04/03/2024
அன்பு உறவுகளுக்கு வணக்கம்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், மோர்பாளையம்
ஸ்ரீ பைரவநாதமூர்த்தி சுவாமி மஹா சிவராத்திரி திருவிழா, ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா அழைப்பிதழ்.
நிகழும் சோபகிருது வருடம், மாசி மாதம்,
07.03.2024 வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு காவேரி நதியிலிருந்து புனித நீர் எடுத்து வர கோவிலில் இருந்து இறையமங்கலம் புறப்படுதல்.
இரவு 10.00 மணிக்கு மேல் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை, விரதம் மேற்கொண்டோர்க்கு பூணூல் அணிவித்தல், அதனைத் தொடர்ந்து
இரவு 12.00 மணிக்கு மேல் கருவறையினுள், மேலே உள்ள மூங்கில் ஓலைக்கூடையை எடுத்துக் கொண்டு ஊர்கிணற்றுக்கு சென்று சுவாமி வஸ்திரங்கள், பிரம்பு, மணி, தட்டு, வேல் மற்றும் பிற ஆயுதங்களை புனித நீரால் அபிஷேகம் செய்து பிறகு அவையனைத்திற்க்கும் பூஜை செய்து, கிணற்றிலிருந்தும் புனித நீர் எடுத்துக் கொண்டு கோயில் வந்து சேருதல்.
08.03.2024 வெள்ளிக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு மேல் கருவறையினுள் மேலே உள்ள, உறியிலுள்ள மண் கலசத்திலிருந்து ஸ்ரீ ஆதிமூல பைரவரை எழுந்தருள செய்து, சந்தன காப்பு நீக்கி புனித நீராலும், மற்றும் அனைத்து அபிஷேகப் பொருட்களினாலும் அபிஷேகம் செய்து, மிகச் சிறப்பாக அலங்காரம் செய்து
அதிகாலை 5.00 மணிக்கு மேல் ஸ்ரீ ஆதிமூல பைரவரை கொலுவில் வைத்து பூஜை செய்தல் நிகழ்ச்சி நடைபெறும்.
பின்பு கருவறையில் உள்ள ஸ்ரீ பைரவநாதமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெறும்.
08.03.2024, வெள்ளிக்கிழமை காலை 6.30 மணி முதல் சிறப்பான அன்னதானம் நடைபெறும்.
இரவு 9.30 மணிக்கு மேல் ஸ்ரீ ஆதிமூல பைரவருக்கு சந்தண காப்பு சாற்றி உறியில் உள்ள மண் கலசத்தில்வைக்கும் பூஜை நிகழ்ச்சி நடைபெறும்.
இரவு 10.00 மணிக்கு மேல் திருக்கோயில் வளாகத்தில் தெருக்கூத்து நடைபெறும்.
09.03.2024 சனிக் கிழமை காலை 7.00 மணியிலிருந்து ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துதல்.
மதியம் 2.00 மணிக்கு மேல் ஊர் கிணற்றிலிருந்து தீர்த்தக்குடம், அக்னி கரகம் எடுத்து வருதல்.
மாலை 6.00 மணிக்கு மேல் உருவம் எடுத்து வருதல்.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீ மாரியம்மனுக்கு சிறப்பான பூஜை நடைபெறும்.
இரவு 08.00 மணியளவில், ஸ்ரீ பைரவர் கோயில் வளாகத்தில், சேலம் கோல்டு கிங் (Gold King) ஆர்க்கெஸ்ட்ரா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.
உறவுகள் அனைவரும் தங்களுடைய சொந்த பந்தங்களுடன் திருவிழாவில் கலந்து கொண்டு வருடத்தில் ஒரு முறை மட்டும் காட்சி தரும் ஸ்ரீ ஆதிமூல பைரவர்,ஸ்ரீ பைரவநாதமூர்த்தி மற்றும் ஸ்ரீ மாரியம்மன் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.
இப்படிக்கு,
திருக்கோயில் நிர்வாகத்தினர்,
மோர்பாளையம் .