Pastor Selwin

Pastor Selwin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pastor Selwin, Religious organisation, Sivakasi.

28/10/2024

🔥🔥🔥🔥🔥🔥🔥
*Pastor Selwin Devotions*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

👑👑👑👑👑👑👑👑
*அபிஷேகத்தைக் காத்துக்கொள்*
👑👑👑👑👑👑👑👑

சமீபத்தில் எங்கள் சபைக்காக ஒரு ஆழ்துளை கிணறு தோண்டினோம். அதாவது போர்வெல் போட்டோம். அந்த போர்வெல் மெஷின், எல்லாம் சரி செய்து விட்டு போட ஆரம்பித்தார்கள் பாருங்கள். பயங்கரமான சத்தம். ஆனால் அது மிக எளிதாக பூமிக்கடியில் உள்ள கடினமான பாறைகளை உடைத்து தூசியாக்கி தூற்றிப்போட்டு பூமிக்கடியில் இறங்கிக் கொண்டேயிருந்தது. 500 அடி சுமார் 5 மணி நேரத்தில் போட்டு முடித்து விட்டார்கள். பாருங்கள்; கடினமான பாறையை மணிக்கு 100 அடி என்ற வேகத்தில் குடைந்து சென்றது என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. ஆம், அதற்கு தான் அப்படி ஒரு சத்தம். அப்போது கர்த்தர் எனக்கு ஒன்றை உணர்த்தினார்.

அந்நிய பாஷை வரம் நாம் அமைதியாக ஜெபிப்பதற்காக தந்தது அல்ல. மேலும் *அந்நிய பாஷை சத்தம் சாத்தானுடைய வல்லமைகளை உடைத்து தூசியாக தூற்றிப் போடும்* என்பதில் சந்தேகமே இல்லை. இஸ்ரவேல் ஜனங்கள் எரிகோவை தகர்ப்பதற்காக ஆர்ப்பரித்தார்கள் என்று வாசிக்கிறோம். என்ன சொல்லி ஆர்ப்பரித்தார்கள் என்று நமக்கு தெரியவில்லை. ஆனால் இன்று *நாம் அந்நிய பாஷையில் ஆர்ப்பரிக்கலாம்.* நிச்சயமாகவே சாத்தானுடைய முழங்கால் நடுங்கும்; அவனுடைய அரண்கள் நிர்மூலமாகும். பிசாசின் திட்டங்கள் தரைமட்டமாகும். இது பிசாசுக்கும் தெரியும். ஆகவே தான் அநேகரை அந்நிய பாஷை தேவையில்லை என்று நினைக்கச் செய்கிறான். சிலர் பெற்றிருந்தாலும் சத்தமாய் அதை பயன்படுத்தி ஜெபிக்க விடுவதில்லை. ரொம்ப நாகரீகமாக ஜெபித்தால் அரண்கள் நிர்மூலமாகாது. *உங்களுக்கு விரோதமாயிருக்கிற எதிர்வல்லமைகள் நொறுக்குங்கள் அந்நிய பாஷையில் ஆர்ப்பரித்து ஜெபியுங்கள்.* நமக்கு தேவன் கொடுத்திருக்கும் சிங்கத்தின் கெர்ச்சனை தான் அந்நிய பாஷை.

பாஸ்டர் செல்வின் (Sivakasi)
98944 79390

25/10/2024

🔥🔥🔥🔥🔥🔥🔥
*Pastor Selwin Devotions*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

👑👑👑👑👑👑👑👑
*யார் நல்லவன்?*
👑👑👑👑👑👑👑👑

கிராமத்தில் பாம்பு கடித்து பலர் சாவதுண்டு. அப்படி ஒரு சிறுவனை பாம்பு கடித்து விட்டது. அவன் செத்துப் போனான். அவனுடைய தகப்பன் கடுங்கோபங்கொண்டு ஒரு கோடரியுடன் அந்த புற்றின் வாசலில் பல நாட்கள் காத்திருந்தார். ஒரு நாள் பாம்பு வெளியே வந்தது. மூர்க்கமாய் தாக்கினார்; தற்செயலாக பாம்பின் வால் மட்டுமே வெட்டுப்பட்டது. பாம்பு உள்ளே ஓடி விட்டது. இனி பாம்பு நம்மை பழி வாங்குமே என்று பயந்து அதனுடன் நட்பாக விரும்பினான். அன்று முதல் ஒரு கின்னத்தில் பால் வைத்து காத்திருந்தான். அப்படியே ஒரு நாள் அந்த பாம்பு வெளியே வந்தது. அன்பு பாராட்ட பக்கத்தில் சென்றான். பாம்பு அவனையும் கடித்துக் கொன்று போட்டது.

மனிதர்களில் இரண்டு வகை உண்டு. நல்லவர்கள் கெட்டவர்கள். நல்லவன் கெட்டவனை பழி வாங்க வேண்டும் என்று எண்ணினால், அவனும் கெட்டவன் தான். எப்படி நல்லவன் நல்லவனாகவே இருக்க முடியும்?

🔸 *தீமை செய்தவர்களுக்கு தீமை செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடாது.* ரோமர் 12:19ல் பழிவாங்குதல் தேவனுக்குரியது என்று பார்க்கிறோம். ஆகவே தீமை செய்தவர்களை *மன்னிக்கும் தன்மை* நமக்கு இருந்தால், நாம் நல்லவர்களாகவே இருக்கலாம்.

🔸 *தீமை செய்பவர்களை விட்டு விலகிச் செல்ல வேண்டும்.* சிலர் இப்படியே விட்டால் நம்மை கோழை என்று நினைப்பார்கள் என்று சொல்லி பொங்கியெழுகிறார்கள். விட்டுக் கொடுக்கச் சொல்வதால் கிறிஸ்தவம் கோழை மார்க்கம் அல்ல, இது நல்ல மார்க்கம். ஒரு வேளை கிறிஸ்தவம் அதர்மத்தை கையில் எடுக்கச் சொன்னால் அது வீரமார்க்கம் அல்ல, கெட்ட மார்க்கமாயிருக்கும்.

🔸 *தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்.* இயேசு அப்படித் தான் வாழ்ந்தார். இப்படி நாமும் நல்லவர்களாகவே வாழ்வோம்.

பாஸ்டர் செல்வின் (Sivakasi)
98944 79390

23/10/2024

🔥🔥🔥🔥🔥🔥🔥
*Pastor Selwin Devotions*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

👑👑👑👑👑👑👑👑
*யதார்தவாதியாயிருப்போம்!*
👑👑👑👑👑👑👑👑

ஒரு நாடகக் குழுவில் மூர்த்தி என்ற கலைஞன் பெரிய திறமைசாலி. ஆனால் அந்த கம்பேனிக்கே பெரிய தலைவலி. காரணம், அவன் அதிக பிரசங்கி. ஒரு நாடகம் நடந்தது. அதில் குடிகாரன் போல குடித்து நடிக்க வேண்டும். மேனேஜர் தண்ணீர் கொடுத்ததற்கு அவன் அப்படியல்ல, தன் நடிப்பில் கூட உண்மையையே கடைபிடிப்பேன் என்றான். தொல்லை தாங்க முடியாமல் அவன் கேட்டதை கொடுக்கச் சொல்லி விட்டார் உரிமையாளர். உடனே மேனேஜர் சாராயத்தை ஊற்றிக் கொடுத்தார். அடுத்த காட்சியில் கத்திச் சண்டை. அதற்கும் உண்மையான கத்தியை கொடுத்தார்கள். கடைசி சாட்சியில் அவன் விஷம் குடித்து சாகும் காட்சி. மேனேஜர் அதற்கு நல்ல விஷத்தை ஆயத்தம்பண்ணிக் கொடுத்தார். அப்போது தான் அந்த மூர்த்திக்கு, தான் செய்தது அதிக பிரசங்கித்தனம் என்று புரிந்தது. அன்று முதல் யதார்த்தவாதியாய் மாறினான்.

இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த போது யதார்த்தவாதியாயிருந்தார். ஆகவே தான் இயேசு எல்லோருக்கும் நல்லவராக இருக்க முடிந்தது. அந்நாட்களில் இருந்த பரிசேயர்கள் இது செய்யக் கூடாது, அது செய்யக் கூடாது என்பார்கள்; தங்களை நீதிமான்களாகவும், நிஜஸ்தர்களாகவும் காட்டினார்கள். அவர்கள் சமுதாயத்திற்கு முட்களாக இருந்தார்கள். இயேசு மக்களுக்காக தன் பிரமாணங்களை வகுத்தார்; பரிசேயர்கள் தங்கள் பிரமாணத்திற்கு ஜனங்களை இழுத்தார்கள். இவர்களில் யார் சுயநலவாதிகள்? ஆம் நாம் *யதார்த்தவாதிகளாயிருந்தாலே சமூகத்திற்கு நன்மை செய்கிறோம்* என்று அர்த்தம். எந்த ஒரு பிரச்சனையும், நியாயம் பேசும் வரை முடிவுக்கு வராது. யதார்த்தமாய் பேசினால் இலங்கைப் பிரச்சனையைக் கூட முடிவுக்கு கொண்டு வரலாம். ஆகவே *குடும்பத்திலும், சமுதாயத்திலும், குறிப்பாக சபையிலும் யாதார்த்தத்தை கடைபிடிப்போம்.*

பாஸ்டர் செல்வின் (Sivakasi)
98944 79390

14/10/2024

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*Pastor Selwin Devotions*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

👑👑👑👑👑👑👑👑
*உடைந்த வாழ்வை உருவாக்குபவர்*
👑👑👑👑👑👑👑👑

பல ஆண்டுகளுக்கு முன் லண்டனிலிருந்து ஸ்காட்லாந்து செல்லும் வழியில் ஒரு சிறிய கிராமம் இருந்தது. அதிலுள்ள ஆலயத்தில் பிரசித்தி பெற்ற கண்ணாடி ஓவியம் இருந்தது. அதைப் பார்க்க அநேகர் வருவதுண்டு. அந்த சபையாரும் அதைக் குறித்து பெருமிதப்பட்டிருந்தனர். திடீரென ஒரு நாள் வந்த சூறாவளிக் காற்று அந்த கண்ணாடியை விழச் செய்து நொறுக்கிவிட்டது. வருத்தத்தோடு அதை ஒரு பெட்டியில் வைத்து விட்டு, அந்த இடத்தை மரத்தால் அடைத்தனர். ஒரு நாள் லண்டனில் பிரசித்தி பெற்ற ஓவியர் வந்து அந்த உடைந்த கண்ணாடிகளை வாங்கிச் சென்றார். சில மாதங்களுக்குப் பின் அந்த சபையின் போதகரை தன் அலுவலகத்திற்கு அழைத்து, ஆச்சரியப்படுத்தினார். அதே ஓவியத்தை கண்ணாடியில் கண்டு பிரமிப்படைந்தார் போதகர். உடைந்த கண்ணாடித் துண்டுகளைப் பார்த்து வரைந்தேன்; அதை ஆலயத்தில் கொண்டு போய் வையுங்கள் என்றார் ஓவியர். மீண்டும் அந்த ஆலயம் பழைய பொழிவைப் பெற்றது.

ஆம், நம் ஆண்டவர் ஒரு சிறந்த ஓவியர். *நம் வாழ்க்கை அந்தக் கண்ணாடியைப் போல சுக்குநூறாக உடைந்திருந்தாலும், யாருக்கும் உதவ மாட்டோம் என்று நாம் ஒரு பெட்டியில் வைத்து ஒதுக்கப்பட்டிருந்தாலும், இயேசு நம்மை மீண்டும் உயர்த்துவார்.* அப்படி புதுப்பிக்கும் நோக்கத்தோடு தான் காயீன், சவுல் போன்றவர்களையெல்லாம் தேவன் பின் தொடர்ந்து வந்தார். ஆனால் அவர்கள் தங்களை தேவனிடம் ஒப்படைக்கவில்லை. சரித்திரத்தில் மகிமையற்றவர்களானார்கள். அதே நேரம் தாவீது, இளையகுமாரன் போன்றவர்கள் மீண்டும் அப்பாவிடம் தங்களை ஒப்புக்கொடுத்த போது, இழந்த மகிமையை மீண்டும் தந்து உயர்த்தினார். ஆம், அவர் எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி (யோவான் 1:9). *எவ்வளவு நீங்கள் உடைந்திருந்தாலும் உங்களை ஒட்ட வைத்து உலகிற்கே ஒளியாக உயர்த்துவார் நம் இயேசு.*

பாஸ்டர் செல்வின் (Sivakasi)
98944 79390

09/10/2024

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*Pastor Selwin Devotions*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

👑👑👑👑👑👑👑👑
*தினந்தோறும் செய்வோம்*
👑👑👑👑👑👑👑👑

கிரேக்க கதைகளில் ஒரு வாலிபன் காளை மாட்டையே தூக்கும் வலிமையுடையவனாயிருந்தான். அவனைக் குறித்து ஆச்சரியப்பட்ட பெரியவர் அவனிடம் எப்படி என்று கேட்டார். அவன் சொன்னான்: எனக்கு இது ஆச்சரியமாகவே இல்லை. ஒரு நாள் பிறந்த கன்றுக்குட்டி நடக்க முடியாமல் கீழே கிடந்தது. அதைத் தூக்கிக் கொண்டு வந்து வீட்டில் வைத்தேன். அன்று முதல் அதை தினந்தோறும் தூக்கிச் செல்வது வழக்கம். அது வளர்ந்து காளையாகிவிட்டது. எனக்கும் அதைத் தூக்கும் பலம் நாளுக்கு நாள் வளர்ந்து விட்டது என்றான். எவ்வளவு பெரிய இரகசியம் இதில் உள்ளது பாருங்கள்.

*நாம் தினந்தோறும் செய்யும் ஒரு செயல் நம்மை வளர்க்கும்.* இதை ஆங்கிலத்தில் Consistency என்பார்கள். தவறாமல் வேதம் வாசித்து ஜெபிக்கிறவர்கள் நல்ல ஆவிக்குரிய வளர்ச்சியடைவார்கள். தினந்தோறும் உடற்பயிற்சி செய்பவர்கள் உடல் நலமடைவார்கள். வருடத்தின் துவக்கத்திலிருந்தே அன்றன்று பாடத்தைப் படிப்பவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு மிக எளிதாக இருக்கும். நாள்தோறும் போராட்டங்களை சந்திப்பவர்கள் மிகப் பெரிய அனுபவசாலியாவார்கள். தினசரி புத்தகம் வாசிப்பவர்கள் ஞானியாவார்கள். பிசாசு நம்மை அன்றாடம் செய்ய வேண்டிய அவசியமான காரியத்திலிருந்து திசை திருப்பப்பார்க்கிறான். அது தான் நாம் நினைத்தபடி இலக்கை அடைய முடியாததற்குக் காரணம். *தேவையற்ற சகல பொழுது போக்குகளையும் தள்ளவிடுங்கள்; அவசியமான காரியங்களை எழுதி வைத்து தினந்தோறும் செய்ய முயற்சி எடுங்கள். குறைந்த சம்பளத்திற்குத் தான் வேலை என்றாலும் அதை தொடர்ந்து செய்கிறவர்கள் சில காலம் கழித்து நல்ல பலனை அடைவார்கள்.* வேலையை மாற்றிக் கொண்டேயிருப்பவர்கள் வாழ்வில் தோல்வியடைவார்கள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் நாம் வளருவோம்! வாழ்ந்திருப்போம்!!

பாஸ்டர் செல்வின் (Sivakasi)
98944 79390

05/10/2024

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*Pastor Selwin Devotions*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

👑👑👑👑👑👑👑👑
*சபையில் தகுதிகள் உண்டு*
👑👑👑👑👑👑👑👑

சமீபத்தில் நண்பர் ஒருவர் அவருடைய சபைக்கு சில வாரங்களாக புதிதாக வந்து கொண்டிருந்த வாலிபரிடம், ஞானஸ்நானம் எடுத்து விட்டீர்களா என்று கேட்டிருக்கிறார். ம்... எடுத்து விட்டேன் என்று அந்த வாலிபர் சொன்னதும், பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் எடுத்தீர்களா என்று இவர் கேட் டிருக்கிறார். அது எனக்குத் தெரியாது, நீ கர்த்தராகிய இயேசுவை விசுவாசிக்கிறாயா என்று பாஸ்டர் கேட்டார்; விசுவாசிக்கிறேன் என்றதும், தலையில் கை வைத்து, இனி நீ சார்லஸ் என்று அழைக்கப்படுவாய் என்று சொல்லி விட்டார், என்று அந்த வாலிபர் சொல்லியிருக்கிறார். அப்புறம் இந்த பாஸ்டர் அவருக்கு ஞானஸ்நானத்தைக் குறித்து வேதத்திலிருந்து கற்றுக் கொடுத்து அப்புறம் தண்ணீரில் மூழ்க வைத்து ஞானஸ்நானம் கொடுத்திருக்கிறார்.

இது போல எத்தனையோ காரியங்களில் கிறிஸ்தவர்கள் தங்கள் நடைமுறையை தளர்த்திக் கொண்டேயிருக்கிறார்கள். அதற்காக பாரம்பரியத்தைப் பற்றிக் கொண்டிருக்கச் சொல்லவில்லை, அதே நேரம் *சத்தியத்தின்படி செய்ய வேண்டியதை சரியாக செய்ய வேண்டும்.* ஞானஸ்நானம் எடுக்க தகுதிகள் உண்டு, திருவிருந்து எடுக்க தகுதிகள் உண்டு, ஊழியக்காரனாயிருக்கவும், விசுவாசியாயிருக்கவும் தகுதிகள் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தகுதியில்லாதவர்களுக்கு தேவன் பாராட்டுகிற கிருபை என்று பேசிக் கொண்டு சபையிலுள்ள எல்லாரையும் தகுதியில்லாதவர்களாக சபை மாற்றிக் கொண்டிருப்பது வருந்தத்தக்கது. விவரம் தெரியாத பிள்ளைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கக் கூடாது; ஞானஸ்நானம் எடுக்காதவர்களுக்கு திருவிருந்து கொடுக்கக் கூடாது; தகுதியில்லாதவர்களை சபைக்கு மூப்பராகவோ தலைவராகவோ ஏற்படுத்தக் கூடாது. தகுதியில்லாத போதகர் சபை நடத்தக் கூடாது. *மீண்டும் சபையை சத்தியத்தில் கட்டுவோம்;* பிசாசின் ராஜ்யத்தை அழிந்து தேவனுடைய ராஜ்யம் எழும்பட்டும்.

பாஸ்டர் செல்வின் (Sivakasi)
98944 79390

Address

Sivakasi
626130

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pastor Selwin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share