சதுரகிரி சுந்தரமகாலிங்கம்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from சதுரகிரி சுந்தரமகாலிங்கம், Religious organisation, Sathuragiri, Srivilliputtur.

சதுரகிரி ஐந்துமுக ருத்ராட்சம்ருத்ராட்சம் அணிந்தால் என்ன கிடைக்கும் ?1. ருத்ராட்சதை உடலில் உணரும்போது சிவ சிந்தனைகள் எழும...
04/08/2024

சதுரகிரி ஐந்துமுக ருத்ராட்சம்

ருத்ராட்சம் அணிந்தால் என்ன கிடைக்கும் ?

1. ருத்ராட்சதை உடலில் உணரும்போது சிவ சிந்தனைகள் எழும்.

2. மற்றவர்கள் நம்மை பார்க்கும் நோக்கம் நம்மை
பாதிக்காது.

3. எதிர்மறை எண்ணங்கள் மறையும்.

4. ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஆழ்ந்து நோக்கும்
தன்மை.

5. நிதானமாகவும் தெளிவாகவும் செய்யும் திறன்.

6. வேண்டாத பழக்கம் நம்மை விட்டு தாமே
விலகும் நிலை.

7. எதிலும் ஒரு திருப்தி.

8. நம்மை வழி நடத்த பல உணர்வுகள்.

9. நாம் நிலைமை மேன்மை அடையும்
உணர்வு.

10. பிறர்க்கு உதவும் மனப்பான்மை.

11. நமக்கு துன்பம் என்று வரும்போது அதை
களைய உடனே உதவி,

12. தீமைகள் அணுகாது, துன்பம் வரும் முன்
உணரும் தன்மை என்று பல பல,

(உலகிலே தீட்டு ஆனா இடம் நாம் பெருமான் இருக்கும் சுடுகாடு, ஆதலால் ருத்ராட்சம் அணிய எந்த ஒரு தீட்டும் இல்லை, ஆண் பெண் திருநங்கை என்று எந்த பேதமும் இல்லாதவன் நாம் கருணை கடவுள் ஆதலால் அனைவரும் அணியலாம்).

தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும்.

#ருத்ராட்சம் #சதுரகிரி

 #சுந்தர  #மகாலிங்கம்  #பக்தர்கள்  #அமாவாசை  #பவுர்ணமி  #சதுரகிரி  #கோவில்    #ஆடி
30/07/2024

#சுந்தர #மகாலிங்கம் #பக்தர்கள் #அமாவாசை #பவுர்ணமி #சதுரகிரி #கோவில் #ஆடி

ஓம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் போற்றி போற்றி
30/07/2024

ஓம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் போற்றி போற்றி

 #பக்தர்கள்  #சதுரகிரி  #பவுர்ணமி  #அமாவாசை  #சுந்தர  #மகாலிங்கம்  #கோவில்      #மூலிகை
30/07/2024

#பக்தர்கள் #சதுரகிரி #பவுர்ணமி #அமாவாசை #சுந்தர #மகாலிங்கம் #கோவில் #மூலிகை

30/07/2024

சதுரகிரி மலை
*****************
சதுரகிரியும் திருவண்ணாமலையும் எத்தனை முறை சென்றாலும் ஒவ்வொரு முறையும் அதன் பிரம்மாண்டத்தை உணர்வதில் தவறியதே இல்லை.

நோய் தீர்க்கும் மலை;
***********************
சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும் மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்ல து . இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள் .சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை சேகரித்து செல்கிறார்கள்.

●திசைக்கு நான்கு கிரிகள் வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத் தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது .
●மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.
●தாணிப்பாறை அடிவாரம் கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம்
●மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை " சஞ்சீவி மலை " என்கின்றனர்.
●சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.
●ஆடி அமாவாசை முக்கிய விழா, தை அமாவா சை , மகாசிவராத்திரி , சித்ரா பவுர்ணமி மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்.
●பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலை யை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்த போதே செய்ததாக கூறப்படுகிறது.
● இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும் பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்கு இந்த புல்லை உபயோகித்து உள்ளார்கள்.
● மகாலிங்கம் கோயில் வடக்கில் ஊஞ்சல் கருப்பண்ணசாமி கோயில் உள்ளது.
●சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும்.
● ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும் தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது.
● சதுரகிரி மலையில் மின்சார வசதி கிடை யாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.
● மலைக்கு மேல் சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம்.எந்த நேரமும் உங்கள் வயிறை குளிரவைக்க மடம் உள்ளது. உங்களுக்கு குறைந்த பட்சம் கஞ்சியோ கூழோ பழைய சோறோ நிச்சயம் கிடைக்கும் .
●24 மணி நேரமும் என்பது தான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால் முன் கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.
● சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலை யே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர்.

சதுரகிரி யில் தீர்த்தங்கள்.
****************************
◆சந்திர தீர்த்தம்= சதுரகிரியில் சுந்தர மகாலி ங்க மலையில் " சந்திர தீர்த்தம்" இருக்கிறது . இந்தசந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை , கா மம் , குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்க ளி லிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.

◆கௌண்டின்னிய தீர்த்தம் = சந்திர தீர்த்தத் திற்கு வடபுறத்தில் உள்ளது இந்த தீர்த்தம் இது தெய்வீக தன்மை வாய்ந்த நதியாகும் . வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும் ரிஷிக ளும் சிவபெருமானிடம் வேண்ட ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலி ருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு லிங்கத்தில் மறைந்தார் என்பது ஜதீகம். கங்கை, கோதாரி, கோமதி , சிந்து, தாமிரவரு ணி , துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிக ளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீரா டுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு " பாவகரி நதி " என்னும் பெயரும் உண்டு.

◆சந்தன மகாலிங்கம் தீர்த்தம்= இது சதுரகிரி யின் மேல் " காளிவனம் " என்கிற இருண்ட வனம் ஒன்று உள்ளது.அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.உமையாள் பிரு ங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாக சிவபெருமானை விட்டு பிரிந்து அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத் தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும். இப்புண் ணிய தீர்த்தத்தில் நீராடினால் எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.

◆இது தவிர சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங் கள் நீராடுவதற்கு உண்டாக்கிய திருமஞ்சனப் பொய்கை உண்டு.

◆காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட பிரம்மா தீர்த்தம் ஒன்று காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது .இதுதவிர கோ ரகர், இராமதேவர் , போகர் முதலிய மகரிஷிக ளால் உண்டாக்கபட்ட பொய்கைத் தீர்த்தம். பசு க்கிடைத் தீர்த்தம் குளிராட்டி தீர்த்தம் போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள் ளது .மகாலிங்கம் கோயிலில் ருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய் கையில் நீர் வற்றாது .இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை மகர்ஷிக ளும் சித்தர்கள் இன்றும் அருவுருவாக வாழ்ந் தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகிரியில் வீற்றிருக்கிறார்கள்.

◆பொதுவாகவே மலைகளின் மேல் மனிதர்க ளு க்கு ஆயுளும் ஆரோக்கியமும் தரும் அற்புத மா ன பல மூலிகைகளும் மருத்துவ குணம் நிறை ந்த மரம் செடி கொடிகள்யாவும் இருக்கி ன்ற ன .இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீது பட்டதும் உடலின் உள்ள நோய்கள் தீர்கின்றன.

◆அபூர்வ மூலிகைகள் இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி இந்த மூலிகை இலையை வைத் துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும் .

◆சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுண ங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது. இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும் . அந்தக் காய் கனிந்து விழும் போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்தி லேயே போய் ஒட்டிக்கொள்ளும்.

◆அதேபோல் " ஏர் அழிஞ்ச மரம் " என்றொரு மரம் உண்டு.இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும் . விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் வந்து ஒட்டிக் கொள்ளும்.

◆சதுரகிரியில் நந்தீஸ்வரவனத்தில் கனையெ ருமை விருட்சம் என்றொரு மரமுண்டு அம்மர த்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றா ல் அம்மரம் எருமை போல் கனைக்கும் அம்மர த்தை வெட்டினால் குத்தினால் பால் வரும்.

◆இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு இந்த விருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும்.வெட்டினால் பால் கொட்டும். நவபாஷாண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.

◆இவை எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பி டும் விஷயம் ஒன்று உள்ளது .மலையில் மிக அடர்ந்த பகுதியில் " மதி மயக்கி வனம் " என்ற பகுதி உள்ளது.இங்கே உள்ளே சென்றவர்கள் மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர்.

◆இன்றும் அமாவாசை பெளர்ணமி தினங்களி ல் சித்தர்கள் ரிஷிகள் மகாலிங்க பூஜை செய் ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திர ங்கள் மலைப்பகுதியில் விழுகி ன்றன.

◆உங்கள் தேடல் பக்தி உண்மை எனில் நீங்க ள் மனதார நினைத்து வழிபாடு செய்தால் சித்தர் தரிசனம் உங்களுக்கு சதுரகிரியில் நிச்சயம் கைகூடும். இதை நிறைய பக்தர்கள் அனுபவி த்து இருக்கிறார்கள்.

ஓம் நமசிவாய....

#சதுரகிரி #மூலிகை #அமாவாசை #பவுர்ணமி #மகாலிங்கம் #பக்தர்கள் #கோவில் #சுந்தர #சதுரகிரி

சதுரகிரி அருள்மிகு பெரியமகாலிங்கத்திற்க்கு அரோகரா.
29/07/2024

சதுரகிரி அருள்மிகு பெரியமகாலிங்கத்திற்க்கு அரோகரா.

சதுரகிரியில் சாமி தரிசனம் செய்ய 1-ந் தேதி முதல் 5 நாட்கள் அனுமதிபல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை விதித்துள்ளது.பல்வேறு பக...
27/07/2024

சதுரகிரியில் சாமி தரிசனம் செய்ய 1-ந் தேதி முதல் 5 நாட்கள் அனுமதி

பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை விதித்துள்ளது.
பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
வத்திராயிருப்பு:

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. சித்தர்களின் பூமி சிவகிரி என அழைக்கப்படும் சதுரகிரிக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

சதுரகிரி கோவிலில் வருடந்தோறும் ஆடி அமாவாசை திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு வருகிற 4-ந்தேதி ஆடி அமாவாசை ஆகும். இதனை முன்னிட்டு வருகிற 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

வழக்கமாக 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக இந்த முறை 5 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைமேல் உள்ள கோவில் மற்றும் அடிவார பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் தாணிப்பாறைக்கு மதுரை, விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

இதற்காக தாணிப்பாறையில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மலைஏறும் பக்தர்கள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்து செல்ல கூடாது. 10 வயதிற்கு மேற்பட்டவர்கள், 60 வயதிற்குட்பட்டவர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை விதித்துள்ளது. ஆடி அமாவாசைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்ப்பதால் அதற்கேற்ப போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Amazon Offer

Hi, check out the products that I am selling on Amazon - https://amazon.in/s?me=A2JJ2T69VSDJ5W&ref=sf_seller_app_share_new

Tags:


#அமாவாசை #ஆடி #அமாவாசை #பவுர்ணமி #சதுரகிரி #சதுரகிரி #சுந்தர #மகாலிங்கம் #கோவில் #பக்தர்கள்

Address

Sathuragiri
Srivilliputtur

Website

Alerts

Be the first to know and let us send you an email when சதுரகிரி சுந்தரமகாலிங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share