Irukkangudi Mariyamman Temple

Irukkangudi Mariyamman Temple Irukkangudi Mariyamman Temple The Tamil Nadu government has announced irukkangudi is one of the best tourist place in south tamil nadu.

The Main objective of this page is, we publish all information like village history, temple history, mariyamman temple festival, pooja timings and all.

 #பாடல் பெற்ற சிவாலயங்கள் 216சென்னை மாவட்டம்------------------------------------01. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் - பாடி ...
03/12/2025

#பாடல் பெற்ற சிவாலயங்கள் 216

சென்னை மாவட்டம்
------------------------------------

01. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் - பாடி - 044 - 2654 0706.
02. மாசிலாமணீஸ்வரர் - வடதிருமுல்லைவாயில். சென்னையிலிருந்து 26 கி.மீ., - 044 - 2637 6151.
03. கபாலீஸ்வரர் - மயிலாப்பூர் - 044 - 2464 1670.
04. மருந்தீஸ்வரர் - திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை - 044 - 2441 0477.

காஞ்சிபுரம் மாவட்டம்
--------------------------------------

05. ஏகாம்பரநாதர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., - 044 - 2722 2084.
06. திருமேற்றளீஸ்வரர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., - 98653 55572, 99945 85006.
07. ஓணகாந்தேஸ்வரர் - ஓணகாந்தன்தளி. காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள பஞ்சுப்பேட்டை - 98944 43108.
08. கச்சி அனேகதங்காவதேஸ்வரர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2கி.மீ., - 044-2722 2084.
09. சத்யநாதர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., - 044 - 2723 2327, 2722 1664.
10. திருமாகறலீஸ்வரர் - திருமாகறல், காஞ்சிபுரத்திலிருந்து கீழ்ரோடு வழியாக 16 கி.மீ. - 94435 96619.
11. தெய்வநாயகேஸ்வரர் - எலுமியன்கோட்டூர். காஞ்சிபுரத்திலிருந்து 25 கி.மீ., - 044 - 2769 2412, 94448 65714.
12. வேதபுரீஸ்வரர் - திருவேற்காடு. சென்னை கோயம்பேட்டிலிருந்து பூந்தமல்லி வழியில் 10 கி.மீ - 044-2627 2430, 2627 2487.
13. கச்சபேஸ்வரர் - திருக்கச்சூர். செங்கல்பட்டில் இருந்து சிங்கப்பெருமாள் கோயில் வழியாக 12 கி.மீ., - 044 - 2746 4325, 93811 86389.
14. ஞானபுரீஸ்வரர் - திருவடிசூலம். செங்கல்பட்டில் இருந்து 9 கி.மீ., - 044 - 2742 0485, 94445 23890.
15. வேதகிரீஸ்வரர் - திருக்கழுக்குன்றம். செங்கல்பட்டிலிருந்து 17 கி.மீ., - 044 - 2744 7139, 94428 11149.
16. ஆட்சிபுரீஸ்வரர் - அச்சிறுபாக்கம். செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ. (மேல்மருவத்தூர் அருகில்) - 044 - 2752 3019, 98423 09534.

திருவள்ளூர் மாவட்டம்
----------------------------------------

17. திரிபுராந்தகர் - கூவம், திருவள்ளூரில் இருந்து 17 கி.மீ., - 94432 53325.
18. வடாரண்யேஸ்வரர் - திருவாலங்காடு. திருவள்ளூரிலிருந்து அரக்கோணம் வழியில் 16 கி.மீ.,.
19. வாசீஸ்வரர் - திருப்பாசூர். திருவள்ளூரில் இருந்து 5 கி.மீ., - 98944 86890.
20. ஊன்றீஸ்வரர் - பூண்டி. திருவள்ளூரில் இருந்து 12 கி.மீ., - 044 - 2763 9725,
21. சிவாநந்தீஸ்வரர் - திருக்கண்டலம். சென்னை - பெரியபாளையம் சாலையில் 40 கி.மீ., - 044 - 2762 9144, 99412 22814.
22. ஆதிபுரீஸ்வரர் - திருவொற்றியூர். - 044 - 2573 3703.

வேலூர் மாவட்டம்
--------------------------------

23. வில்வநாதேஸ்வரர் - திருவல்லம். வேலூர்- ராணிப்பேட்டை வழியில் 16 கி.மீ., - 0416-223 6088.
24. மணிகண்டீஸ்வரர் - திருமால்பூர். காஞ்சிபுரத்திலிருந்து 22 கி.மீ., - 04177 - 248 220, 93454 49339.
25. ஜலநாதீஸ்வரர் - தக்கோலம். வேலூரில் இருந்து 80 கி.மீ., - 04177 - 246 427.

திருவண்ணாமலை மாவட்டம்
-----------------------------------------------------

26. அண்ணாமலையார் - திருவண்ணாமலை. - 04175 - 252 438.
27. வாலீஸ்வரர் - குரங்கணில்முட்டம். காஞ்சிபுரம்- வந்தவாசி ரோட்டில் உள்ள தூசி வழியாக 10 கி.மீ., - 99432 95467.
28. வேதபுரீஸ்வரர் - செய்யாறு. திருவண்ணாமலையிலிருந்து 105 கி.மீ., காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ., - 04182 - 224 387.
29. - தாளபுரீஸ்வரர் - திருப்பனங்காடு.காஞ்சிபுரத்தில் இருந்து 16 கி.மீ., - 044 - 2431 2807, 98435 68742.
கடலூர் மாவட்டம்
30. திருமூலநாதர் - சிதம்பரம். (நடராஜர் கோயில்) - 94439 86996.
31. பாசுபதேஸ்வரர் - திருவேட்களம். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகம். - 98420 08291, 98433 88552.
32. உச்சிநாதர் - சிவபுரி.சிதம்பரம்- கவரப்பட்டு வழியில் 3 கி.மீ., - 98426 24580.
33. பால்வண்ணநாதர் - திருக்கழிப்பாலை, சிதம்பரம்- கவரப்பட்டு (பைரவர் கோயில்)வழியில் 3 கி.மீ., - 98426 24580.
34. பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் - ஓமாம்புலியூர். சிதம்பரத்தில் இருந்து 3 கி.மீ. - 04144 - 264 845.
35. பதஞ்சலீஸ்வரர் - கானாட்டம்புலியூர், சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., - 04144 - 208 508, 93457 78863.
36. சவுந்தர்யேஸ்வரர் - திருநாரையூர்.சிதம்பரம்- காட்டுமன்னார் கோயில் வழியில் 18 கி.மீ., - 94425 71039, 94439 06219.
37. அமிர்தகடேஸ்வரர் - மேலக்கடம்பூர். சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., - 93456 56982.
38. தீர்த்தபுரீஸ்வரர் - திருவட்டத்துறை.விருத்தாசலத்தில் இருந்து 22கி.மீ., - 04143 - 246 467.
39. பிரளயகாலேஸ்வரர் - பெண்ணாடம். விருத்தாசலத்திலிருந்து 18 கி.மீ., திட்டக்குடியிலிருந்து 12 கி.மீ., - 04143 - 222 788, 98425 64768.
40. நர்த்தன வல்லபேஸ்வரர் - திருக்கூடலையாற்றூர்.சிதம்பரத்திலிருந்து சேத்தியாதோப்பு வழியாக 20 கி.மீ., - 04144 - 208 704.
41. திருக்குமாரசாமி - ராஜேந்திர பட்டினம். விருத்தாசலம் (சுவேதாரண்யேஸ்வரர்) - ஜெயங்கொண்டம் ரோட்டில் 12 கி.மீ., - 04143 - 243 533, 93606 37784.
42. சிவக்கொழுந்தீஸ்வரர் - தீர்த்தனகிரி. கடலூரில் இருந்து 18 கி.மீ. - 94434 34024.
43. மங்களபுரீஸ்வரர் - திருச்சோபுரம். கடலூர்- சிதம்பரம் ரோட்டி

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா 2024
13/08/2024

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா 2024

//   இருப்பைக்குடி என்ற  இருக்கண்குடியின் வரலாறு//இருக்கண்குடி சாத்தூருக்குக் கிழக்கில் அர்ச்சுனா நதிக்கரையில் அமைந்துள்...
12/08/2024

// இருப்பைக்குடி என்ற இருக்கண்குடியின் வரலாறு//

இருக்கண்குடி சாத்தூருக்குக் கிழக்கில் அர்ச்சுனா நதிக்கரையில் அமைந்துள்ளது. இரு கங்கைக்குடி என்பதே நாளடைவில் இருக்கண்குடி யாயிற்று என்பர். புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் முன்னர் அர்ச்சுனாநதியும், வைப்பாறு இணைவதால் இவ்வூருக்கு இப்பெயர் ஏற்பட்டது. ஆனால் இவ்வூர்க் கல்வெட்டுகளில் ‘இருப்பைக்குடி’ என்றே குறிப்பிடப்படுகின்றது. இருநதிகளுக்கும் இடையில் இது அமைந்துள்ளதால் இப்பெயர் ஏற்பட்டது. ‘பை’ என்பது நீரோட்டத்தைக் குறிக்கும். ‘இருப்பை’ என்பது இரு நதிகளைக் குறித்து வந்த பெயர் என்று அறிய முடிகின்றது.

நென்மேனியிலுள்ள ஒரு கல்வெட்டு, இவ்வூரை ‘இலுப்பைக்குடி’ என்று குறிக்கிறது. இலுப்பை மரங்கள் அதிகம் காணப்பட்டதால் இப்பெயர் பெற்றது. இலுப்பைக்குடியே நாளடைவில் இருப்பைக்குடி ஆயிற்று எனலாம்.
இருக்கண்குடி ஊரின் பழமை 10,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை இவ்வூரில் கிடைத்துள்ள நுண்கற் கருவிகளால் அறிய முடிகின்றது. இம்மத்திய கற்காலப் பண்பாட்டைத் தொடர்ந்து பெருங்கற்காலப் பண்பாடு நிலவியது என்பதை இவ்வூரில் கிடைத்த கருப்பு, சிவப்பு பானை ஓடுகளும் முதுமக்கட்டாழிகளின் உடைந்த வாய்ப்பகுதி மற்றும் ஓடுகளின் மூலம் அறியலாம்.

அத்துடன் சங்ககாலத்துக் கல்மணிகளும் இருக்கண்குடி ஊரிலுள்ள கைலாசநாதர் கோயில் அருகிலுள்ள சிறிய குன்றுப் பகுதியில் சேகரிக்கப்பட்டன. மேலும் ரோமானியர்களோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்ததை அவர்கள் பயன்படுத்திய பானைகளின் ஓடுகள் இங்கு கிடைத்துள்ளமை கொண்டு அறிய முடிகின்றது.

இருக்கண்குடி ஊரில் வரலாற்றுச் சிறப்புடைய சிவன் கோயில் ஒன்றுள்ளது. அது தற்போது சைலாச நாதர் கோயில் என்றழைக்கப்படுகிறது. முற்காலப் பாண்டியர் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் இருந்த போதிலும், கட்டடக்கலை அமைப்பு மிகப் பிற்காலத்தியதாகத் தெரிகிறது. நென்மேனிக் கல்வெட்டொன்று இக்கைலாசநாதர் கோயிலை ‘நக்கன் கோயில்’ என்று குறிப்பிடுகின்றது. கோயிலின் உட்புறத்தில் முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த செப்புத் திருமேனிகள் காணப்படுவதையும் கொண்டு இக்கோயிலின் பழமையை ஒருவாறு அறியலாம்.

ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் காலத்தில் சாத்தூப் பகுதியிலிருந்து ‘இருஞ்சோநாட்டை’ ஆண்ட ‘எட்டிச்சாத்தன்;’ என்பவன் இருப்பைக் குடியில் ஒரு சமணப்பள்ளி ஒன்றை எடுப்பித்துள்ளான் என்று ஒரு கல்வொட்டு கூறுகின்றது. இக்கல்வெட்டின் வாயிலாக இருக்கண்குடியில் சமணப்பள்ளி இருந்ததையும், 1200 ஆண்டுகளாக வளம் பொருந்திய நகராக இருந்ததையும் அறிய முடிகின்றது.

சடையன் மாறனுடைய 16ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ‘இருப்பைக்குடி கிழவன்’ என்பவன் இவ்வூரிலுள்ள குளத்தைத் தூர்வாரி இடிந்து போன பழைய கரைகளை கருங்கல்லால் கட்டி வலுப்படுத்தினான் என்றும் பின்னர் இக்குளம் அவனது பெயராலேயே ‘கிழவனேரி’ என்றழைக்கப்பட்டது என்றும் கீழ்க்காணும் பாடல் கல்வெட்டால் தெரியவருகிறது.

“கொங்கர் மலர்க்கடம்பு சூட்டாதி கொல்வளையை
எங்கோன் இருப்பைக் குடிக்கிழவன் – பொங்கார்ந்த
தொட்டார் கரும்பிரைக்கும் தென்னீர் வயலிருஞ்சோழ
நாட்டான்றார் சூட்டுதீரென்று”

இதே இருப்பைக்குடிக் கிழவன் என்ற இவ்வதிகாரி திருச்செந்தூர் வரகுணன் கல்வெட்டிலும் குறிப்பிடப்படுகின்றான். வரகுணன் 1400 பொற்காசுகளை திருச்செந்தூர் சுப்பிரமணியர் ஆண்டுத் தேவைக்காக வழங்க ஆணையிட்டான். இத்தானத்தை வழங்கிய மூன்று அதிகாரிகளுள் ஒருவனாக இவன் குறிப்பிடப்படுகின்றான்.

இதே போன்று ஸ்ரீவல்லபனின் 18ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றிலும், இருப்பைக்குடிக் கிழவனின் புகழ் விவரித்துக் கூறப்பட்டு உள்ளது. இம்மன்னன் பகைவர்களை குன்னூரிலிருந்து சிங்களம் வரை படை செலுத்தி வெற்றி கண்டுள்ளான். அம்மன்னனே, எட்டிசாத்தன் என்ற இவ்வதிகாரிக்கு இருப்பைக்குடிக்கிழவன் என்னும் சிறப்புப் பெயரினைச் சூட்டினான். இவ்வதிகாரி தன்னுடைய நிருவாகக் காலகட்டத்தில் இருஞ்சோழநாட்டில் பல கோயில்களையும் அம்பலங்களையும் கட்டியுள்ளான். மக்களுக்கு நலம்பயக்கும் பல திட்டங்களை உருவாக்கி மனமகிழ்வு எய்தியிருக்கின்றான். இதனை

“…………………………………
இருஞ்சோழ நன்னாட்டு ளெத்தனையும்
திருத்துவித்தோனிருப்பைக்குடி
கிழவனென
நிலவித்தன்பியர் நிற்பச் சொல்மிக்க
பெரும்புகழொடு மதியமும்
ஞாயிறும் போலப் பதிதோறும்
விளங்குக பாரின் மேலே” – என்று
அக்கல்வெட்டு கூறுகின்றது.

சாத்தூர் குளக்கரைக் கல்வெட்டிலும் இருப்பைக்குடிக் கிழவனின் பணி குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற வரலாற்றுச் சிறப்புடைய இருக்கண்குடி ஊரில் தற்போது ‘மாரியம்மன் கோயில்’ புகழ் பெற்று விளங்குகின்றது. இக்கோயில் தற்போது வழிபாடு செய்கின்றவர்களின் குடும்பத்தார்களால் 260 ஆண்டுகளுக்கு முன்னர் தோற்றுவிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். ஆடி மாதத்திலும், தை மாதத்திலும் சிறப்புடைத் திருவிழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.

Thanks to

#சுந்தரபாண்டியன்..

Irukkangudi village Panguni Pongal 2024இருக்கண்குடி பங்குனி பொங்கல் திருவிழா 2024உலகின் மூத்த தமிழ் குடி யாம் மள்ளர்குடி...
16/06/2024

Irukkangudi village Panguni Pongal 2024

இருக்கண்குடி பங்குனி பொங்கல் திருவிழா 2024

உலகின் மூத்த தமிழ் குடி யாம் மள்ளர்குடி தெய்வத்திற்கே படியளக்கும் தெய்வேந்தர்களின் வழிவந்த இருக்கண்குடி தெய்வேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்த சக்காபுக்கா வம்சத்தினர் புதையுண்ட மாரியம்மனை எடுத்து அந்த உக்கிரமான தெய்வத்தை சாந்தப்படுத்தி மகிழ்விக்கும் விதமாக நடுநிசியில் இரத்த பலிகொடுத்து ஊர்பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டு வந்திருக்கிறார்கள்.

ஊர் குடும்பர் முன்னிலையில் தலைவாசல் முன்பு அறமடம் அமைத்து பக்தர்களுக்கு சேவை செய்து வந்திருக்கிறார்கள். அம்மனுக்கு நித்தியகால பூஜைக்கு ஊர்பொதுமக்கள் அரிசி கொடுத்து வழிபாடு செய்திருக்கிறார்கள்.

அந்த நினைவுகள் நடைமுறையாக இன்றளவும் பங்குனிப்பொங்கல் அன்று வீட்டிற்கு ஒரு கைபிடி அரிசி கொடுத்து கோயில் பூசாரிகளால் அன்று இரவு அம்மனுக்கு சிறப்பு பொங்கல் வைத்து படையல் படைக்கப்படுகிறது. இருக்கண்குடி தேவேந்திரகுல வேளாளர்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் திருக்கோவிலில் அந்த காலத்து வழிபாட்டு முறையை நினைவுபடுத்தும் விதமாக இன்றும் தேவேந்திரர்களுக்கு மட்டுமே உரிமை உள்ள பங்குனி கடைசி வெள்ளி நடுஇரவு பூஜை நடைபெற்று வருகிறது.

வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் ஈராத்துக்காரியின் நடுநிசி பூஜையான அன்றைய நாளில் இருக்கண்குடி மாரியம்மன் மன மகிழ்வுடன் பக்தர்களுக்கு வேண்டும் வரம் கொடுப்பாள்.

நிகழ்ச்சி நிரல்
05.04.2022 அம்மனுக்கு உகந்த மஞ்சள் நீர் மற்றும் பால் அபிஷேகம் செய்து அம்மனை மனம் குளிர வைத்து திருவிழா தொடக்கம்

12.04.2022 மாலை ஊர் பொதுமக்கள் நேர்த்திக்கடன் செலுத்துதல், இரவு 10 மணிக்கு மேல் சென்று இரவு 12.00 மணியளவில் நடு ஜாமத்தில் மீண்டும் நடைதிறந்து பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து சிறப்பு பூஜை.

13.04.2022 மாலை முளைப்பாரி எடுத்து அலங்காரத்துடன் ஊர்வலம் வந்து அம்மன் கோவிலுக்கு செல்லுதல்

14.04.2022-காலையில் மஞ்சள் நீர் அபிஷேகம் செய்து திருவிழா முடிவடைகிறது. இரவு கலை நிகழ்ச்சிகள்.

இப்படிக்கு : இருக்கண்குடி இளைஞர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள்

Irukkangudi Panguni Pongal 2024

https://www.youtube.com/watch?v=0fCP02lqMTgஇருக்கன்குடி அருள்மிகு அரசரடி கோவில் கோடை 2023.கோவில் கோடை விழா ஆரம்பம் முதல்...
11/09/2023

https://www.youtube.com/watch?v=0fCP02lqMTgஇருக்கன்குடி அருள்மிகு அரசரடி கோவில் கோடை 2023.
கோவில் கோடை விழா ஆரம்பம் முதல் கடைசிவரை அணைத்தது நிகழ்ச்சிகளையும் முழுமையாகவும் தெளிவாகவும் விளக்கும் கோவில் சாமியாடி வி.வேலுசாமி நேரடி பேட்டி .

இருக்கன்குடி அருள்மிகு அரசரடி கோவில் கோடை 2023.கோவில் கோடை விழா ஆரம்பம் முதல் கடைசிவரை அணைத்தது நிகழ்ச்சிகளையும....

https://youtu.be/0BpJ7U3c4Kc?si=Qz0CLzA9-KpQvuKj
11/09/2023

https://youtu.be/0BpJ7U3c4Kc?si=Qz0CLzA9-KpQvuKj

இருக்கன்குடி ஊர் குடும்பனார் க்கு முதல் மரியாதை பரிவட்டம் ஆடி திருவிழா

மாரியாத்தா கூலி கொடுத்துட்டா... -இருக்கன்குடி பூசாரிகள் சஸ்பெண்ட்!Published on 07/06/2020 (06:48) | Edited on 07/06/2020...
11/09/2023

மாரியாத்தா கூலி கொடுத்துட்டா... -இருக்கன்குடி பூசாரிகள் சஸ்பெண்ட்!
Published on 07/06/2020 (06:48) | Edited on 07/06/2020 (06:57)

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில், சித்திரை, ஆடி, தை மாதங்களில் நடைபெறும் விழாக்களில், பக்தர்கள் அதிக அளவில் கலந்துகொள்வர்.

இருக்கன்குடி மாரியம்மனை வழிபடுபவர்கள், நேர்த்திக்கடனாக தங்கம், வெள்ளி, பித்தளை பொருட்களையும், விலையுயர்ந்த பட்டுப் புடவைகள் மற்றும் அங்கவஸ்திரங்களையும் காணிக்கையாகச் செலுத்துவது வழக்கம்.

அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் இக்கோவில் பூசாரிகள் மீது, பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பொருட்களை முறையாக கணக்கில் காட்டுவதில்லை என்று புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, கோவிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார், இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அறநிலையத்துறை உதவி ஆணையர் கருணாகரன். அப்போது, 15-12-2019 அன்று, பக்தர்கள் செலுத்திய காணிக்கை பொருட்களை, பூசாரிகள் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளும் காட்சி பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நம்ம பூசாரிகள்தானே! எனக் கருவறை தெய்வம் மன்னித்து அமைதி காத்தாலும், சிசிடிவி என்ற கண்கண்ட தெய்வம், திருட்டு பூசாரிகளை மாட்டிவிட்டது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், கோவில் அறங்காவலர் குழுவில் உள்ள பூசாரிகள் ராமர், கதிரேசன், அரிராம் ஆகிய மூவரும், கோவில் பூஜை மற்றும் விழாக்களின்போது பங்குபெற முடியாதபடி, தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், வேறென்ன மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்று 68 வருடங்களுக்கு முன் கலைஞர் எழுதிய திரை வசனம், இன்றைக்கும் பொருந்திப் போவதென்பது, அந்த பராசக்திக்கே வெளிச்சம்!

REF : https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/irukkankudi-mariamman-temple-priest-poosari-suspended

Address

Arulmigu Irukkankudi Mariamman Kovil, Irukkankudi
Sattur
626202

Alerts

Be the first to know and let us send you an email when Irukkangudi Mariyamman Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category