22/01/2026
தென்காசி ஆன்மீக அமைப்புகள் ஒருங்கிணைப்பு திருக்கூட்டம் 2026 | Spiritual Meetup Tenkasi
மேன்மைகொள் சைவநீதி... விளங்குக உலகமெல்லாம்...
நிகழும் மங்களகரமான 1201-ஆம் ஆண்டு ஸ்ரீ விசுவா வசு வருடம் தை மாதம் 11-ஆம் தேதி (25.1.2026) ஞாயிற்றுக்கிழமை ரேவதி நட்சத்திரமும் சப்தமி திதியும்,சித்த யோகமும் கூடிய நன்னாளில் இசக்கி மஹால் (இசக்கி பள்ளி வளாகம்) வாய்க்கால் பாலம் தென்காசியில் சிவனடியார்கள், முருக பக்தர்கள், ஐயப்ப பக்தர்கள் அம்பாள் பக்தர்கள் சாய்பாபா பக்தர்கள், வள்ளலார் சன்மார்க்க அமைப்புகள், கிராம கோயில் பூஜாரிகள் மற்றும் பக்தர்கள், ஆலய பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அனைத்து இந்து அமைப்புகள், அன்பர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஆன்மீக விழா சிறப்பாக நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு இறைவனின் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்ச்சி நிரல்:
நேரம் காலை 7.15-மணியளவில் திருக்கைலாய வாத்தியம் முழக்கத்தோடு நால்வர் பெருமக்கள் புறப்பாடு.
காலை 8 மணி அளவில் குத்துவிளக்கு ஏற்றுதல், பஞ்ச புராணம் திருமுறை பாராயணம், சித்திர சபை நாட்டியாலயாவின் பரதநாட்டியம் அதனைத் தொடர்ந்து ஆன்மீக நிகழ்ச்சி நடைபெறும்.
நிகழ்வு விவரம்:
தலைமை: சிவத்திரு. பொன் மாணிக்கவேல் ஐயா
தேதி: 25 ஜனவரி, 2026 (ஞாயிற்றுக்கிழமை)
இடம்: இசக்கி மஹால், தென்காசி.
தொடர்புக்கு:
சிவத்திரு. சிவபாலசுப்ரமணியன் - 9344605465
திருமதி. சிவலட்சுமி - 9080194813
#ஆன்மீகம் #தென்காசி