15/05/2021
*குனூத் நாஸிலா*( சோதனை கால குனூத்) குறித்த முக்கிய அறிவிப்பு!
*பாலஸ்தீன நாட்டில் அப்பாவி முஸ்லிம்களை கொன்றழிக்கும் இஸ்ரேலுக்கு எதிராய் அல்லாஹ்விடம் மன்றாடிப் பிரார்த்திப்போம்!*
பாலஸ்தீன மக்கள் மீது அமேரக்காவின் கள்ளக் குழந்தையான இஸ்ரேல் கொடூரமாக தாக்குதல் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.
ஜெருசேலத்தில் அமைந்துள்ள முஸ்லிம்களின் புனிதத் தலமான மஸ்ஜிதுல் அக்ஸா வளாகத்தில் இரவு வணக்கத்தில் முஸ்லிம்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இஸ்ரேலிய இராணுவத்தினர் வெறி நாய்கள் போன்று பள்ளிவாசலுக்குள் பூட்ஸ் காலோடு நுழைந்து மிருக வெறியாட்டம் நடத்தினார்கள். இந்த எதிர்பார்க்காத தாக்குதலில் 163 பாலஸ்தீனியர்கள் படுகாயமடைந்தனர்!
தற்போது இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனிய நாடு மீது போர் தொடுத்து முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்!
இந்த கொடூர தாக்குதலில் இதுவரை 119 க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்! இதில் 20க்கு மேற்பட்டோர் பச்சிளம் குழந்தைகளாவர்!
காஸாவில் எங்கு பார்த்தாலும் அழுகுரல்கள் தான்! பாலஸ்தீன மக்களின் நிலை மிகவும் கவலை அளிக்கிறது!
*எனவே மஸ்ஜிதுல் அக்ஸாவை முஸ்லிம்கள் மீட்டெடுக்கவும் பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கவும் இஸ்ரேலை அல்லாஹ் அழித்து நாசமாக்கவும்*
குனூத் -நாஸிலா எனும் சோதனை கால குனூத் பிரர்த்தனை செய்து அல்லாஹ்விடம் மன்றாடுவோம்.
*குனூத்துன் நாஸிலா* *ஓதுவதின் சட்டங்கள்*
இஸ்லாமிய சமுதாயம் சோதனைகளுக்கு உள்ளாகும்போது , அந்த சோதனைகள் நீங்குவதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வது நபி வழியாகும்.
இஸ்லாமியர்களுக்கு இறைவனது உதவிகளை கேட்டும், அநியாயக்காரர்களுக்கு எதிராக இறைவனுடைய சாபத்தை கேட்டும் , நபி (ஸல்) அவர்கள் ஓதிய குனூத்'தை தான் குனூத் நாஸிலா என்று சொல்லப்படுகிறது.
*குனூத்துன் நாஸிலா ஓதும் முறைகள்!*
*ஒவ்வொரு ஐவேளை கடமையான ஜமாஅத் தொழுகைகளில் குனூத் நாஸிலா ஓத வேண்டும்*
*கடமையான தொழுகையில் கடைசி ரக்அத்தில் இமாம் சமி அல்லாஹு லிமன் ஹமிதா என்று சொன்ன பிறகு இமாம் கைகளை உயர்த்தி அல்லாஹ்விடம் முஸ்லிம்களுக்கு உதவி கிடைக்க வேண்டியும் ,அநியாயக்காரர்களின் அடக்குமுறைக்கு எதிராக சாபம் கேட்டும் பிரார்த்திக்க வேண்டும்! அதைப் போல் இமாமை பின் தொடர்பவர்களும் பிரார்த்திக்க வேண்டும்*
*இமாம் பிரார்த்திக்கும்போது பின்தொடர்பவர்களும் பிரார்த்திக்க வேண்டும்! அதற்கு பதில் ஆமின் கூற ஆதாரமில்லை*
*நாம் விளங்குகிற நமது தாய் மொழிகளில் பிரார்த்திக்கலாம்*
*முஸ்லிம்களுக்கெதிரான சோதனை நீங்கும் வரை தொடர்ந்து ( குனூத்துன் நாஸிலா) அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும்*
இவற்றுக்கான ஆதாரங்கள் பின்வருமாறு...
நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு சோதனைகள் ஏற்படும் காலகட்டங்களில் குனூத் ஓதியுள்ளார்கள்.
و حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ وَأَبُو كُرَيْبٍ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى وَاللَّفْظُ لِابْنِ مُعَاذٍ حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي مِجْلَزٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا بَعْدَ الرُّكُوعِ فِي صَلَاةِ الصُّبْحِ يَدْعُو عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَيَقُولُ عُصَيَّةُ عَصَتْ اللَّهَ وَرَسُولَهُ
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் ருகூவிற்குப் பின்னால் ஒரு மாத காலம் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். அதில் ரிஅல், தக்வான் ஆகிய குலத்தாருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். மேலும் 'உஸய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து விட்டார்கள்'என்றும் கூறினார்கள்
நூல்: முஸ்லிம் 1201.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الْأَسْوَدِ قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ الْقُنُوتُ فِي الْمَغْرِبِ وَالْفَجْرِ
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மஃரிப், ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளில் குனூத் ஓதுதல் (நபி (ஸல்) காலத்தில்) இருந்தது.
நூல்: புகாரி 798, 1004
و حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ الْبَرَاءِ قَالَ قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْفَجْرِ وَالْمَغْرِبِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையிலும் மஃரிப் தொழுகையிலும் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள்.
அறிவிப்பவர்: பராஉ பின் ஆசிப் (ரலி)
நூல்: முஸ்லிம் 1207, 1208
797 بَاب حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ قَالَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ يَحْيَى عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ لَأُقَرِّبَنَّ صَلَاةَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقْنُتُ فِي الرَّكْعَةِ الْآخِرَةِ مِنْ صَلَاةِ الظُّهْرِ وَصَلَاةِ الْعِشَاءِ وَصَلَاةِ الصُّبْحِ بَعْدَ مَا يَقُولُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَيَدْعُو لِلْمُؤْمِنِينَ وَيَلْعَنُ الْكُفَّارَ رواه البخاري
அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா (ரலி) அவர்கள், நான் நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தது போன்றே உங்களுக்குத் தொழுவிக்கிறேன் என்று கூறுவார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் லுஹ்ர் , இஷா, சுப்ஹு ஆகிய தொழுகைகளின் கடைசி ரக்அத்களில் (ருகூஉவிலிருந்து எழுந்து) சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்' (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறிய பிறகு குனூத் (சிறப்புப் பிரார்த்தனை) ஓதுவார்கள். அதில் இறை நம்பிக்கையாளர்களுக்காகப் பிரார்த்திப்பார்கள். (கொடுஞ்செயல் புரிந்த குறைஷி) இறைமறுப்பாளர்களைச் சபிப்பார்கள்.
நூல் : புகாரி (797).
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (8 / 104)
6393- حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ ، حَدَّثَنَا هِشَامٌ ، عَنْ يَحْيَى ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فِي الرَّكْعَةِ الآخِرَةِ مِنْ صَلاَةِ الْعِشَاءِ قَنَتَ اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ اللَّهُمَّ اجْعَلْهَا سِنِينَ كَسِنِي يُوسُفَ.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையின் இறுதி ரக்அத்தில் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்' (தன்னைப் புகழ்ந்தவரின் புகழுரையை அல்லாஹ் செவியேற்றான்) என்று கூறிய பிறகு (சோதனைக்கால) குனூத்' ஓதினார்கள். அதில்,
இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் பின் வலீதைக் காப்பாற்று வாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர் களைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்கு வாயாக! இறைவா! யூசுஃப் (அலை) அவர்களின் காலத்துப் பஞ்சம் நிறைந்த (ஏழு) வருடங்களைப் போன்று இவர்களுக்கும் சில வருடங்களை அளிப்பாயாக!
என்று பிரார்த்தித்தார்கள்
நூல் : புகாரி (6393).
*நபி ஸல் அவர்கள் தங்களது காலத்தின் எதிர்களின் பெயரை கூறி பிரார்த்தனை செய்துள்ளார். இதே போன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இராணுவத் தளபதி அவிவ் கோச்சாவி போன்ற அராஜகக்காரர்களின் பெயரைக் கூறியும்,கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகவும் அனைவரும் இரு கைகளையும் உயர்த்தி, சாப பிரார்த்தனை செய்ய வேண்டும். இமாமும் பின்பற்றி தொழுவோரும் குனூத் நாஸிலா ஓத வேண்டும்.*
مسند أحمد بن حنبل – (3 / 137)
12425 – حدثنا عبد الله حدثني أبي ثنا هاشم وعفان المعني قالا حدثنا سليمان عن ثابت قال كنا عند أنس بن مالك …. فقال أنس فما رأيت رسول الله صلى الله عليه و سلم وجد على شيء قط وجده عليهم فلقد رأيت رسول الله صلى الله عليه و سلم في صلاة الغداة رفع يديه فدعا عليهم ….
تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح على شرط مسلم
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : (எழுபது நபித்தோழர்கள் கொல்லப்பட்ட போது) அவர்களுக்காக நபியவர்கள் கவலைப்பட்டது போல் வேறு எந்த ஒன்றிலும் கவலைப்பட்டு நான் பார்த்ததில்லை. நபி (ஸல்) அவர்கள் சுபுஹ் தொழுகையில் தன்னுடைய இரு கைகளை உயர்த்தி (நபித்தோழர்களை கொலை செய்தவர்களுக்கு) எதிராக பிரார்த்தனை செய்ததை நான் பார்த்தேன்.
நூல் : அஹ்மத் (12425).
எனவே பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு சோதனையான இந்த காலகட்டத்ததில் அல்லாஹ்வின் உதவி கிடைக்கவும் , பாலஸ்தீனத்தில் மக்களின் துயர் நீங்கி அமைதி நிலவவும் ஆணவக்கார இஸ்ரேல் அழியவும் குனூத் நாஸிலா ஓதி தொழுக வேண்டும் என்று அனைவரையும் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.
இப்படிக்கு .
சதாம் ஹுசைன்(மாநிலச் செயலாளர் NTF)
ஃபத்வா குழு- தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு NTF மாநிலத் தலைமையகம்
தொடர்புக்கு
+91 6380921148
+91 8637623634
+91 9566347318