03/02/2022
இதுதான் கிறித்துவம்!
அரியலூர் மாணவி தற்கொலை சம்பவத்தில் அருட்சகோதரி சகாயமேரி கைது செய்யப்பட்ட போது அவரிடம் தனக்கு உடம்பு சரியில்லை நெஞ்சு வலி என்று சொன்னால் சிறை செல்வதை தவிர்த்து மருத்துவமனையில் சேர்ந்துவிடலாம் என்று சொன்னபோது "என்னால் பொய் சொல்ல முடியாது" என்று சொல்லி சிறையை புன்முறுவலுடன் ஏற்றுள்ளார்!
தந்தையே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் இவர்களை மன்னியும் என்ற இயேசுவின் சீடரல்லவா அவர்!
மாற்றாந்தாயின் கொடுமைக்கு ஆளான சிறுமியை அன்பு செலுத்தி அரவணைத்தவர்!
தோல் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு குடும்பத்தாரால் ஒதுக்கப்பட்ட அந்த சிறுமியை தாயாய் தாங்கியவர்!
அந்த சிறுமி பெரிய பெண்ணானபோது போர்டிங்கிலேயே சடங்கு செய்து அந்த சிறுமியை மகிழ்வித்தவர்!
அந்த சிறுமியின் விடுதி பீசை தானே கட்டியவர்!
பொங்கலுக்கு தீபாவளிக்கு அந்த சிறுமிக்கு துணிமணிகள் வாங்கி கொடுத்து அந்த சிறுமியை மகிழ்வித்தவர்!
+2 முடித்தவுடன் தனது எதிர் காலத்தை எண்ணி கலங்கிய அந்த சிறுமிமியை ஆற்றுப்படுத்தி அவரை கல்லூரியில் சேர்க்க ஏற்பாடு செய்தவர்!
இன்று அந்த சிறுமியாலேயே குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் இருக்கிறார்!
சகோதரி! சிறையில் இருப்பது நீங்கள் அல்ல தர்மம்தான்!
தர்மத்தின் வாழ்வுதனை இன்று சூது கவ்வியுள்ளது! நாளை தர்மம் நிச்சயம் வெல்லும் உங்கள் திருப்பணியை, பண்பாட்டை, அர்ப்பணிப்பை இந்த உலகமே கொண்டாடும்!
பா.சேவியர்