St. Francis Xavier Church, Akkalmadam, புனித சவேரியார் ஆலயம், அக்காள்மடம்

  • Home
  • India
  • Rameswaram
  • St. Francis Xavier Church, Akkalmadam, புனித சவேரியார் ஆலயம், அக்காள்மடம்

St. Francis Xavier Church, Akkalmadam, புனித சவேரியார் ஆலயம், அக்காள்மடம் This page is about St. Francis Xavier church located at Akkalmadam in the Island of Rameswaram. Let us discuss and know more about St. Francis Xavier.

05/01/2025

*ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா✨*

குழந்தை இயேசுவை காண மூன்று ராஜாக்களின் திருவிழா !

1️⃣. கஸ்பர்
2️⃣. மெல்கியோர்
3️⃣. பல்தசார்.

💫ராஜாக்கள் கொண்டு வந்த காணிக்கைகள்.

1️⃣. பொண்
2️⃣. தூபம்
3️⃣. வெள்ளைப்போளம்.

25/12/2024
Happy and Merry Christmas 🎄⛄
24/12/2024

Happy and Merry Christmas 🎄⛄

https://www.theguardian.com/world/2024/dec/08/notre-dame-paris-celebrates-first-mass-in-five-years-after-devastating-fir...
10/12/2024

https://www.theguardian.com/world/2024/dec/08/notre-dame-paris-celebrates-first-mass-in-five-years-after-devastating-fire

ஐந்து ஆண்டுகளுக்குமுன் மூண்ட தீயில் Notre Dame தேவாலயம் சேதமடைந்தது.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதன் கூரையில் பெருந்தீ மூண்டது.

பாரிஸ் நகரில் வசிப்போர் மட்டுமன்றி உலகெங்கும் உள்ள பலரையும் அது அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தீ மூண்டதற்கான காரணம் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

‘நோட்ர டேம்’ தேவாலயம் சீரமைக்கப்பட்டு, மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

Archbishop of Paris consecrates the cathedral’s new altar with perfumed oil to the sound of the restored organ

03/12/2024

புனித சவேரியார் கி. பி 1506 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிலுள்ள நவாரே நகரில், செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர். தமது இளம் வயதில், பேரும் புகழும் பெற்று சந்தோஷ்மான வாழ்க்கையை அமைத்து, பாரிஸ் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்று, அப்பல்கலைக் கழகத்திலேயே பேராசியராக பணிபுரிந்த போது அவரது வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தியவர் புனித இஞ்ஞாசியார்.

சவேரியாரின் நண்பராக மாறிய இஞ்ஞாசியார், சவேரியாரின் எதிர்கால கனவுகளையெல்லாம் அறிந்திருந்தார். ஆனால் அவரை பார்க்கும் போதெல்லாம், “ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தனது ஆன்மாவை இழந்தால் அதனால் வரும் பயன் என்ன?” என்ற இறைவசனத்தைக் கூறியதோடு, சவேரியார் இறைவனின் கைகளில் பயனுள்ள கருவியாக மாற வேண்டும் என்று இஞ்ஞாசியார் இடைவிடாது செபித்தார். அதன் விளைவாக இயேசுவுக்கு உகந்த வாழ்வு வாழ்பவராக மாறினார் சவேரியார். இயேசு சபையில் சேர்ந்தவர், குருவான பிறகு மறைபரப்புப் பணியில் இறைவார்த்தையை அறிவிப்பதில் தனியாத தாகம் கொண்டார்.

இயேசு சபையின் முதல் மறை போதகராக கீழ்திசை நாடுகளை நோக்கிப் புறப்பட்டவர், 1542ம் ஆண்டு 13 மாத கால கடுமையான கடல் பயணத்திற்கு பிறகு கோவாவை வந்தடைந்தர். இறைபணியாற்ற இந்தியா வந்த அவர் பல சோதனைகளை சந்தித்தார். இந்தியா பல மொழிகளுக்கும், இனங்களுக்கும், கலாச்சாரங்களுக்கும் பெயர் பெற்ற நாடு, இச்சூழ்நிலையில் வெளிநாட்டவர் ஒருவர் நற்செய்தி பணியாற்றுவது என்பது எளிதான காரியமல்ல. எனவேதான் அவரது பணிகளில் எண்ணிலடங்கா இன்னல்களையும் இடர்பாடுகளையும் அனுபவித்தார். தென்னிந்தியா, இலங்கை. மலேசியா, மலாக்கா, இந்தோனேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் பணியாற்றியபோது, இந்நாடுகளின் தட்பவெப்ப நிலை, பல்வேறு மொழிகளை கற்க வேண்டிய கட்டாய நிலை, உடல் நோய், மக்களிடமிருந்து எதிர்ப்பு மற்றும் விலங்குகளிடமிருந்து ஆபத்து இவை எதுவும் நற்செய்தியை அறிவிப்பதிலிருந்து அவரை தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்நாடுகளில் கிறிஸ்தவ சமூகங்களைக் கட்டியெழுப்பினார்.

1549 ஆம் ஆண்டு ஜப்பானிலிருந்த கோவா திரும்பிய சவேரியார். சீனாவில் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்று உந்தப்பட்டவராக சென்றவர், வழியில் சாங் சுவன் சான் என்ற தீவில் நோய் வாய்ப்பட்டு 1552 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். அவரது அழியா உடல் 1553 ஆம் ஆண்டு கோவாவுக்குக் கொண்டுவரப்பட்டது.

03/12/2024

புனித பிரான்சிஸ் சவேரியார் வாழ்க்கை வரலாறு

உலகம் போற்றும் நமது இந்தியத் தாய் திருநாட்டில், கிறிஸ்தவ மதம் வளரவும் தழைக்கவும் வித்திட்ட பல மேலை நாட்டினர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர், புனிதர் பிரான்சிஸ் சவேரியார்.
இவர் 1506ஆம் ஆண்டு, ஏப்ரல் 7ஆம் நாள், ஸ்பெயின் நாட்டிலுள்ள புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். யுவான் தெயாசு- டோனா மரியா என்ற தம்பதியின் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவரது தந்தை யுவான் தெயாசு, அந்நாட்டின் அரசவையில் நிதியமைச்சராகப் பணியாற்றி வந்தார்; சட்டவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தன்னுடைய ஒன்பதாம் வயதில் தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில் படித்து வந்தார். அப்போதே ஸ்பானிஷ் (SPANISH) மற்றும் பாஸ்க் (BASQUE) மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.

பிரான்சிஸ் சவேரியார் தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, உயர்கல்வி கற்க விரும்பினார்; 1525ஆம் ஆண்டு, பிரான்சிஸ் சவேரியார் உலகப் புகழ் பெற்ற பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் பல்கலைக் கழகத்தில் தனது படிப்பை தொடர வீட்டை விட்டு வெளியேறினார். அங்கு மெய்யியல் மற்றும் இறையியல் கற்கத் தொடங்கினார். 1530ஆம் ஆண்டு மெய்யியல் முதுகலைப்பட்டம் பெற்றார். பின்னர் 1530 முதல் 1534 வரை அதே கல்லூரியில் இறையியல் மாணவர்களுக்கு விரிவுரையாளராக பணியாற்றினார்.

1925ஆம் ஆண்டு பிரான்சிஸ் கல்லூரியில் பயிலும்போது பியர் பாவர் (Pierre Favre) வுடன் நண்பரக்கிறார். இந்த நேரத்தில் 39 வயது நிரம்பிய "இனிகோ' என்ற "லொயோலா' என்பவரை சந்திக்க சவேரியாருக்கு வாய்ப்பு கிடைத்தது. இனிகோ, குருவாவதற்காக அதே கல்லூரியில் படிக்க சேர்கிறார். இனிகோ ஒரு முன்னால் படைவீரர். ஆனால் இப்போது கடவுளுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவர், சவேரியாரைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வார்த்தையைச் சொல்வார். அதாவது "பிரான்சிஸ், ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்துவிட்டால் அதனால் அவனுக்கு என்ன பயன்?'' என்பதே அந்த வாசகம். இந்த வார்த்தைகள் சவேரியாரின் மனதில் ஆழமாகப்பட்டது.
ஒரு நாள் சவேரியார், "தனது பணம், புகழ், பட்டம், ஆசை, ஆடம்பரம், உலக இன்பம் அனைத்தையும் துறக்க வேண்டும்; தானும் ஒரு குருவாக வேண்டும்; இறை மகன் இயேசுவின் பணியை-அவரது அன்பு, பாசம், பெருமை, இரக்கம், விட்டுக் கொடுக்கும் மனம் இவற்றை உலகமெங்கும் அறிவிக்க வேண்டும்' என்ற அணையாத தாகத்தைப் பெற்றார். பின்னர் இவர்கள் இயேசு சபை என்னும் இயக்கத்தை தொடங்கினர். இதில் மீண்டும் நான்கு நண்பர்கள் சேர்த்து இறைபணியை செய்ய முடிவு செய்கின்றனர்.

இதை தொடர்ந்து 1537 ஆம் வருடம் ஜூன் மாதம் 24 ஆம் நாள் குருவாக பட்டம் பெற்று தன் முதல் திருப்பலியை செப்டம்பர் 30ஆம் தேதி நிறைவேற்றுகிறார்.

பின்னர் இவர்கள் போப் மூன்றாம் சின்னப்பரை சந்தித்து இறைபணி செய்வதற்க்கான தங்கள் விருப்பத்தை தெரிவிக்கின்றனர். இந்த வேளையில் போர்த்துகீசிய மன்னன் அப்போது தங்கள் கீழ் இருந்த நாடுகளுக்கு குருக்களை தந்துதவும்படி வேண்டுகிறார். இதன்படி புனித சவேரியார் இந்தியா மற்றும் போர்த்துகீசிய காலணி நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

புனித சவேரியார் 1540இல் ரோமில் இருந்து புறப்பட்டு லிஸ்பன் செல்கிறார். அங்கு ஒரு வருடம் இறைபணியை செய்த பின்னர் இந்தியாவிற்கு 1542 மே மாதம் 6ஆம் தேதி கோவாவை வந்தடைந்தார். முதல் நான்கு மாதங்கள் கோவாவிலும் பின்னர் கோவாவிலிருந்து கேரளா வழியாக தென் தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கி இறைப்பணியாற்றினார் சவேரியார். குறிப்பாக கன்னியாகுமரி, கோட்டயம், குளச்சல், ஆலந்தலை, தூத்துக்குடி மற்றும் மணப்பாடு பகுதிகளில் தங்கி இறைப் பணியாற்றி வந்தார். இங்கு கிராமங்கள் தோறும் மணியடித்தபடி சென்று அங்கு ஆட்கள் கூடியதும் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவை பற்றிய செய்திகளை கூறியும் நோயாளிகளை சந்தித்தும் வந்துள்ளார்.
மணப்பாட்டில் அவர் தங்கியிருந்த குகை, மற்றும் அதற்குள் இருக்கும் சிறிய கிணறு ஆகியன இன்றும் உள்ளன. அந்தக் கிணறு, கடற்கரையில் உள்ளது. ஆனால் அதன் தண்ணீர் உப்பு இல்லாத நல்ல குடிநீராக இன்றும் புதுமையாக இருக்கிறது. 1545ல் சென்னை மயிலாப்பூரில் ஐந்து மாதங்கள் பணியாற்றினார் சவேரியார். பிறகு 1545ஆம் ஆண்டு "மலக்கா' தீவிற்கு பயணம் செய்தார். பயணம் செய்யும் போது புனித சவேரியாரின் சிலுவை கடலில் விழுந்துவிடுகிறது. ஆனால் கரையை அடைந்ததும் ஒரு நண்டு அந்த சிலுவையை கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. மலக்காவிலும் இறை பணியாற்றினார். 1549-ல் ஜப்பான் சென்று, அங்கும் இயேசுவின் பணியைச் செய்து வந்தார்.
சவேரியாருக்கு, "எப்படியும் சீனாவிற்கு செல்ல வேண்டும்; அங்கும் இயேசுவின் அன்புப் பணியை செய்ய வேண்டும்' என்ற ஆசை இருந்தது. அதன்படி 1552ஆம் ஆண்டு, ஏப்ரல் 17ஆம் நாள் சவேரியார் சீனாவிற்கு புறப்பட்டார். ஆனால் செல்லும் வழியில், சான்சியான் தீவில், 1552-ம் ஆண்டு- நவம்பர் 21ஆம் நாள், நோயுற்றுப் படுத்தார். காய்ச்சல் தீவிரமடைந்தது. அவருக்கு உதவியாக "அந்தோணியோ' என்பவர் கூடவே இருந்தார். 1552ஆம் ஆண்டு, டிசம்பர் 3ம் நாள், சவேரியார் தனது கையில் வைத்திருந்த சிலுவையை தூக்கிப் பிடித்தவராக, ""ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்! நான் ஒரு போதும் வெட்கமடைய விடாதேயும்'' என்ற வசனத்தை சொன்னவாறே தனது உயிரை இறைவன் கையில் ஒப்படைத்தார்.

இறந்த புனிதரின் உடல், முதலில் சான்சியன் தீவில் அடக்கம் செய்யப்பட்டது. 1553ம் ஆண்டு, பிப்ரவரி 17ம் நாள், சாந்தா குரூஸ் கப்பல் அங்கிருந்து புறப்படும்போது, சவேரியாரின் கூடவே இருந்த அந்தோணியோ, புனிதரின் கல்லறையைத் தோண்டி அவரது எலும்பையாவது இந்தியாவிற்கு கொண்டு செல்வோம் என்று முயற்சித்தார். அப்போது மிகப் பெரிய அதிசயம் அங்கே நிகழ்ந்தது. சவேரியாரின் உடல் எப்படி அடக்கம் செய்யப்பட்டதோ, அதேபோல இருந்தது.

எந்தவித மாற்றமோ, துர்நாற்றமோ இல்லை. 1554ஆம் ஆண்டு, மார்ச் 16ஆம் நாள், சாந்தா குரூஸ் கப்பலில் புனிதரின் உடல், கோவா கொண்டு வரப்பட்டது. "பாம் இயேசு தேவாலயத்தில்' மிகவும் பாதுகாப்புடன், கோவா அரசாங்கத்தின் உதவியுடன் இன்றுவரை அந்த உடல் பாதுகாக்கப்படுகிறது. அந்த அழியாத புனிதரின் உடல், பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றது. இந்தப் புனிதரிடம் யார் விசுவாசத்துடன் கேட்டாலும் அதை அவர்கள் கட்டாயம் அடைவார்கள்.

புனித பிரான்சிஸ் சவேரியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். . .

03/12/2024

திருச்சபை இன்று மறைபரப்பு நாடுகளின் பாதுகாவலரும், நம் இந்திய நாட்டின் பாதுகாவலரும், நமது ஊரின் பாதுகாவலருமான தூய சவேரியாரின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது.

01/12/2024

திருவருகைக்காலம் – எதிர்பார்ப்பின் காலம், நம்பிக்கையின் காலம், கிறிஸ்து பிறப்பு விழாவிற்காக நம்மைத் தயாரிக்கும் காலம். காண முடியாத கடவுள் மனித வரலாற்றில் நுழைந்தார். ஒரு மனிதராக நம் நடுவே வாழ்ந்தார். இந்த மாபெரும் மறையுண்மையைக் கொண்டாடும் நாம், இயேசுவின் இரண்டாம் வருகைக்கும் நம்மைத் தயாரிக்க அழைப்பு விடுக்கும் காலம்தான் இத்திருவருகைக்காலம்.

The Exposition of the body of St Francis Xavier was not supposed to be a decennial event. The first Exposition after the...
29/11/2024

The Exposition of the body of St Francis Xavier was not supposed to be a decennial event. The first Exposition after the incorrupt body of St Francis Xavier was brought to Goa from Malacca, happened almost by accident. The First Exposition lasted only three days and was held between February 10th and 12th in the year 1782, almost 230 years after his death. The exposition of the body of St Francis Xavier was held to negate rumours that the Jesuits who were expelled in 1759 by the Portuguese had taken away the body of Xavier and left behind an empty casket. It was only after Liberation of Goa that the Exposition began to be held regularly after 10 years.

The Second Exposition took place 77 years after the first exposition between the feast day of St Francis -December 3, 1859 to January 8, 1860, for a period of 36 days. While 40,000 pilgrims attended the first exposition, the number swelled to 2 lakh pilgrims in 1859-60.

The third exposition of the sacred relics of St Francis Xavier was held after 19 years of the second exposition. The dates were from December 3, 1878 to January 6, 1879, for a period of 34 days.

The fourth Exposition of the holy relics of Xavier was held after a period of 12 years, between December 3, 1890 to January 1, 1891, where 1.5 lakh devotees paid homage to the great saint.

Thereafter the Fifth Exposition was held after 10 years ( December 7 to 10, 1900). The first exposition to be held after 10 years was the Sixth Exposition which was held between November 26 and December 28, 1910, with 2 lakh devotees.

The Seventh Exposition commemorating the 300 years of St Francis Xavier’s Sainthood, occurred after 12 years of the 6th Exposition between December 22, 1922 and January 2, 1923.

The Eight Exposition was held after 9years, the Ninth Exposition was held in the month of May after 11 years. The Tenth Exposition was held after 10 years.

Surprisingly, the eleventh exposition took place during the Liberation of Goa between December 11 and 31, 1961, after 9 years. The Twelfth Exposition took place after just 3 years after Liberation on November 25, 1964 to January 5, 1965.

It is only after Liberation of Goa that the Expositions began to be held after 10 years between December and January. The thirteenth exposition was held in 1974, the Fourteenth Exposition was held in 1984, the fifteenth, sixteenth and seventeenth expositions were held in 1994, 2004 and 2014 respectively.

Address

Akkalmadam, Pamban
Rameswaram
623521

Website

Alerts

Be the first to know and let us send you an email when St. Francis Xavier Church, Akkalmadam, புனித சவேரியார் ஆலயம், அக்காள்மடம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share