Saint Francis Xavier Church, Senganam.

Saint Francis Xavier Church, Senganam. To Preach about jesus

வாழ்த்தொலி: இறைவா உம்மை வாழ்த்துகிறோம் ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம் திருத்தூதர்களை அருளணியும் ஆண்டவரே உம்மை போற்றுமே.லூக...
28/10/2025

வாழ்த்தொலி: இறைவா உம்மை வாழ்த்துகிறோம் ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம் திருத்தூதர்களை அருளணியும் ஆண்டவரே உம்மை போற்றுமே.

லூக்கா எழுதிய நற்செய்தியில் இருந்து வாசகம் அதிகாரம் 6 உயிர் உள்ள இறை வார்த்தைகள் 12 இல் 19 இறுதியாக

அந்நாள்களில் அவர் வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார்.

விடிந்ததும் அவர் தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்.

அவர்கள் முறையே பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், அவருடைய சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, யோவான் பிலிப்பு, பர்த்தலமேயு,

மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதி எனப்பட்ட சீமோன்,

யாக்கோபின் மகன் யூதா, துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து என்பவர்களே.

இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள்.

அவர் சொல்வதைக் கேட்கவும் தங்கள் பிணிகள் நீங்கி நலமடையவும் அவர்கள் வந்திருந்தார்கள். தீய ஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்கள் குணமானார்கள்.

அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால், அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர்.

🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻
இயேசுவுக்கு புகழ், மரியே வாழ்க
🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻

For what's app
https://chat.whatsapp.com/IE5opSccfgO1QsXlevgx0J?mode=wwt

For English
https://www.facebook.com/groups/3292484417526651/?ref=share&mibextid=NSMWBT

27/10/2025

வாழ்த்தொலி: ஆண்டவரே உமது வார்த்தையை உண்மை உண்மையினால் எங்களை உமக்கு அர்ப்பணமாக்கி யருளும்.

லூக்கா எழுதிய நற்செய்தி அதிகாரம் 13 உயிர் உள்ள இறை வார்த்தைகள் 10ல் இருந்து 17 இறுதியாக.

தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்:

இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்.

பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ' கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்;

வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன். '

ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ' கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும் ' என்றார். '

இயேசு, ' பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.

🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻
இயேசுவுக்கு புகழ், மரியே வாழ்க
🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻

For what's app
https://chat.whatsapp.com/IE5opSccfgO1QsXlevgx0J?mode=wwt

For English
https://www.facebook.com/groups/3292484417526651/?ref=share&mibextid=NSMWBT

25/10/2025

வாழ்த்தொலி: கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உறங்கினவரைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவு செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார்.

லூக்கா எழுதிய நற்செய்தியில் இருந்து வாசகம் அதிகாரம் 18 உயிர் உள்ள இறை வார்த்தைகள் 9 ல் இருந்து 14 இறுதியாக.

தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்:

இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்.

பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ' கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்;

வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன். '

ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ' கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும் ' என்றார். '

இயேசு, ' பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.

🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻
இயேசுவுக்கு புகழ், மரியே வாழ்க
🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻

For what's app
https://chat.whatsapp.com/IE5opSccfgO1QsXlevgx0J?mode=wwt

For English
https://www.facebook.com/groups/3292484417526651/?ref=share&mibextid=NSMWBT

25/10/2025
23/10/2025

Address

செங்கானம், ஆதி தெரு
Pudukkottai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saint Francis Xavier Church, Senganam. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share