Tiruchendur Murugan Temple

Tiruchendur Murugan Temple ஆன்மீக பதிவுகள் மட்டும்..! Tiruchendur Murugan temple is
(1)

ஆண்மீக பதிவுகள் மட்டும்..!

சூரபத் ​மனை முரு​கப் பெரு​மான் அழித்த திருத்தலமே​​ இரண்​டாம் படை வீடான திருச்​செந்​தூர்.​ நெல்லை மாவட்​டத்​தில் மிகச் சிறந்த முரு​கன் தல​மாக,​​ கடற்​கரைக் கோயிலாகத் திகழ்கின்றது இவ்வாலயம்.​ ஆண்டுதோறும் இங்கு கந்த சஷ்டி விழா,​​ மிகவும் சிறப்பாக நிகழ்கின்றது.​ திருமலை நாயக்க மன்னரின் காரியக்காரர் வடமையப்பப் பிள்ளை என்பவர்,​​ திருச்செந்தூர் முருகப் பெருமானின் பக்தராக விளங்

கியவர்;​ இக்கோயிலுக்குப் பல திருப்பணிகள் செய்தவரென்று வரலாறு சொல்கிறது.​ஊமையாக இருந்த குமர குருபரர்,​​ செந்திலாண்டவர் அருளால் பேசும் சக்தி பெற்று,​​ பாடும் திறனும் பெற்று ‘திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்’,​ ‘மதுரை மீனாட்சியம்மன் பிள்ளைத் தமிழ்’ ஆகிய இலக்கியங்களைப் படைத்தார்.​டச்சு கொள்ளையர்களை நடுநடுங்க வைத்து,​​ அவர்களையும் தன்னை வணங்க வைத்த தனி ஆற்றல் படைத்தவர் திருச்செந்தூர் முருகன் என்றொரு கர்ண பரம்பரைக் கதை உண்டு.

Today at Tiruchendur murugan temple
15/08/2026

Today at Tiruchendur murugan temple

15/08/2026
Tiruchendur murugan temple...
13/08/2026

Tiruchendur murugan temple...

11/08/2026
திருச்செந்தூர் முருகன் திருச்செந்தூர்  அருள்மிகு ஸ்ரீ ஜெயந்தி நாதர் உடன் வள்ளி தெய்வானை தங்க ரத தரிசனம்.🦚 வெற்றிவேல் முர...
10/08/2026

திருச்செந்தூர் முருகன் திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ ஜெயந்தி நாதர் உடன் வள்ளி தெய்வானை தங்க ரத தரிசனம்.

🦚 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🦚

அலைகடல் ஓசையும் செந்தூர் ஆண்டவனும் கதிரவன் ஒளியில் கடல் நீர் மினுமினுக்க,அலைகள் வந்து பாதம் தொடும் திருச்செந்தூர்!காலைப்...
07/08/2026

அலைகடல் ஓசையும் செந்தூர்
ஆண்டவனும் கதிரவன் ஒளியில்
கடல் நீர் மினுமினுக்க,அலைகள் வந்து
பாதம் தொடும் திருச்செந்தூர்!

காலைப் பொழுதின் அமைதியில் நின்றுகொண்டு,வேலவனை
மனமுருகத் தொழுதிடுவோம்!

கடலும் காவலும் பொன்னிறக் கதிரவன்:-
கிழக்கு வானத்தில் விடியலின் தங்கம் சிதற, கடலின் அலைகள் முருகனின் புகழ் பாடி கரையை முத்தமிடுகின்றன.!

வேலின் ஒளி:-ஞான ஒளியாய் உதிக்கும் சூரியன், செந்தில் ஆண்டவனின் வலக்கரத்தில் ஒளிரும் வேலஜை நினைவூட்டுகிறது.!

மன அமைதிசங்கு முழக்கம்:-
காவிரியின் சங்கொலியும், மணி ஓசையும் காலை வேளையின் தெய்வீகக் காற்றோடு கலந்து வருகிறது.!

அருள் பார்வை: கடலின் பெருமையை விடப் பெரியது முருகனின் கருணை; பக்தர்களின் துயரங்களை மணத்தில் போக்கும் அற்புதத் தலம்.!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீரவேல் முருகனுக்கு அரோகரா.!

Address

Tiruchendur Murugan Temple
Tiruchendur
628215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tiruchendur Murugan Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share