Radhapuram, Tamilnadu, India

Radhapuram, Tamilnadu, India The creator of this page
உதயம் சுரேஷ்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும்,விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் ஆர்.நல்லகண்ணு (101) காலமானார். செவ்வணக...
25/02/2026

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும்,விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் ஆர்.நல்லகண்ணு (101) காலமானார். செவ்வணக்கம் தோழர்!

13/04/2024
இராதாபுரம் 17 : தந்தை பெரியார் பிறந்த நாளான இன்று  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இராதாபுரம் தாலுகா குழு சார்பில் சமத்துவப...
17/09/2023

இராதாபுரம் 17 : தந்தை பெரியார் பிறந்த நாளான இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இராதாபுரம் தாலுகா குழு சார்பில் சமத்துவபுரத்தில் அமைந்திருக்கும் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது மாவட்டத் தலைவர் குட்டன் ,இராதாபுரம் தாலுகா தலைவர் தோழர் உதயம் சுரேஷ், செயலாளர் தோழர் ராஜன், தோழர் சிவா, தோழர் இசை முருகன், தோழர் அருண், வழக்கறிஞர் தோழர் செல்வ சுந்தரம், தோழர் சரண் ராஜ்,தோழர் மாதவன், தோழர் நவின், தோழர் தர்ஷன், தோழர் பரசுராமன், முத்துகுமார், தோழர் அஜெய், தோழர் வெங்கட் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர் இராதாபுரத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் தோழர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்

இந்த செங்கலால் கட்டப்பட்ட கோபுரம்  #திருநெல்வேலி மாவட்டம்,  #இராதாபுரம் வட்டத்திற்குட்பட்ட  #பரமேசுவரபுரம் கிராமத்தின் ம...
20/04/2022

இந்த செங்கலால் கட்டப்பட்ட கோபுரம் #திருநெல்வேலி மாவட்டம், #இராதாபுரம் வட்டத்திற்குட்பட்ட #பரமேசுவரபுரம் கிராமத்தின் மேற்க்கு திசையில் உள்ளது. இதனை மோர்சா கோபுரம் என எனது கிரமத்தினர் இன்றும் அழைத்து வருகின்றனர். இந்த மோர்சா இருக்கின்ற நிலத்தை மோர்சா விளை எனவும் அழைக்கிறோம்.

கூம்பு வடிவத்தில் செங்கலால் கூர்மையாக கட்டப்பட்ட இந்த கோபுரம் தன்னகத்தே சிறிய கணவாய் போன்ற அறையையும் கொண்டது. இந்த மொத்த அமைப்பும் தரையிலிருந்து ஒன்றை மீட்டர் உயரத்தில் மிகப்பெரிய சதூரவடிவ பீடத்தின்மீது கட்டப்பட்டுள்ளது.

என் சிறுவயதிலிருந்தே, பார்பதற்கு பிரம்மாண்டமாக மிககூர்மையாக இருக்கும் இந்த கோபுரத்தினையொட்டி எத்தனை எத்தனையோ புனைவுக்கதைகளையும் பயங்கரமான பேய்கதைகளையும் பாட்டி/ தாத்தா சொல்லக்கேட்டிருப்பேன். இந்த கோபுரத்தில் பேய்கள் குடியிருப்பதாகவும் இரவுநேரங்களில் வெளிவருவதாகவும் பகல்நேரங்களில் அவைகள் ஓய்வெடுப்பதாகவும் புனைவுக்கதைகளை கூறி எங்களை அதன் அருகில் செல்லவிடாமல் பயமுறுத்திய காலங்களும் உண்டு. இன்னும் சிலர், அந்த கதைகளுக்கும் மேலாக, அந்த கணவாய் குகையின் வழியே உள்ளே சென்றால் அது எங்கள் கிராமத்திலிருந்து கன்னியாகுமரில் இருக்கும் அம்மன் கோவிலில் வரை செல்லும் சுரங்கப்பாதை எனவும் கூறினர். சிலர் செல்ல முயன்று அதில் மாட்டிக்கொண்டதால் பெரியோர்கள் மூடிவைத்து விட்டார்கள் என கூறிய கட்டுகதைகளும் உண்டு.

எனக்கு சிறுவயதில் இந்த கோபுரத்தினை கடக்கும்போது ஒருவித பயத்தினை முதலில் ஏற்பட்டாலும் பின்பு அதன் பிரம்மாண்டதினை பார்த்து அதனருகில் செல்லவேண்டுமென்ற ஆர்வத்தினை தூண்டியது. பின்பு கல்லூரியில் படித்த காலங்களில் அந்த பீடத்தில் உக்கார்ந்து எனது நண்பர்களுன் அரட்டையடித்து அந்தகதைகளை பற்றிம் சிலாகித்தது உண்டு. தற்போது ஒவ்வொரு முறையும் எனது கிராமத்திற்கு செல்லும் போதும் அதனைப் பார்க்காமல் வந்ததில்லை.

சரி.. கதைக்கு வருவோம்...

இளநிலை பொறியியல் படிக்கும்போது நில அளவியல் (Survey)லில் இந்த கோபுரங்கள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தவையென தெறிந்து கொண்டேன். கிழக்கிந்திய கம்பனியின் மூலம் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவிற்கு வந்த பிறகு மத்திய பொறியியல் ஏஜென்சி என்ற அமைபினை 1767-ல் உருவாக்கினர். அந்த அமைப்பு அவர்களின் ஆட்சிக்குட்பட்ட நிலங்களை அளப்பதற்கும் அதன் மூலம் இந்தியாவின் வரைபடத்தினை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டது. பிரிட்டிசு நில அளவையாளர் வில்லியம் லாம்டன் பரங்கிமலையில் இருந்து இந்த அமைபிற்கு இந்திய வரைபடத்தை வரையும் முயற்சியை மேற்கொண்டார். பரங்கிமலை, பல்லாவரம் மற்றும் பட்டினப்பாக்கம் மூன்றையும் இணைத்து ஒரு கற்பனை முக்கோணம் உருவாக்கப்பட்டது. அந்த முக்கோணம் பெரிய இந்திய நெடுவரை வில் (The great Indian arc of the Meridian) என அழைக்கப்பட்டது. இதற்காக இந்த கோபுரங்கள் அமைக்கப்பட்டன. பின்பு இது கன்னியாகுமரியில் 78 பாகை மெரிடியனில் தொடங்கி இமயமலை வரை 2575 கி.மீ. தூரம் விரிவடைந்தது. இதற்குள் 50 ஆண்டு காலம் முடிந்துவிட்டது. இதை ஆரம்பித்த லாம்டன் 1823இல் காலமானார். பின்பு இதை லாம்டனின் மாணவரான ஜார்ஜ் எவரஸ்ட் 1880இல் முடித்துவைத்தார்.

இந்திய அரசாங்கம் உருவானபிறகு நில அளவைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த மோர்சா கோபுரங்கள் உடைக்கப்பட்டு அதனை சுற்றியுள்ள நிலங்கள் ஆக்கிரமிப்புக்குள்ளானது. இது எங்கள் ஊரில் இந்த பேய் மற்றும் புனைவுக்கதைகள் மூலம் சற்றே பாதுகாக்கப்பட்டது.

எங்கள் ஊரில் வரலாற்றுக்கதைகள் 18ம்நூற்றாண்டுக்கு முன்பே பல இருந்தாலும் அதனை நினைவுபடுத்தவும் அல்லது அந்த கதைகளை நிறுவதற்கு போதிய சான்றுகளோ அல்லது படிமங்களோ இருந்ததாக எனக்குத் தெறியவில்லை. ஆனால் இந்த கோபுரம் சற்று சிதிலமடைந்தாலும் இன்றும் கம்பீரமாகவே இருக்கிறது. இதனை எங்கள் ஊர் பரமேசுவரபுரம் கிராமபஞ்சாயத்து இந்திய நிலஅளவியல் துறையுடனும் இனைந்து மெருகேற்றி பாதுகாத்தால் இதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லலாம்.

#படித்தேன்_பகிர்ந்தேன்

 #இருக்கன்குடி அருள்தரும் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் சக்திபீடம்...!!! விருதுநகர் மாவட்டம்,  #சாத்தூர் எனும் ஊரிலிருந்த...
17/03/2022

#இருக்கன்குடி அருள்தரும் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் சக்திபீடம்...!!!

விருதுநகர் மாவட்டம், #சாத்தூர் எனும் ஊரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இருக்கன்குடி கிராமம். இந்த ஊரிலிருக்கும் மாரியம்மன் கோயில் தமிழகத்தின் தென் மாவட்டத்திலிருக்கும் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்று.

இந்தக் கோயிலில் வழிபட்டுச் செல்பவர்களுக்கு அம்மை உட்பட அனைத்து விதமான நோய்களும் நீங்கும் என்கிற நம்பிக்கை இந்தப் பகுதி மக்களிடம் இருக்கிறது.

தல வரலாறு :

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சானம் பெருக்க வந்த பெண் ஒரு இடத்தில் கூடையை வைத்துச் சானம் பொறுக்கிச் சேர்த்திருக்கிறாள்.

ஓரளவு சானம் சேர்ந்த பின்பு அந்த இடத்தில் இருந்து கூடையை எடுக்க முயன்று இருக்கிறாள். அந்தக் கூடையை எடுக்க முடியவில்லை. அப்பொழுது அவள் சாமி வந்து ஆடியிருக்கிறாள்.

சாமியாடிய அந்த பெண் அந்த கூடை இருக்கும் இடத்தில் சிலையாகப் புதைந்து கிடக்கும் தன்னை வெளியில் எடுத்து கோயில் அமைத்து வணங்கினால் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுவதாகத் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு அந்த இடத்தில் புதைந்து கிடந்த சிலையை எடுத்துக் கோயில் அமைத்து வழிபடத் துவங்கினர்.

இந்த கோயிலின் தல வரலாறு இதுதான். கோயில் அமைந்துள்ள இடம் :

வைப்பாறு, அர்ச்சுணன் ஆறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கு நடுவே மணல் திட்டாயிருக்கும் இடத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கிழக்கு மேற்காக 178 அடியும், வடக்கு தெற்காக 149 அடியும் கொண்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளது.

இந்தக் கோயிலைச் சுற்றி பூஜைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. கோயில்களில் மாரியம்மன் இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டபடிதான் இருக்கும்.

ஆனால் இந்தக் கோயிலில் இருக்கும் மாரியம்மனோ இந்த அண்டசராசரத்தில் ஆக்கலும் அழித்தலும் நானே. நானின்றி ஓர் அணுவும் அசையாது, என்பதற்கேற்ப #வலதுகாலை மடித்து இடது காலை தொங்கவிட்டிருக்கிறார். இந்த அமைப்பே இருக்கன்குடி மாரியம்மனின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்கின்றனர்.

இருக்கன்குடி பெயர்க் காரணம் :

கோயிலின் தெற்குப் பக்கம் வைப்பாறு, வடக்குப் பக்கம் அர்ச்சுணன் ஆறு என்று இரு ஆறுகள் சேர்ந்து வருவதால் இரு கங்கை கூடுமிடம் என்று சொல்லப்பட்டு இந்த இடத்தில் அம்மன் குடி கொண்டு விட்டதால் இருக்கங்கை குடி என்று இருந்து பின்னால் அது இருக்கன்குடி என்றாகி விட்டது.

இந்த அர்ச்சுணன் நதி புராணப் பெருமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த அர்ச்சுணன் நதி வத்திராயிருப்பு என்கிற மலைப் பகுதியிலிருந்து உற்பத்தியாகி இங்கு வருகிறது. முன்பொரு காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் காடுகளில் திரிந்து இந்தப் பகுதிக்கு வந்திருக்கின்றனர்.

இங்கு நீராடுவதற்கு தண்ணீர் இல்லாததால் பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுணன் கங்கையை வேண்டி தனது அம்பால் பூமியைப் பிளந்து தண்ணீரை வெளியில் கொண்டு வந்தார் என்றும் இந்த ஆற்றை உருவாக்கியது அர்ச்சுணன் என்பதால் இதற்கு அர்ச்சுணன் ஆறு என்று பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.

வழிபாட்டு முறைகள் :

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வருபவர்கள் விளக்கு போடுதல், அம்மனுக்குப் புடவை சாத்துதல், பூஜை செய்தல் போன்ற வழக்கமான வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். அக்கினிச் சட்டி எடுத்தல், ஆயிரங்கண் பானை எடுத்து வலம் வருதல் போன்றவைகள் மூலம் அம்மனை வழிபடுகின்றனர்.

இங்கு குழந்தையில்லாதவர்கள் குழந்தை வேண்டி தொட்டில் கட்டி வேண்டுகின்றனர். உடல் குறைபாடுள்ளவர்கள் உருவம் செய்து வைத்து வழிபடுகின்றனர். இது தவிர கயிறு குத்துதல், ஆடு, கோழி பலியிட்டு அசைவ உணவு சமைத்து அன்னதானம் செய்தல் போன்றவையும் செய்யப்படுகிறது.

தலபெருமை :

ஒரு கங்கையில் நீராடினாலே மிகவும் புண்ணியம். ஆனால் இங்குள்ள மாரி அர்ச்சுனா, வைப்பாறு என இரு கங்கைகளுக்கு நடுவே குடி கொண்டுள்ளாள். எனவே தான் இங்குள்ள மாரி இருக்கங்(ன்) குடி மாரி ஆனாள்.

அம்மனை தரிசிப்பதுடன் இரு கங்கைகளிலும் நீராடி, ஒரே நேரத்தில் முப்பெரும் பலனை அடையலாம். மாரியின் கோயிலுக்கு வடக்கே ஒடும் அர்ச்சுனா நதியானது, வத்திராயிருப்பிலுள்ள மகாலிங்க மலையில் இருந்து உற்பத்தியாகிறது. இந்த அர்ச்சுனா நதிக்கு ஒரு புராணக் கதை உண்டு.

முன்னொரு காலத்தில் பஞ்சபாண்டவர்கள் காடுகளில் சுற்றித் திரிந்து பின் இந்த மலையடிவாரத்திற்கு வந்து குளிக்க நினைத்தார்கள். ஆனால், அவர்கள் குளிப்பதற்குரிய இடம் இல்லாததால் அர்ச்சுணன் கங்கா தேவியை வணங்கி, தன் அம்பால் பூமியை பிளந்தான். அந்த பிளவிலிருந்து தோன்றிய ஆறே அர்ச்சுணன் ஆறு எனப்பட்டது. இந்த ஆற்றுநீரில் பஞ்சபாண்டவர்கள் நீராடி மகிழ்ந்தனர்.

அம்மன் கோயிலுக்கு தெற்கே ஓடுவது வைப்பாறு எனப்படும். இந்த வைப்பாற்றுக்கும் ஒரு தனி புராணக்கதை உண்டு. ஒரு சமயம் பொதிகை மலையின் அடிவாரத்தில் சிவசைலத்துக்கு வடக்கே சம்புகன் என்ற வேடன் தீயின் நடுவிலிருந்து கடும் தவம் புரிந்தான். இவனது இந்த செயலால் அயோத்தியில் ஒருவன் இறந்தான். அப்போது அயோத்தியை ஆண்ட ராமன் இந்த இறப்பை கேள்விப்பட்டு, தன் சேனைகளுடன் கிளம்பி சம்புகனை கொன்றார். அத்துடன் தன் நாட்டில் இறந்தவனையும் உயிர்ப்பித்தார். (இது ராமாயண உத்திரகாண்டத்தில் விளக்கப்பட்டுள்ளது).

தவம் செய்த சம்புகனை கொன்ற பாவத்தால் பீடிக்கப் பெற்ற ராமன் பாவ விமோசனத்திற்காக சிவமலையில் சிவபெருமானை நிலை நிறுத்தி, வணங்கி தவம் செய்து பாவ விமோசனம் பெற்றார். அதன் பின் ராமன் தன் பரிவாரத்துடன் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு வந்து சேர்ந்தார். இங்கு வந்து ராமன், தண்ணீர் தேடி கிடைக்காததால் வருந்தினார். அப்போது ராமனுடன் வந்த சாம்பவன் என்பவன், உலகிலுள்ள புண்ணிய தீர்த்தங்கள் எல்லாவற்றையும் சேர்த்து ஒரே குடத்தில் நிரப்பி, அந்தக் குடத்தை அகத்தியர் இங்கு புதைத்து வைத்திருப்பதாக கூறினான்.

இதைக்கேட்டு மகிழ்ந்த ராமன் தன் அம்பால் புதைத்து வைத்திருந்த குடத்தை உடைத்தார். இப்படி வைப்பி (புதையலில்)லிருந்து தோன்றிய ஆறுதான் வைப்பாறு எனப்பட்டது. இந்த வைப்பாறு கரிவலம் வந்த நல்லூர், சாத்தூர், கொல்லாம்பட்டி வழியாக பாய்ந்து இருக்கன்குடி அடைந்து, அங்கு ஏற்கெனவே ஒடிக்கொண்டிருக்கும் அர்ச்சுணா நதியுடன் கலந்து முத்துலாபுரம், விளாத்திகுளம் வழியாக சென்று கடலில் கலக்கிறது.

இரட்டை தீர்த்தம் : வனவாசம் சென்ற அர்ஜுனன் தன் தாகம் தீர, மேற்கு மலைத்தொடர்ச்சி மீது பாணம் எய்தான். அதிலிருந்து பொங்கிய நீர், நதியாக பெருக்கெடுத்தது. இந்நதி அவனது பெயராலேயே அழைக்கப்பெற்றது. இதேபோல், இலங்கை சென்ற ராமபிரான், பூஜைக்காக அந்த மலை மீது அம்பெய்தார். அப்போது பிறந்த நதி வைப்பாறு எனப்பட்டது. இவ்விரு நதிகளும் கங்கைக்கு ஒப்பானது என்பதால், இரு கங்கைக்கும் நடுவில் அமைந்த கோயில் என்பதை உணர்த்தும்விதமாக "இருகங்கைக்குடி' எனப்பட்ட ஊர் "இருக்கன்குடி' என மருவியது. பக்தர்கள் இரண்டு தீர்த்தங்களிலும் நீராடி அம்பிகையை வழிபட்டு வரலாம்.

ஆதி அம்பிகை : அம்பாள், இங்கு சிவ அம்சமாக இருப்பதால், சன்னதி எதிரே நந்தி இருக்கிறது. இருக்கன்குடி மாரியம்மன் சிவன் அம்சம் கொண்டவள். எல்லா அம்மனின் நெற்றியிலும் குங்குமம் இருக்கும் ஆனால் இருக்கன்குடி மாரியம்மனுக்கு விபூதி பூசியிருப்பார்கள். விபூதி தான் பிரசாதமாக தரப்படும்.

தினமும் அம்பாளுக்கு அபிஷேகம் நடக்கும் போது திரை போடப்பட்டு விடும். ஆனால், பவுர்ணமியன்று நடக்கும் அபிஷேகத்தை பக்தர்கள் காணலாம். கோயிலில் இருந்து சற்று தூரத்தில், அம்பாள் கிடைத்த இடத்தில், ஆதி அம்பாள் சன்னதி உள்ளது. இங்கு அம்பாள் உருவம் பொறித்த சூலம் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. ஊருக்குள் உற்சவ அம்பிகைக்கு கோயில் உள்ளது. ஆடி வெள்ளியன்று, இவள் பிரதான கோயிலுக்குள் வருவாள்.

கரும்புத் தொட்டில் : குழந்தை இல்லாதவர்கள் அம்பாளுக்கு கரும்புத்தொட்டில் நேர்ச்சை (நேர்த்திக்கடன்) செய்வதாக வேண்டுகின்றனர். கரும்பில் தொட்டில் கட்டி, அதில் குழந்தையைப் படுக்க வைத்து சன்னதியை வலம் வருகின்றனர்.

செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் அக்னிச்சட்டி, அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வயிற்று வலி தீர மாவிளக்கு தீபமேற்றுகின்றனர். இதற்காக தனி மண்டபம் உள்ளது. பிரகாரத்தில் வடக்குவாசல் செல்வி, வெயிலுகந்தம்மன், வீரபத்திரர், பைரவர், காத்தவராயர், பேச்சியம்மன், முப்பிடாதி உள்ளனர்.

பிரார்த்தனை தலம் : பக்தர்களின் குறை தீர்க்கும் பிரதான பிரார்த்தனை தலம் இது. கண் நோய் உள்ளவர்கள், "வயனம் இருத்தல்' என்ற விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். ஒரு சிலர் நோய் தீரும் வரை இங்கேயே இருந்து விடுகின்றனர். சிலர் ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து தங்கிவிட்டு மறுநாள் செல்கின்றனர். இவர்கள் தங்குவதற்கு கோயிலில் மண்டபம் உள்ளது. இவர்கள் அம்பாளின் அபிஷேக தீர்த்தத்தை கண்ணில் விட்டுக்கொள்ள, நோய் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.

விவசாயிகள் இந்த தீர்த்தத்தை நிலத்தில் தெளிக்கின்றனர். அறுவடையானதும் அம்பிகைக்கு நவதானியம், நெல், காய்கறி காணிக்கை கொடுக்கின்றனர். கால்நடைகள் நோயின்றி இருக்கவும் இத்தீர்த்தம் கொடுப்பதுண்டு. அம்மை நோய் உள்ளவர்கள், அம்பிகைக்கு ஆமணக்கு விதையைக் காணிக்கையாக்கி வழிபடுகின்றனர். அம்பாளுக்கு உருவ காணிக்கை, கண்மலர் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

எல்லோரும் இன்புற்றிருக்க இருக்கன்குடி மாரியம்மன் அருள்புரிய வேண்டும்.

மண்டைக்காடு பகவதி அம்மன் மாசிக்கொடை விழாவின் சிகர நிகழ்ச்சியான ஒடுக்குபூஜை நடந்தது.
09/03/2022

மண்டைக்காடு பகவதி அம்மன் மாசிக்கொடை விழாவின் சிகர நிகழ்ச்சியான ஒடுக்குபூஜை நடந்தது.

நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மாசிப் பெருந்திருவிழா தேரோட்டத்தின் புகைப்படத்தொகுப்பு ...
15/02/2022

நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மாசிப் பெருந்திருவிழா தேரோட்டத்தின் புகைப்படத்தொகுப்பு

"பொருநை போற்றுதும்" #பணகுடி #அனுமன்நதி #குத்திரபாஞ்சான்அருவிவள்ளியூரின் தெற்கே 10கி.மீ தொலைவில் பணகுடி அமைந்துள்ளது.இது ...
08/01/2022

"பொருநை போற்றுதும்"

#பணகுடி
#அனுமன்நதி
#குத்திரபாஞ்சான்அருவி

வள்ளியூரின் தெற்கே 10கி.மீ தொலைவில் பணகுடி அமைந்துள்ளது.இது எழிலார்ந்த இயற்கை அழகு கொண்ட மேற்கு தொடர்ச்சி மலையின் (மகேந்திரகிரி மலை)அடிவாரத்தில் அனுமன் நதி கரையில் சிறப்புற அமைந்துள்ளது.

தமிழகத்தின்
மிகவும் தென்மையான பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்டது பணகுடியின் சிறப்புபாகும்.
மாறவர்மன் பணகுடியில் கி.பி 860 முதல் 880 வரை ஆட்சி செய்தார். மாறவர்மன் பாண்டியனின் ஆட்சியில் இராமலிங்க சுவாமி கோயில் #பூஜைகள் நடத்தப்பட்டன.
#பணகுடி , களக்காடின்
தெற்கு எல்லையாக இருந்தது இதை வரகுண பாண்டியன் ஆட்சி செய்தான்.
உத்தம பாண்டியர் ஆட்சி செய்த காலத்தில் இந்தக் கோயிலைக் கட்டினார்.
எனவே பணகுடி “உத்தமபாண்டியபுரம்" என மக்களால் அழைக்கப்பட்டது.
பின்னர் கி.பி 1190 முதல் கி.பி 1322 வரை இந்த இடம் ஆட்சி செய்தது.
வீர பாண்டிய மாறவர்மன் மற்றும் சுந்தர பாண்டியன் ஆவார். மேலும் பணகுடியை சோழர் ஆட்சியில் குலசேகர பாண்டியன் ஆக்கிரமித்தார். பணகுடி குலசேகர பாண்டியனால் கைப்பற்றப்பட்டது.
மீண்டும் இந்த இடம் பாண்டிய மன்னனின் கீழ் வந்தது.
பின்னர் ஆற்காடு நவாப் 1740 ஆம் ஆண்டு பணகுடியை ஆட்சி செய்தார்.கி.பி.1800ல் பணகுடி ஆங்கிலேயர்களின் ஆட்சி கீழ் வந்தது.

பணகுடி என்ற பெயரின் வழித்தோன்றல் மிகவும் சுவாரஸ்யமானது. தமிழ் வார்த்தைகளான ‘பணம்’ மற்றும் ‘குடி’ ஆகியவற்றின் கலவையாகும்
பணம் இடம்” அல்லது திறைசேரி. ‘பணம்’ என்பது
பணத்தின் மற்றொரு சொல் 'குடி' என்றால் 'வாழும் இடம்'
'மக்கள்'. வரலாற்று காலம் "பனைகுடி" அல்லது
‘பனங்குடி’.பிறகு ‘பனகுடி’ “முரத்நாடு ’ என்று பணகுடியை முற்காலத்தில் அழைத்தனர் என்பதற்கு ஆதாரமாக சுசீந்திரம் தாணு மலையான் கோயில் உள்ள கல்வெட்டு ஒன்று சான்றாக உள்ளது.

உத்தம பாண்டிய மன்னன் ராமலிங்கத்தை வழிபட கோவிலுக்கு வந்தார்.
கோவிலில் பூஜைகள் மற்றும் திருவிழாக்களுக்கு ஏற்பாடு செய்தார்.
அந்த நேரத்தில் அவர்
சிவபெருமான் அங்கு அமைதியாக அருள் செய்வதை அறிந்தார்.
உத்தமாவின் ஆட்சிக்குப் பிறகு
பாண்டிய ராஜா, அவரது வாரிசுகள் இந்த கோவிலுக்கு திருப்பணி செய்தனர்.மேலும் பல சேர மற்றும் பாண்டிய மன்னர்கள்14ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு கோவில் திருப்பணி செய்தார்.

கல்வெட்டுகள்:
ஒரு கல்வெட்டில் பணி நியமன ஆணை பொறிக்கப்பட்டுள்ளது இது
முன் மண்டபத்தின் தெற்குப் பகுதியில் காணப்படுகிறது.
தென்காசி பாண்டியர்களின் ஆரம்ப கால கல்வெட்டு உள்ளது.
மற்றொரு கல்வெட்டில் உத்தம பாண்டியனின் ஆட்சியில் மானியங்களைப் பதிவுசெய்து விவரிக்கிறது.

கி.பி. 14-ம் நூற்றாண்டில் தென்காசியை ஆட்சி செய்த உத்தம பாண்டியன் ஆட்சி காலத்தில் தான் பணகுடியில் கோவில் கட்டப்பட்டது கோவிலில் வசந்த மண்டபம் சிறப்பு அமையுமாறும் செய்தார். இம்மன்னன் ஆட்சி காலத்தில் தான் லிங்க வழிபாடு நடைபெற்றது. இதைப்பற்றி இக்கோவிலில் செப்பேடுகளில் எழுதப்பட்டுள்ளது. ஆரம்பகாலத்தில் இக்கோவில் நம்பிசிங்கபெருமாள் கோவில் என அழைக்கப்பட்டது. பாண்டிய மன்னன்தான் இக்கோவிலை கட்டினான் என்பதற்கு அடையாளமாய் கோவிலின் வெளியே உள்ள சப்பரத்தின் (தேரின்)உயர்ந்த மேல்தளப்பகுதியில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதே சான்றாகும். இக்கோவிலின் அடிப்பகுதியில் ஒரு சுரங்கப்பாதை உள்ளது; இந்த சுரங்கப்பாதை திரு இருதய சகோதரர் பள்ளியின் பின்புறம் உள்ள கிணற்றில் முடிவடைகிறது.என்று கூறுவார்கள். இந்த சுரங்கபாதையை மன்னர்கள் அவசர காலத்தில் பயன்படுத்தினார்கள் என்று கருதப்படுகிறது.

திருவிழாக்கள்:
இராமலிங்க சுவாமி சிவகாமி அம்பாள் கோவிலில் 10 நாள் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவை ஒவ்வொரு சமுதாயத்தை சார்ந்த மக்களால் நடத்தப்படும் விழா ஆகும். ஒவ்வொரு சமுதாயமும் இத்திருவிழாவை தங்களின் சொந்த பணத்தை வைத்து திருவிழா நடத்துவார்கள் இத்திருவிழாவின் போது கரகாட்டம் மயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். எல்லா இனம் மதம் மக்களும் இத்திருவிழாவில் பங்கெடுப்பர்கள். முதல் நாள் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆகும். ஒன்பதாம் நாள் தோரோட்டம் நடைபெறும். இத்தேரில் அம்பாள் விநாயகர் திருவீதி சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறும். இரவில் சுவாமி அம்பாள் பூப்பல்லக்கில் திருவீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெறும். தேரோட்டத்தின் போது எல்லா சாதி மத மக்களும் சேர்ந்தே தேரை இழுப்பார்கள். பத்தாம் நாள் திருவிழாவின் போது தெப்பத்தில் அம்பாள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்

அனுமன் நதி:
சீதையை மீட்கச் சென்ற இராமபிரான் அங்கு நடைபெற்ற போரில் எண்ணற்ற வீரர்கள் இறக்கவே அவர்களுக்கு உயிருட்டும் பொருட்டு அதற்குரிய மூலிகையை கொண்டுவர அனுமானை பணித்ததாகவும், முலிகை தேடி முலிகை மலைக்குவந்த அனுமான் மூலிகையின் பெயரை மறந்ததால் மீண்டும் முலிகை பெயரை கேட்டுவர இலங்கை செல்ல வேண்டிய இக்கட்டான நிலையைஉணர்ந்து தன் சமயோகித புத்தியால் மூலிகை மலையையே பெயர்த்துஎடுத்து சென்றதாகவும் இராமாயணம் கூறுகிறது. மலையைப் பெயர்த்துச் சென்ற காலத்தில் அனுமானுடைய வால் தரையில் இழுத்தபடி சென்றதால் ஏற்பட்ட வழியே (வழி என்றால் ஆறு என்பது பொருள்) பணகுடி மலையிலிருந்து உற்பத்தி ஆகும் அனுமான் நதி ஆகும்.
பணகுடி அனுமன்நதி ரோஸ்மியாபுரம், பணகுடி, லெப்பக்குடியிருப்பு, பெருங்குடி, வடக்கன்குளம், சிவசுப்பிரமணியபுரம், கோலியான்குளம், ஊரல்வாய்மொழி, இருக்கன்துறை, ஸ்ரீரங்கநாராயணபுரம் வழியாக பெருமணல் சென்று அங்கு கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் மொத்த நீளம் 32 கிலோ மீட்டர் ஆகும்.

குத்திரபாஞ்சான் ஆருவி :
மேற்கு தொடர்ச்சி மலையில் பணகுடி கிராமத்திலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ளது. இதுவரை மாசுபடாமல் உள்ள அருவி என்பதும் (செங்)குத்தாக பாய்வதும் இதன் சிறப்பு. இந்த அருவிக்குச் செல்ல கரடு முரடான மலைப்பாதை மட்டுமே. மழைக்காலத்தில் அதிக நீர்வரத்து இருக்கும். இதன் தொடர்ச்சி பணகுடியில் அனுமன் நதியாக ஓடுகிறது. இதன் நீர் மருத்துவ குணமுள்ளதென கூறப்படுகிறது. 1993ம் ஆண்டு பெய்த பெரு மழையில் இவ்வருவியில் அதிக நீர் வரத்தினால் அனுமன் நதி ஓடிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

மகேந்திகிரி
மத்திய வின் வெளி ஆராய்ச்சி மையம்:
பணகுடி அருகே மகேந்திரகிரி மலையில் அமைந்துள்ள மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையம். தமிழகத்தில் உள்ள இஸ்ரோவின் ஒரே மையம். 1800 மீ. உயரம் கொண்ட மகேந்திரகிரி மலை அடர்ந்த வனமும், மூலிகைச் செடிகளும் சிற்றருவிகளும் கொண்டது. ஆரல்வாய்மொழிக்கும், பணகுடிக்கும் இடையே அதிக காற்று வீசும் பகுதி என்பதால் மலையின் பள்ளத்தாக்குப் பகுதியில் சுழல் காற்று வீசும். இம்மலைச் சரிவில்தான் பி.எஸ்.எல்.வி...,மற்றும் ஜி.எஸ்.எல்.வி. யின் திரவ இயக்கத் திட்ட மையம் செயல்படுகிறது.

நாகப்பட்டினம் தூய ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி  திருத்தலத்தில் கிறிஸ்துமஸ் அன்று எடுக்கப்பட்ட பிரத்தியேக புகைப்படங்கள்
28/12/2021

நாகப்பட்டினம் தூய ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தில் கிறிஸ்துமஸ் அன்று எடுக்கப்பட்ட பிரத்தியேக புகைப்படங்கள்

Address

Nithiya Kalyani Amman Temple
Radhapuram
627111

Alerts

Be the first to know and let us send you an email when Radhapuram, Tamilnadu, India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Radhapuram, Tamilnadu, India:

Share