கண்ணபுரத்தாள்

கண்ணபுரத்தாள் தாயே மகமாயி உன்னைத் தேடி
வரும் உன் பிள்ளைகள் பலகோடி
உன்னருள் தேடி வந்தவருள்ளே நானொரு கடைக்கோடி (அன்பு கொண்டு)

அன்பு கொண்டு காப்பவளே
ஆதிசக்தி மகமாயி!
துன்பங் கண்டு கலங்குமெனக்குத்
துணையிருக்க வருவாய் நீ! (அன்பு கொண்டு)

தேவையென்று சொன்னால்தான்
தேவதையே வருவாயோ?
தேவைகளை அறியாயோ
வேதனைகள் மறியாயோ? (அன்பு கொண்டு)

ஆயிரம் பிழைகள் செய்தாலும்
அன்னை நீயன்றோ?
பாயிரம் பாடி வாழ்த்திடும் பிள்ளையைப்
பொறுப்பதுன் கடனன்றோ?

அம்மா என்று கதறிடும் கன்றை
வெறுத்திடும் பசு உண்டோ?
துரத்திடும் துன்பத்தின் துயரத்தைப் போக்க
உனையின்றி எவருமுண்டோ?

Address

Kannapurathal
Samayapuram
621112

Website

Alerts

Be the first to know and let us send you an email when கண்ணபுரத்தாள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share