Jesus Life Blessed Zion Church,Tiruvelangadu.

Jesus Life Blessed Zion Church,Tiruvelangadu. JESUS LIFE BLESSED MINISTRIES (HALL OF PRAISE)
இயேசுவே ஜீவன் ஆசீர்வாத ஊழியங்கள் (துதி மண்டபம்)
Located at CHINNAMMAPET, THIRUVALANGADU R.S.

PIN-631 210
PH: 99418 89874 (PRAYER & OFFERING)

Every tongue should confess that Jesus Christ Is Lord...Amen
11/04/2026

Every tongue should confess that Jesus Christ Is Lord...Amen

13/12/2025

தொடர்ச்சி....

*VOICE OF GOD - DAY 10*
*(கடவுளின் குரல்- நாள்-10) 13/12/2025*

*21 உபவாச நாட்கள் காலை தியானம்.*

*கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக 🙏🏻🙏🏻🙏🏻.*

கர்த்தருக்கு பிரியமானவர்களே உங்கள் யாவருக்கும் இந்த நாளுக்கான காலை ஸ்தோத்திரங்களையும்,வாழ்த்துதலையும் நம்முடைய இரட்சகரும் கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.🙏🏻🙏🏻

*பிலிப்பியர்: 2:5 கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;*

கடந்தப்பதிவில்,
*நீதிமொழிகள்:12:28- நீதியின் பாதையில் ஜீவன் உண்டு...* என்றும் உன் *வழிகளிலெல்லாம் கர்த்தரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.* சங்கீதக்காரன் சொல்லுகிறார், அவர் என்னுடைய ஆத்துமாவை தேற்றி நம்முடைய நாமத்தின் நிமித்தம் என்னை *நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.*

இந்த பத்தாம் நாள் பதிவிலும் தொடர்ச்சியாக *நீதி மொழிகள்: 13:21 ல் .‌‌நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்* என்று பார்க்கிறோம். *பலன்* என்பது நமக்கு கிடைக்கும் நன்மையின் வெகுமதி Benefits of Goodness என்று குறிப்பிடலாம். இதனை *நீதியின் பாதையில் கர்த்தருடைய கற்பனை வழியே* நடக்கிறவர்கள் சுதந்தரிக்கிறார்கள். *நீதி: 13:13 ல் ...கற்பனைகளுக்கு பயப்படுகிறவனோ பலனடைவான்* என்றும் பார்க்கிறோம். நிச்சயமாக கர்த்தர் அவருக்காக வாழ ஒப்புக்கொடுக்கும் பிள்ளைகளை *நீதியின் கர்த்தரினால் தாங்குவார்.*

கர்த்தர்தாமே ஒவ்வொரு நாளும் நம்மை நல்வழியிலும், ஜீவனுள்ள நாளெல்லாம் பரிசுத்த வாழ்வவிலும, மகிமையான ஜீவியத்திலும், சாட்சியுள்ள வாழ்க்கையில் வாழ கிருபைதரும்படி நம்முடைய இரட்சகரும் நம்முடைய ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன்.🙏🏻🙏🏻

God Bless You all.

VOICE OF GOD DAY-10
(HALL OF PRAISE THIRUVALANGADU)
13/12/2025

09/12/2025

தொடர்ச்சி....

*VOICE OF GOD - DAY 6*
*(கடவுளின் குரல்- நாள்-6) 09/12/2025*

*21 உபவாச நாட்கள் காலை தியானம்.*

*கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக 🙏🏻🙏🏻🙏🏻.*

கர்த்தருக்கு பிரியமானவர்களே உங்கள் யாவருக்கும் இந்த நாளுக்கான காலை ஸ்தோத்திரங்களையும்,வாழ்த்துதலையும் நம்முடைய இரட்சகரும் கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.🙏🏻🙏🏻

*பிலிப்பியர்: 2:5 ல் பிலிப்பியர் 2:5. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;*

இயேசு கிறிஸ்து நம்மை அவருக்கென்ற ராஜரீக பிள்ளைகளாகவும் ஆசாரிய கூட்டமாகவும் ஏற்ப்படுத்தி இருக்கிறாரென்றால், *அவரை அறிகின்ற அறிவின் வாசனை* நம்மில் வெளிப்படுத்துகிறவர்களாக இருக்க வேண்டும் என்பதே.

கடந்த பதிவில் *நீதிமொழிகள்: 8.17 ல் பார்க்கிறோம் ,"என்னைச் சிநெகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்" என்றும், நீதிமொழிகள் 8:30 மற்றும் 35 ல் "எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்; ஜீவனைக் கண்டடைந்தேன்"* என்றும் கர்த்தருடைய வார்த்தையை வாசித்தோம்.

இந்த நாளிலும் *நீதிமொழிகள் 09:11 "என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்".*

*"என்னாலே"* என்று அழுத்தமாக பார்க்கிறோம்.
இது *ஞானத்தின்* முக்கியத்துவத்தையும், ஞானத்தினால் நமக்கு உண்டாகும் இரட்சிப்பின் மேன்மையையும், இயேசு கிறிஸ்துவுக்குள் நமக்குண்டாகும் பக்தி வைராக்கியத்தின் ஆழத்தையும் வெளிப்படுத்துகிறது. தெய்வீக ஞானம் பரிசுத்தரின் அறிவு நம்மில் நிலைத்திருக்கும்படி, நம்முடைய இரட்சகரும் நம்முடைய ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன்.🙏🏻🙏🏻

God Bless You all.

VOICE OF GOD
(HALL OF PRAISE THIRUVALANGADU)
09/12/2025

08/12/2025

தொடர்ச்சி...

*VOICE OF GOD - DAY 5*
(கடவுளின் குரல்- நாள்-5)
08/12/2025

*21 உபவாச நாட்கள் காலை தியானம்.*

கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக 🙏🏻.

கர்த்தருக்கு பிரியமானவர்களே உங்கள் யாவரையும் இந்த நாளுக்கான காலை ஸ்தோத்திரங்களையும்,வாழ்த்துதலையும் நம்முடைய இரட்சகரும் கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.🙏🏻

தொடர்ச்சியாக நாம் பிலிப்பியர்: 2:5 ல் பவுல் குறிப்பிட்ட வார்த்தையை தியானித்து வருகிறோம். *"பிலிப்பியர் 2:5. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;*.

இந்த நாளிலும் கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்கும் படி, வேரூன்றி கனிதரும் நல்ல மரங்களாக கர்த்தர் நம்மை ஏற்ப்படுத்தியிருக்கிறார். நாம் பார்த்தபடியே *"நம்முடைய ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் நம்மை தெடரும்படி,* இயேசு கிறிஸ்துவின் அன்பில் சினேகத்தில் வளர்கிறவர்களாக இருக்க வேண்டியது அவசியம் கட்டாயமாகும்.

ஏனென்றால்???.

நீதிமொழிகள்: 8.17 ல் பார்க்கிறோம் ,*"என்னைச் சிநெகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்"* என்றும்,*நீதிமொழிகள் 8:30 மற்றும் 35 ல் "எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்; ஜீவனைக் கண்டடைந்தேன்"* என்றும் கர்த்தருடைய வார்த்தையை வாசிக்கிறோம்.

இந்த நாளிலும் உங்கள் ஜீவனுள்ள நாளெல்லாம் நீங்கள் நன்மையை சுதந்திருக்க , கர்த்தருடைய சமூகத்தில் காத்திருந்து, விழித்திருந்து,
ஜெபித்திருந்து, ஜெயம் பெறும்படி நம்முடைய இரட்சகரும் நம்முடைய ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன்.🙏🏻🙏🏻

God Bless You all.

VOICE OF GOD
(HALL OF PRAISE THIRUVALANGADU)
08/12/2025

07/12/2025

VOICE OF GOD

பதிவு: DAY 2 - 05/12/2025

காலை தியானம்

பிலிப்பியர் 2:5

கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;

கர்த்தருக்கு பிரியமானவர்களே உங்கள் யாவரையும் இந்த காலை வேலையில் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் 🙏🏻.

நாம் இந்த நாட்களில் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு
அளித்த இந்த மகத்தான இரட்சிப்புக்கு
பாத்திரவான்களாக இருப்பது அவசியமும் கட்டாயமுமாக இருக்கிறது.

ஏன்???

கிறிஸ்துவை உடையவன் மாத்திரமே கிறிஸ்தவனாகவும் அவருக்கு பாத்திரவானாகவும் இருக்க முடியும். அப்பேஸ்தலர் பவுல் தன்னை முழுதுமாக கிறிஸ்துவுக்குள் அற்பனித்திருந்தார் என்று அவர் எமுதிய நிருபங்களை வாசிக்கும் போது நமக்கு நன்கு விளங்குகிறது.

தேவன் யார்?
இயேசு கிறிஸ்து யார்?
இயேசு எப்படிப்பட்டவர்?

அப்போஸ்தலர் பவுல் நம்முடைய ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவை நன்கு அறிந்திருந்தார் என்று நமக்கு தெரியும்.

1 நாளாகமம்: 28:9 ல் இப்படியாக வாசிக்கிறோம், தாவீது தன் குமாரனாகிய சாலொமோனிடம் "உன் பிதாக்களின் தேவனை அறிந்து,அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி" என்று குறிப்பிடுகிறதை பார்க்கிறோம்.

எனக்கு அன்பான தேவ பிள்ளைகளே தேவனை அறிகிற அறிவில் நாம் நாளுக்குநாள் விருத்தியடைகிறவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.

கொலோசெயர் 1:10 ல் அப்போஸ்தலர் பவுல் சொல்லியபடி "சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து கர்த்தருக்குப்பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ள வேண்டும் என்பதே.

கர்த்தர் தாமே உங்களோடு இடைபடுவாராக.

ஆமென்🙏🏻.

God Bless you All.

VOICE OF GOD TVG
05/12/2025

நாளை தொடர்ச்சியை பார்க்கலாம்.

07/12/2025

VOICE OF GOD

பதிவு: DAY 1-04/12/2025

கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.

பிலிப்பியர் 2 : 5

கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;

எனக்கு அன்பான தேவ பிள்ளைகளே இந்த காலை தியானப் பகுதியில், அப்போஸ்தலர் பவுல் இப்படியாக எழுதுகிறதை பார்க்கிறோம்.

"கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே" உங்களிலும் இருக்கக்கடவது" என்று.

நாம் அநேக முறை இந்த வேதப் பகுதியை வாசித்திருப்போம். இந்த வார்த்தைகளை வாசிக்கும் போதெல்லாம் நமக்குள் ஒரு வைராக்கியம் ஏற்படும், நாமும் இயேசுவைப் போல வாழ வேண்டும் என்பதே. ஆனால் சில நேரங்களில் அல்லது சில நாட்களில் இந்த வைராக்கியத்திலிருந்து விலகிபோய்விடுகிறோம்.

ஏன்????

எனக்கு அன்பான தேவ பிள்ளைகளே, ஒரு காரியத்தை நாம் நன்கு கவனிப்போமானால் இந்த வார்த்தைகளை நமக்கு எழுதியது அப்போஸ்தலர் பவுல், அவர் இந்த வார்த்தைகளை ஆவியானவர் துணையோடு நமக்கு வெளிப்படுத்தினார். அப்போஸ்தலர் பவுல் தாம் எவ்வளவு அதிகமாக இயேசுவை ஏற்றுக்கொண்டு அவருடைய போதனைகளால் ஈர்க்கப்பட்டாரோ அவ்வளவாக நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பிரதிபலிக்க அரம்பித்தார். இந்த கலைவேலையில் நாம் கவனிக்க வேண்டியது , இயேசு கிறிஸ்துவின் சிந்தையை நாம் நம்முடைய நடக்கையில் மாத்திரமே வெளிப்படுத்த முடியும்.

ஆவியானவர் தாமே இந்நாளில் உங்களோடு இடைபடுவாராக🙏🏻.

ஆமென்.

God Bless you All.

-VOICE OF GOD TVG
04/12/2025

10/05/2024

"காலை வணக்கம்! சூரியன் உதிக்கும்போது, ​​கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பு மற்றும் வழிகாட்டுதலின் அரவணைப்பைத் தழுவுவோம்."

10/05/2024

"Good morning! As the sun rises, let's embrace the warmth of Lord Jesus Christ's love and guidance."

28/03/2024

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் தொண்டு நிறுவனம் மூலம் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கி தருவதாக கூறி ரூபாய் 36,13,00,000/- (முப்பத்தாறு கோடியே பதிமூன்று லட்சம்) பணம் மோசடியில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த எதிரி கைது - தூத்துக்குடி மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் நடவடிக்கை.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் முப்பிலிவெட்டி பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் மனைவி சண்முகலட்சுமி (33) என்பவரிடம் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பாரதி நகரைச் சேர்ந்த ஜெயபால் மகன் பாலகுமரேசன் (46) மற்றும் சிலர் தாங்கள் நடத்தி வரும் ஆதவா தொண்டு நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்தால் நல்ல சம்பளத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கி தருவதாகவும், நீங்கள் தரும் பணத்திற்கு லைஃப் இன்சூரன்ஸ் காப்பீடு, 15 வருட முடிவில் முதிர்வு தொகையுடன் சேர்த்து திருப்பி தந்து விடுவதாகவும், வேலையை விட்டு நின்றால் மேற்படி டெபாசிட் தொகையை திருப்பி தரப்படும் என்றும், 58 வயது வரை அரசு பள்ளிகளில் வேலை செய்யலாம் என்றும் பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறியதன் பேரில் மேற்படி சண்முகலட்சுமி ரூபாய் 5 லட்சம் பணத்தை டெபாசிட் செய்துள்ளார். பின்னர் மேற்படி தொண்டு நிறுவனத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பணியை வாங்கித் தராமல் மோசடி செய்துள்ளனர்.

இதனையடுத்து சண்முகலட்சுமி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்களிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட குற்ற பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி மாவட்ட குற்ற பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ராஜு மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் திருமதி. அந்தோணியம்மாள் தலைமையில், உதவி ஆய்வாளர் திருமதி. அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. முருகன் மற்றும் தலைமை காவலர் திரு. வேல்ராஜா ஆகியோர் விசாரணை மேற்கொண்டு, மேற்படி எதிரி பாலகுமரேசன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி பாலகுமரேசன் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தனது ஆதவா தொண்டு நிறுவனத்தின் கிளை அலுவலகம் அமைத்து பணியாட்களை நியமித்து வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் ஆசிரியர்களை குறிவைத்து அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் வழங்குவதாக கூறி முறைகேடாக பணம் வசூலித்து 1315 பேரிடம் ரூபாய் 36,13,00,000/- (முப்பத்தாறு கோடியே பதிமூன்று லட்சம்) பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து மேற்படி போலீசார் எதிரி பாலகுமரேசனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TamilNadu Police South Zone Chief Minister of Tamil Nadu Tamil Nadu Police Thoothukudi District Police

Address

Zion Nagar
Thiruvarur
631210

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jesus Life Blessed Zion Church,Tiruvelangadu. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Jesus Life Blessed Zion Church,Tiruvelangadu.:

Share