14/11/2021
ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம் ஸ்ரீ காசி கால பைரவர் சக்தி ராஜ முனீஸ்வரர் மகா பீடம் நடத்தும் பைரவாஷ்டமி சிறப்பு மகா மிளகாய் யாகம் உலக நன்மைக்காகவும் மக்கள் இன்புற்று வாழவும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் சிறப்பு மகா யாகம் நடைபெறுகிறது கார்த்திகை மாதம் 11ஆம் தேதி 27- 11- 2021 சனிக்கிழமை வரும் தேய்பிறை அஷ்டமி ஆனது கால பைரவாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது காலபைரவாஷ்டமி பைரவரை வழிபட்டால் காலமெல்லாம் இன்புற்று வாழலாம் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி பூஜையின் போதும் சொர்ண ஆகர்ஷண பைரவர் சக்கரம் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது இச்சக்கரம் செல்வத்தை இருக்கக்கூடியது வியாபாரத்தை வளரக்கூடியது துன்பத்தை நீக்க கூடியது துஷ்ட சக்திகளிடம் இருந்து நம்மை காக்க கூடியது செய்வினை போன்ற பேராபத்திலிருந்து காக்கக் கூடியது கிரக தோஷங்கள் இலிருந்து பாதுகாக்க கூடியது இன்னும் பல எண்ணிய காரியங்களை நிறைவேற்றக் கூடியது இந்த எந்திர சக்கரம் தேவைப்படுவோர் போன் செய்து முன்பதிவு செய்து கொள்ளவும் குறிப்பு மாதம் 100 நபருக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது முதலில் தொடர்பு கொண்டு பதிவு செய்யும் 100 நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் நேரில் வர முடியாதவர்களுக்கு கொரியர் மூலம் தமிழகத்தில் எங்கு இருந்தாலும் அனுப்பப்படும் யாக பூஜை மற்றும் அன்னதான காணிக்கையாக ரூ 700 செலுத்துபவர்களுக்கு நேரிலோ கொரியர் மூலமாகவோ இந்த எந்திர சக்கரம் மற்றும் கோவில் பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம் நம் திருக்கோவில் காலபைரவாஷ்டமி பிரசாதம் மட்டும் வேண்டுவோர் ரூ 300 செலுத்தி கொரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம் மேலும் அன்னதானத்திற்கு நன்கொடை வழங்குபவர்கள் அவரவர் விருப்பம் போல் அனுப்பலாம் நம் திருக்கோவில் நோக்கம் பக்தர்கள் பெரும் செலவுகள் இல்லாமல் எளிமையான முறையில் மிகப் பெரும் பலன் அடைய வேண்டும் என்பதே காலபைரவாஷ்டமி சிறப்பு மிளகாய் யாகத்தில் ஆன்மீக அன்பர்களும் இறைநம்பிக்கையாளர்கள் சிவ பக்தர்களும் பொதுமக்களும் குடும்பத்துடன் கலந்துகொண்டு காசி மாநகரின் காவல் தெய்வமாக விளங்கும் ஸ்ரீ காசி கால பைரவர் அருள் பெற வேண்டுகிறோம் நம் திருக்கோவிலில் 20 அடி விஸ்வரூபம் கொண்ட ஸ்ரீ காசி காலபைரவர் திருவுருவம் எட்டு பைரவர்கள் சிவன் பிரம்மா விஷ்ணு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார் இங்கு ராஜ முனீஸ்வரர் மகா சக்தி காளியம்மன் வலம்புரி கற்பக விநாயகர் நவக்கிரக தெய்வங்கள் குடிகொண்ட அருள்பாலிக்கிறார்கள் இங்கு 20 வருடங்களாக பேசும் தெய்வமாக ஸ்ரீராஜ முனீஸ்வரன் அருள்வாக்கு வழங்கி வருகிறார் வெள்ளி செவ்வாய் அமாவாசை 11:00 மணிக்கு மிகக் கூர்மையான கத்தி மேல் நின்று அருள்வாக்கு வழங்கப்படுகிறது திருக்கோவில் அமைவிடம் சேலம் மாவட்டம் தாரமங்கலம் டோ சின்னப்பம்பட்டி வழி பைபாஸ் பஸ் ஸ்டாப் கிழக்கே ஒரு மைல் தொலைவில் ஸ்ரீ ராஜ முனீஸ்வரன் திருக்கோயில் வளாகம் அமைந்துள்ளது அனைவரும் திரளாக கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம் அருள்வாக்கு சுவாமிகள் தவத்திரு குருஜி மாரியப்பன்.
Sri Raja Muneeswaran Temple