தமிழனாய் இருப்போம்

தமிழனாய் இருப்போம் தமிழனாய் இருப்போம்-தமிழ்லை வளர்ப்போ? Irupai tamila nerupai

29/04/2026
18/06/2022
ஒருமுறை குற்றாலத்திற்கு வந்திருந்த காமராஜர் அருவியில் குளிக்க ஆசைப்பட்டார். அதன் பேரில் காவல்துறையினர் சிலர் முன்னதாக அர...
05/06/2022

ஒருமுறை குற்றாலத்திற்கு வந்திருந்த காமராஜர் அருவியில் குளிக்க ஆசைப்பட்டார். அதன் பேரில் காவல்துறையினர் சிலர் முன்னதாக அருவிக் கரைக்குச் சென்றனர்.

அடுத்த சில நிமிடங்களில், காமராஜர் அருவியை நோக்கிச் சென்றார்.

அங்கே அவர் கண்ட காட்சி விசித்திரமாக இருந்தது.

குளித்தும் குளிக்காமலும் இருந்த பொதுமக்கள் - அருவிக்கரையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு - பாதையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தனர்.

ஒதுங்கி நின்றவர்களைப் பார்த்ததும் விஷயம் விளங்கிற்று அவருக்கு.

அங்கிருந்த காவலரை பார்த்து -

இதுக்குத்தான் நீ எனக்கு முன்ன ஓடி வந்தியா!. இவங்களோட நா சேந்து குளிச்சா ஒனக்கு என்னான்னே?.. - என்று சத்தம் போட்டுவிட்டு,

ஒதுங்கி நின்ற மக்களை பார்த்து,

இப்படி ஒதுங்கி நின்னா எப்படின்னேன்?.. வாங்க எல்லாரும் சேந்து குளிப்போம்!.. - என அன்புடன் அழைத்தார்.

உண்மையான ஏழைப் பங்காளனை நேரில் பார்த்த களிப்பில், மக்கள் ஆரவாரத்துடன் அருவியில் குளித்தனர்...

அன்று குற்றால அருவியே, ஓ!.. என்று மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்ததாம்!..

அதற்கு முன்னும் பின்னும் எந்த முதல்வரும் மக்களுடன் சேர்ந்து குளித்ததாக வரலாறு இல்லை!..

காலம் கடந்தும் பேசப்படுகிறாய் ஐயா

நீ பிறந்த மண்ணில் நானும் பிறந்தேன் என்பதே பெரும் பெருமை ஐயா....!!

திருப்பதி தங்குமிடம்.திருப்பதியில் தங்க இடம் முகவரி இங்கு 200 படுக்கை அறை உள்ளது ஓரு அறைக்கு வெறும் 200 ருபாய் காலை காபி...
21/04/2022

திருப்பதி தங்குமிடம்.

திருப்பதியில் தங்க இடம் முகவரி இங்கு 200 படுக்கை அறை உள்ளது ஓரு அறைக்கு வெறும் 200 ருபாய் காலை காபி காலை சிற்றுண்டி மதியம் உணவு இரவு உணவு எல்லாம் சேர்த்து ஓரு ஆளுக்கு வெறும் 200 ருபாய் மட்டும் தான் திருப்பதி செல்பவர் பயன்படுத்தி கொள்ளலாம்.

Tirumala Sri Kasimath,
Ring road, Near S.V.Meseum,
Tirumala - 517507 (A.P)
Ph : 0877-2277316

திருமலையில் தங்குவதற்கு ஒரு அறை கண்டுபிடிக்க சிரமமாக இருந்தால்,
இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் , பயன்படுத்தி கொள்ளுங்கள். கோவிலுக்கு மிக அருகிலேயே கீழ் கண்ட மடங்கள் உள்ளன. அவற்றில் தங்கலாம்.ஹோட்டலுக்குரிய ரூம்வசதிகளோடு உள்ளன.

மூல் மட் மின்: +918772277499 0877-2277499.
புஷ்பா மண்டபம் : 0877-2277301.
ஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் பி: 0877-2277317.
உத்ததி மட் (திருப்பதி) பி 0877-2225187.
ஸ்ரீ திருமலகாஷி மட் Ph-0877-2277316.

ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மட் Ph-0877-2277302.
ஸ்ரீ வைகனச திவ்யா சித்தன்டா விவேர்டினினி சபை
Ph: 0877-2277282.

ஸ்ரீ காஞ்சி காமகோடி மட்
Ph : 0877-2277370.
ஸ்ரீ புஷ்பகிரி மட் Ph-0877-2277419.
ஸ்ரீ உட்டாரடி மட் Ph-0877-2277397.
உடுப்பி மட் Ph-0877-2277305.

ஸ்ரீ ரங்கம் ஸ்ரீமத் ஆத்வான் ஆசிரமம் : 0877-2277826.

ஸ்ரீ பரகலா ஸ்மிமி மட் பி: 0877-2270597,2277383.
ஸ்ரீ திருப்பதிஸ்ரீமன்னாரயன
ராமானுஜா ஜீயர் மட் பி: 0877-2277301.

ஸ்ரீ சிருங்கரி சாரதா மடம்
Ph: 0877-2277269, 2279435.
ஸ்ரீ அஹோபீதா மட் ப. 0877-2279440.

ஸ்ரீ திருமல காஷி மத் தொலைபேசி: 222 77316
உடுபி மட் பி: 0877 222 77305

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீதந்தி ராமனுஜீயர் மட் Ph : 0877 222 77301)

ஸ்ரீ காஞ்சி காமகோடி
பீட்டம் மட் / சர்வா மங்கலா கல்யாண மண்டபம் ,
Ph : 0877 222 77370

ஸ்ரீ வல்லபச்சரிய மடம்
தொலைபேசி: 222 77317
மந்திராலயா ராகவேந்திர சுவாமி மட் / பிருன்தாவனம் Ph : 0877 222 77302
ஆர்யா வைசியா சமாஜம் எஸ்.வி.ஆர்.ஏ.வி.டி.எஸ்.எஸ்.டி
Ph : 0877 222 77436

ஸ்ரீரங்கம் ஸ்ரீமதி
ஆதித்யான் ஆஷ்ரம்
Ph : 0877 222 77826
ஸ்ரீ வைகநாத ஆசிரமம்
Ph : 0877 222 77282
ஸ்ரீ அஹோபில மட்
Ph : 0877-2279440
ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் / சாரதா கல்யாண மண்டபம் Ph : 0877 222 77269
ஸ்ரீ வைசராஜர் மடம் மோதிலால் பன்சிலால் தர்மசாலா Ph : 0877 222 77445

ஹோட்டல் நரிலமா சௌல்ரி Ph : 0877 222 77784
ஸ்ரீ சீனிவாச சொல்ரி
Ph : 0877 222 77883
ஸ்ரீ ஹதிராம்ஜி மட் மின்
Ph : 0877 222 77240

கர்நாடகா விருந்தினர்
மாளிகை
Ph : 0877 222 77238
தக்ஷிணா இந்தியா ஆர்யா வியா கபு முனிரட்ணம்
அறநெறிகள்
Ph : 0877 222 77245

ஸ்ரீ சிருங்கேரி சங்கர நீலம்
Ph : 0877 222 79435
ஸ்ரீ ஸ்வாமி ஹதிராஜ் முட்டம் Ph : 0877-2220015

வயதில் மூத்த குடிமக்களும் ஜருகண்டி சொல்லித் தள்ளிடும் திருப்பதிகோவில் பாதுகாவலர்கள் இனி யாரைத் தள்ளுவது என்று முழிக்கும் காலம் வந்துவிட்டது.

65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்பது எப்படி?

நிபந்தனைகள் :
******************

1) ஆதார் அட்டை அவசியம்.
2) 65 வயது முடிந்திருக்க வேண்டும்
3) காலை எட்டு மணிக்கு குறிப்பிட்ட இடத்தில் அறிக்கை செய்ய வேண்டும்.
4) காலை 10 மணி முதல்
மாலை 3 மணி வரை தரிசனம் நேரம்.
5) தினம் 700 பேருக்கும் அனுமதி உண்டு.
6.) உதவி செய்வதெற்கென
உடனொருவர் செல்ல அனுமதி உண்டு அவளுக்கும் ஆதார் அவசியம்.
7) காலை உணவு பால் இலவசம்.
8.) அவர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கப்படும்.
9) ஒருமுறை சென்றவர் 3 மாத காலத்திற்கு பின்னரே மீண்டும் அனுமதிக்கப் படுவர்.
10) இவை அனைத்தும் இலவச சேவையாகும். பயனுள்ள தகவலை பகிரலாமே. இந்த தகவல்கள்அனைத்தும் திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை !

🙏 ௐ நமோ நாராயணா....!

🤲 திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா கிடைக்காதா? விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடனான பதிவு!

🤲 யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் எந்த ராசி காரர்களுக்கு நன்மை செய்யும் என்பதை இந்தப்பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்...

🤲 இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.

🤲 சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.

🤲 திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் ..

🤲 ஸ்ரீராமானுஜர் யந்திர சக்ரங்கள் பதித்துள்ளதால் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் .

🤲 கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும் போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும்.

🤲 பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது , இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.

🤲 வாஸ்துப்படி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன.

🤲 வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும்..

🤲 செல்வம் மலை போல குவியும்.

🤲 உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளார்கள்.

🤲 அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.

🤲 சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.

🤲 மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது.

🤲 வாஸ்துப்படி மிக பலமாக இருப்பதால் இத் திருக்கோயில் மிக அதிக சக்தியுடன் உள்ளது.

🤲 இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான்.

🤲 கலி காலத்திலும் பெருமாள் பக்தர்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர்.

🤲 குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்கு கிறார்கள்.

🤲 நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது.

🤲 நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும்.

🤲 சந்திர தசை மற்றும் சந்திர புக்தி நடப்பவர்கள்,
தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கப் பட்டவர்களுக்கு இத் திருக்கோயில் சிறந்த பரிகாரத் தலமாகும்.

🤲 திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு.

🤲 திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும்.

🤲 அட போங்கய்யா திருப்பதி போனாலே அனைவரையும் போட்டு பூட்டி வைப்பார்கள் நான் வரவே மாட்டேன் என சொல்லும் அன்பர்கள் தான் அதிகம் காரணம் என்ன தெரியுமா உங்களுக்கு..

🤲 அதே போல அங்கு சென்றவுடன் ஜெயிலில் போடுவது போல அனைவரையும் ஒரு அறையில் போட்டு பூட்டி வைப்பதின் நோக்கம் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பதினோரு மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம்

🤲 அதை யாரிடமும் சொல்லி புரிய வைக்க முடியாது ஆகையால் தான் அனைவரையும் போட்டு ஒரு அறையில் பூட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

🤲 அந்த அறையில் மவுனமாக இருந்து உங்கள் வேண்டுதலை செய்யலாம் ஆனால் அங்கு யாரும் அதை செய்வதே கிடையாது .

🤲 மாறாக அங்கு கூச்சலும் குழப்பமாக தான் இருக்கும்...இனிமேல் நீங்கள் திருப்பதி சென்று வந்தால் அங்கு நீங்களாவது அமைதியாக இருங்கள்.

🤲 அதிகம் திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளை பிடித்து கொள்ளும் லக்னக்காரர்கள் தெரியுமா.? மேஷம் , ரிஷபம் , மிதுனம் ,கடகம் , கன்னி , துலாம் .விருச்சிகம் , மகரம், மீனம் லக்னம் உடையவர்கள் அனைவரும் அதிகமாக பிடித்து கொள்ள வேண்டும்.

🤲 வருடம் ஒரு முறை மட்டும் செல்லும் லக்னம் காரர்கள் .சிம்மம் , தனுசு , கும்பம்.

🤲 ஓம் நமோ வேங்கடேசாயா நமஹ சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம் "

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்”

ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித,
வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே ... !!!

🤲 பொதுப் பொருள்:

🤲 திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம்.
அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே,
வேண்டுபவர் வேண்டும் வரங்களை எல்லாம் வழங்குபவரே,
மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம்.
மகாலட்சுமி வசிக்கும் அழகிய மார்புடையவரே,
துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.
ஸ்ரீவேங்கட ஸ்ரீநிவாஸா
நின் திருவடிகளே
சரணம் ! சரணம் !! சரணம் !!!
*

*How to follow a Doctor's prescription,* Taken so many years to know these abbreviations...???> Rx = Treatment.> Hx = Hi...
27/01/2022

*How to follow a Doctor's prescription,* Taken so many years to know these abbreviations...???

> Rx = Treatment.
> Hx = History
> Dx = Diagnosis
> qd = Every day
> qod = Every other day
> qh = Every Hour
> SOS = If needed
> AC = Before Meals
> PC = After meals
> BID = Twice a Day
> TID = Thrice a Day
> QID = Four times a day
> OD = Once a Day
> BT = Bed Time
> BBF = Before Breakfast
> BD = Before Dinner
> Tw = Twice a week
> SQ = sub cutaneous
> IM = Intramuscular
> ID = Intradermal
> IV = Intravenous
> QAM = (every morning)
> QPM (every night)
> Q4H = (every 4 hours)
> HS = (at bedtime)
> PRN = (as needed)
> Mg = (milligrams)
> Mcg/ug = (micrograms)
> G or Gm = (grams)
> 1TSF ( Teaspoon) = 5 ml
> 1 Tablespoonful =15ml

*Kindly keep a copy in house for our family to read Doctor's prescription*

கருட கொடி குறித்த எனது பதிவு பலரை சென்றடைந்ததில் மகிழ்ச்சி. தீராது என்கிற நோய்களுக்கு இயற்கையில் எளிய தீர்வு இருக்கிறது ...
22/01/2022

கருட கொடி குறித்த எனது பதிவு பலரை சென்றடைந்ததில் மகிழ்ச்சி. தீராது என்கிற நோய்களுக்கு இயற்கையில் எளிய தீர்வு இருக்கிறது என்பதே உண்மை.

பலரும் என்னை ஒரு மருத்துவர் என நினைத்து தீர்வு கேட்டிருந்தனர். பலரும் குறுந்தகவல், தொலைபேசி மூலமாக மருந்து அனுப்பி தருவீர்களா எனவும் கேட்டிருந்தனர். கேட்ட எல்லோருக்கும் பதில் சொல்ல முடியாமைக்கு வருந்துகிறேன்.

நான் முழுமையான சித்த வைத்தியன் இல்லை. இரண்டு வருடம் எனது ஆசானிடம் வர்ம தடவுமுறை பட்டய பயிற்சி கற்று கொண்டதோடு சரி. பின்னர் எனது இயற்கை அங்காடிக்காக வனப்பயிர்கள் சேகரிக்க செல்லும்போதும், எனக்கு பிடித்தமான வனப்பயணங்கள் செல்லும்போதும் அங்குள்ள ஆதிவாசிகளின் மருத்துவ முறைகளை அனுபவ ரீதியாக சிறிது அறிந்து வைத்திருக்கிறேன் அவ்வளவே.

அந்த வகையில் தெரிந்து கொண்ட விடயம்தான் கருடகொடி மூலம் தோல்நோயை குணப்படுத்த முடியும் என்பது. தோல்நோய்க்கு மருத்துவம் பார்க்கும் முன் நாம் நம் இரத்தத்தை சுத்தப்படுத்த வேண்டும்.

# இரத்தம் சுத்தமில்லை என்றால் அது நம் தோல்களில்தான் வெளிப்படும்.

# இரத்த சுத்தியே தோல்நோயை தடுக்கும் முதல் படி.

இரத்தத்தை சுத்தபடுத்துவது எப்படி..?

# நச்சு கலப்பில்லாத இயற்கை உணவு மற்றும் நாட்டுரக பழங்கள்,காய்கறிகள், உணவு தானியங்கள்.

# அகத்தை சுத்தம் செய்யும் அகத்திகீரையை மாதம் இரண்டு முறை உட்கொள்ளுங்கள்.

# கொழுந்து வேப்ப இலையை மாதம் மூன்று முறை காலை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடுங்க

# மாதம் நான்கு முறை முருங்கை கீரை எடுத்து கொள்ளுங்கள்.

# மாதம் ஐந்து முறை நெல்லிக்காய் உட்கொள்ளவும்.

# மாதம் ஆறுமுறை பீட்ரூட் ஜூஸ்

# மாதம் ஏழுமுறை கேரட் ஜுஸ்

# மாதம் எட்டு முறை மல்லிதழை ஜுஸ்

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அருகம்புல் ஜுஸ், சோற்றுகற்றாழை ஜுஸ்,துளசி தீர்த்தம், வெந்நீரில் தேனும் திரிபலா சூரணமும் சேர்த்து சாப்பிடுவது இவை அனைத்துமே இரத்தத்தை சுத்திகரிக்கும்.

முக்கியமாக மலக்கட்டு பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டும். கடுக்காய் அல்லது நிலவாரை பொடிகளை அரை டீஸ்பூன் விகிதம் வெதுவெதுப்பான நீரில் கலந்து தூங்க செல்லுமுன் அருந்திவிட்டு செல்வது மலக்கட்டை சரி செய்யும். ஒருநாள் விட்டு ஒருநாள் எடுத்து கொண்டால் போதும்.

தினம் காலை இளம் சூரிய வெளிச்சத்தில் பத்து நிமிட மூச்சு பயிற்ச்சியும் முக்கியம்.

இதை நீங்கள் தொடர்ந்து கடைபிடித்து வந்தாலே போதும் மிக விரைவாக உங்கள் இரத்தம் சுத்தி அடையும்.

அடுத்ததாக தோல்நோய்களை குணப்படுத்தும் இயற்கை மருத்துவம் என்ன என்பதை நாளை பார்ப்போம்.

 #மனித_உடல்:1: எலும்புகளின் எண்ணிக்கை: 2062: தசைகளின் எண்ணிக்கை: 6393: சிறுநீரகங்களின் எண்ணிக்கை: 24: பால் பற்களின் எண்ண...
18/11/2021

#மனித_உடல்:

1: எலும்புகளின் எண்ணிக்கை: 206
2: தசைகளின் எண்ணிக்கை: 639
3: சிறுநீரகங்களின் எண்ணிக்கை: 2
4: பால் பற்களின் எண்ணிக்கை: 20
5: விலா எலும்புகளின் எண்ணிக்கை: 24 (12 ஜோடி)
6: இதய அறை எண்: 4
7: மிகப்பெரிய தமனி: பெருநாடி
8: சாதாரண இரத்த அழுத்தம்: 120/80 Mmhg
9: இரத்தம் Ph: 7.4
10: முதுகெலும்பில் உள்ள முதுகெலும்புகளின் எண்ணிக்கை: 33
11: கழுத்தில் உள்ள முதுகெலும்புகளின் எண்ணிக்கை: 7
12: நடுத்தர காதில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 6
13: முகத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 14
14: மண்டையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 22
15: மார்பில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 25
16: கைகளில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 6
17: மனித கையில் உள்ள தசைகளின் எண்ணிக்கை: 72
18: இதயத்தில் உள்ள பம்புகளின் எண்ணிக்கை: 2
19: மிகப்பெரிய உறுப்பு: தோல்
20: மிகப்பெரிய சுரப்பி: கல்லீரல்
21: மிகப்பெரிய செல்: பெண் கருமுட்டை
22: மிகச்சிறிய செல்: விந்து
23: மிகச்சிறிய எலும்பு: நடுத்தர காது குத்துகிறது
24: முதல் மாற்று உறுப்பு: சிறுநீரகம்
25: சிறுகுடலின் சராசரி நீளம்: 7 மீ
26: பெரிய குடலின் சராசரி நீளம்: 1.5 மீ
27: பிறந்த குழந்தையின் சராசரி எடை: 3 கிலோ
28: ஒரு நிமிடத்தில் துடிப்பு விகிதம்: 72 முறை
29: சாதாரண உடல் வெப்பநிலை: 37 C ° (98.4 f °)
30: சராசரி இரத்த அளவு: 4 முதல் 5 லிட்டர்
31: வாழ்நாள் சிவப்பு ரத்த அணுக்கள்: 120 நாட்கள்
32: வாழ்நாள் வெள்ளை இரத்த அணுக்கள்: 10 முதல் 15 நாட்கள்
33: கர்ப்ப காலம்: 280 நாட்கள் (40 வாரங்கள்)
34: மனித பாதத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 33
35: ஒவ்வொரு மணிக்கட்டில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 8
36: கையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 27
37: மிகப்பெரிய நாளமில்லா சுரப்பி: தைராய்டு
38: மிகப்பெரிய நிணநீர் உறுப்பு: மண்ணீரல்
40: மிகப்பெரிய மற்றும் வலிமையான எலும்பு: Femur
41: மிகச்சிறிய தசை: ஸ்டேபிடியஸ் (நடுத்தர காது)
41: குரோமோசோம் எண்: 46 (23 ஜோடி)
42: பிறந்த குழந்தை எலும்புகளின் எண்ணிக்கை: 306
43: இரத்த பாகுத்தன்மை: 4.5 முதல் 5.5
44: உலகளாவிய நன்கொடையாளர் இரத்தக் குழு: ஓ
45: உலகளாவிய பெறுநர் இரத்தக் குழு: ஏபி
46: மிகப்பெரிய வெள்ளை இரத்த அணு: மோனோசைட்
47: மிகச்சிறிய வெள்ளை இரத்த அணு: லிம்போசைட்
48: அதிகரித்த சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை: பாலிசித்தீமியா
49: உடலில் உள்ள இரத்த வங்கி: மண்ணீரல்
50: வாழ்க்கை நதி என்று அழைக்கப்படுகிறது: இரத்தம்
51: சாதாரண இரத்தக் கொழுப்பு அளவு: 100 மிகி / டிஎல்
52: இரத்தத்தின் திரவப் பகுதி: பிளாஸ்மா

வாழ்க்கை என்று அழைக்கப்படும் இந்த சாகசத்தை அனுபவிக்க உங்களை அனுமதிக்கும் ஒரு முழுமையான வடிவமைக்கப்பட்ட இயந்திரம். அதை கவனித்துக் கொள்ளுங்கள். தீமைகள் மற்றும் அதிகப்படியானவற்றால் அதை சேதப்படுத்தாதீர்கள்.

ஆசியாவிலேயே பெரிய பழமையான யானை சிலை!கங்கைகொண்டசோழபுரம் அருகே 4 கி.மீ. தொலைவில் வடக்கு எல்லையில் இளையபெருமாள் நல்லூர் என்...
25/08/2021

ஆசியாவிலேயே பெரிய பழமையான யானை சிலை!

கங்கைகொண்டசோழபுரம் அருகே 4 கி.மீ. தொலைவில் வடக்கு எல்லையில் இளையபெருமாள் நல்லூர் என்ற சிற்றூரில் இந்த யானை சிலை உள்ளது. சலுப்பை அழகர் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது.

இச்சிலை சோழர் காலத்திய சிற்பம் என்றாலும், 16 - 17ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர் காலத்தில் அப்போதைய வடிவமைப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இது 60 அடி உயரம், 33 அடி நீளம், 12 அடி அகலம் உயரம் உடைய ஆசியாவிலேயே பெரிய யானைச் சிலையாகும்.

இச்சிலை வெல்லம், கடுக்காய், சுண்ணாம்பு ஆகிய கலவையினால் சுட்ட செங்கற்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. யானை சிலையின் கழுத்து, உடலின் இரு புறங்களிலும் மணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சலுப்பை அழகர் கோயிலின் அருகில் பலா தோப்பில் பலா பழத்தைத் திருடிய திருடனைப் பிடிக்க கோயிலில் இருந்த நாய் ஒன்று துரத்தியுள்ளது.

ஆகையால், அதைக் குறிக்கும் வகையில் யானையின் துதிக்கையில் பலா பழத்துடன் சலுப்பை அழகர் கோயிலின் அருகில் பலா தோப்பில் பலா பழத்தைத் திருடிய திருடனைப் பிடிக்க கோயிலில் இருந்த நாய் ஒன்று துரத்தியுள்ளது.

அந்நேரத்தில் அந்தத் திருடனை யானை ஒன்று மடக்கிப் பிடித்துள்ளது.

மனிதன் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது இச்சிலைக் குறித்து இப்பகுதி மக்கள் கதையாக சொல்லி வருகின்றனர்.

சென்ற 11.12.2020 அன்று இச்சிலைப் பாதுகாப்பட்ட பழமையான சின்னம் எனத் தமிழகத் தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்டது.
ஆகையால், அதைக் குறிக்கும் வகையில் யானையின் துதிக்கையில் பலா பழத்துடன் உயர்ந்து நிற்கும் இந்த யானை சிலை அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது.

25/08/2021

நட்பு உடைந்து முகநூலானது ...

சுற்றம் உடைந்து வாட்சப் ஆனது ...

வாழ்த்துக்கள் உடைந்து ஸ்டேட்டஸ் ஆனது ...

உணர்வுகள் உடைந்து ஸ்மைலியாய் ஆனது ...

குளக்கரை உடைந்து குளியலறை ஆனது ...

நெற்களம் உடைந்து கட்டடமானது ...

காலநிலை உடைந்து வெப்ப மயமானது ...

வளநிலம் உடைந்து தரிசாய் ஆனது ...

துணிப்பை உடைந்து நெகிழியானது ...

அங்காடி உடைந்து அமேசான் ஆனது ...

விளைநிலம் உடைந்து மனைநிலம் ஆனது ...

ஒத்தையடி உடைந்து எட்டு வழியானது ...

கடிதம் உடைந்து இமெயிலானது ...

விளையாட்டு உடைந்து வீடியோகேம் ஆனது ...

புத்தகம் உடைந்து இ-புக் ஆனது ...

சோறு உடைந்து 'ஓட்ஸ்'சாய்ப் போனது...

இட்லி உடைந்து பர்கர் ஆனது ...

தோசை உடைந்து பிட்சாவானது ...

குடிநீர் உடைந்து குப்பியில் ஆனது ...

பசும்பால் உடைந்து பாக்கெட் ஆனது ...

வெற்றிலை உடைந்து பீடாவானது ...

தொலைபேசி உடைந்து கைபேசியானது ...

வங்கி உடைந்து பே டி எம் ஆனது ...

நூலகம் உடைந்து கூகுளாய்ப் போனது ...

புகைப்படம் உடைந்து செல்ஃபியாய் ஆனது ...

மனிதம் உடைந்து மதவெறியானது ...

அரசியல் உடைந்து அருவெறுப்பானது ...

பொதுநலம் உடைந்து சுயநலமானது ...

பொறுமை உடைந்து அவசரமானது ...

ஊடல் உடைந்து விவாகரத்தானது ...

காதல் உடைந்து காமமாய்ப் போனது ...

நிரந்தரம் உடைவது நிதர்சனம் ஆகையால் உடைவது உலகினில் நிரந்தரமானது ..!

Address

Thanjavur
614904

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழனாய் இருப்போம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category