ST Vincent Palloti Church, Thirunagar, Madurai

ST Vincent Palloti Church, Thirunagar, Madurai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ST Vincent Palloti Church, Thirunagar, Madurai, Religious organisation, St Vincent Pallotti Church, Thirunagar.

Holy week schedule at St Vincent Palloti Church, Thirunagar.
24/03/2026

Holy week schedule at St Vincent Palloti Church, Thirunagar.

வணக்கம் .நமது பங்குத் திருவிழாவின் இரண்டாம் நாளாகிய இன்று திவ்ய நற்கருணை பவனியானது அமலா பள்ளியில் இருந்து மாலை 6 மணிக்கு...
22/01/2026

வணக்கம் .
நமது பங்குத் திருவிழாவின் இரண்டாம் நாளாகிய இன்று திவ்ய நற்கருணை பவனியானது அமலா பள்ளியில் இருந்து மாலை 6 மணிக்கு துவங்கும்.

பங்கு மக்கள் அனைவரும் திரளாக
பவனியில் கலந்து கொண்டு இறையாசீர் பெற அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
பங்குத்தந்தை

*திருக்குடும்ப விழா.* *Feast of Holy Family.*யோசுவா 24:14-28.இப்பொழுது, ஆண்டவருக்கு அஞ்சி, உண்மையோடும் நேர்மையோடும், அவர...
28/12/2025

*திருக்குடும்ப விழா.* *Feast of Holy Family.*

யோசுவா 24:14-28.

இப்பொழுது, ஆண்டவருக்கு அஞ்சி, உண்மையோடும் நேர்மையோடும், அவருக்கு ஊழியம் புரியுங்கள். நதிக்கு அப்பாலும், எகிப்திலும், உங்கள் மூதாதையர், பணிந்து வந்த தெய்வங்களை, விட்டு விலகுங்கள். யோசுவா 24:14

ஆண்டவருக்கு ஊழியம் புரிவது, தீயது என்று உங்கள் பார்வைக்குத் தோன்றினால், உங்கள் மூதாதையர், நதிக்கு அப்பால், பணிந்து வந்த தெய்வங்களுக்கோ, உங்கள் நாட்டில், உங்களுடன் வாழும் எமோரியரின் தெய்வங்களுக்கோ, இவர்களுள் யாருக்கு, ஊழியம் செய்வீர்கள் என்பதை, நீங்களே, இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால், *நானும் என் வீட்டாரும், ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்.* யோசுவா 24:15

மக்கள் மறுமொழியாக, "ஆண்டவரைக் கைவிட்டு, வேற்றுத் தெய்வங்களை வணங்குவது, எங்களிடத்தே அறவே நிகழாதிருப்பதாக! யோசுவா 24:16

ஏனெனில், எங்கள் கடவுளாகிய ஆண்டவர், எங்களையும், எங்கள் மூதாதையரையும், அடிமைத்தன வீடாகிய, எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டு வந்தார். எங்கள் கண்முன், இப்பெரிய அடையாளங்களைச் செய்தார். நாங்கள், நடந்து வந்த, எல்லா வழிகளிலும், நாங்கள், கடந்து வந்த, மக்களிடையிலும், எங்களைக் காத்தருளினார்.
யோசுவா 24:17

ஆண்டவர், எல்லா மக்களையும், இந்நாட்டில் வாழ்ந்த எமோரியரையும், எங்கள் முன்னிருந்து விரட்டினார். *நாங்களும், ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம்.* ஏனெனில், அவரே எங்கள் கடவுள்" என்றனர். யோசுவா 24:18

யோசுவா, மக்களிடம், "உங்களால் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய இயலாது. ஏனெனில், அவர் தூய கடவுள். அவர், வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத கடவுள். உங்கள் குற்றங்களையும், பாவங்களையும், அவர் மன்னிக்க மாட்டார். யோசுவா 24:19

ஆனால், நீங்கள், ஆண்டவரைக் கைவிட்டு, வேற்றுத் தெய்வங்களை வணங்கினால், அவர், மீண்டும் உங்களுக்குத் தீங்கு செய்வார். உங்களுக்கு நன்மை செய்த, அவர், உங்களை அழித்து விடுவார்" என்றார். யோசுவா 24:20

மக்கள், யோசுவாவிடம், "இல்லை, *நாங்கள், ஆண்டவருக்கே, ஊழியம் புரிவோம்"* என்றனர். யோசுவா 24:21

யோசுவா, மக்களிடம், "ஆண்டவருக்கு ஊழியம் செய்ய, அவரை, நீங்களே தெரிந்து கொண்டீர்கள் என்பதற்கு, நீங்களே சாட்சிகள்" என்றார். அவர்கள், "நாங்களே சாட்சிகள்" என்றனர். யோசுவா 24:22

இப்பொழுது, உங்கள் நடுவில் உள்ள, வேற்றுத் தெய்வங்களை விலக்கி விடுங்கள். *இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரிடம், உங்கள் இதயங்களை, திருப்புங்கள்"* என்றார். யோசுவா 24:23

மக்கள், யோசுவாவிடம்,**எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு, நாங்கள் ஊழியம் புரிவோம். அவரது குரலுக்குக் கீழ்ப்படிவோம்"* என்றனர். யோசுவா 24:24

அன்று, யோசுவா, மக்களுக்காக, உடன்படிக்கை செய்தார். செக்கேமில், அவர், அவர்களுக்கு, விதிமுறைகளையும், ஒழுங்குகளையும் கொடுத்தார். யோசுவா 24:25

யோசுவா, இவ்வார்த்தைகளைக், கடவுளின் திருச்சட்ட நூலில் எழுதினார். ஒரு பெரும் கல்லை எடுத்து, அதை, ஆண்டவரின் திருத்தலத்தில், ஒரு கருவாலி மரத்தின் கீழ், நாட்டினார். யோசுவா 24:26

யோசுவா, எல்லா மக்களிடமும், "இதோ! இக்கல், நமக்கு எதிரான சான்றாக இருக்கும். ஏனெனில், *ஆண்டவர், நம்மோடு பேசிய எல்லாவற்றையும் இது கேட்டது.* நீங்கள், உங்கள் கடவுளை, ஏற்றுக் கொள்ள மறுத்தால், இது உங்களுக்கு எதிரான, சான்றாக இருக்கும்" என்றார். யோசுவா 24:27

யோசுவா, மக்களை, அவரவர் உரிமைச் சொத்தாகிய பகுதிகளுக்கு, அனுப்பி வைத்தார். யோசுவா 24:28

*புதிய ஏற்பாட்டின் குடும்ப ஊழியம்.*

கடவுளின் விருப்பத்தை, உலகை மீட்கும் அவரது புதிய ஏற்பாட்டின் திட்டத்தை, செயல்படுத்திய, அவரது மனிதநிலைக் குடும்பம்தான், மரியாள் + சூசை + இயேசு என்னும் பரிசுத்த ஆவிக்குரிய குடும்பம்.

*கிறிஸ்தவ குடும்பம் ஒவ்வொன்றும், கடவுளின் இயல்பில் வாழும்படியாக அர்ப்பணிக்கப்பட்டு, இறையியல்புக்கு மாற்றம் பெற்ற, பரிசுத்த ஆவிக்குரிய குடும்பம்தான்.*

இந்த தகுதியை, திருமுழுக்கு, ஒப்புறவு, நற்கருணை, திடப்படுத்துதல், திருமணம் என்ற அருட்சாதனங்கள் வழியாக பரிசுத்த இறைவன், அவரது இயேசு நாம உரிமை உறவில் செயலாற்றுகிறார்.

ஆகவே, நாமும், நானும் என் வீட்டாரும், பரிசுத்த இறைவனுக்கே, அவரது இயேசு என்னும் நாம உரிமை உறவில், பரிசுத்த ஆவியாரின் தலைமையில், அவர் விருப்பம் நிறைவேற்றும் ஊழியம் செய்து வாழ்வோம் என்ற உறுதிப்பாட்டுடன்தான், நாம் அனைவரும் திருமண வாழ்வை, குடும்ப வாழ்வை ஆரம்பித்துள்ளோம் என்பதை நினைவு கூர்வோம். திருமணத்தில் நாம் ஒவ்வொருவரும் கொடுத்த சத்தியத்திற்கு மாறுபட்ட வாழ்வுக்காக பரிசுத்த இறைவனிடம் மன்னிப்பு கேட்போம். மனம் மாறுவோம்.
பழைய ஏற்பாட்டில், யோசுவாவின் தலைமையில் மக்கள் உறுதி எடுத்தது போல், உண்மை இறைவனாகிய, பரிசுத்த இறைவனின் குரலுக்குக் கீழ்ப்படிவோம் என்று உறுதியெடுப்போம்.

நாம் பெற்றுக் கொண்ட அருட்சாதனத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களும், உச்சரித்த வார்த்தைகளும், மூலைக் கல்லாகிய இயேசு என்னும் நாமம் வழியாக, இந்த உண்மைக்கு சாட்சிகளாயிருக்கிறது. அறிவோம் இதனை.

மேலும், இதுவே, மரியாள் சூசை இயேசு என்னும் மரிசுத்த இறைவனின் குடும்பத்துக்கு நாம் கொடுக்கும் மதிப்பும் கொண்டாட்டமுமாய் இருக்கிறது.

03/09/2024
24/04/2024

✝️Praise The Lord✝️
*I will feed my flock, and I will cause them to lie down, saith the Lord GOD.*
Ezekiel 34:15

💐Blessed Day💐
*நானே என் மந்தையை மேய்த்து, இளைப்பாறச் செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.*
எசேக்கியல் 34:15

அன்பார்ந்த பங்கு இறைமக்களே!   அருளின் காலமாகிய இத்தவக்காலத்தில் இறைவனுடைய அருளால் நமக்கு இருதினங்கள் ஆண்டவரோடு செலவிட, அ...
23/02/2024

அன்பார்ந்த பங்கு இறைமக்களே!

அருளின் காலமாகிய இத்தவக்காலத்தில் இறைவனுடைய அருளால் நமக்கு இருதினங்கள் ஆண்டவரோடு செலவிட, அவருடைய அன்பில் நிறைந்திட, அவருடைய இரக்கத்தில் கரைந்திட, அவரோடு ஒப்பரவாகிட, இந்த தவக்கால தயாரிப்பு தியானம் நடைபெறுகிறது.

இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி இறைவனுடைய அன்பையும், ஆசீரையும், மன்னிப்பையும் முழுமையாக பெற்றிட இந்த தியானத்தில் அனைவரும் பங்கெடுத்து இறை அருளை பெறுவோம்.

இப்படிக்கு பங்குத்தந்தை

அனைவரும் வருக!! இறை ஆசிர் பெறுக!!
20/01/2024

அனைவரும் வருக!! இறை ஆசிர் பெறுக!!

Address

St Vincent Pallotti Church
Thirunagar
625006

Website

Alerts

Be the first to know and let us send you an email when ST Vincent Palloti Church, Thirunagar, Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share