ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் சிவன் கோயில்-Shenoy Nagar -சென்னை

  • Home
  • India
  • Shenoy Nagar
  • ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் சிவன் கோயில்-Shenoy Nagar -சென்னை

ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் சிவன் கோயில்-Shenoy Nagar -சென்னை ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்படும் It is not administrative

சென்னை ,அமைந்தகரை,ஹாரிங்டன் ரோட்டில் ,வேம்புலியம்மன் கோயில் அருகே வெங்கடாசலபதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசம்வர்தனி அம்பாள் சமேத ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம் பற்றிய அனைத்து தகவல்களும் இதில் இடம்பெறும்This page is managed by the temple priest.

18/10/2025
நவராத்திரி முதல் நாள் தண்டுமாரி அம்மன்
22/09/2025

நவராத்திரி முதல் நாள் தண்டுமாரி அம்மன்

06/09/2025

* #சந்திர_கிரகணம் 2025*

*ராகு கிரஹஸ்த பூர்ண #சந்திர_கிரஹணம்*

7-09-2025 ஞாயிற்றுக்கிழமை
அன்று
கிரஹண ஆரம்பம் 9:56 pm
முழு கிரஹண ஆரம்பம் 10:59 pm
கிரஹண மத்யம் 11:41 pm
முழு கிரஹண முடிவு 12:23 am
கிரஹண முடிவு 1:26 am

நிகழும் சுபஸ்ரீ *விசுவாவசு வருடத்தின் முதல் சந்திர கிரஹணம் வரும் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 9:56 pm முதல் நள்ளிரவு1:26 am வரை சந்திர கிரஹணம் உண்டாகிறது*.
கிரஹணம் மத்திய நேரம் இரவு 11:41 pm .

*கிரஹண தோஷம்*
கிரகணம் ஏற்பட்ட நாளுக்கு முன்பும் பின்பும் ஏழு நாட்கள் கிரகண தோஷ காலமாகும்.கிரகணம் உண்டான பூரட்டாதி நக்ஷத்திரத்தில் ஆறு மாத காலம் சுப முகூர்த்தம் வைக்க கூடாது.
*கிரகணத்தின் போது செய்ய வேண்டியது*:-
‌நித்யபடி தினசரி காலையில் குளித்து விட்டு இருந்தாலும் கிரகணம் ஆரம்பித்த பிறகு ஒரு முறையும் கிரகணம் முடிந்த பிறகு ஒரு முறையும் அவசியம் ஸ்னானம் செய்ய வேண்டும்.
‌கிரகண நேரத்தில் எதுவும் சாப்பிட கூடாது. தூங்க கூடாது, அனாவசியமாக எதுவும் பேச கூடாது.பாப காரியங்களை செய்ய கூடாது.ஆலயங்கள் நடை சாற்றி மூடிவிடுவதால்,
வீட்டிலேயே தெய்வ வழிபாடு செய்து கொள்ள வேண்டும்.
கிரகண காலத்தில் பித்ருக்களுக்கு தர்பணம் செய்ய வேண்டும். முழு கிரகண நேரத்தில இருந்து கிரகணம் மோக்ஷம் என்று சொல்ல கூடிய கிரகண முடியும் வரையில் தங்களுக்கு தெரிந்த மந்திரங்கள் ஸ்தோத்திரம் வேத மந்திரங்கள் போன்றவற்றை ஜெபம், பாராயணம் செய்வது நல்லது. கிரஹண நேரம் மந்திர உபதேசம் பெற உகந்த நேரம். அன்று கிரகண நேரத்தில் செய்ய கூடிய ஜெபங்கள், தானங்கள் பல 1000 மடங்கு அதிகமான அளவில் பலனை கொடுக்கும்.
‌கிரகணம் சம்பவிக்கும் நக்ஷத்திரமான பூரட்டாதி அதன் முன் பின் உள்ள சதயம், உத்திரட்டாதி மற்றும் பூரட்டாதியின் அனு ஜென்ம த்ரி ஜென்ம நட்சத்திரமான புனர்பூசம்,விசாகம் போன்ற நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் அன்று சந்திராஷ்டமம் அடைந்து உள்ள கடக ராசியில் பிறந்த பூசம்,ஆயில்யம் ஆகிய நக்ஷத்திரகாரர்கள் கிரஹண சாந்தி செய்து கொள்ள வேண்டும்.
*சாந்தி முறை*‌
பச்சரிசியை வெள்ளை நிற பட்டு துணியில் கட்டி ஈய பாத்திரத்தில் வைத்து சிறிது தக்ஷனை உடன் யாருக்கேனும் தானம் செய்து கொள்ள வேண்டும்.
‌16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவர்தம் நக்ஷத்திரத்தில் கிரகணம் ஏற்பட்டால் அவர்களுக்காக பெற்றோர் இதனை செய்ய வேண்டும்.
‌சக்தி உள்ளவர்கள் ஈய பாத்திர தானம்,வஸ்திர தானம், தானிய வகைகள் தானம், வெள்ளி தானம், உப்பு தானம், எள் தானம் செய்ய வேண்டும்.
‌பூஜை மணி தானம், எரியும் தீபத்தை தானம், கும்ப தானம் செய்யலாம்.
‌ஏழை எளிய மக்களுக்கு, உடல் ஊனமுற்றோர்க்கு, மாற்று திறனாளிகளுக்கு தானம் செய்யலாம்.
‌சந்திர கிரகணதுக்கு பிறகு 7 நாட்கள் அதன் தாக்கம் இருக்கும் என்பதால் மேற்படி 7 நாட்களில் தானம் செய்யலாம்.
‌கிரஹணதுக்கு முன்பாக மோர், பால், எண்ணெய் பொருட்களில் ஜலத்தில் 2 எள் அல்லது தர்பை கட்டை போட்டு வைக்கவும்.
‌கிரஹனத்தின் முன்பாக எதையும் சமைக்க வேண்டாம்.கிரஹணம் விட்ட பிறகு ஸ்னானம் செய்து விட்டு அதன் பிறகு சமைத்து சுவாமிக்கு நிவேதனம் செய்து விட்டு பிறகு தான் சாப்பிட வேண்டும்.
‌கிரஹணத்துக்கு 12 மணி நேரம் முன்பாக எதையும் சாப்பிட கூடாது. மறுநாள் சூரிய உதயத்திற்கு பிறகு சூரியனை தரிசனம் செய்த பிறகு உணவு அருந்தலாம்.
‌கிரஹனத்தின் போது உணவில் விஷம் என்று சொல்ல கூடிய நோய் அணுக்கள் உண்டாக கூடும், அது வயிற்றில் உள்ள உணவுக்கும் விஷ தன்மையை உண்டாக்குமென்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. இந்த கிரஹண காலத்தில் எந்த தானம் செய்தாலும் 1000 மடங்கு புண்ணியம் சேரும்.சந்திர கிரகணத்தை சாதாரணமாக வெறும் கண்களால் அனைவருமே பார்க்கலாம்.

‌இந்திரன் அக்கினி யமன் நிருதி வாயு வருணன் குபேரன் ஈசானன் என்று சொல்ல கூடிய அஷ்ட திக் பாலர்களை ஒரு புது வெள்ளை நிற துணியில் பென்சில் அல்லது சிகப்பு கொண்டு எழுதி கொள்ள வேண்டும். அதனை ஒரு சிறு பனை ஓலையில் எழுதி கொள்ள வேண்டும். அதனை கிரகண தோஷம் உள்ளவர்கள் பரிகாரமாக தலை அல்லது இடுப்பில் அல்லது கைகளில் கட்டி கொண்டு 3 முறை அஷ்ட திக் பாலர்களை பிராத்தனை செய்து இந்த மந்திரத்தை சொல்லி விடவும்.பின்னர் கிரஹணம் முடிந்த பிறகு நீர்நிலைகளில் இதனை போட்டு விடவும்.

*‌சாந்தி குஸுமாகரம்* என்கிற நூலில் க்ரஹண சாந்திக்கு அஷ்ட திக்பாலகர்களும்
க்ரஹணத்தினால் ஏற்படக்கூடிய தோஷங்களைப் போக்கடிகட்டும் என்ற இந்த ஸ்லோகங்களின் அர்த்தம்.
ஆகையால் க்ரஹண சமயத்தில் இதை பாராயணம் செய்து கொள்ள வேண்டும்.
*யோsஸெள வஜ்ரதரோ தேவ:
ஆதித்யானாம் ப்ரபுர்மத: |
ஸஹஸ்ரநயன: ஸூர்ய -
க்ரஹபீடாம் வ்யபோஹது | *
முகம் யஸ்ஸர்வபூதாநாம்
ஸப்தார்சி ரமிதத்யுதி: |
ஸூர்யோபராகஸம்பூதா -
பீடாமக்னிர் வ்யபோஹது ||
ய : கர்மஸாக்ஷி பூதானாம்
யமோ மஹிஷவாஹந: |
யமஸ்ஸூர்யோ பராகோத்தாம்-
தத்ர பீடாம் வ்யபோஹது ||
ரக்ஷோகணாதிபஸ் ஸாக்ஷாத்
ப்ரளயாநிலஸந்நிப: |
கட்கவ்யக்ரோsதிபீதிச்ச -
ரக்ஷ்: பீடாம் வ்யபோஹது ll
நாகபாசதரோ தேவ:
நித்யம் மகரவாஹந: |
ஸஜாலாதிபதிஸ் : ஸூர்ய -
க்ரஹபீடாம் வ்யபோஹது |
ப்ராணரூபீ த்ரிலோகாநாம்
வாத : க்ருஷ்ணம்ருகாதிப : |
வாயூஸ்ஸூர்யோபராகோத்தாம்-
தத்ரபீடாம் வ்யபோஹது |
யோsஸெள நிதிபதிர் தேவ:
கட்கசூலகதாதர : |
ஸூர்யோபராககலுஷம் -
தனதஸ்தத் வ்யபோஹது |
யோsஸெள பிந்துதரோ தேவ :
பீனாகி வ்ருஷ வாஹந: |ஸூர்யோபராகபாபானி
விநாசயது சங்கர: ||

இந்த்ரோ sநலோ தண்டதரச்ச ருக்ஷ: பாசாயுதோ வாயு குபேர ஈசா: குர்வந்து ஸர்வே மம ஜன்மர்ஷ ராசிஸ்த்த சந்த்ர கிரஹ தோஷ சாந்திம்||

ததி சங்க துஷாராபம் க்ஷீரோதார்ணவ ஸம்பவம் நமாமமி ஸஸினம் ஸோமம் சம்போர் மகுட பூஷணம்

அர்த்த காயம் மஹா வீரம் சந்த்ராதித்ய விமர்தனம் ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம் யஹம்

‌அவரவர் முன்னோர்கள் கிரஹணத்தின் போது எதனை செய்தனரோ அதனை தொடர்ந்து நாமும் செய்ய வேண்டும்.
‌கிரஹனத்தின் போது கர்ப ஸ்திரீகள்,சிறு குழந்தைகள், நோய் உற்றவர்கள் கிரஹணத்தை தரிசிக்க கூடாது என்பது தாத்பரியம்.

Address

VenkataChalapathi Street
Shenoy Nagar
600030

Opening Hours

Monday 8:30am - 10am
6pm - 8pm
Tuesday 8:30am - 10am
6pm - 8pm
Thursday 8:30am - 10am
6pm - 8pm
Friday 8:30am - 10am
6pm - 8pm
Saturday 8:30am - 10am
6pm - 8pm

Telephone

7010604481

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் சிவன் கோயில்-Shenoy Nagar -சென்னை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category