108 Linga Vinayagar Kovil

108 Linga Vinayagar Kovil This temple is one of the oldest&powerful temple of (sivagangai district ) tamilnadu. This is a nice place to visit.

30/06/2021
*நீ யார வேணும்னாலும் இரு, எவனாவேனா இரு,**ஆனால் சிவபெருமானை வழிபாடு செய்பவர்களிடம் கொஞ்சம் தள்ளியே இரு,**நீ அவர்களை சீண்ட...
26/02/2021

*நீ யார வேணும்னாலும் இரு, எவனாவேனா இரு,*

*ஆனால் சிவபெருமானை வழிபாடு செய்பவர்களிடம் கொஞ்சம் தள்ளியே இரு,*
*நீ அவர்களை சீண்டினால் உனக்கு பதில் சொல்லுறது அவனா இருக்காது, சிவனா தான் இருக்கும்,*
*சிவன் அன்புக்கு தான் அடிமை, ஆணவத்துக்கு ஒரு நாளும் அடி பணிய மாட்டான்*..
*ஓம் நமஹ சிவாயநம*

Full moon day special
02/09/2020

Full moon day special

22/06/2020
 # Om Namashivaya
07/06/2020

# Om Namashivaya

https://chat.whatsapp.com/I30CXr8LSb261wnEhvJyXS *07-06-2020 ராசிபலன்* 07-06-2020மேஷம்பொதுநலப் பணியில் இருப்பவர்களுக்கு ...
07/06/2020

https://chat.whatsapp.com/I30CXr8LSb261wnEhvJyXS

*07-06-2020 ராசிபலன்*

07-06-2020

மேஷம்

பொதுநலப் பணியில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சாதகமான சூழல் அமையும். எண்ணிய காரியங்களில் திட்டமிட்ட இலாபம் உண்டாகும். சுயதொழிலில் சுபமான செய்திகள் கிடைக்கும்.

ரிஷபம்

எதிர்பார்த்த பணிகள் நிறைவடைய காலதாமதமாகும். மனதில் ஒருவிதமான தடுமாற்றமான சூழ்நிலை உண்டாகும். நண்பர்களிடம் கருத்துகளை பரிமாறும் போது கவனம் வேண்டும். கொடுக்கல்-வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் செயல்படவும்.

மிதுனம்

வணிகத்தில் எதிர்பார்த்த பொருள் இலாபம் கிடைக்கும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். நண்பர்களுடன் இணைந்து விருந்துகளில் பங்கேற்பீர்கள்.

கடகம்

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் நிதானத்துடன் இருக்கவும். போட்டிகளில் பங்கு பெற்று பரிசும், பாராட்டும் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வி பயிலும் விதத்தில் மாற்றம் உண்டாகும்.

சிம்மம்

சாஸ்திர அறிவில் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளால் ஆதரவான சூழல் அமையும். உடல் சோர்வும், மன அழுத்தமும் குறையும். பணியில் புதிய மாற்றங்கள் ஏற்படலாம். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். பிள்ளைகளின் மூலம் பெருமைகள் உண்டாகும்.

கன்னி

தாயின் ஆதரவால் கவலைகள் குறையும். மனைகளில் கட்டிடம் கட்டுவதற்கான ஆதரவான வாய்ப்புகள் அமையும். பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் எண்ணிய இலாபம் உண்டாகும். விவாதங்களினால் புகழ் அடைவீர்கள்.

துலாம்

எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். போட்டிகளை சமாளித்து வெற்றி கொள்வீர்கள். தகவல் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.

விருச்சகம்

உறவினர்களுக்கிடையே உங்களின் மதிப்பு உயரும். செயல்பாடுகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த வியாபாரம் நடைபெறும். தம்பதிகளுக்கிடையே அன்யோன்யம் மேம்படும். நண்பர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.

தனுசு

உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மனதில் தெளிவான சிந்தனைகள் ஏற்படும். அறிவுத்திறன் மேம்படும். பிறரின் கருத்துகளுக்கு மதிப்பளியுங்கள். செய்யும் செயலில் திருப்தியான சூழல் உண்டாகும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

மகரம்

அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். உறவுகளிடம் நிதானப்போக்கை கையாளவும். பயணங்களால் எண்ணிய செயல்களில் காலதாமதம் ஏற்படும். தொழிலில் புதிய நபர்களின் முதலீடுகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். கடன் பிரச்சனைகளை குறைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

கும்பம்

வேளாண்மை சம்பந்தமான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பயணங்களில் இருந்துவந்த தடைகள் அகலும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும்.

மீனம்

அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வான சூழ்நிலை உண்டாகும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். மனைவி வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். குழந்தைகளின் ஆரோக்கியம் சம்பந்தமான இன்னல்கள் குறையும்.

WhatsApp Group Invite

https://chat.whatsapp.com/I30CXr8LSb261wnEhvJyXS*இன்றைய ராசிபலன்*06-06-2020        மேஷம்முயற்சிக்கேற்ற அங்கீகாரம் காலதாம...
06/06/2020

https://chat.whatsapp.com/I30CXr8LSb261wnEhvJyXS

*இன்றைய ராசிபலன்*

06-06-2020

மேஷம்

முயற்சிக்கேற்ற அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும். கவனக்குறைவால் பிறரிடம் அவச்சொல் வாங்க நேரிடலாம். கடன் சார்ந்த பிரச்சனைகளால் மனவருத்தங்கள் உண்டாகும். சகோதர உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோகம் சார்ந்த கோப்புகளில் கவனம் வேண்டும்.

ரிஷபம்

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பதவி உயர்வு கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.

மிதுனம்

பிள்ளைகளின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். உறவினர்களின் மூலம் நற்செய்திகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான பயணங்கள் சாதகமான பலனை அளிக்கும். உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகளும், வழிகாட்டுதலும் கிடைக்கும்.

கடகம்

வீடு, மனை வாங்குவது பற்றிய சிந்தனைகள் மேம்படும். செய்யும் வேலையில் கவனத்துடன் செயல்படவும். தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படுவது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். இளைய சகோதரர்களின் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும்.

சிம்மம்

குறுகிய தூர பயணங்களால் சாதகமான சூழல் உண்டாகும். சாதுர்யமான பேச்சுக்களால் பாராட்டப்படுவீர்கள். தனவரவு மேம்படும். பணிபுரியும் இடங்களில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் முன்னேற்றமான சூழல் அமையும். பணியாளர்களின் மூலம் இலாபம் மேம்படும்.

கன்னி

நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் சாதகமாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். செய்யும் செயல்களால் செல்வாக்கு மேம்படும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் பாராட்டப்படுவீர்கள். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும்.

துலாம்

மனதில் ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். தந்தையாரின் உடல்நலத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும். தனவரவில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். தொழிலில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கல்வி பயிலும் மாணவர்கள் கவனத்துடன் இருக்கவும். வாக்குறுதிகளை தவிர்ப்பது நன்று.

விருச்சகம்

சுரங்க பணியில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். பங்காளிகளிடமிருந்து ஆதரவான உதவிகள் கிடைக்கும். உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
பிறருக்கு உதவும் போது கவனம் வேண்டும்.

தனுசு

தலைமை பதவியில் இருப்பவர்களுக்கு அனுகூலமான நாள். தொழில் சம்பந்தமான நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். புதிய நபர்கள் அறிமுகமாவார்கள். பொதுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். நண்பர்களுடன் விருந்துகளில் கலந்து கொள்வீர்கள்.

மகரம்

வியாபாரத்தை விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவுகள் உண்டாகும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த இடர்பாடுகள் நீங்கும். கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். சிறுதொழில் சார்ந்த முயற்சிகளில் பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும்.

கும்பம்

புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். முக்கிய முடிவுகளில் பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். குடும்ப பொருளாதாரம் மேம்படும். புதிய நபர்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.

மீனம்

குடும்ப நபர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். பூமி விருத்திக்கான செயல் திட்டங்களில் சாதகமான சூழல் ஏற்படும். எதிர்பாராத சுபச்செய்திகளால் சுபவிரயங்கள் ஏற்படும். முயற்சிக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும்.

WhatsApp Group Invite

04/06/2020

*வைகாசி விசாகம் பற்றிய சிறப்பு தகவல்கள் :*

தமிழ்க் கடவுளாக விளங்கும் முருகப்பெருமானோடு தொடர்புடைய நட்சத்திரங்கள் மூன்று. அவை: விசாகம், உத்திரம், கார்த்திகை. விசாக நட்சத்திர தினத்தன்றுதான் முருகன் அவதரித்தார். ஞானமே திரண்டு முருகனாக அவதரித்தது. அதனால் அது ஞானத்திருநாள் ஆனது. கார்த்திகை மாதர்கள் அவருக்குப் பாலூட்டி வளர்த்தனர். அவர்களுக்குச் சிறப்பு அளிக்கும் வகையில் முருகன் கார்த்திகை நட்சத்திரத்துக்குச் சிறப்பளித்தும் அந்நாளைத் தன்னை வழிபடும் நாளாகவும் ஆக்கினார். உத்திர நட்சத்திர நாள் அவர் வள்ளியை மணந்து அருள்புரிந்த திருநாளாகும்.

வைகாசி விசாகத்தில் தோன்றியதால் முருகனுக்கு விசாகன் என்பது பெயரானது. அதனாலேயே விசாகப் பெருமாள் எனவும் அழைத்தனர். மேலும், அவனது தோழர்கள் சாகன், விசாகன் எனப்படுகின்றனர். வைகாசி விசாக நாளில் சிவ பெருமானின் நெற்றிக்கண்ணில் தோன்றிய ஆறு தீப்பொறிகளில் இருந்து ஆறு தனித்தனிக் குழந்தைகளாக மாறிய முருகன் ஒன்று சேர்ந்து ஆறுமுகங்களும், பன்னிரண்டு தோள்களும் கொண்ட அழகனாக உருப்பெற்றான்.

அவனை ஆறு கார்த்திகைப் பெண்களும் அன்று வழிபட்டுப் பேறு பெற்றனர். ஞானக் கொழுந்தாக நின்ற பெருமான் அவ்வேளையில் சரவணப் பொய்கையில் மீனாக வசித்து வந்த பராசரர்களின் குமாரர்களுக்கு ஞானத்தை வழங்கினான். முருகன் ஞானம் வழங்கிய முதன் முதல் நாளாக அது அமைந்தது. இதையொட்டி முருகன் ஆலயங்களில் ஆறுமுக சுவாமிக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன; ஆறுமுகருக்கு ஷண்முகார்ச்சனை செய்து வீதியுலா நடத்துகின்றனர்.

திருப்பரங்குன்றத்தில் உள்ள ஷண்முகநாதருக்குப் பால்குடம் எடுத்து வந்து பெரிய அளவில் அபிஷேகம் செய்கின்றனர். இதற்கென அமைந்த அபிஷேக மேடையை அபஷேகக் குறடு என்று அழைக்கின்றனர். ஷண்முகப் பெருமானுக்கு அன்று செய்யப்படும் பால் அபிஷேகம் சாதாரண நாளில் செய்வதை விடப் பன்மடங்கு பலன் தருவதாகும். முருகனுக்கு விசாகன் என்னும் பெயர் இருப்பது போலவே மயிலுக்கும் விசாகம் என்பது பெயர். இதற்கு வி - மேலாக : சாகன்-எங்கும் சஞ்சரிப்பது என்பது பொருள்.

அன்னை பராசக்தியை ஞானேஸ்வரியாகப் போற்றுகின்றோம். அவள் வைகாசி விசாக நாளில் ஞானேஸ்வரியாகக் காட்சி தருகின்றாள். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் அன்னை கற்பகவல்லி, வைகாசி விசாக நாளில் ஞான பரமேஸ்வரியாகக் காட்சி தருகிறாள். அந்நாளில் அவள் இடுப்பில் ஞானவாளுடன் காட்சி தருகிறாள். அது அன்பர்களின் அஞ்ஞானத்தை வேரோடு வெட்டி எறியும் ஞான வாளாகும். இத்தகைய காட்சி வேறெந்தக் கோயிலிலும் காணக்கிடைக்காதது.
நன்றி. 🙏

Address

108 Linga Vinayagar Kovil
Sivaganga

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when 108 Linga Vinayagar Kovil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share