கினியபிள்ளை நானே.

10. மாயைஎனும் படுதிருட்டுச் சிறுக்கிஇது கேள்உன்
மாயைஎலாம் சுமைசுமையா வரிந்து கட்டிக் கொண்டுன்
சாயைஎனும் பெண்இனத்தார் தலைமேலும் உனது
தலைமேலும் சுமந்துகொண்டோர் சந்துவழி பார்த்தே
பேய்எனக்காட் டிடைஓடிப் பிழைத்திடுநீ இலையேல்
பேசுமுன்னே மாய்த்திடுவேன் பின்னும்முன்னும் பாரேன்
ஆய்எனைநீ அறியாயோ எல்லாஞ்செய் வல்லார்
அருள்அமுதுண் டருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை நானே.

11. மாமாயை எனும்பெரிய வஞ்சகிநீ இதுகேள்
வரைந்தஉன்தன் பரிசனப்பெண் வகைதொகைகள் உடனே
போமாறுன் செயல்அனைத்தும் பூரணமாக் கொண்டு
போனவழி தெரியாதே போய்பிழைநீ இலையேல்
சாமாறுன் தனைஇன்றே சாய்த்திடுவேன் இதுதான்
சத்தியம்என் றெண்ணுதிஎன் தன்னைஅறி யாயோ
ஆமாறு சிற்சபையில் அருள்நடனம் புரிவார்
அருள்அமுதுண் டருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை காணே.

12. கன்மம்எனும் பெருஞ்சிலுகுக் கடுங்கலகப் பயலே
கங்குகரை காணாத கடல்போலே வினைகள்
நன்மையொடு தீமைஎனப் பலவிகற்பங் காட்டி
நடத்தினைநின் நடத்தைஎலாம் சிறிதும்நட வாது
என்முன்இருந் தனைஎனில்நீ அழிந்திடுவாய் அதனால்
இக்கணத்தே நின்இனத்தோ டேகுகநீ இலையேல்
இன்மையுற மாய்த்திடுவேன் என்னையறி யாயோ
எல்லாஞ்செய் வல்லவனுக் கினியபிள்ளை நானே.

13. எத்துணையும் காட்டாத ஆணவம்என் றிடும்ஓர்
இருட்டறைக்கோர் அதிகாரக் குருட்டுமுடப் பயலே
இத்தனைநாள் பிடித்ததுனைக் கண்டுதுரத் திடவே
இன்னும்அரைக் கணந்தரியேன் இக்கணத்தே நினது
பொத்தியசுற் றத்துடனே போய்விடுதி இலையேல்
பூரணமெய் அருள்ஒளியால் பொன்றுவிப்பேன் நினையே
சத்தியஞ்சொன் னேன்எனைநீ அறியாயோ ஞான
சபைத்தலைவன் தருதலைமைத் தனிப்பிள்ளை நானே.

14. பெருமாயை என்னும்ஒரு பெண்பிள்ளை நீதான்
பெற்றவுடம் பிதுசாகாச் சுத்தவுடம் பாக்கி
ஒருஞானத் திருவமுதுண் டோங்குகின்றேன் இனிநின்
உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடைநான் விரும்பேன்
அருளாய ஜோதிஎனக் குபகரிக்கின் றதுநீ
அறியாயோ என்னளவில் அமைகஅயல் அமர்க
தெருளாய உலகிடைஎன் சரிதமுணர்ந் திலையோ
சிற்சபைஎன் அப்பனுக்குச் சிறந்தபிள்ளை நானே.

15. பேசுதிரோ தாயிஎனும் பெண்மடவாய் இதுகேள்
பின்முன்அறி யாதெனைநீ என்முன்மறைக் காதே
வேசறமா மலஇரவு முழுதும்விடிந் ததுகாண்
வீசும்அருட் பெருஞ்ஜோதி விளங்குகின்ற தறிநீ
ஏசுறுநின் செயல்அனைத்தும் என்னளவில் நடவா
திதைஅறிந்து விரைந்தெனைவிட் டேகுகஇக் கணத்தே
மாசறும்என் சரிதம்ஒன்றும் தெரிந்திலையோ எல்லாம்
வல்லஒரு சித்தருக்கே நல்லபிள்ளை நானே.

16. தூக்கம்எனும் கடைப்பயலே சோம்பேறி இதுகேள்
துணிந்துனது சுற்றமொடு சொல்லும்அரைக் கணத்தே
தாக்கு332 பெருங் காட்டகத்தே ஏகுகநீ இருந்தால்
தப்பாதுன் தலைபோகும் சத்தியம்ஈ தறிவாய்
ஏக்கமெலாம் தவிர்த்துவிட்டேன் ஆக்கமெலாம் பெற்றேன்
இன்பமுறு கின்றேன்நீ என்னைஅடை யாதே
போக்கில்விரைந் தோடுகநீ பொற்சபைசிற் சபைவாழ்
பூரணர்க்கிங் கன்பான பொருளன்என அறிந்தே.

17. பயம்எனும்ஓர் கொடும்பாவிப் பயலேநீ இதுகேள்
பற்றறஎன் தனைவிடுத்துப் பனிக்கடல்வீழ்ந் தொளிப்பாய்
தயவின்உரைத் தேன்இன்னும் இருத்திஎனில் உனது
தன்றலைக்குத் தீம்புவரும் தலைமட்டோ நினது
செயலுறும்உள் உடம்பழியும் சுற்றமெலாம் இறக்கும்
தீர்ந்ததினி இல்லைஎன்றே திருவார்த்தை பிறக்கும்
அயலிடைநேர்ந் தோடுகநீ என்னைஅறி யாயோ
அம்பலத்தென் அப்பன்அருள் நம்புபிள்ளை நானே.

18. கோபமெனும் புலைப்பயலே காமவலைப் பயலே
கொடுமோகக் கடைப்பயலே குறும்புமதப் பயலே
தாபஉலோ பப்பயலே மாற்சரியப் பயலே
தயவுடன்இங் கிசைக்கின்றேன் தாழ்ந்திருக்கா தீர்காண்
தீபம்எலாம் கடந்திருள்சேர் நிலஞ்சாரப் போவீர்
சிறிதுபொழு திருந்தாலும் திண்ணம்இங்கே அழிவீர்
சாபமுறா முன்னம்அறிந் தோடுமினோ என்னைத்
தான்அறியீர் தனித்தலைவன் தலைப்பிள்ளை நானே.

19. பசிஎனும்ஓர் பெரும்பாவிப் பயலேதுன் பெனும்ஓர்
படுபாவிப் பயலேஆ பத்தெனும்பொய்ப் பயலே
வசியவத்தைக் கடைப்பயலே தடைப்பயலே இடராம்
வன்பயலே நீவீர்எலாம் என்புடைநில் லாதீர்
நசியஉமக் குளம்உளதோ இக்கணத்தே நீவீர்
நடந்துவிரைந் தோடுமினோ நாடறியா வனத்தே
கசியுமனத் தெனைஅறியீர் சிற்சபையில் விளங்கும்
கடவுள்மகிழ்ந் தளித்ததனிக் கதிர்ப்பிள்ளை நானே.

20. மரணம்எனும் பெருந்திருட்டு மாபாவிப் பயலே
வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே
பரணமுறு பேரிருட்டுப் பெருநிலமும் தாண்டிப்
பசைஅறநீ ஒழிந்திடுக இங்கிருந்தாய் எனிலோ
இரணமுற உனைமுழுதும் மடித்திடுவேன் இதுதான்
என்னுடையான் அருள்ஆணை என்குருமேல் ஆணை
அரணுறும்என் தனைவிடுத்தே ஓடுகநீ நான்தான்
அருட்பெருஞ்ஜோ திப்பதியை அடைந்தபிள்ளை காணே. 🙏

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி 🔥🌷🙇

Address

Mannachanallur
Tiruchirappalli
621005

Website

Alerts

Be the first to know and let us send you an email when Om Sivamayam ஓம் சிவமயம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category