04/11/2024
இஸ்லாமிய புனித நூலான குர்-ஆனில்
அல்லாஹ்வின் ஆணைப்படி யூதர்களாகிய இஸ்ரேலியர்களுக்கே
இஸ்ரேல் என்னும் முழு நாடும் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. தப்பி தவறி ஒரு வார்த்தை கூட பாலஸ்தீனியர்களைப் பற்றி குர்ஆன் சொல்லவே இல்லை.. இஸ்ரேல் நாட்டில் பாலஸ்தீனியர்கள் இருப்பதே அத்து மீறிய செயலாகத் தான் தெரிகிறது...
"ஐரோப்பாவில் கிறிஸ்தவர்களால் அடித்து, துரத்தப்பட்ட யூதர்களுக்கு பாலஸ்தீனத்தில் ஆதரவு கரம் கொடுத்து, அரவணைத்த பாலஸ்தீனர்கள்" என்கிற இந் நூற்றாண்டின் மிகப்பெரிய இப் பொய்யை குர்-ஆன் மற்றும் உலக வரலாற்றின் மூலம் மறுப்பும் தெளிவான விளக்கமும்...
குர்ஆன் ஆதாரம்.. இதோ,
وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖ يٰقَوْمِ اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ جَعَلَ فِيْكُمْ اَنْـبِيَآءَ وَجَعَلَـكُمْ مُّلُوْكًا وَّاٰتٰٮكُمْ مَّا لَمْ يُؤْتِ اَحَدًا مِّنَ الْعٰلَمِيْنَ
மூஸா தன் சமூகத்தாரை நோக்கி ‘‘என் சமூகத்தாரே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடையை நீங்கள் நினைத்துப் பாருங்கள். அவன் உங்களுக்குள் (மூஸா, ஹாரூன் போன்ற) நபிமார்களை ஏற்படுத்தி (எகிப்தியரிடம் அடிமைகளாய் இருந்த) உங்களை அரசர்களாகவும் ஆக்கி, உலகத்தில் மற்ற எவருக்குமே அளிக்காத (அற்புதங்களாகிய கடலைப் பிளந்து செல்லுதல், ‘மன்னு ஸல்வா' என்ற உணவு போன்ற)வற்றையும் உங்களுக்கு அளித்திருக்கிறான்'' என்று கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக.
(அல்குர்ஆன் : 5:20)
يٰقَوْمِ ادْخُلُوا الْاَرْضَ الْمُقَدَّسَةَ الَّتِىْ كَتَبَ اللّٰهُ لَـكُمْ وَلَا تَرْتَدُّوْا عَلٰٓى اَدْبَارِكُمْ فَتَـنْقَلِبُوْا خٰسِرِيْنَ
(தவிர, அவர்) ‘‘என் சமூகத்தாரே! அல்லாஹ் உங்களுக்கென விதித்த பரிசுத்தமான பூமியில் (இருக்கும் உங்கள் எதிரியுடன் போர் புரிந்து அதில்) நுழையுங்கள். (அவர்களுக்கு) நீங்கள் புறங்காட்டித் திரும்பாதீர்கள். (புறம் காட்டினால்) நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்'' (என்றும் கூறினார்.)
(அல்குர்ஆன் : 5:21)