Sri Arulmigu Arunachaleshwarar Temple

Sri Arulmigu Arunachaleshwarar Temple velur Arunachaleswarar temple. com

🔥🕉️  #தமிழ்_நாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும்!🏵️🏵️🦚🔱  #இந்து_சமயம் உருவான இடம்🏵️🏵️🏵️🏵️ #தமிழ்ந...
21/01/2025

🔥🕉️ #தமிழ்_நாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும்!🏵️🏵️

🦚🔱 #இந்து_சமயம் உருவான இடம்🏵️🏵️

🏵️🏵️ #தமிழ்நாடு தான்.

🙏🏽🔥 #இந்து_சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள்

1.சைவம்

2.சாக்தம்

3.வைஷ்ணவம்

4.கணாபத்யம்

5.கெளமாரம்

6.செளரம்

7.ஸ்மார்த்தம்

🔥🙏🏽 #சைவத்தின் முழு முதற் தெய்வமான சிவன் கோவில்கள் 283 இல்

🌀👣276 #கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது !!!

🌀👣 #வைணவத்தின் 108 வைணவ திவ்ய
தேசத் தலங்களில்

🏵️96 #ஸ்தலங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது!!

🔱🔥🦚 #கெளமாரத்தின் 21 முருகன் கோவில்களில்

🛕18 #கோவில்கள் தமிழ்நாட்டில்
தான் உள்ளது

🛕 #கணாபத்தியத்தில் அஷ்ட கணபதிகள் கோவில்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் தான் உள்ளது

🌄🛕 #செளரத்தில் சூரியனை தெய்வமாக தைப்பொங்கல் தினத்தன்று வழிபடுவது தமிழ்நாட்டில் தான்

🛕🔱🔥 #சாக்தத்தில் பராசக்தி நவதுர்க்கை கோவில்கள்அம்மன் கோவில்கள்

💃🛕🙏 #பெண்_தெய்வங்களுக்கு கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான்!!

🛕🔥🙏 #மேற்கண்ட ஏழு பெரும் பிரிவு தெய்வங்களையும் ஒட்டு மொத்த இந்துக்களாக வணங்கும்
ஸ்மார்த்தர்கள் இருப்பதும் தமிழ்நாட்டில் தான்!!

🙏🏽🔥 #பதிணெட்டு சித்தர்கள் தோன்றி, வாழ்ந்து !!

🙇🏽‍♂️🙏🏽 #ஜீவ_சமாதி அடைந்ததும் தமிழ்நாட்டில் தான்!!

🔥🌀🕉️ #ஆழ்வார்கள்..., நாயன்மார்கள்..

தோன்றி வாழ்ந்து முக்தி அடைந்தது
தமிழ்நாட்டில் தான் !!

பஞ்சபூத கோவில்களில்
நிலம்,
நீர்,
ஆகாயம்
நெருப்புக்கான
ஸ்தலங்கள்இருப்பது தமிழ்நாட்டில் தான் !!

நவக்கிரக கோவில்கள் அனைத்தும் இருப்பது தமிழ்நாட்டில் தான்

12 ராசிகள்,...மற்றும் 27
நட்சத்திரங்களுக்கான

🛕 #கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான் !!

🕉️ #சப்தலிங்க ஸ்தலங்கள் இருப்பது
தமிழ்நாட்டில் தான் !!

இந்து பண்பாட்டின் அடையாளமே
🏵️தமிழ்நாடு தான் !!

🔥🌀 #இந்து பண்பாட்டின் வாழ்வியல் முறையேதமிழ்நாடு தான்!!

🛕 #இந்து_பண்பாட்டின் மருத்துவமான
இயற்கை சித்த மூலிகை மருத்துவம் உருவானதே தமிழ்நாட்டில் தான்!!

🏵️ #இந்து பண்பாட்டின் இயற்கை வேளாண்மை தோன்றி செழித்தோங்கியது தமிழ்நாட்டில் தான் !!!

🔥🙏🏽 #தமிழ்நாடு முழுக்க முழுக்க ஆன்மிகபூமி
அனைவரும் அறிந்து கொள்வோம். ஓம் நமசிவாய போற்றி போற்றி....

ஓம் நமசிவாய நம ஓம் 🔥

நேற்று நடைபெற்ற பவுர்ணமி பூசை உண்ணாமுலை உடனமர் அண்ணாமலையார் திருக்கோயில்...வேலூர் பூந்தோப்பு
24/04/2024

நேற்று நடைபெற்ற பவுர்ணமி பூசை உண்ணாமுலை உடனமர் அண்ணாமலையார் திருக்கோயில்...வேலூர் பூந்தோப்பு

நேற்று நடைபெற்ற பிரதோச பூசை உண்ணாமுலை உடனமர் அண்ணாமலையார் திருக்கோயில்...வேலூர் பூந்தோப்பு
22/04/2024

நேற்று நடைபெற்ற பிரதோச பூசை உண்ணாமுலை உடனமர் அண்ணாமலையார் திருக்கோயில்...வேலூர் பூந்தோப்பு

🙏🏻 _ஒருவர் தினமும் கோவிலுக்கு ""திருவாசகம்" கேட்பதற்காகச் சென்று வந்து கொண்டிருந்தார்_._*அதனால் வீட்டுக்கு வர கொஞ்சம் லே...
16/04/2024

🙏🏻 _ஒருவர் தினமும் கோவிலுக்கு ""திருவாசகம்" கேட்பதற்காகச் சென்று வந்து கொண்டிருந்தார்_.

_*அதனால் வீட்டுக்கு வர கொஞ்சம் லேட் ஆகவும் ஆனது*_.

_அப்படி ஒரு இரவு அவர் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது வெறுப்பாகிப் போன அவரது மனைவி_,

_*"அப்படி என்ன தான் திருவாசகத்துலே கொட்டிக் கிடக்கு"*_......???

_"ஒரு நாளை போல இவ்வளவு லேட் ஆக வீட்டுக்கு திரும்பி வரேங்களே"_.

_*"டெயிலி அங்க போயிட்டு வாறீங்களே, உங்களுக்கு என்ன புரிந்தது சொல்லுங்க" என்று கேட்டார்*_.

அதற்கு அந்த மனிதர்.

" _எனக்கு ஒன்றுமே புரியவில்லை_.

_ஆனா, போயிட்டு கேட்டு வருவது நன்றாகவே இருக்கு" என்றார்_.

கோபமடைந்த மனைவி,

_*"முதல்ல வீட்டில இருக்கிற சல்லடையில் கொஞ்சம் தண்ணீர் வீட்டுக் கொண்டு வாங்க" என்றார்*_.

_அவரும் சல்லடையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு முழுதும் சிந்தியபடியே வந்தார்_.

_*மனைவியிடம் வந்த போது தண்ணீர் இல்லாமல் வெறும் சல்லடை மட்டுமே இருந்தது*_.

_மனைவி," தினமும் லேட்டா வரீங்க. கேட்டா_
_""திருவாசகத்துக்குப் போனேன் எங்கறீங்க"_......

_*"என்ன சொன்னாங்கன்னு கேட்டா"*_.....

_"ஒன்னும் தெரியல்லேன்னு சொல்லறீங்க"_.

_"நீங்க ""திருவாசகம்"" கேட்கப்போற லட்சணம் இதோ இந்த சல்லடையில் ஊத்தின தண்ணீ மாதிரித் தான்"*_..

_"எதுக்கும் பிரயோஜனம் கிடையாது", என்று கொட்டித் தீர்த்தாள்_.

_*அதுக்கு அந்த மனிதர் சொன்ன பதில் தான் கதையின் நீதியாக அமைய போகிறது*_...

_"நீ சொல்லறது சரிதான்"_

_"சல்லடையில் தண்ணீ வேணா நிரப்ப முடியாம போகலாம்"*_.

_"ஆனா, அழுக்கா இருந்த சல்லடை இப்போ பாரு.. நல்லா சுத்தமாயிடுச்சு"_.

_"அதுபோல,திருவாசக உபன்யாசத்தில சொல்ற விஷயம் வேணா எனக்குப் புரியாமலிருக்கலாம்"*_.

_"ஆனா, என்னோட மனசில இருக்கிற அழுக்கையெல்லாம் படிப் படியாக அது அகற்றுவதை என்னால் நன்கு உணர முடிகிறது", ன்னு சொன்னார்"_.

புரிதலை விட தெளிதலே எப்பவும் முக்கியம் 🙏

ஓம் நமசிவாய நமஹா 🙏

நேற்று பிரதோசம் வழிபாடு
23/03/2024

நேற்று பிரதோசம் வழிபாடு

நேற்று   நடைபெற்ற  சிவராத்திரியின்   பூஐையின் போது அருணச்சலேஷ்வரார் வேலூர் ஊராட்சி,
09/03/2024

நேற்று நடைபெற்ற சிவராத்திரியின் பூஐையின் போது அருணச்சலேஷ்வரார் வேலூர் ஊராட்சி,

இன்று  பிரதோஷம்🙏🙏 !எப்போது பிரதோஷம் என்றாலும் சிவபுராணம்  அவசியம் அனைவரும் ஓத வேண்டும் !பிரதோஷ வேளையில் இன்று 7/2/2024  ...
07/02/2024

இன்று பிரதோஷம்🙏🙏 !எப்போது பிரதோஷம் என்றாலும் சிவபுராணம் அவசியம் அனைவரும் ஓத வேண்டும் !பிரதோஷ வேளையில் இன்று 7/2/2024 புதன்கிழமை அன்று அவசியம் அனைவரும் படித்து இறைவன் அருளை பெற உதவும் அற்புத பதிகம் இந்த ஒரு பாடலுக்கு சிவபெருமான் மகிழ்ந்து நம் அடியார்களுக்கு வேண்டிய நன்மைகளை அருளி செய்வார் !முக்தி அருள்வார் !
சிவாயநம திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய🙏🙏ஓம் நமசிவாய🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏
ஓம் நமசிவாய🙏🙏ஓம் நமசிவாய🙏🙏ஓம் நமசிவாய🙏🙏
ஓம் நமசிவாய🙏🙏ஓம் நமசிவாய🙏🙏ஓம் நமசிவாய🙏🙏

சிவபுராணம்🙏🙏

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5


வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

திருச்சிற்றம்பலம்

சிவாயநம திருச்சிற்றம்பலம்

🌹🌿இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்! 🌿🌹🌹🌿அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கி செல்வம் பெருகிநீடித்த ஆரோக்கியத்துடன்...
15/01/2024

🌹🌿இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்! 🌿🌹

🌹🌿அனைவரின் வாழ்விலும்
மகிழ்ச்சி பொங்கி செல்வம் பெருகி
நீடித்த ஆரோக்கியத்துடன்
வாழ எல்லா வல்லாஇறைவனை வேண்டுகிறேன்!🌿🌹

🥥🍌🍎🍒🥭🍍

இன்று பிரதோச பூசை உண்ணாமுலை உடனமர் அண்ணாமலையார் திருக்கோவில்...வேலூர் பூந்தோப்பு கிராமம்
09/01/2024

இன்று பிரதோச பூசை உண்ணாமுலை உடனமர் அண்ணாமலையார் திருக்கோவில்...வேலூர் பூந்தோப்பு கிராமம்

வேளூர் அண்ணாமலையார் திருக்கோவில் ஆருத்ரா அபிஷேகம். சிவாயநம
26/12/2023

வேளூர் அண்ணாமலையார் திருக்கோவில் ஆருத்ரா அபிஷேகம். சிவாயநம

நேற்று நடைபெற்ற பிரதேச வழிபாடு
11/12/2023

நேற்று நடைபெற்ற பிரதேச வழிபாடு

நேற்று பௌர்ணமி பூசை மற்றும் கார்த்திகை தீபம். அண்ணாமலையார்
27/11/2023

நேற்று பௌர்ணமி பூசை மற்றும் கார்த்திகை தீபம். அண்ணாமலையார்

Address

Ponneri

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Arulmigu Arunachaleshwarar Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share