Mutharamman Satsangam

Mutharamman Satsangam Mutharamman Satsangam is a group of true devotees of Kulasekarapattinam Mutharamman.
(1)

We service stories, pooja ritual procedure, dasara fasting procedure, discourses, photos, videos about Mutharamman through various social networking

06/06/2026

அன்னையின் நாக்கு செம்பருத்தி பூ போல சிவந்து இருக்கும். சிவந்த நாக்கு கொண்டு நமக்கு சிறப்பான வாக்கு வன்மையை தருகிறாள்.

" தாயே! உன்னுடைய நாவானது உன் பதியாகிய பரமசிவனின் மங்களகரமான கதைகளை இடைவிடாமல் எந்நேரமும் திரும்பத் திரும்ப மந்த்ர ஜபத்தைப் போலச் சொல்லி வருவதால் செம்பருத்திப் பூவைப் போலச் சிவந்து காணப்படுகிறது. அந்த நாக்கின் நுனியில் சரஸ்வதி தேவி வசிக்கின்ற காரணத்தால் தான், தெளிவான ஸ்படிகம் போன்று வெண்மையாய்க் காணப்படும் சரஸ்வதியின் திருமேனிகூட, மாணிக்கத்தைப் போல் சிவந்து மாறிக் காணப்படுகிறது." என்று பாடுகிறார் சங்கரர்.

அவிஶ்ராந்தம் பத்யுர் குணகண கதாம்ரேடனஜபா
ஜபாபுஷ்பச்சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா
யதக்ராஸீநாயா: ஸ்படிகத்ருஷ தச்சச்சவி மயீ
ஸரஸ்வத்யா மூர்த்தி: பரிணமதி மாணிக்யவபுஷா
_ ஸௌந்தர்யலஹரீ 64

முத்தாரம்பிகையை தியானிப்போம் ! அவள் அருளால் சிறந்த வாக்குவன்மையும் கவித்துவமும் பெறுவோம் !
🌺🌺🌺🌺🌺�

⏰ இன்றைய பஞ்சாங்கம் ⏰📅 05-06-2026 | வெள்ளி🌿 பராபவ வருடம்🌿 வைகாசி மாதம் – 22☀ திதி – கிருஷ்ண பஞ்சமி☀ நட்சத்திரம் – திருவோ...
05/06/2026

⏰ இன்றைய பஞ்சாங்கம் ⏰
📅 05-06-2026 | வெள்ளி

🌿 பராபவ வருடம்
🌿 வைகாசி மாதம் – 22

☀ திதி – கிருஷ்ண பஞ்சமி
☀ நட்சத்திரம் – திருவோணம்
☀ யோகம் – பிராம்ய
☀ கரணம் – கௌலவ

✨ இன்றைய விசேஷம் – ச்ரவண விரதம், தனிய நாள்

📌 நாளைய விசேஷம் (06-06-2026)
👉 ஸ்கந்த ஷஷ்டி விரதம், வைத்ருதி சிரார்த்தம்

🌿 நல்ல நேரம்
👉 காலை: 09:30 AM – 10:30 AM
👉 மாலை: 04:30 PM – 05:30 PM

🚫 ராகு காலம் – 10:30 AM – 12:00 PM
🚫 எமகண்டம் – 03:00 PM – 04:30 PM
🚫 குளிகை – 07:30 AM – 09:00 AM

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🔱 முத்தாரம்மன் சத்சங்கம் வாட்ஸ் அப் குழு 🔱
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

04/06/2026

Amme Narayana ❤️

⏰ இன்றைய பஞ்சாங்கம் ⏰📅 04-06-2026 | வியாழன்🌿 பராபவ வருடம்🌿 வைகாசி மாதம் – 21☀ திதி – கிருஷ்ண சதுர்த்தி☀ நட்சத்திரம் – உத...
04/06/2026

⏰ இன்றைய பஞ்சாங்கம் ⏰
📅 04-06-2026 | வியாழன்

🌿 பராபவ வருடம்
🌿 வைகாசி மாதம் – 21

☀ திதி – கிருஷ்ண சதுர்த்தி
☀ நட்சத்திரம் – உத்திராடம்
☀ யோகம் – சுப்ர
☀ கரணம் – பவ

✨ இன்றைய விசேஷம் – சங்கடஹர சதுர்த்தி

📌 நாளைய விசேஷம் (05-06-2026)
👉 ச்ரவண வ்ரதம், தனிய நாள்

🌿 நல்ல நேரம்
👉 காலை: 10:30 AM – 11:30 AM
👉 மதியம்: 12:30 PM – 01:30 PM

🚫 ராகு காலம் – 01:30 PM – 03:00 PM
🚫 எமகண்டம் – 06:00 AM – 07:30 AM
🚫 குளிகை – 09:00 AM – 10:30 AM

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🔱 முத்தாரம்மன் சத்சங்கம் வாட்ஸ் அப் குழு 🔱
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

04/06/2026

சங்கடஹர சதுர்த்தி பூஜை

சங்கடஹர சதுர்த்தி என்பது தேய்பிறை சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானை வழிபட்டு, வாழ்க்கையில் உள்ள தடைகள், சங்கடங்கள் நீங்க வேண்டி அனுஷ்டிக்கப்படும் முக்கியமான விரதமாகும்.

🔸 காலை நீராடி விநாயகரை மனதில் தியானித்து விரதத்தைத் தொடங்குங்கள்.

🔸 வீட்டில் அல்லது கோவிலில் விநாயகர் முன் விளக்கு ஏற்றி பூஜை செய்யுங்கள்.

🔸 அருகம்புல், எருக்கம்பூ, தும்பைப்பூ முதலியவற்றால் அர்ச்சனை செய்யலாம்.

🔸 "ஓம் கம் கணபதயே நம:" அல்லது விநாயகர் அகவல் பாராயணம் செய்யலாம்.

🔸 மோதகம், கொழுக்கட்டை, அவல், பொரி, சுண்டல் போன்றவற்றை நைவேத்தியமாகப் படைக்கலாம்.

🔸 மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்று நடைபெறும் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்வது சிறப்பு.

🔸 சந்திரோதயத்திற்குப் பிறகு சந்திரனை தரிசித்து விநாயகரை வணங்கி விரதத்தை நிறைவு செய்யலாம்.

பலன்கள்:
✅ காரியத் தடைகள் நீங்கும்
✅ கடன் தொல்லைகள்

🌺 அம்பாள் அருள் வீட்டில் நிலைக்க… 🌺அம்பாள் அருள் வீட்டில் நிலைக்க வேண்டும் என்றால்பெரிய யாகங்களோ கடினமான முறைகளோ அவசியமி...
03/06/2026

🌺 அம்பாள் அருள் வீட்டில் நிலைக்க… 🌺

அம்பாள் அருள் வீட்டில் நிலைக்க வேண்டும் என்றால்
பெரிய யாகங்களோ கடினமான முறைகளோ அவசியமில்லை.

மனசுத்தி • வீட்டு சுத்தம் • நம்பிக்கை — இவைதான் முக்கியம். 🙏

✨ சில எளிய வழிகள்:

• தினமும் காலை அல்லது மாலை விளக்கு ஏற்றுங்கள்
• வீட்டை சுத்தமாகவும் நல்ல வாசனையுடனும் வைத்திருங்கள்
• அன்னதானம் அல்லது ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள்
• கோபம், சண்டை, கடுமையான வார்த்தைகள் குறைந்திருக்கட்டும்
• பெண்களை மதித்து, தாயை போற்றுங்கள்

🌸 அம்பாள் அருள் நிலைத்திருப்பதற்கான அறிகுறிகள்:

• வீட்டில் மன அமைதி அதிகரித்தல்
• காரணமில்லாத பயம் குறைதல்
• சண்டைகள் குறைதல்
• நல்ல எண்ணங்கள் உருவாகுதல்
• சிறிய விஷயங்களிலும் நிறைவு உணர்வு கிடைத்தல்

💖 அம்பாளை வீட்டிற்கு வரவழைக்கும் மிகப் பெரிய வழி:

“அம்மா…
நீ இல்லாமல் எங்களால் முடியாது…”
என்ற உண்மையான அழைப்பு தான். 🙏✨

📅 03-06-2026 | புதன்⏰ இன்றைய பஞ்சாங்கம் ⏰🌿 பராபவ வருடம்🌿 வைகாசி மாதம் – 20☀ திதி – கிருஷ்ண த்ருதியை ☀ நட்சத்திரம் – பூரா...
03/06/2026

📅 03-06-2026 | புதன்
⏰ இன்றைய பஞ்சாங்கம் ⏰

🌿 பராபவ வருடம்
🌿 வைகாசி மாதம் – 20

☀ திதி – கிருஷ்ண த்ருதியை
☀ நட்சத்திரம் – பூராடம்
☀ யோகம் – சுப
☀ கரணம் – வணிஜ

✨ இன்றைய விசேஷம் – சாதாரண நாள்

📌 நாளைய விசேஷம் (04-06-2026)
👉 சங்கடஹர சதுர்த்தி

🌿 நல்ல நேரம்
👉 காலை: 10:30 AM – 11:30 AM
👉 மாலை: 04:30 PM – 05:30 PM

🚫 ராகு காலம் – 12:00 PM – 01:30 PM
🚫 எமகண்டம் – 07:30 AM – 09:00 AM
🚫 குளிகை – 10:30 AM – 12:00 PM

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🔱 முத்தாரம்மன் சத்சங்கம் வாட்ஸ் அப் குழு 🔱
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

03/06/2026

#முத்தாரம்மன்_அழகு_அலை - 62
புதியதான பவழத்தின் நிறத்தையும் கோவைப்பழத்தின் சிவந்த நிறத்தையும் பழிக்கும் விதமான சிவந்த உதடுகளைக் கொண்டவள் நம் அன்னை. எனவே, "நவவித்ரும பிம்பஸ்ரீ ந்யக்காரி ரதநச்சதா " என்று அன்னைக்கு ஒரு நாமம்.

"அழகிய பற்கள் அமைந்த தேவி, இயல்பிலேயே சிவந்திருக்கும் உன்னுடைய உதடுகளின் வர்ணம் இயற்கையாகவே சிவப்பு. இதற்கு உவமை கூற முற்படுகிறேன். பவழக்கொடிக்குப் பழம் கிடையாது. அது பழத்தைத் தோற்றுவித்தால் அதை உவமையாகக் கூறலாம். கோவைப்பழமும் இயற்கையாகச் சிவந்ததல்ல; உன் உதட்டின் சிவப்பு அதில் பிரதிபலித்திருப்பதால் தான் அதுவும் சிவப்பாக இருக்கிறது. ஆகவே, கோவைப்பழம் பதினாறில் ஒரு பங்கு கூட உன் உதட்டுச் சிவப்புடன் ஒப்பிட முடியாமையால் வெட்கமுற்றிருக்கிறது." என்று பாடுகிறார் சங்கரர்.

ப்ரக்ருத்யா(அ)(அ)ரக்தாயாஸ் தவ ஸுததி தந்தச்சதருசே:
ப்ரவக்ஷ்யே ஸாத்ருஶ்யம் ஜனயது பலம் வித்ருமலதா
ந பிம்பம் தத்பிம்ப ப்ரதிப�

Address

Sri Mutharamman Temple
Tiruchendur
628203

Opening Hours

Monday 6am - 12pm
4pm - 9pm
Tuesday 6am - 1pm
4pm - 9pm
Wednesday 6am - 12pm
4pm - 9pm
Thursday 6am - 12pm
4pm - 9pm
Friday 6am - 12pm
4pm - 9pm
Saturday 6am - 12pm
4pm - 9pm
Sunday 6am - 1pm
4pm - 9pm

Telephone

+917708266947

Alerts

Be the first to know and let us send you an email when Mutharamman Satsangam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Mutharamman Satsangam:

Share