Tntj Ramnad North - SW Students Wing

Tntj Ramnad North - SW Students Wing இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் மாணவரண?

பொது இடங்களில் வைஃபை பயன்படுத்தும் நபரா நீங்கள்? அதில் உள்ள ஆபத்துகளில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்கள்..இலவச வைஃபை (Fr...
07/03/2022

பொது இடங்களில் வைஃபை பயன்படுத்தும் நபரா நீங்கள்? அதில் உள்ள ஆபத்துகளில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்கள்..

இலவச வைஃபை (Free Wi-Fi)

இன்று இண்டர்நெட் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது என்ற நிலைமைக்கு வந்துவிட்டோம். பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் தொடங்கி, ஒர்க் ஃபிரம் ஹோம் வேலை, மொபைல் கேம் வரை அனைத்திற்கும் இண்டர்நெட் பயன்பாடு தேவைப்படுகிறது.

நமக்கு தேவையான டேட்டாக்கள் மொபைல் இண்டர்நெட் மூலம் தான் பெரும்பாலும் கிடைக்கிறது. இருப்பினும் பலர் பொது இடங்களில் வைஃபை மூலம் தரப்படும் இலவச இண்டர்நெட்டையும் பயன்படுத்தி வருகின்றனர். இதில் இருக்கும் ஆபத்துகளையும், அவற்றை எப்படி தவிர்ப்பது என்றும் இப்போது காணலாம்.

ரெயில் நிலையம், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தரப்படும் இலவச வைஃபையைப் பயன்படுத்தும் போது, குற்றவாளிகள் எளிதாக நமது தகவல்களை திருடலாம். அவற்றின் மூலம் பண இழப்பு முதல் ஆபத்தான குற்றங்கள் வரை எதுவேண்டுமானாலும் ஏற்படலாம். இவற்றை தவிர்ப்பதற்காக நாம் சில பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

இதன்படி, முதலில் நமக்கு தரப்படும் இண்டர்நெட் பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு வைஃபை நெட்வொர்க் சரிபார்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வைஃபை ஆபரேட்டரை தொடர்புகொண்டு சரியான சிக்னல் பெயரை கேட்டறிந்துகொள்ள வேண்டும்.

இலவச வைஃபையில் உள்ள ஆபத்து

ஹேக்கர்கள் போலி வைஃபையை உருவாக்கி மக்களின் தகவலின் திருடுவதை தவிர்க்க ஐபி முகவரி வழியாக உங்கள் சாதனங்களை வைஃபையுடன் இணைக்கலாம்.

அதேபோன்று பொது இடங்களில் வரும் வைஃபை மூலம் நாம் பயன்படுத்தும் இணையதள முகவரிக்கு முன்னால் HTTPS இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவும்.

நமது கணினி மற்றும் ஸ்மார்ட்போனை பொது இடங்களில் உள்ள வைஃபையில் இணைக்கும்போது ஆன்டி-வைரஸ் அல்லது பிற இணைய பாதுகாப்பு செயலி, மென்பொருட்களை பயன்படுத்துவது நல்லது.

நமது தகவல்கள் திருடப்படுவதை தடுக்க விபிஎன்-ஐ (VPN - Virtual Private Network) பயன்படுத்தலாம். வி.பி.என் பொது வைஃபையில் நமது தரவுகளை பாதுகாக்கும்.



#வைஃபை | #இண்டர்நெட்_பாதுகாப்பு

*திருச்சி - ஜமால் முகமது கல்லூரி வழங்கும்* *ஊக்கத் தொகையுடன் கூடிய இலவச தொழிற் பயிற்சிகள்*விண்ணப்பிக்க கடைசி நாள்: *01-0...
28/02/2022

*திருச்சி - ஜமால் முகமது கல்லூரி வழங்கும்*

*ஊக்கத் தொகையுடன் கூடிய இலவச தொழிற் பயிற்சிகள்*

விண்ணப்பிக்க கடைசி நாள்: *01-03-2022*

பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கும் நாள்.
*05-03-2022*

வயது வரம்பு:
*18 முதல் 45 வரை*

விருப்பமுள்ளவர்கள்:
*94434 43624 / 86102 86086*
என்கிற எண்களை தொடர்பு கொண்டு பயனடையுங்கள்.

மருத்துவம் சார்ந்த பொறியாளராகுங்கள்!  இன்றைய உலகில் மருத்துவத்துறை மிகவும் அத்தியாவசியமாகிவிட்ட துறைகளில் ஒன்றாகும். புத...
22/02/2022

மருத்துவம் சார்ந்த பொறியாளராகுங்கள்!

இன்றைய உலகில் மருத்துவத்துறை மிகவும் அத்தியாவசியமாகிவிட்ட துறைகளில் ஒன்றாகும். புதிய புதிய நோய்களைப்போல புதிய புதிய மருந்துகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன.

மேலும் மருத்துவச் சிகிச்சைகளுக்குத் தேவையான பல மருத்துவக் கருவிகள் - புதிய தொழில் நுட்பங்களுடன் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கின்றன.

மருத்துவக் கருவிகளை வடிவமைக்கவும், அதில் புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்தி மேம்படுத்தவும் கற்றுக் கொடுக்கும் உயிரி மருத்துவ பொறியியல் (பயோ மெடிக்கல் என்ஜீனியரிங்) என்ற நான்கு ஆண்டு பட்டப்படிப்பு உள்ளது. இந்தப் படிப்பு என்பது மருத்துவம் மற்றும் பொறியியல் இணைந்து அமைக்கப்பட்டதாகும்.
தமிழகத்தில் குறிப்பிட்ட மிகச் சில கல்லூரிகளிலேயே இந்தப் படிப்பு உள்ளது. கோயம்புத்தூரில் கோவை மெடிக்கல் சென்டர் & ஹாஸ்பிட்டல் என்ற நிர்வாகத்தின் கீழ் டாக்டர் என்.ஜி.பி.தொழில்நுட்பக்கல்லூரியில் இந்த "பயோ மெடிக்கல் என்ஜினீயரிங்' என்ற நான்கு ஆண்டு பட்டப்படிப்பு உள்ளது.

இந்தப் படிப்பு குறித்து அக்கல்லூரி முதல்வர் கே.பொற்குமரன், துறைத்தலைவர் எஸ்.பிரபாகர் ஆகியோர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
"பிளஸ் டூ வகுப்பில் உயிரியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய பாடங்களை சிறப்பு பாடங்களாக எடுத்துப் படிப்பவர்கள், அப்பாடங்களில் 60 சதத்திற்கு மேல் எடுத்தவர்கள் இந்தப் படிப்பில் சேரத் தகுதியானவர்கள். இந்தப் படிப்பிற்கு அண்ணா பல்கலைக்கழகம் பாடத்திட்டங்களை வழங்குகிறது.

பயோ இன்ஸ்ட்ரூமென்டேஷன், பயோ மெட்டீரியல், பயோ மெக்கானிக்ஸ், செல்லுலார் என்ஜினீயரிங், டிஸ்யூ என்ஜினீயரிங், ஹியுமேன் பிசியாலஜி அண்டு அனாடமி, மைக்ரோ பயாலஜி அண்டு பேதாலஜி, பயோ கண்ட்ரோல் சிஸ்டம்ஸ், பயோ டெலிமெட்ரி, பயோ விர்சுவல் இன்ஸ்ட்ரூமென்டேஷன், ஜெனட்டிக் என்ஜினீயரிங், கிளிக்கல் என்ஜினீயரிங், ஆர்த்தோபேடிக், பயோ என்ஜினீயரிங் நேவிகேசன் சிஸ்டம் ஆகிய பாடங்கள் பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் படிப்பில் உள்ளது.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம், கணிப்பொறி அறிவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் ஆகியவை குறித்த பாடங்களோடு அடிப்படை பொறியியல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மனித உடலியல், உடற்கூறியல், உயிர் வேதியியல், நோயியல் ஆகியவை குறித்த பாடங்களுடன் மருத்துவமனைகளில் உள்ள ரத்த பரிசோதனை மையம், ஸ்கேன் மையம் ஆகியவற்றில் உள்ள இயந்திரங்கள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் நேரடியாகப் பாடம் நடத்தப்படுகிறது.

மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பயோ மெட்டிரியல், மின்ணனு நுண் செயலிகள் குறித்த பாடங்களோடு, மருத்துவமனையில் உள்ள இ.சி.ஜி.கருவி, இருதயம் பரிசோதிக்கும் கருவியில் உள்ள பாகங்கள், அதன் செயல்பாடுகள், அதன் தன்மைகள், அவற்றைப் பழுது நீக்குதல் உள்ளிட்டவை குறித்து பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

மனித உறுப்புகளில் ஏதாவது ஒன்றில் அதிக ஆர்வம் கொண்ட மாணவர்களைத் தேர்வு செய்து, அந்த உறுப்புகளுக்கு உரிய மருத்துவக்கருவிகள் தயாரிக்கும் பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றன.

பின்னர் தற்போது உள்ள மருத்துவக்கருவியில் எப்படிப்பட்ட மாற்றங்களைச் செய்தால், இன்னும் சிறப்பாக இருக்கும் என மாணவர்கள் ஆய்வு செய்ய வேண்டும் அல்லது மருத்துவத்துறைக்கு ஏதாவது ஒரு புதிய கருவியை வடிவமைத்து திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

அறுவை சிகிச்சை நடைபெறும் போது கருவிகளில் கோளாறு ஏற்பட்டால் அதனைச் சரி செய்ய பொறியாளர்களால்தான் இயலும். எனவே பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் படிப்பு மிகவும் முக்கியத்துவம் உள்ளதாகும்.

மனித உடலில் உறுப்புமாற்றம், உறுப்புக்களைச் சீர்படுத்துதல் போன்றவற்றுக்கும் இந்தப் படிப்பு பெரும் உதவியாக உள்ளது. முன்பு பல மருத்துவ உபகரணங்களும், கருவிகளும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டன. இன்று இந்தியாவில் பல நிறுவனங்கள் மருத்துவக்கருவி தயாரிக்கும் ஆலைகளைத் தொடங்கியுள்ளன. எனவே வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எங்கள் கல்லூரி அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடோ அட்லாண்டிக் பல்கலைக்கழகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி இந்தத் துறையில் மேற்படிப்பை அந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கலாம்.

எங்கள் கல்லூரியில் படித்தவர்களில் பலர் உயர்கல்வி கற்க அங்கே செல்கிறார்கள். பலர் சுய தொழில் செய்து வருகிறார்கள். எனவே இதைப் படிப்பவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு நிச்சயம் உண்டு'' என்றார்கள் அவர்கள்.

நன்றி: Dinamani
(இது ஒரு மீழ்பதிவு)


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் மாணவரணி

இந்திய அஞ்சல் துறை சார்பில் சிறப்பு ஆதார் முகாம் வரும் 22 முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்த முகாமில் புதிதாக ஆதார்...
22/02/2022

இந்திய அஞ்சல் துறை சார்பில் சிறப்பு ஆதார் முகாம் வரும் 22 முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் புதிதாக ஆதார் எடுக்க கட்டணம் கிடையாது. ஆதார் திருத்தம் செய்ய மட்டும் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், ஆதார் அட்டையில் பிறந்த தேதி மாற்றம், முகவரி மாற்றம், செல்பேசி எண் சேர்த்தல் மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும்.

இந்த சேவைகளைப் பெற வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி அடையாள அட்டை, வங்கி பாஸ் புத்தகம், பான்கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றின் அசல் ஆவணத்தைக் கொண்டு வர வேண்டும்.

இதுகுறித்து, மேலும் தகவல் அறிய அருகில் உள்ள அஞ்சல் ஆதார் சேவை மையம் மற்றும் அஞ்சல் அலுவலகத்தை அணுகலாம் என அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் மாணவர் அணி

வெளியீடு:- மாவட்ட மாணவரணிஇராமநாதபுரம் (வடக்கு) மாவட்டம்
10/12/2020

வெளியீடு:- மாவட்ட மாணவரணி

இராமநாதபுரம் (வடக்கு) மாவட்டம்

10/12/2020
மாற்றுத் திறனாளி உதவி தொகை...
10/12/2020

மாற்றுத் திறனாளி உதவி தொகை...

Address

Ramanathapuram
623501

Telephone

+917539952108

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tntj Ramnad North - SW Students Wing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share