குச்சனூர் சுயம்பு சனீஸ்வரன் கோவில்

  • Home
  • India
  • Theni
  • குச்சனூர் சுயம்பு சனீஸ்வரன் கோவில்

குச்சனூர் சுயம்பு சனீஸ்வரன் கோவில் Kuchanur temple

27/06/2026

அனைவருக்கும் வணக்கம்..

இன்றைய சனிக்கிழமை மிகவும் துயரமானதொரு நாள் ஆக அமைந்திருக்கிறது..
நமது தேனிமாவட்டம் குச்சனூரில் அமைந்துள்ள அருள்மிகு சுயம்பு சனிஸ்வரன் திருக்கோவிலின் பரம்பரை அறங்காவலரும் தலைமை அர்ச்சகருமாக அரும்பணி ஆற்றிய உயர்திரு T.K. திருமலைமுத்து (எ) திருமலை ஜெயபால் முத்து அவர்கள் (27.06.2026) சனிக்கிழமை அன்று அதிகாலை 03:00 மணியளவில் இறைவனடி துயில் கொண்டார் ...
அன்னாரின் நல்லடக்கம் (27.06.2026) சனிக்கிழமை அன்று மாலை 04.00 மணியளவில் நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம் ...

மிகுந்த மனவலியில் இப்பதிவினை பகிர்கின்றேன்..வயது வந்த மனிதர்களுக்கு இப்பூவுல வாழ்வு கடினமாக இருப்பதை என்னால் புரிந்து கொ...
22/05/2026

மிகுந்த மனவலியில் இப்பதிவினை பகிர்கின்றேன்..

வயது வந்த மனிதர்களுக்கு இப்பூவுல வாழ்வு கடினமாக இருப்பதை என்னால் புரிந்து கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் முடிகின்றது..

ஆனால் எந்தவித புறவுலகும் குறித்து அறிற்றாத சிறார்கள் ஏனிந்த கொடூர மரண வலிகளை எதிர்கொள்கிறார்கள்???

எந்தன் வாழ்வினில் பட்டயக் கல்வி பயில்கையில் தினசரி செய்தித்தாள் படிப்பதன் மூலம் அறிந்து கொண்ட குற்ற வழக்கு செய்திகள் மூலமாக கடுமையான மன அதிர்ச்சிகளை அடைந்திருக்கின்றேன்.

2008,2009 தினதந்தி
தினசரி செய்தித்தாள் மூலமாக இலங்கை போர் சம்பவங்கள் குறித்து படித்து அடைந்த மன உளைச்சல்கள் கொடுரம் மிக்கவை...

இன்றளவிலும் அதன் நினைவலைகள் பாதிப்பு எனக்குண்டு..
பின்னர் தொடர்ச்சியாக ஈழம் குறித்த செய்திகளை தேடி படிக்க துவங்கிய நான் முடிந்த மட்டும் அச்செய்தி தொடர்பான வற்றில் இருந்து என் கவனத்தை திசை திரும்ப தொடங்கினேன்.

அவ்வளவு மனபாதிப்பை கொடுத்து எனை உலுக்கி எடுத்தது..

இச்சூழலில் தமிழ்நாட்டிலேயே நடந்த சம்பவம் ஆக இச்செய்தியினை காண நேரிட்டது..
(2010. இரு சிறார் கொடூர படுகொலை)
அதனை ஒட்டி காவல்துறை துப்பாக்கிச்சூடு ..
(சைலேந்திர பாபு அவர்களது தலைமையிலான காவல் துறை ,கோவை)
பிறகு விசாரணை என தொடர்ந்தாலும்
நீதி கிடைத்ததா என்றால் இல்லை என்றே சொல்லலாம்..

நிற்க..
எதற்காக இச்செய்திகளை நான் கூறி வருகிறேன் என்றால் நம்முடைய கோவையில் இன்றைக்கும் சிறார்கள் பலியாகி வருகிறார்கள்..

வயது வந்தோர்க்கும் பாதுகப்பில்லை
சிறார்களுக்கும் பாதுகாப்பில்லை..

இதில் ஆளும் கட்சி எதிர் கட்சி என்று நிலைப்பாடுகள் தேவை அன்று..

எவர் ஆட்சி கட்டிலில் இருந்தாலும் காவல் துறை நிர்வாகம் தொடர்ந்து சீராக இயங்கினாலும் குற்ற உலகம் சிறார்களையும் பெண்களையும் தொடர்ந்து இரையாகவே
காண்கின்றார்கள்,
இதனை எங்ஙனம் எதிர்கொள்வது?

#நிலவின்ரசிகன்

17/05/2026

அனைவருக்கும் வணக்கம் ...

இக்காணொளி insta Live feed ல் கிடைத்தது..
இதன் உண்மை தன்மையை வீரபாண்டி திருவிழா சென்றோர் உறுதிப்படுத்தவும்..

ஒரு வேளை உண்மை எனில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டூம்..

அல்லது இக்கணொளி முந்தைய வேறு ஊர்களில் நிகழ்ந்த திருவிழா விபத்தாக இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்...

கோவில் திருவிழாக் காலங்களில் கொண்டாட்டங்கள் இருப்பது இயல்பு தான்..
ஆனால் எந்த வித பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளும் (Safety precautions) இன்றியும், பொது மக்களின் உயிர்கள் குறித்த பிரக்ஞை இன்றியும் முழுக்க முழுக்க வணிக காரணங்களுக்காக
இயக்கப்படும் யாவும் பாதுகாப்பிற்கு உறுதியற்றவையே ..

இக்காணொளி காணும் போது மனம் மிகவும் பதைபதைத்து..
மிகவும் ரசனை மனநிலையில் கொண்டாட்டமாக வந்த குடும்பங்கள் எத்தகைய மன அதிர்ச்சியை எதிர்கொண்டிருப்பார்கள் ...

வருத்தமாக இருக்கிறது..

Unsafety conditions குறித்த தீவிபத்து தடுப்பு தொழில்நுட்ப அறிவுடையோர் இது போன்ற கிரைண்டர் ராட்டினங்களை இயக்க மாட்டார்கள்...

உடனடியாக இத்தகைய பாதுகாப்பு உறுதியற்ற ராட்டினங்களை தடை செய்யுமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்...

TN Hindu Religious & Charitable Endowments Department துறை கவனத்திற்கு...

கோவில் நிர்வாகத்தினர் அலட்சியமாக இல்லாமல் பொது மக்களின் பாதுகாப்பிற்காக சிந்திக்கவும் ..

#விண்மீன்ரசிகன்

தனிப்பெரும்பாண்மை எவருக்கும் கிடைக்காத சூழலில் அடுத்தடுத்து உள்ள வாய்ப்புக்கள்..ஆளுநர் அதிக தொகுதிகளில் வென்றுள்ள தவெக ஆ...
05/05/2026

தனிப்பெரும்பாண்மை எவருக்கும் கிடைக்காத சூழலில் அடுத்தடுத்து உள்ள வாய்ப்புக்கள்..

ஆளுநர் அதிக தொகுதிகளில் வென்றுள்ள தவெக ஆட்சியமைக்க உரிமை கோரி அழைக்கலாம்.
தவெகவும் சென்று பதவி ஏற்கலாம் ...
ஆனால் ஒரு வாரத்திற்கு பிறகுநடக்கும் சட்டமன்ற வாக்கெடுப்பில் தகுந்த எண்ணிக்கை 118 கிடைக்கவில்லை எனில் ஆட்சியை இழக்க நேரிடும் ..

மறு தேர்தல் அல்லது
குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு ஒன்றி அரசின் கட்டுப்பாட்டில் ஆறுமாதம் ஆளப்படும்..

ஆறு மாதங்களுக்கு பிறகு மறுதேர்தலை நடத்துவார்கள்..

  | தேனி - போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி   |   |  Congratulations
04/05/2026

| தேனி - போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி

| |

Congratulations

திமுக தமிழ்நாட்டின் மிகப்பெரும் மக்கள் சக்தி மிக்க அமைப்பாக உருவெடுத்திருக்கிறது.. திமுக தலைமையிலான அணி மீண்டும் ஆட்சி அ...
04/05/2026

திமுக தமிழ்நாட்டின் மிகப்பெரும் மக்கள் சக்தி மிக்க அமைப்பாக உருவெடுத்திருக்கிறது..

திமுக தலைமையிலான அணி மீண்டும் ஆட்சி அமைக்க போகின்றது..
போடி நாயக்கனூர் தொகுதியில் உயர்திரு O. பன்னீர் செல்வம் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக வெல்வார் என்று தீர்க்கதரிசனம் கூறுகின்றேன்..

*1.🌅🔥 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று வரலாற்று சாதனை புரிய இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்...
04/05/2026

*1.
🌅🔥 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று வரலாற்று சாதனை புரிய இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள்! 🔥🌅

🌅🔥 205 தொகுதிகளுக்கு மேலே வெல்ல போகும் திமுக!

#வெல்லப்போகும்_திமுக #திராவிடம் வரலாற்றுசாதனை DMKForTN

DMK - Dravida Munnetra Kazhagam
---

*2.
🌅🔥 Heartfelt congratulations to Dravida Munnetra Kazhagam which is going to create history by achieving a massive victory in the Tamil Nadu Assembly Election! 🔥🌅

🌅🔥 DMK going to win more than 205 constituencies!

DMK DMKWins Udhayasuriyan TamilNaduElections2026 DravidianModel HistoricVictory DMKForTN

---

*3.
Tamil: வெல்லப்போகும் திமுக! 🌅✌️ DMK Election2026
English: DMK Going to Win! 🌅✌️ DMK TNElections2026

02/05/2026

ஒரு பனை மரம் சராசரியாய் வளர்வதற்கு குறைந்த பட்சம் 7 முதல் 15 ஆண்டுகள் வரை ஆகும்...
பனை மரம் என்பது தமிழ்நாட்டின் தேசிய மரம் ..
பனை மரத்தின் அருமை மறந்த சமூகம் மிகவும் கேவலமாக தங்களது கேளிக்கை கூத்துக்களுக்காக மரங்களில் தீப்பொறிகளை உருவாக்கி ரசித்து மகிழ்கின்றனர்..

இவர்களுக்கு எல்லாம் " ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் " என பகிரங்கமாக சாபம் இடுகின்றேன்...

25/04/2026

சனிக்கிழமை சிறப்பு தரிசனம்

சுயம்பு குச்சனூர் சனிஸ்வரன் திருக்கோவில்

தேனி மாவட்டம் ..

தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியல் மாற்றங்கள் — எண்களில் மறைந்திருக்கும் அரசியல் சிக்கல்ஒரு ஜனநாயகத்தின் நம்பகத்தன்மை, அதன...
23/04/2026

தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியல் மாற்றங்கள் — எண்களில் மறைந்திருக்கும் அரசியல் சிக்கல்

ஒரு ஜனநாயகத்தின் நம்பகத்தன்மை, அதன் தேர்தல் முறையின் வெளிப்படைத்தன்மையில் தான் அமைகிறது. வாக்காளர் பட்டியல் என்பது வெறும் நிர்வாகப் பட்டியல் அல்ல; அது மக்கள் அதிகாரத்தின் உயிர்நாடி. ஆனால் சமீப காலங்களில் வெளிவந்த வாக்காளர் பட்டியல் தரவுகளை ஆராய்ந்தால், சில முக்கியமான கேள்விகள் தவிர்க்க முடியாதவையாக எழுகின்றன.

2025 டிசம்பரில் SIR நடவடிக்கைக்கு பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5,43,76,755 பேர் இருந்தனர். பின்னர் 2026 பிப்ரவரியில் வெளியான இறுதி பட்டியலில் இந்த எண்ணிக்கை 5,67,07,380 ஆக உயர்ந்தது. இது இயல்பான வளர்ச்சி எனக் கருதலாம். ஆனால், அதற்கு முன் SIR நடவடிக்கையில் 97 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டிருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

இதற்கு மேலாக, மார்ச் 26 வரை புதிய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 10 அன்று வெளியான “இரண்டாம் இறுதி பட்டியலில்” வாக்காளர்கள் எண்ணிக்கை 5,73,43,291 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, மூன்று மாதங்களில் சுமார் 29.6 லட்சம் பேர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதன் பொருள் என்ன?

ஒரு பக்கம் பெருமளவில் நீக்கம், மறுபக்கம் அதற்குச் சமமான அளவில் புதிய சேர்ப்பு. இது நிர்வாகத் திருத்தமா? அல்லது தேர்தல் அரசியலின் மறைமுக விளையாட்டா? என்பது முக்கியமான கேள்வி.

தொகுதி அளவிற்கு கொண்டு சென்றால், சராசரியாக 40,000க்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டிருக்க, 12,000க்கும் மேற்பட்டோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இத்தகைய பெரும் மாற்றங்கள், ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கு கணக்கீட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.

இப்போது வாக்குப்பதிவு சதவீதத்தை பார்க்கலாம்.

90% வாக்குப்பதிவு நடந்தால் 5.16 கோடி பேர், 80% நடந்தால் 4.58 கோடி பேர், 70% நடந்தாலும் கூட 4.01 கோடி பேர் வாக்களிப்பார்கள்.

இந்த எண்ணிக்கைகள் வெறும் கணக்குகள் அல்ல; கடந்த தேர்தல் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இது மேலும் முக்கியமடைகிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் 4.34 கோடி பேர் வாக்களித்தனர். அது அப்போதைய பட்டியலின் 69.72%. ஆனால் தற்போதைய பட்டியலை வைத்து அதே சதவீதம் கணக்கிட்டால், அது 4 கோடிக்கும் குறைவாக வந்து விடுகிறது.

தமிழ்நாட்டின் வாக்குப்பதிவு வரலாறு இப்படிப் பேசுகிறது — 4 கோடிக்கு கீழ் வாக்குப்பதிவு செல்வது அபூர்வம். 2021 சட்டமன்றத் தேர்தலிலேயே 4.62 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர். தற்போதைய பட்டியலின் அடிப்படையில் இதே அளவு வாக்குகள் பதிவானால், 1/3

Address

V. O. C Street, Kovil Thottam
Theni
625515

Website

Alerts

Be the first to know and let us send you an email when குச்சனூர் சுயம்பு சனீஸ்வரன் கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share