04/08/2026
#திருவையாறு #ஆடிப்பெருக்கு
திருவையாறு #ஸ்ரீ_அறம்வளர்த்தநாயகி உடனாகிய #ஸ்ரீ_ஐயாறப்பர் திருக்கோயிலில், தனிக்கோயில் கொண்டு வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அளித்து, ஐயன் தந்த இருநாழி நெல் கொண்டு 32 அறங்களை வளர்த்து, காமக்கோட்டத்து பெரிய நாச்சியாராக விளங்கக்கூடிய #ஸ்ரீ_தர்மசம்வர்த்தினி (ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி) அம்பாளுக்கு #ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று காலை (03/08/26) தர்பார் மண்டபத்தில் இருந்து ஸ்ரீ ஆடிப்பூர அம்பாள் #சிறிய_மர_படிச்சட்டத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காவிரியில் #தீர்த்தம் கொடுத்து காவிரி அன்னைக்கு நெய்தீபம் இடுதல் மாவிளக்கு போடுதல் காதோலை கருகமணி ரவிக்கதுணி சுமங்கலி செட் கண்ணாடி வளையல்கள் விசேஷ பழங்கள் அச்சுவெல்லம் பச்சரிசி படைத்தல் ஓலைச்சுவடி சப்பரம் ஆற்றில் விடுதல் அஸ்திர தேவர் தீர்த்தமாடல் அம்பாளுக்கு நிவேதனம் தீபாராதனை புறப்பட்டு தீபாராதனை வீதியுலா திருக்கோயில் வந்தடைதல் உச்சிக்கால பூசை யதாஸ்தானம் எழுந்தருளல்!!!