Thoranamalai Shri Murugan Temple

Thoranamalai Shri Murugan Temple “THORANAMALAI“ is an elephant shaped natural hill as part of the continuous chain of southern part of Western Ghats.

தென்றல் தவழும் தென்பொதிகை மலைத் தொடரில் திருநெல்வேலி மாவட்டத்தில்,தென்காசி-கடையம் பாதையின் மேற்கில் யானை வடிவமாய் அமைந்துள்ள மலை. இந்த மலையில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே அகத்தியர் தலைமையில் தேரையர் உள்பட பல சித்தர்கள் அமர்ந்து ஒரு கபால அறுவை சிகிச்சை நடத்தியுள்ளனர். உலகிலே முதல் கபால அறுவை சிகிச்சை நடந்த இடம் தோரணமலை தான் .இம்மலையில் நானூறு ஆண்டுகள் பழமையான முருகன் கோவில் ஒன்று உள்ளது. 1000

வருடங்களுக்கு முன்பு அகத்தியரின் மருத்துவமனையாக விளங்கிய இந்த தோரணமலை நாளடைவில் தூர்ந்துவிட்டது .இங்கு முருகனுக்கு அமைக்கபடிருந்த கோயிலும் காணாமல்போய்விட்டது
இதற்கிடையில் குற்றாலம் அருகிலுள்ள முத்துமாலைபுரம் என்னும் ஊரைச் சேர்ந்த நா.பெருமாள் என்பவரின் கனவில் வேல் ஏந்திய சிறுவன் தோன்றி மலை மேல் உள்ள சுனையில் தான் கிடப்பதாகவும் தன்னை வணங்குமாறும் கூறினான்.முருகபெருமானை வணங்கி சுனையில் தேடியபோது அங்கே முருகன் சிலை கிடைத்தது அதை எடுத்து தற்போது உள்ள இடத்தில் வைத்து வணங்க ஆரம்பித்தனர். இன்று வரை அந்த சிலையே மூலவராக வணங்கப்படுகிறது.
இதற்கு பின் தலைமைஆசிரியர் திரு.கு.ஆதிநாராயணன் (பரம்பரை அறங்காவலர்) என்பவர் இந்த கோயிலை மக்களுக்கு அறிமுகபடுத்த பல முயற்சிகள் செய்தார். கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள சுமார் 150 சினிமா தியேட்டர்களில் தோரணமலை குறித்த சிலைடு காட்டினர். ஒரு கோயிலுக்கு விளம்பரமாக இது போல் சினிமா தியேட்டரில் சிலைடு காட்டிய வரலாறு வேறு எங்கும் நடந்ததாக தெரியவில்லை .அதை பார்த்து பல பக்தர்கள் தோரணமலை வர ஆரம்பித்தனர் முருகபெருமானை வணங்க ஆரம்பித்தனர்.
இரு நதிகளுக்கிடையே ஒரு கோவில் இருந்தால் அது சிறப்பான புனிதத்தலமாக கருதப்படும் அந்த வகையில் தோரணமலையும் தனிச்சிறப்பு பெற்றது. தோரணமலைக்கு தென்புறம் மலையில் இருந்து பாய்ந்து வருகிறது ராமநதி,மலையின் வடபுறம் ஜம்பு நதி தவழ்ந்து வருகிறது.இந்த இரு நதிகளுக்கு இடையேதான் தோரணமலை கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்த நதிகள் இரண்டும் தோரணமலைக்கு மாலையிட்டது போல் காணபப்டுகிறது. இந்த மலைக்குச் சென்றாலே நம்மை அறியாமல் உடல் நம் சிலிர்ப்தை நாம் அறிய முடியும்.அங்கெல்லாம் பலசித்தர்கள் அரூபமாக இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். இம்மலையில் 64 சுனைகள் உள்ளன.இந்த சுனைகளில் உள்ள நீர் புனித நீராக கருதப்படுகிறது. இந்த சுனைகள் எல்லாம் சித்தர்கள் தற்போதும் தங்கி தவம் புரியும் இடமாகத்தான் பக்தர்கள் கருதுகிறார்கள். இந்த சுனை நீரை பருகி, இதில் நீராடி முருகனை வழிப்பட்டால் தீராத நோயும் தீருகிறது சகல சௌபாக்கியம் உண்டாகிறது என்பது மக்கள் அனுபவித்து கூறும் கூற்றாகும்.
அடிவாரத்தில் வல்லப விநாயகர்,கன்னிமார் அம்மன், வியாழ பகவான்,மற்றும் நவகிரகங்களுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. மேலும் சிவபெருமான்,சரஸ்வதி,மகாலட்சுமி ஆகியோரின் தரிசனமும் கிட்டுகிறது. அரசமரத்தடியில் வீற்றிருக்கும் சப்தகன்னியரை வணங்கி வளையல்களும் தொட்டில்களும் பிராத்தனையாக கட்டினால்வேண்டுதல் நிறைவேறுவது திண்ணம். மலைக்கு செல்லும் படிக்கட்டு தொடங்கும் இடத்தில் தனிச் சன்னிதியில் பாலமுருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். மலை ஏறி மூலவரை தரிசிக்கும் முன் இவரை வணங்கிச் செல்வது நலம் பயக்கும். உச்சியை அடைய 926 படிகட்டுகள் ஏற வேண்டும். ஒரு காலத்தில் இந்த படிகட்டுகள் கிடையாது பாறையில் பெரும்விரலை மட்டும் ஊனும்படி ஓட்டை வடித்து வைத்திருப்பார்கள் அதன் வழியாகத் தான் ஏற வேண்டும்.ஆனால் தற்போது அப்படியல்ல படிக்கட்டு வழியாக ஏறிச்செல்லலாம். தோரணமலை படிக்கட்டுகளை ஏறிச் செல்வது இந்த பிறவியில் ஏற்பட்ட கஷ்டங்களை நாம் கடந்து விட்டதை உணர்த்துகிறது. வழியில் சுயம்பாக அமைந்த சிவபெருமானை தரிசிக்கலாம்.இந்த இடங்கள் எல்லாம் நல்லசுவாச காற்றும், அருமையான நறுமணம் தரும் மூலிகை காற்றும் நமது உடல் பிணியை போக்கும் வண்ணம் நம்மை தொட்டு செல்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலையின் இயற்கை அழகையும் அதில் தவழ்ந்து வரும் மேகக்கூட்டங்களையும், ரசித்துக்கொண்டே உச்சியை அடையலாம்.
மலையின் உச்சியில் உள்ள குகையில் தான் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.கையில் வேல் ஏந்தி மயில் வாகனத்தோடு நின்ற கோலத்தில் அழகின் அரசனாக திகழ்கிறார் மூலவர் முருகப்பெருமான். இந்த குகை இயற்கையில் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இந்த முருகன் திருச்செந்தூர் முருகனை நோக்கிய வண்ணம் இருப்பதால் இவரை வழிபட்டால் திருச்செந்தூர் முருகனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.முருகப்பெருமானின் இடதுபுறம் சற்று உயரமான இடத்தில் இருக்கும் சுனையில் இருந்து தான் முருகப்பெருமானுக்கு அபிஷேகத்துக்கு தண்ணீர் எடுத்துவரப்படுகிறது. மலை உச்சியில் பெரும் பாறைக்கு இடையில் இப்படி ஊற்று பொங்கி வருவதும் கடும் கோடையிலும் இது வற்றாமல் இருப்பது இறையருள் மட்டுமின்றி ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். மலை மீது ஏறி இதில் குளிப்பது ஆனந்தமாக இருப்பதோடு அருளும் கிடைப்பதை அந்தநொடியிலேயே உணரலாம். அதேபோல் முருகப்பெருமானின் வலதுபுறம்பாறையில் ஒரு கை மட்டுமே போகும் அளவுக்கு துவாரம் ஒன்று உள்ளது. அது சாதாரண துவாரம் அல்ல அதுவும் ஒரு சுனை தான் .அதனுள்ளும் தண்ணீர் எப்போதும் இருக்கும். எதிரே ராமர் பாதம் உள்ளது. அதன் அருகே பத்திரகாளி அம்மனுக்கு தனியே ஒரு சன்னதியும் உள்ளது.

துன்பம் தீர்க்கும் தோரணமலை முருகனுக்கு ஒவ்வொரு ஆண்டும் தைபூசம், வைகாசி விசாகம், சித்திரை திருநாளும் முக்கிய திருவிழாக்களாக வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
துன்பம் தீர்க்கும் தோரணமலை,துலங்கி வரும் தோரணமலை, பாவம் போக்கும் புன்னியமலை யானை முகம் கொண்ட மலையின் மேல் வீற்றிருக்கும் இம்முருகனின் திருவீடு எழாம் படை வீடு என்று சொன்னால் மிகை அல்ல.

நலம் தரும் தைபூச நாயகனை, வைகாசி விசாகனை, வாரணம் ஆயிரம் பலம் தரும் தோரணமலை முருகனை
வணங்க ”அனைவரும் வருக அவனருள் பெறுக”.

23/08/2026

தோரணமலையில் இன்று மணவிழா கண்ட மணமக்கள் வேல் பூஜை செய்தனர்.

பின்பு அவர்கள் குடும்ப குழந்தைகள் குறள், சுலோகம் போன்றவற்றை சொல்லியதும், மணமக்கள் கரங்களால் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

மணமக்கள் வாழ்க ... ... நீடுழி நலமுடன் வாழ்கவே ! 🙏🌹

22/08/2026

குறையை ( மட்டுமே ) தேடும் கண்களுக்கு மத்தியில் இப்படியும் சில பக்தர்கள் ... ...

அங்கு நடக்கும் அதிகாலை பூஜை, விவசாய பூஜை, டோக்கன் இல்லாமல் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் , பக்தர்களை ஒருங்கிணைத்து பல பேரை படிக்க வைக்கும் பழக்கம், எத்தனையோ ஏழை பெண்களுக்கு திருமண உதவி, வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருதல், 5500 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கொண்ட நூலகம் ஏற்படுத்தி சிலரை அரசு தேர்வில் தேர்ச்சி பெற வைத்தது, ஞாயிறு தோறும் அடிவாரத்தில் 27 நட்சத்திரக்காரர்களுக்கும் பூஜை, பின்பு மாணவமணிகளின் குரலை மலை முழுதும் ஒலிக்க வைத்து நற்சான்றிதழ் வழங்கல், வாகன நிறுத்தம் தவிர எங்குமே கட்டணம் வாங்காமல் இறை பணி என முடிந்தோர் உதவட்டும் ... ... முடியாதோர் பிரார்த்திக்கட்டும்
என எம் இறை பணி இயன்ற வரை தெய்வ சிரத்தையுடன் தொடர்கிறது.

போற்றுவோர் போற்றட்டும் ;

தூற்றுவோர் தூற்றட்டும் ;

தோரணமலை முருகன் அனைத்தையும் கண்காணிக்கிறான் ;

அவன் அனுமதியுடன்தான் 62 ஆம் ஆண்டு இறை பணி தொடர்கிறது !

வாழ்த்துக்கு நன்றி : திரு வேல்முருகன் அவர்கள் ,
பாவூர்சத்திரம் 🙏

தோரணமலையில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்குமுன் கண் விழித்து, பக்தர்கள் வரும் முன்பு திருக்கோவில் பகுதியை பெருக்கி  சுத்தம...
21/08/2026

தோரணமலையில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்குமுன் கண் விழித்து, பக்தர்கள் வரும் முன்பு திருக்கோவில் பகுதியை பெருக்கி சுத்தம் செய்து , சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியம் செய்து, சக பணியாளர்களுக்கு தேநீர் தயாரித்து, தினசரி அன்னதானத்திற்கு சமையல் செய்து, காலை மதியம் பரிமாறிய பின்பு பாத்திரம் கழுவி , மாலையிலும் திருக் கோவிலை சுத்தம் செய்து, பகலில் இடைவிடாது பணி செய்து எம்முடன் தெய்வத் தொண்டு புரிந்து வரும் தெய்வீக உறவுகளை குற்றாலத்தில் குளிக்க வைத்து, பிடித்தமான உணவை சாப்பிட வைத்து, ஜோதி சிப்சில் இனிப்பும் காரமும் வாங்கித் தந்து, வணங்கி வாழ்த்து தெரிவித்து,

யார் என்ன விமரிசனம் வைத்தாலும் எல்லோருக்கும் கிடைக்காத .... ....

ஒரு சிலருக்கே கிடைக்கும் இறை பணி பாக்கியம் நமக்கும் கிடைத்துள்ளது ;

தோரணமலை முருகன் நம்மை கவனித்து வருகிறான் ; தேவையான நேரத்தில் நன்மை செய்தும் கவனிப்பான் " என கூறி வழியனுப்பி வைத்தோம் !

ஜோதி சிப்ஸில் சாப்பிட்ட அல்வா போல இந்த அனுபவமும் இனித்தது 🙏🌹

( படம் : குற்றால அருவிக்கரையில் எடுத்தது ;
அடுத்த படத்தில் பட்டாசு உபயம் ஏ.ஐ. தொழில் நுட்பத்தால் உருவானது 🙏 )

20/08/2026

தோரணமலை முருகனுக்கு அரோகரா 🌹🙏

18/08/2026

தோரணமலை அடிவாரத்தில் ஞாயிறு தோறும் வழிபட வரும் பக்தர்களின் எண்ணிக்கை வாராவாரம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கடந்த வாரம் காலை 7 மணிக்கு
ஸ்ரீ விருட்ச ராஜ பூஜை, கன்னிமாரம்மன், சப்த கன்னியர் பூஜை மற்றும் சுனை நீர் பூஜை சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து, 27 நட்சத்திர மரக் கன்றுகள் பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பின்பு, சர்க்கரை பொங்கல் வைத்து சூரியா வழிபாடு நடந்தது.

இறுதியாக மாணவ மணிகள் மற்றும் அவர்தம் பெற்றோருடன் சரஸ்வதி தேவை பூப் போட்டு வணங்கினர். பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

காலை, மதியம் அன்னதானத்தில் 2060 பக்தர்கள் பங்கேற்றனர்.

உதவி வரும் பக்த உள்ளங்கள் வாழ்க ... ... நீடுழி வாழ்கவே 🌹🙏

17/08/2026

தோரணமலையில் ஞாயிறு தோறும் சிறப்பு பூஜைகள் முடிந்த பின்பு, பள்ளி செல்லும் குழந்தைகள் எப்போது குறள், சுலோகம் போன்றவற்றை சொல்ல சொல்வீர்கள் என அலுவலகம் வந்து கேட்க ஆரம்பித்து விட்டனர்.

அதே நேரம், இது போன்ற நிகழ்வில் கடந்த வாரம் பங்கேற்ற பொடியனூர் பேபி தீக்சிகா தனது பிறந்த நாளை ஒட்டி 18 பென்சில்களை, பிள்ளைகளுக்கு பரிசாக தர சொல்லி தந்து விட்டு சென்றார்.

நிச்சயம் ஆச்சரியம்தான்,
நேற்று மிகச் சரியாக 18 பேர் பங்கேற்று, அந்த பென்சிலையும், நற்சான்றிதழையும் வாங்கி சென்றனர்.

46 வருடங்களுக்கு முன்பு பிள்ளையார் கோவில் வடபுறம் அமைக்கப்பட்ட கான்கிரீட் தரை அமைக்க உதவிய விருதுநகர் தொழிலதிபர் S P G R ராமசாமி அய்யா மகன் நற்சான்றிதழை வணங்கினார்.

பென்சில் 18 வழங்கிய பேபி தீக்சிகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தோரணமலை அடிவாரத்தில் நம் தாய்த்திருநாட்டின் 80வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.முன்னாள் ராணுவத்தினர் திரு ...
15/08/2026

தோரணமலை அடிவாரத்தில் நம் தாய்த்திருநாட்டின் 80வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முன்னாள் ராணுவத்தினர் திரு கணபதி அய்யா , திரு இருளப்பன் அய்யா ஆகியோர் இணைந்து கொடியேற்றினர்.
முத்துமாலைபுரம் K.ஆதிநாராயணன் - - A. சந்திரல்லா நினைவு மாலை நேர கட்டணமில்லா படிப்பக மாணவமணிகள் சுதந்திர போராட்ட தியாகிகள் திருவாளர் பகத்சிங் , வீரப்பெண்மணி திருவாளர் வேலு நாச்சியார், திருவாளர் ஜவகர்லால் நேரு வேடமிட்டு கலந்து கொண்டனர்.

கொடியேற்றிய பின் பெற்றோரை மதிப்போம், ராணுவத்தினர் மற்றும் நாட்டை காக்கும் அனைத்து அதிகாரிகள் நலமுடன் வாழ பிரார்த்திப்போம், போதை அரக்கனை ஒழிக்க பாடுபடுவோம், சமூக சேவைகளை செய்வோம் போன்ற உறுதிமொழிகளை ஏற்றனர்.

தொடர்ந்து, மாணவமணிகள் தேச பக்தி பாடல்களை பாடினர். 5500 க்கும் மேற்பட்ட நூல்களை கொண்ட நூலகத்தை பயன்படுத்தினர்.

அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது .

14/08/2026

அகத்தியர், தேரையர் சித்தர் வழிபட்ட தோரணமலை
ஸ்ரீ முருகன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி பூஜை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது !

13/08/2026

திரு S K P கதிரேசன் மாமா அவர்களுக்கு 25 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

மடத்தூரை சொந்த ஊராக கொண்டவர் திரு SKP கதிரேசன் மாமா ;
அப்பா, அம்மா இருவழியிலும் சொந்தம்.
அம்மாவுக்கு சித்தப்பா முறை ; அப்பாவின்(தங்கை) சித்தப்பா மகளை திருமணம் செய்தவர் ;

தமிழ்நாட்டில் பல ஊர்களில் கூட்டுறவுத்துறையில் துணை பதிவாளராக பணி புரிந்தவர் ;

நான் மடத்தூர் இந்து நடுநிலைப்பள்ளியில் படித்த போது (1977 - - 1980 ) மாணவமணிகளை சந்திப்பார் ;
ஆங்கில பாடத்தை விரும்பி படிக்க பல எளிய முறைகளை சொல்லித் தருவார் ;
ஒருமுறை Child வார்த்தைக்கு பன்மை வார்த்தை என்னவென கேட்டார் ; அனைவரும் S சேர்த்து Childs என்றோம் ; Children என சொல்லித் தந்தார் ;
ஊருக்கு வரும் போது அருகில் அமர வைத்து படிப்பின் மேன்மையை சொல்லித் தருவார் ;
பொது அறிவு வரை புத்தக வாசிப்பை வழக்கமாக்கி கொள்ள சொல்வார் ; எமது பள்ளி கோடை விடுமுறை காலத்தில் திருநெல்வேலி குலவணிகர்புரம் விட்டிற்கு பல முறை அழைத்துச் சென்று,புத்தக வாசிப்பு, வெளியிடங்களுக்கு தமது மகன் திரு பரிமேல் அத்தான் மூலம் அழைத்துச் செல்லுதல் என அவர் எமது வாழ்வில் செய்தவை நான் மறையும் வரை மறக்க கூடாத ஒன்று ;

அப்பா, அம்மா மீது மிகுந்த பாசம் கொண்ட மாமா அவர்கள் இங்கே தோரணமலை தைப்பூசத்தில்
(31 01 1999 ) பக்தி சொற்பொழி ஆற்றிய காணொளியைத்தான் இங்கே பார்க்கிறீர்கள் ;

இன்று பயணிக்கும் இந்த ஆன்மிக பயணத்தில் எத்தனையோ தெய்வீக பிறவிகள் நம்மை வழிநடத்தி இருக்கிறார்கள்.

எம் ஆன்மிக பயணத்தில் தெய்வத்திரு S K P கதிரேசன் மாமாவும் மறக்க முடியாத மாமனிதரே ;

வணங்குகிறேன் 🙏

11/08/2026

தோரணமலை ஸ்ரீ முருகன் அனைத்தையும் கண்காணிக்கிறான் என்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் இறைபணி தொடர்கிறது ;

உடனிருந்து பணிபுரியும் பணியாளர்கள் ஒத்துழைப்பு என்றும் மெச்சத் தகுந்தது ;

அனைத்தும் அவனருளே !

Address

THORANAMALAI
Tenkasi
627811

Alerts

Be the first to know and let us send you an email when Thoranamalai Shri Murugan Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share