15/04/2023
நேற்று மாலை வேளையில் பிரித்தியங்கா கோவிலில் திரு .சண்முகம் ஸ்தபதி அவர்களை சந்தித்து பேசினேன், அவர்கள் சாமி இடையே மேலூர் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள பாலத்தின் மீது அமர்ந்து இருந்தார், நானும், மல்லாகோட்டை அம்பலம் திரு. முத்தையா அவர்களும் புல்லட் வண்டியில் வந்தோம். சாமி அருகில் வண்டி நின்று விட்டது, முத்தையா அவர்களும் புல்லட் சார்ட் செய்ய முயற்சி செய்து கொண்டு இருந்தார். அப்போது, சாமி கை அசைச்சு வாப்பா என்று அழைத்தார், அவரும் அருகில் சென்றார். சாமி பாலத்தின் அருகில் உள்ள செடியின் இலை பறித்து கசக்கி சாப்பிட சொன்னார். இவரும் பயந்து கொண்டு சாப்பிட்டார், போப்பா உன்னை பிடித்த பணிகள் மறைந்து விடும் என்று ஆசிர்வாதம் செய்தார். இவரும் சாமி ஏதோ இலையை கொடுத்தார் நானும் சாப்பிட்டு விட்டேன் என்று பயந்து கொண்டு சென்று விட்டார். அதன் பின்னர் அருக்கு இருந்த நீண்ட நாள் பட்ட வயிற்று வலி சரியாயி தற்போது நலமுடன் இருந்து வருகிறார்.