Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy Devotees திருச்செந்தூர் முருகன்

  • Home
  • India
  • Tiruchendur
  • Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy Devotees திருச்செந்தூர் முருகன்

Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy Devotees திருச்செந்தூர் முருகன் Hindu Temple
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்.
திருச்செந்தூர்.

கன்னித் தமிழ் பாடுவது புது சுகமே!அதில் காண்பதெல்லாம்கவி நயமே!என்னையே தந்துவிட்டேன்கந்தனிடமே!அவன் என்ன செய்தாலும்எனக்கு ச...
24/08/2026

கன்னித் தமிழ் பாடுவது
புது சுகமே!
அதில் காண்பதெல்லாம்
கவி நயமே!

என்னையே தந்துவிட்டேன்
கந்தனிடமே!
அவன் என்ன செய்தாலும்
எனக்கு சம்மதமே!

#முருகாசரணம் 🐓🦚

#मुरुगा_चरणों




பழநியிலே இருக்கும் கந்தபழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்!பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் பக்திப் பசியோடு வரு...
23/08/2026

பழநியிலே இருக்கும் கந்த
பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்!
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் பக்திப் பசியோடு வருவோர்க்கு
ஞானப் பழம்!
உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை!

#முருகாசரணம் 🐓🦚

#मुरुगा_चरणों




கருணையே வடிவமானகந்தசாமித் தெய்வமே!உன் கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் கந்தனே!நெற்றியிலே நீறணிந்துநெறியாக உனை நினைத்துபற்ற...
22/08/2026

கருணையே வடிவமான
கந்தசாமித் தெய்வமே!
உன் கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் கந்தனே!

நெற்றியிலே நீறணிந்து
நெறியாக உனை நினைத்து
பற்றினேன் என் உள்ளமதில்
உன்னடி முருகா!

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை!
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே!

#முருகாசரணம் 🐓🦚

#मुरुगा_चरणों




கந்தனிடம் செல்லுங்கள்என்ன வேண்டும் சொல்லுங்கள்!வந்த வினை தீர்ந்துவிடும்மற்றவற்றைத் தள்ளுங்கள்!கந்தன் காலடியை வணங்கினால்க...
20/08/2026

கந்தனிடம் செல்லுங்கள்
என்ன வேண்டும் சொல்லுங்கள்!
வந்த வினை தீர்ந்துவிடும்
மற்றவற்றைத் தள்ளுங்கள்!

கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன் கந்தன்
கந்தன் காலடியை வணங்குங்கள்!

#முருகாசரணம் 🐓🦚

#मुरुगा_चरणों




ஆதி நீயே நாளும் ஆகம் நீயேஅதிகாரம் நீயே ஆலய ஆரம் நீயே!சேனை நீயே காக்கும் வேலும் நீயேசெந்தூரன் நீயே செந்தில் நாதன் நீயே!ஓம...
19/08/2026

ஆதி நீயே நாளும் ஆகம் நீயே
அதிகாரம் நீயே ஆலய ஆரம் நீயே!
சேனை நீயே காக்கும் வேலும் நீயே
செந்தூரன் நீயே செந்தில் நாதன் நீயே!

ஓம் எனும் பிரணவ மந்திர கந்தனே
என் முருகனே!
யாவும் நீயென யாக்கை உனக்கென
நாளும் காத்திடு குமரனே!

#முருகாசரணம் 🐓🦚

#मुरुगा_चरणों




சூரபத்மனை மயிலும் சேவலுமாய் மாற்றியது உன் கருணையே!கபட மாயா ஜாலங்களுக்கும்அதிபதி என் வேலனே!அழகு என்றால் முருகு எந்தன்ஆதி ...
18/08/2026

சூரபத்மனை மயிலும் சேவலுமாய் மாற்றியது உன் கருணையே!
கபட மாயா ஜாலங்களுக்கும்
அதிபதி என் வேலனே!

அழகு என்றால் முருகு எந்தன்
ஆதி தமிழன் தெய்வமே!
ஆறுபடைக்கும் முதல்வன் நீயே
செந்தில் ஆண்டவ தெய்வமே!

#முருகாசரணம் 🐓🦚

#मुरुगा_चरणों




முருகனின் மறுபெயர் அழகுஅந்த முறுவலில் மயங்குது உலகு!குளுமைக்கு அவனொரு நிலவுகுமரா எனச்சொல்லிப் பழகு!வேதங்கள் கூறிடும் ஒளி...
17/08/2026

முருகனின் மறுபெயர் அழகு
அந்த முறுவலில் மயங்குது உலகு!
குளுமைக்கு அவனொரு நிலவு
குமரா எனச்சொல்லிப் பழகு!
வேதங்கள் கூறிடும் ஒளியே உயர் வேலோடு விளையாடும் எழிலே!

#முருகாசரணம் 🐓🦚

#मुरुगा_चरणों




கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு காரியம் கைகூடுமே பகை மாறி உறவாடுமே!சிவ மைந்தன் அருளாலேமெய்யறிவு உண்டாகிமேன்மை உயர்வாக...
16/08/2026

கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு காரியம் கைகூடுமே பகை மாறி உறவாடுமே!
சிவ மைந்தன் அருளாலே
மெய்யறிவு உண்டாகி
மேன்மை உயர்வாகுமே!
ஐயன் முருகனைக் கூப்பிட்டு
முருகனை கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே!

#முருகாசரணம் 🐓🦚

#मुरुगा_चरणों




ஓம் சரவணபவ என்னும் திருமந்திரம்சகல உயிர்களுக்கும் ஒரு மந்திரம்!குறமகள் வள்ளி மனமகிழ் மந்திரம்குக சரவணபவ எனும் மந்திரம்!ப...
15/08/2026

ஓம் சரவணபவ என்னும் திருமந்திரம்
சகல உயிர்களுக்கும் ஒரு மந்திரம்!
குறமகள் வள்ளி மனமகிழ் மந்திரம்
குக சரவணபவ எனும் மந்திரம்!

பழமாகி நின்றுவிட்ட
முழு மந்திரம்!
பழமுதிர்சோலையிலே
வளர் மந்திரம்!

சொல்லச் சொல்ல தித்தித்திடும்
சுப மந்திரம்!
சுகமெல்லாம் சேர்த்து வைக்கும்
மகா மந்திரம்!

#முருகாசரணம் 🐓🦚

#मुरुगा_चरणों




Address

State Highway 40/TB Road, Near Muthu Petchiamman Temple, Thiruchenthur
Tiruchendur
628215

Opening Hours

Monday 5am - 9pm
Tuesday 5am - 9pm
Wednesday 5am - 9pm
Thursday 5am - 9pm
Friday 5am - 9pm
Saturday 5am - 9pm
Sunday 5am - 9pm

Telephone

+914639242270

Alerts

Be the first to know and let us send you an email when Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy Devotees திருச்செந்தூர் முருகன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy Devotees திருச்செந்தூர் முருகன்:

Shortcuts

Share

Category