Sri Poongundra Nayaki Amman Temple

Sri Poongundra Nayaki Amman Temple குலதெய்வம் தெரியாதவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் அன்னை "ஸ்ரீ பூங்குன்ற நாயகி அம்மன்" MAHIBALAN PATTI.

Sri Poongundra Nayaki Amman Temple withVairakkannan Kannan and 85 others

Published by Vairakkannan Kannan · February 27 · Edited ·

அன்னை "ஸ்ரீ பூங்குன்ற நாயகி" அம்மனின் வரலாறு:
பிறரால் அநீதி இழைக்கப்பட்டோர், செய்யாத தவறுக்கு தண்டனை பெற்றோர், பொருளைக் கொடுத்து ஏமாற்றப்பட்டோர் தங்களுக்கு நீதி கிடைக்க "ஸ்ரீ பூங்குன்ற நாயகி அம்மனை" வழிபடுகிறார்கள். இதற்காக கோயில் பின்புறம் உள்ள (சேங்காய் குளம்) தீர

்த்தத்தில் நீராடிவிட்டு, கோயிலுக்குள் வருகின்றனர். அம்பாள் சன்னதி முன் நின்று கொண்டு, கொடிமரத்தை கட்டிக் கொண்டு தங்கள் குறையைச் சொல்லி வணங்குகின்றனர். அம்பிகை, தன்னை தஞ்சம் அடைந்தோருக்கு துணையாக உடன் இருந்து அருள்புரிவதாக நம்பிக்கை.

வரலாறு:
அசுரன் ஒருவன், தான் பெற்ற வரத்தின் பலனால் பூலோகத்தில் மக்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தான். அவனை அழித்து தங்களைக் காக்கும்படி மக்கள் சிவனை வழிபட்டனர். அவர் அம்பிகை மூலமாக அவனை அழிக்க ஒரு தந்திரம் செய்தார். அப்போது, அம்பிகை விளையாட்டாக சிவனின் கண்களை மூட, அவர் அம்பிகையை பூலோகில் பிறக்கச் செய்தார். இங்கு வந்தவள் அசுரனுடன் போரிட்டாள். அசுரன் பல வடிவங்கள் எடுத்து, மாயையாக போர் புரிந்தான். ஒருகட்டத்தில் அவன்,பெரிய மலை குன்றாக வடிவம் எடுத்தான்.அந்த குன்றை அம்மன் சூலாயுதத்தால் பூ மழையாக பொழியச்செய்து சுக்குநூறாக அவனை அழித்தாள். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.அதன் காரணமாக "ஸ்ரீ பூங்குன்ற நாயகி அம்மன்" என்ற பெயரில் தேவர்கள் வழிபட்டனர். அம்பிகைக்கு "ஸ்ரீ ஜெயங்கொண்ட நாயகி" என்ற பெயரும் உண்டு. வாழ்வில் வெற்றியை பெறவும்,புதிதாக தொழில் தொடங்குபவர்கள் இங்கு வந்து வழிபட்டால் நிச்சயம் வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை.

அசுரனை அழித்தபோது உக்கிர வடிவம் எடுத்த அம்பிகைக்கு இங்கு பஞ்சலோக சிலை உள்ளது. "சாமுண்டீஸ்வரி" எனப்படும் இவளது உக்கிரத்தை மக்களால் தாங்க முடியாதென்பதால், இச்சிலையை மூலஸ்தானத்திற்குள்ளேயே வைத்துள்ளனர். சித்ரா பவுர்ணமியன்று நடக்கும் இரண்டு நாள் திருவிழாவில் ஒருநாள் மட்டும் அம்பிகை ஊருக்குள் வலம் வருவாள். இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவர்.மக்கள் பூத்தட்டு, பால்குடம்,அங்கபிரதட்சனம், தீமிதி போன்ற வேண்டுதலை நிறைவேற்றுவர்.இங்கு 24 1/2 கிராம மக்களுக்கு குலதெய்வமாக அம்மன் அருள் பாலிக்கிறாள்.

அம்பிகையை வேண்டி பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், இங்கு நடக்கும் விழாவின்போது மஞ்சுவிரட்டு நடத்தி நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் உள்ளது. கோயில் பின்புறம் உள்ள தீர்த்தம் மிக விசேஷமானது. வஜ்ரகிரீடம் என்ற புழு, காலப்போக்கில் கல் போன்று கடினத்தன்மையுடையதாக மாறும் தன்மை கொண்டது. இதை சாளக்ராமம் என்பர். இவ்வகையான புழுக்கள் இக்கோயில் தீர்த்தத்தில் உள்ளது. எனவே, இந்த தீர்த்த்தில் நீராடி அம்பிகையை வழிபடுவது விசேஷமாகக் கருதப்படுகிறது. கோயில் பிரகாரத்தில் தல விருட்சமான "மாவலிங்க மரத்தில்" தொட்டில் கட்டி வழிபடுவோர்க்கு நிச்சயம் குழந்தை பிறக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

நடைதிறப்பு:
காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
படம்,தகவல்:
செ.வயிரக்கண்ணன்,
மகிபாலன்பட்டி.

02/05/2026
02/05/2026

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மகிபாலன்பட்டி பூங்குன்றநாயகி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

மகிபாலன்பட்டி பூங்குன்றநாயகியம்மன் ஆலய 75 ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வாடி மஞ்சுவிரட்டில் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கு கொண்டன. 50 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். வாடி வாசல் வழியாக தொழு மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன.முதாலவதாக மகிபாலன்பட்டி, கண்டவராயன்பட்டி, கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளின் திமிலைப் பிடித்து வீரர்கள் அடக்க முற்பட்டனர். இதில் காளைகள் முட்டியதில் 20 பேர் காயமடைந்தனர். வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் அண்டா, கட்டில், குக்கர், வெள்ளிக்காசு, முதலிய பரிசாக வழங்கபட்டன. காயமடைந்த வீரர்களுக்கு திடலில் அமைக்கப்பட்டிருந்த முதலுதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சையளிக்கப்பட்டது. 13 பேர் மேல்சிகிச்சைக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, மதுரை, சிவகங்கை, ஆகிய மாவட்டங்களிலிருந்து மாடுகள் களமிறக்கப்பட்டன.கண்டவராயன்பட்டி போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மஞ்சுவிரட்டு ஏற்பாடுகளை பூங்குன்ற நாடான இருபத்திநான்கரை கிராமத்தினர் செய்திருந்தனர்.

02/05/2026
அருள்மிகு "ஸ்ரீ பூங்குன்ற நாயகி அம்மன்" திருக்கோயில், சித்ரா-பௌர்ணமி திருவிழா முன்னிட்டு இன்று அம்மனுக்கு மாலை நேர சிறப்...
01/05/2026

அருள்மிகு "ஸ்ரீ பூங்குன்ற நாயகி அம்மன்" திருக்கோயில், சித்ரா-பௌர்ணமி திருவிழா முன்னிட்டு இன்று அம்மனுக்கு மாலை நேர சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது...
🙏🙏🙏 ஓம் சக்தி 🙏🙏🙏

பூங்குன்றநாடு, மகிபாலன்பட்டி, அருள்மிகு "ஸ்ரீ பூங்குன்ற நாயகி அம்மன்" திருக்கோயில், சித்ரா பௌர்ணமி பெருந்திருவிழா முன்னி...
01/05/2026

பூங்குன்றநாடு, மகிபாலன்பட்டி, அருள்மிகு "ஸ்ரீ பூங்குன்ற நாயகி அம்மன்" திருக்கோயில், சித்ரா பௌர்ணமி பெருந்திருவிழா முன்னிட்டு இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் மஞ்சுவிரட்டு சிறப்பாக நடைபெற்றது...
🙏🙏🙏 ஓம் சக்தி 🙏🙏🙏

'யாதும் ஊரே யாவரும் கேளிர்'🙏 அன்னைக்குத் திருவிழா ஆரம்பம் 🙏எல்லாம் வல்ல அகிலாண்டேஸ்வரி, பூங்குன்றநாடு, மகிபாலன்பட்டி, அர...
01/05/2026

'யாதும் ஊரே யாவரும் கேளிர்'
🙏 அன்னைக்குத் திருவிழா ஆரம்பம் 🙏
எல்லாம் வல்ல அகிலாண்டேஸ்வரி, பூங்குன்றநாடு, மகிபாலன்பட்டி, அருள்மிகு "ஸ்ரீ பூங்குன்ற நாயகி அம்மன்" திருக்கோயில், சித்ரா பௌர்ணமி பெருந்திருவிழா இன்று இனிதே துவங்குகிறது.
🌺 சுபகிருது ஆண்டு, சித்திரை 18 (1.05.2026), வெள்ளிக்கிழமை 🌺
அன்னையின் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும்:
🐎 மஞ்சுவிரட்டு
🥛 பால்குடம் & அக்னி பால்குடம்
🌸 பூத்தட்டு
☸️ தேர்த்திருவிழா
ஆகிய அனைத்து வைபவங்களிலும் கலந்துகொண்டு, அகிலத்தை ஆளும் அன்னை "ஸ்ரீ பூங்குன்ற நாயகி" அம்மனின் முழுமையான அருளைப் பெற அனைவரையும் வருக!!! வருக!!! என அன்போடு அழைக்கிறோம்...
🙏🙏🙏 ஓம் சக்தி 🙏🙏🙏

Address

MAHIBALAN PATTI VILLAGE, TIRUPATTUR TALUK
Sivaganga
630203

Telephone

+919629022709

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Poongundra Nayaki Amman Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri Poongundra Nayaki Amman Temple:

Share

Category