St.Antonys Church

St.Antonys Church its a church situated at maraimallai adigal salai near caddalore bus stop..its been named in the name of St.Antony of paduva..

02/05/2026
✝️ காலை ஜெபம் - 02/05/26  ✝️திருப்பாடல்கள் :  98ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள்...
02/05/2026

✝️ காலை ஜெபம் - 02/05/26 ✝️

திருப்பாடல்கள் : 98

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள்.

(திருப்பாடல் 98 : 1-4)

✝️ ஜெபம் ✝️

திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு செவிகொடுப்பவரே! நாங்கள் மன்றாடும் நாளில் விரைவாய் எங்களுக்கு பதிலளிப்பவரே! விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கிக் கொண்டிருப்பவரே! உம்மை வாழ்த்திப் போற்றி ஆராதிக்கின்றோம்.

"என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள்." என்று கூறிய எங்கள் இயேசுவே! உமது வார்த்தைகளை நாங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து உமது சீடர்களாக நாங்கள் என்றும் இருக்க மிக்க ஆவல் கொண்டுள்ளோம்.

என்னைத் தேர்ந்து கொண்ட என் தெய்வமே ! நான் கனி தரவும், அக்கனி நிலைத்திருக்கவும் அருள்புரிவீராக. இறைவா! இந்த வாரம் முழுவதும் என்னைக் காத்து வழி நடத்திய உமது மேலான கிருபைக்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.

இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

விண்ணுலகில் இருக்கிற ... (1)
அருள் நிறைந்த... (3)
பிதாவுக்கும், சுதனுக்கும்..(1)

ஆமென்.🙏
👉 Follow our page for more Catholic teachings, lives of the saints, and faith-deepening reflections.

Address

Pondicherry
605005

Telephone

8870460607

Website

Alerts

Be the first to know and let us send you an email when St.Antonys Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share