29/07/2026
குரு பூர்ணிமாவை முன்னிட்டு பக்தர்களுக்கான ‘அந்தர்யோகம்’ – முதல் நாள்25.07.26, சனிக்கிழமை
https://photos.app.goo.gl/qWdREmaJvXsfEyXd9
‘அந்தர்யோகம்’ ஆன்மிக முகாமின் முதல் நாள் நிகழ்ச்சிகள் பக்திபூர்வமாக நடைபெற்றன.
பஜனையுடன் பக்தர்கள் தெய்வத் திருமூவர் திருக்கோவிலை வலம் வந்து வழிபட்டனர்.
பிரார்த்தனை, சரணாகதி, பக்தி ஆகியவற்றின் மூலம் இறைவனை அடைதல் குறித்தும், அன்னை ஸ்ரீசாரதாதேவியின் புனித ஸ்பரிசத்தின் மகிமை குறித்தும் சுவாமி தியானகம்யானந்தர் அருளுரை வழங்கினார்.
மனிதப் பிறவியின் நோக்கம் மற்றும் இறைவனை அடையும் வழிகள் குறித்து சுவாமி சமாஹிதானந்தர் வழிகாட்டினார். இறைவனைத் தியானிப்பதற்கான ஏழு வழிகளையும், “என்னைத் தியானித்தால் போதும்” என்ற பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் அருள்மொழியையும் சுவாமி விமூர்த்தானந்தர் எடுத்துரைத்தார்.
தெய்வத் திருமூவரின் உபதேசங்கள் குறித்த பக்தர்களின் கருத்தரங்கம், ஸ்ரீசாரதா வனத்தில் நடைத் தியானம், கூட்டு தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
ராமநாம பஜனை மற்றும் துனி தியானத்துடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுற்றன.
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்
Gurupurnima - A Two-Day Spiritual Retreat for Devotees
• A two-day spiritual retreat was conducted in connection with Gurupurnima for 100 devotees from different parts of Tamil Nadu.
• Swami Sutapananda, Adhyaksha, Ramakrishna Math, Ramanathapuram; Swami Samahitananda, Adhyaksha, Ramakrishna Math, Natrampalli; and Swami Dhyanagamyānanda, Secretary, Vivekananda College, Chennai, delivered inspiring talks on the lives and teachings of the Holy Trio.
• The retreat included:
o Nine spiritual talks
o A special talk on physical and mental well-being
o Two archanas by flowers & kumkum
o A special puja and homa
o Two collective aratis by devotees
o Seven bhajans
o Scripture readings
o Two guided meditation sessions
o Dhuni meditation
o An interactive session by devotees
• We hope the retreat strengthened devotion, discipline, and spiritual awareness, and left the participants with inner peace and renewed inspiration.
Day 1 - https://photos.app.goo.gl/qWdREmaJvXsfEyXd9
Day 2 - https://photos.app.goo.gl/a3LZ8N6dpMukkCSZA