06/07/2026
ATHAYI ISLAMIC WOMEN'S COLLEGE, புதுச்சேரி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
அல்ஹம்துலில்லாஹ்!
06.07.2026 (திங்கட்கிழமை) அன்று நம் கல்லூரியில் நடைபெற்ற வாராந்திர தேசியக் கொடியேற்ற நிகழ்வு அல்லாஹ்வின் பேரருளால் சிறப்பாக நடைபெற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இந்நிகழ்வு, நமது கல்லூரியின் தலைவர் P.K.Y. அப்துல் சமது ஹாஜியார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மேலும், Starlight Kids School-இன் தாளாளர் திருமதி. கோகிலா லக்ஷ்மி. J., MCA., B.Ed. அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
இந்நிகழ்வில், மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவிகள் சமூக வலைத்தளங்களின் நன்மைகள் மற்றும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பான நாடகத்தை அரங்கேற்றினர். மாணவிகளின் சிறந்த நடிப்பும், கருத்து நிறைந்த காட்சிகளும் அனைவரின் பாராட்டைப் பெற்றன.
அல்ஹம்துலில்லாஹ்!
அதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய திருமதி. கோகிலா லக்ஷ்மி. J. அவர்கள், மாணவிகள் அரங்கேற்றிய நாடகத்தை மேற்கோள் காட்டி, இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களை பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், பெண் கல்வியின் முக்கியத்துவம், நல்லொழுக்கத்தின் அவசியம், சிறந்த பண்புகளை வளர்த்துக் கொள்வதன் முக்கியத்துவம் ஆகியவற்றை தெளிவாக எடுத்துரைத்து, மாணவிகளுக்கு பயனுள்ள அறிவுரைகளையும் ஊக்கமளிக்கும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, நமது கல்லூரியின் பேராசிரியர்களான பரீரா தபஸ்ஸும் முஅஸ்கரிய்யா அவர்களும், ஷாகின் பானு, MBA. அவர்களும் மாணவிகளுக்கு பயனுள்ள அறிவுரைகளையும் ஊக்கமளிக்கும் கருத்துகளையும் வழங்கினர்.
மேலும், அண்மையில் நடைபெற்ற Fresher's Meet நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவில், நமது கல்லூரியின் பேராசிரியை ஷாகின் பானு, MBA. அவர்கள் சிறப்பு விருந்தினர் திருமதி. கோகிலா லக்ஷ்மி. J., MCA., B.Ed. அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி மரியாதை செலுத்தினார்.
அல்லாஹ் தஆலா இந்நிகழ்வில் பங்காற்றிய அனைவரின் நற்சேவைகளையும் ஏற்றுக்கொண்டு, நமது கல்லூரிக்கு மேலும் பல நற்பணிகளை மேற்கொள்ளும் அருளையும் பரக்கத்தையும் வழங்குவானாக. ஆமீன்.
ஜஸாகுமுல்லாஹு கைரன். 🌹
தொடர்புக்கு - 9445106448