10/08/2026
#திருவையாறு #ஆடிப்பூரப்_பெருவிழா
#ஐந்தாம்_திருநாள் #இரவு
திருவையாறு #ஸ்ரீ_அறம்வளர்த்தநாயகி உடனாகிய #ஸ்ரீ_ஐயாறப்பர் திருக்கோயிலில், தனிக்கோயில் கொண்டு வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அளித்து, ஐயன் தந்த இருநாழி நெல் கொண்டு 32 அறங்களை வளர்த்து, காமக்கோட்டத்து பெரிய நாச்சியாராக விளங்கக்கூடிய #ஸ்ரீ_தர்மசம்வர்த்தினி (ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி) அம்பாளுக்கு #ஆடிப்பூரப்_பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் திருநாளான நேற்று காலை பல்லக்கிலும் இரவு (09/08/26) தர்பார் மண்டபத்தில் ஸ்ரீ ஆடிப்பூர அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் #வெள்ளி_ரிஷப வாகனத்தில் #ஓலைச்சப்பரத்தில் எழுந்தருளி இராஜ வீதிகளில் வீதியுலா நடைபெற்றது!!!
இவ்விழாவில் திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீன ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசந்நிதானம் உத்திரவுப்படி திருவையாறு ஸ்ரீ பஞ்சநதீஸ்வர சுவாமி தேவஸ்தான கட்டளை விசாரணை
ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள்!!!