All Saints Church, Subramaniapuram

All Saints Church, Subramaniapuram இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமா யிருக்கிறேன்;

Asanam Festival 2026
11/03/2026

Asanam Festival 2026

நமது சுப்பிரமணியபுரம் சேகரத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆண்டவருடைய ஊழியத்தை அவருடைய நாம மகிமைக்காக சிறப்பாக செய்து முடித்...
08/03/2026

நமது சுப்பிரமணியபுரம் சேகரத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆண்டவருடைய ஊழியத்தை அவருடைய நாம மகிமைக்காக சிறப்பாக செய்து முடித்து தற்போது கயத்தாறு பன்னீர் குளம் சேகரத்திற்கு பணியிடமாறுதல் பெற்றுள்ள நமது சேகரத் தலைவர் அருள்திரு. A. டேவிட் ராஜ் ஐயா அவர்களுக்கு பிரிவு உபசார நிகழ்ச்சி இன்று ஞாயிறு ஆராதனைக்கு பின் திருச்சபையின் சார்பில் நடைபெற்றது...
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆண்டவருடைய ஊழியத்தை உண்மையுடனும், உத்தமத்துடனும், செய்து நிறைவேற்றி, பல புதிய ஆத்துமாக்களை திருச்சபையில் சேர்த்து, ஆன்மீகப் பணியோடு பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் ஜெபத்தோடு செய்து முடித்துள்ள ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறோம்...
கர்த்தர் தாமே ஐயாவையும், அவருடைய குடும்பத்தையும், அவருடைய ஊழியங்களையும் தொடர்ந்து ஆசீர்வதித்து வழி நடத்துவராக ஆமென்!

நமது சுப்பிரமணியபுரம் சேகரத்திற்கு புதிதாக சேகர தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அருள் திரு. A. ஜான் வெஸ்லி ஐயா அவர்களுக்கு இன...
08/03/2026

நமது சுப்பிரமணியபுரம் சேகரத்திற்கு புதிதாக சேகர தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அருள் திரு. A. ஜான் வெஸ்லி ஐயா அவர்களுக்கு இன்று ஞாயிறு ஆராதனைக்கு பின் திருச்சபையின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது...
நமது சேகர தலைவராகவும் ஜி.யு. போப் சபைமன்ற தலைவராகவும் ஐயா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்...
ஐயாவின் பணி சிறக்க ஜெபத்தோடு வாழ்த்துகிறோம்...
கர்த்தர் தாமே ஐயாவின் ஊழியங்களை ஆசீர்வதித்து வழி நடத்துவாராக ஆமென்!

நமது சேகரத்திற்கு புதிதாக பொருட்பேற்றுக்கும்  சேகர தலைவர் Rev. A. ஜான் வெஸ்லி ஐயா அவர்களை சபை மக்கள் சார்பாக வரவேற்றபோது
08/03/2026

நமது சேகரத்திற்கு புதிதாக பொருட்பேற்றுக்கும் சேகர தலைவர் Rev. A. ஜான் வெஸ்லி ஐயா அவர்களை சபை மக்கள் சார்பாக வரவேற்றபோது

தேவனுக்கே மகிமை உண்டாவதாக! ஒவ்வொரு மாதமும் நமது திருச்சபையைச் சார்ந்த திக்கற்ற மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி...
01/03/2026

தேவனுக்கே மகிமை உண்டாவதாக!

ஒவ்வொரு மாதமும் நமது திருச்சபையைச் சார்ந்த திக்கற்ற மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் நமது சேகர கமிட்டி அங்கத்தினர்கள் சார்பாக ஆண்டவருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த மாதத்திலும் நமது திருச்சபையைச் சார்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு குடும்பத்தாருக்கு நலத்திட்ட உதவி வழங்க தேவன் கிருபை செய்து இருக்கிறார்.

தேவனுக்கே சகல கனமும் மகிமையும் கீர்த்தியும் உண்டாவதாக! ஆமென்

01/03/2026
நமது சகல பரிசுத்தவான்களின் ஆலயத்தில் இன்று காலை 7 மணிக்கு பரிசுத்ததிருவிருந்து ஆராதனை நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து, GMS வ...
15/02/2026

நமது சகல பரிசுத்தவான்களின் ஆலயத்தில் இன்று காலை 7 மணிக்கு பரிசுத்த
திருவிருந்து ஆராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, GMS விற்பனை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது...

சபை மக்கள் அனைவரும் உற்சாகமாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்...

தேவனுக்கே மகிமை உண்டாவதாக!

இன்று( 08.02.2026நமது ஆலயத்தில்  GMS கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது....
08/02/2026

இன்று( 08.02.2026நமது ஆலயத்தில் GMS கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது....

கர்த்தருக்குள் பிரியமானவர்களே, அன்பின் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்!கர்த்தருடைய பெரிதான கிருபையி...
01/02/2026

கர்த்தருக்குள் பிரியமானவர்களே, அன்பின் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்!

கர்த்தருடைய பெரிதான கிருபையினால் நமது சகல பரிசுத்தவான்களின் ஆலயத்தின் 138 வது அசன பண்டிகை வருகிற ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி ஆசரிக்க இருக்கிறோம். சபை மக்கள் அனைவரும் தங்களது தனி ஜெபங்களிலும் குடும்ப ஜெபங்களிலும் ஜெபிக்கும்படியாக கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் 138 வது அசன பண்டிகையை முன்னிட்டு திடப்படுத்தல் ஆராதனை பேராயர் பேரருள்திரு. ஐசக் வரப்பிரசாத் ஐயா அவர்களால்
வருகிற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடத்தப்பட உள்ளது.

ஆகவே, திடப்படுத்தல் பயில விரும்பும் உள்ளூர் மற்றும் வெளியூரில் வசிக்கும் திருச்சபையைச் சார்ந்த மக்கள் தங்களது பெயர்களை சேகர தலைவர் அல்லது சபை ஊழியரிடம் கொடுக்கும்படி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இன்று (01.02.2026) மாலை 5 மணி முதல் திடப்படுத்தல் வகுப்புகள் நடைபெற உள்ளது. பெயர் கொடுத்தவர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படியாகவும் கேட்டுக்கொள்கிறேன்.

இவன்
கிறிஸ்துவின் பணியில்
ஆ . டேவிட் ராஜ்
சேகர தலைவர்
சுப்பிரமணியபுரம்
9994659558

தேவனுக்கே மகிமை உண்டாவதாக!கர்த்தருடைய பெரிதான கிருபையினால்,  கடையம் ஜெபமலையில் நடைபெற்ற நமது தூத்துக்குடி நாசரேத் திருமண...
15/01/2026

தேவனுக்கே மகிமை உண்டாவதாக!

கர்த்தருடைய பெரிதான கிருபையினால், கடையம் ஜெபமலையில் நடைபெற்ற நமது தூத்துக்குடி நாசரேத் திருமண்டல 2026 ஆம் ஆண்டு ஆயிரம் ஆயிரம் ஆண்கள் மாநாட்டில், நமது சகல பரிசுத்தவான்களின் ஆலயத்தின் சார்பாக கலந்துகொண்டு தேசத்திற்காக, திருமண்டலத்திற்காக, திருச்சபைகளுக்காக பாரத்தோடு திறப்பில் நின்று ஜெபிக்க தேவாதி தேவன் கிருபை செய்தார்!

மாநாட்டில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பொறுப்பு பேராயர்
பேரருள்திரு. ஐசக் வரப்பிரசாத் ஐயா அவர்களை நமது சேகரத் தலைவர் அருள்திரு. டேவிட் ராஜ் ஐயா அவர்களுடன் சந்தித்து, ஜெபித்து, ஆசி பெற தேவன் கிருபை செய்தார்!

தேவனுக்கே மகிமை உண்டாவதாக! நமது சகல பரிசுத்தவான்களின் ஆலயத்தில் 2025 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் கீத ஆராதனை ஞாயிற்றுக்கிழமை 21...
21/12/2025

தேவனுக்கே மகிமை உண்டாவதாக!

நமது சகல பரிசுத்தவான்களின் ஆலயத்தில் 2025 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் கீத ஆராதனை ஞாயிற்றுக்கிழமை 21.12.2025 அன்று ஆண்டவருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாக வெகு சிறப்பாக நடைபெற்றது.

நமது திருச்சபையைச் சேர்ந்த தாய்மார்கள், ஆண்கள், வாலிப ஆண்கள், வாலிபப் பெண்கள், பாடகர் குழுவினர், ஓய்வு நாள் பாடசாலை குழந்தைகள் மற்றும் நமது சபை மக்கள் அனைவரும் உற்சாகமாக கலந்து கொண்டு உலக இரட்சகராம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் பண்டிகையாம் கிறிஸ்துமஸ் பண்டிகை பாடல்களைப் பாடி ஆண்டவருடைய நாமத்தை மகிமைப்படுத்தினார்கள்.

இந்தச் சிறியரில் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்ற இயேசு கிறிஸ்துவின் வாக்குகிணங்க, இந்த கீத ஆராதனையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நமது ஊருக்கு அருகாமையில் உள்ள செல்வ மணி நகர் மற்றும் பட்டாண்டி விலை கிராமத்தில் வசிக்கும் சுமார் 50 ஏழை தாய்மார்களுக்கு நமது சேகர கமிட்டி அங்கத்தினர்களின் சார்பில், கிறிஸ்துமஸ் பரிசுகள், புத்தாடைகள் மற்றும் கிறிஸ்மஸ் விருந்தும் வழங்குவதற்கு தேவன் கிருபை செய்தார்.

கீத ஆராதனை முடிவில் சபை மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் அன்பின் விருந்து வழங்கப்பட்டது.

சபை மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புது வருட (2026) வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!

கர்த்தர் தாமே நமது திருச்சபை மக்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவராக! ஆமென்!

Address

Subramaniapuram
628251

Website

Alerts

Be the first to know and let us send you an email when All Saints Church, Subramaniapuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category