Nagavanam Palli Konda Sri Selva Anjaneyar Parigara Sthalam

Nagavanam Palli Konda Sri Selva Anjaneyar Parigara Sthalam Palli Konda Sri Selva Anjaneyar Parigara Sthalam

http://www.gurueswaralayam.com
08/05/2018

http://www.gurueswaralayam.com

Welcome to Guru Eswaralayam Charitable Trust, Eswaralayam - Meiyarivu Gnana Sabai and Pallikonda Sri Selva Anjaneyar Parihara Sthalam (Pollachi)

13/10/2016

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

10•09•2016,
சனிக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(மனிதனே புனிதன் முன் பக்கத் தொடர்ச்சி....)

தனது குருநாதரிடம் நாகராஜன் சுவாமி கேட்டார், "பரம தயாளரே! இப்படி இறந்தவர்கள் இதில் இருந்து மீள வழி கேட்டால் உதவி செய்வது உபகாரமல்லவா?"
"என்றார்.
"கேட்கின்ற எண்ணம் வரவேணும். ஆனால் பழி வாங்கும் எண்ணமுள்ள ஆவிஆத்மாக்களிடம் இருந்து பாதுகாப்புத் தேவையல்லவா?" சற்குரு நாதர் கேள்வி கேட்டார். உடனே நமது சுவாமி, "எத்தகைய பாதுகாப்பு, யாருக்குத் தேவை?" என்று கேட்டதும் தலையைத் தொட்டு ஆசீரீவதித்தவர் இடி போன்ற பெருங்குரலில் சிரித்தார்.

"மகனே வேடிக்கைக்கு இது நேரமும் அல்ல!" என்றவர்,
"உனது இரக்க குணத்தைப் பாராட்டுகிறேன். நீ நாளை மறுநாள் தோப்பு மலைக்கு வரவேண்டும். பிறரின் தோஷங்களை நீக்கவும், அது நம்மிடம் வாராமல் இருக்கவும், தீமை சக்திகளை விலக்கிக் கொள்ளவும் உனக்குப் போதிக்கப் போகின்றேன்" என்றவர், " உனது மனதில் ஏதோ சந்தேகம் தோன்றியுள்ளது. கேள், என்ன அது?" என்றார். மனதில் தைரியம் வரப் பெற்ற சுவாமி, "ஐயனே, தாங்கள் பழனியில் இடும்பன் மலை அடிவாரத்தில் ஜீவசமாதி ஆகியுள்ளதாகப் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் தாங்களோ என்னைச் சந்தித்து எதற்கோ தயார் செய்து வருகிறீர்கள் என்று எனது மனம் சொல்கிறது. உண்மையை அறியா மயக்கத்தில் மனம் தடுமாறி விடக் கூடாது என்பது அறிவுரை! விளக்கம் தந்தருளி எனக்குத் தெளிவைத் தாரீர், தாயாய் விளங்கும் சற்குருவே" என்று பணிவுடன் கோரிக்கை விடுத்தார்.

"மகனே நாகராஜா, தோப்பு மலைக்கு வருவாயல்லவா! அங்கு உனக்குத் தோஷ நிவிருத்தி செய்த பிறகு, பொறுமையுடன் நீ கேட்பதற்குத் தயார் என்றால், எனது விருத்தாந்தங்களைச் சொல்வதற்கு எனக்கு எவ்விதமான ஆட்சேபனையும் இல்லை" என்றவர்,
"சரி நீ வீட்டிற்குப் புறப்படு! நீ உனது மனைவியுடன் ஒன்றாக அமர்ந்து தியானம் செய்தால், அற்புதங்கள் வெளிப்படும். கால நேரத்தை அனுசரித்துச் செயல்படு. குடும்பத்தினர் உங்கள் இருவரின் தியானத்திற்கு எதிர்ப்பைக் காட்டுவார்கள். மனம் கலங்கக் கூடாது . சரி வருகிறேன்" என்று சொல்லிக் கொண்டார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

-- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M. மேகநாதன்.

13/10/2016

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

09•09•2016,
வெள்ளிக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(62) மனிதனே புனிதன் --
குரு சொன்ன அவரா இவர்?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பொள்ளாச்சியில் நடைபெற்ற தியானக் கூட்டத்தில் பற்பல காட்சிகளைச் சொன்னார்கள். சிலர் நல்ல ஈர்ப்பாக இருந்ததென்றும் பரவசப்பட்டார்கள். சுவாமியைப் பற்றி எல்லாம் விசாரித்துச் தெரிந்து கொண்டார்கள். தியானம் எப்படி என்று அந்தப் பெரியம்மா கேட்டார்கள். நன்றாக இருந்தது என்று சொல்லி அத்துடன் பேச்சை நிறுத்திக் கொண்டார். எல்லோரும் விடை பெற்றுப் போன பிறகு திருமதி.சுந்தரம்மாள் சுவாமியிடம்," அப்பா நான் ஒரு குருநாதரிடம் தத்துவம் படித்து வந்தேன். பாடங்கள் முடிந்த பிறகு எனது குருநாதர் என்னிடம் இன்னும் இருபது ஆண்டுகள் சென்றபிறகு இளம்வயது ஆசான் ஒருவன் வருவான். அவன் உனது சந்தேகங்களை நிவர்த்தி செய்வதோடு, பிறவா நிலைக்கு வழியும் காட்டுவான். உனக்கு முன்ஜென்மத் தொடர்பு கொண்ட ஆசானைப் பார்த்ததும் உனது உள்ளம் உருகும். நான் உனக்கு சொல்வது நடக்கும் என்றார். அப்பா இன்றுடன் அந்தக் கெடுவு பூர்த்தி ஆகிவிட்டது. நீ யாரப்பா? சொல்!"என்று கேட்டதும்,

சுவாமி, "சொல்கிறேன் அம்மா. நீங்கள் வழிபாடு செய்து வருவது எனது குருநாதரைத் தான்! படம் தான் மாறு பட்டிருக்கிறது" என்றார். பெரியம்மா, " சுவாமி நான் வயோதிகம் அடைந்து விட்டேன். எனது குழந்தைகளைத் தொட்டிலில் போட்டு தூங்க வைக்கத் தத்துவப் பாடல்கள் தான் தாலாட்டில் பாடுவேன். கடவுள் பக்தி மிகுந்த எங்களுக்கு வழி சொல்ல வேண்டும். நீங்கள் ஒருமுறை எங்கள் இல்லத்திற்கு வந்து உங்கள் குருநாதரைப் பற்றிக் கூற வேண்டும். அப்பா! வாருங்கள் " என வரவேற்றார். சுவாமி விடைபெற்று வந்தார்.

சுவாமியின் தகப்பனார் ஈரோடு முருகன் எண்ணை மில்லிற்கு நிலக்கடலை வியாபாரியாகச் சென்று விட்டார். மளிகைக் கடையைத் தாயாரும், பொன்னம்மா பாட்டியும் தகுந்த ஆட்களுடன் நிர்வாகித்து வந்தனர். சுவாமி விவசாயத் தொழிலைச் கவனித்து வந்ததால் தியானம் இருக்கப் போதிய அவகாசம் கிடைத்து வந்தது. மூத்த சகோதரியின் கணவர் திரு.K.தண்டபாணி வந்திருந்தார். வட இந்திய யாத்திரைக்குச் சீட்டுப் போட்டு இருப்பதாகவும், மாதாமாதம் சீட்டிற்கு அவரே பணம் கட்டி வருவதாகவும், பணம் சேர்ந்த பிறகு ஸ்பெஷல் பஸ் ஏற்பாட்டைத் திரு ரத்தினமும், அவர் தம்பி பாலுவும் செய்து வருகிறார்கள். உங்களுக்கு இது நல்ல ஆன்மிகப் பயணமாக அமைய வாழ்த்துக்கள்" எனக் கூறிச் சென்றார். அன்று இரவு வயல் காவலுக்கு சுப்பு, ராமன், மளிகைக் கடைப் பொறுப்பில் உள்ள காளிமுத்து மற்றும் சுவாமி நால்வரும் சென்றனர். வயல் ஆத்துப் பொள்ளாச்சி என்ற ஊரின் அருகே, ஆழியாற்றின் கிழக்குப் கரையில் இருந்தது. நிலவு வெளிச்சம் பகல் போல் வீசியது. வயல் அறுவடை சமயம். இரவு பதினோரு மணி. சுவாமி முன்னால் செல்ல காளிமுத்து பின்னால் வந்தவன் 'அம்மா..'. என்று அலறினான். வயலுக்குள் இருந்து நெற்கதிர்களை களவாண்டு கொண்டு இருந்த கும்பலில் ஒருவன் களிமண் கட்டியை வீசி எறிய சரியாகக் காளிமுத்து இடுப்பில் விழுந்தது. வலியில் துடித்த அவன் சமாளித்துக் கொண்டு சுவாமியைத் தாண்டி ஓடிச் சென்று கையில் இருந்த கம்பைக் குறிபார்த்து மண் கட்டி பறந்து வந்த திசை நோக்கிக் குறி தவறாமல் வீசி விட்டான்! கம்பு பட்டதும் நெல் திருடன் கத்திக் கதறி ஓடிச் சென்று ஆழியாற்றில் குதிக்க, அவன் தோழர்களும் ஆற்றில் குதித்துத் தப்பி ஓடினர்.

எல்லோரும் களத்து வீட்டிற்கு வந்து தேநீர் போட்டுச் சாப்பிட்டனர். ராமன் வீசி எறிந்த கம்பை எடுத்துவர, கம்பின் நுனியில் சிறு பேனாக்கத்தி கட்டப் பட்டிருந்தது. அது களவாணி கையில் பட்டு சிறு காயத்தை உண்டாக்கியதால் பயந்து ஓடிவிட்டிருந்தனர். சுவாமி காளிமுத்துவைக் கடிந்து கொண்டார். பென்சில் சீவும் சிறு கத்தி அது. இது தவறு. உன்னைத் திருத்திக் கொள் என்றார். காளிமுத்து இடுப்பில் ராமன் தைலம் தடவிவிடப் படுத்துக் கொண்டான். காலையில் மருதுதுவரிடம் சென்று வரவேண்டும் என்று சுவாமி அவனிடம் கூறினார். சுவாமி களத்து மேட்டில் நிலவைப் பார்த்தபடியே அதன் ஒளி அலைகளைக் கிரகித்துக் கொண்டிருந்தார். களத்து மேட்டில் இருந்து ஆற்றுக்குள் செல்லும் வழித்தடம் ஒன்று இருந்தது.அங்கிருந்து அழுகை ஒலி விசும்பலுடன் விட்டுவிட்டு வந்து கொண்டே இருந்தது. காளிமுத்து உறங்கிப் போயிருந்தான். சுப்பு, ராமன் கிழக்குப் பகுதியில் காவல் இருந்தனர். அழுவது அமானுஷ்யம் என்று புரிந்து கொண்டார். நிலவின் ஒளி, சூரியன் ஒளியின் கதிர்கள் நீரில் பட்டுப் பிரதிபலிக்கும் சக்தியை ஈர்க்கும் ஆற்றல் அவைகளுக்கு உண்டு! சுவாமி அருகே சென்றார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

-- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.

13/10/2016

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

08•09•2016,
வியாழக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(61) மனிதனே புனிதன் --
காட்சிகள்! காட்சிகள்!!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° தொலைக்காட்சிப் பெட்டியை விந்ஞானம் கண்டு வெளிப்படுத்தும் முன்பு, அது மனிதனின் அறிவில் இருந்த ஓர் ஞான அற்புதம்! இதனை யோகிகளும், ஞானிகளும் தனது தவவலிமையால் பெற்று தொலைநோக்குப் பார்வைக்குப் பயன்படுத்தி வந்துள்ளனர். தங்கள் உடலை அழியாமல் பாதுகாக்கும் ஒளஷதங்கள் மற்றும் காயகல்ப இரகசியங்களைக் கண்டறிவதற்காக ஞானக் கண்ணைத் திறந்து கொள்ளவும் கடும் தவம் புரிந்து வந்தனர். இடை விடாத முயற்சியால் அதனைப் பெற்று உலக நலனுக்குப் பயன்படுத்தி வந்தார்கள். அப்படிப்பட்ட ஞானியர்களின் ஆசீர்வாதமும், அனுபவ ஞானத்தினைப் பெறவும் வேண்டும் என்கிற தணியாத ஞானதாகம் உள்ளவர் நமது நாகராஜன் சுவாமி!

தியானக்கூட்டம் நடை பெற்றுக்க கொண்டிருந்தது. 'அருட்பா' என்ற சிறிய பாடல் புத்தகத்தில் இருந்து 'தாயே தந்தையே வணங்கிடுவேன் என் முதல் தெய்வமாக' என்ற பாடலை ஒருவர் பாட(வசன நடையில் தான்) மற்றவர்கள் அதனைப் பாடினார்கள். கோயிலின் தென்பகுதியில் சிறிய ஆலய அமைப்பில் சிவன் பிரதிஷ்ட்டை முன்பாக ஆண்கள் வடக்கு திசை பார்த்தும், பெண்கள் தெற்கு முகமாகவும் அமர்ந்திருந்தனர். அக் கூட்டத்தின் தலைவராக பொள்ளாச்சி டவுன் போலீஸ் ஸ்டேஷன் வீதியில் உள்ள குறிஞ்சி சில்க்ஸ் ஜவுளிக்கடை உள்ள பெரிய கட்டிடத்தின் உரிமையாளரும், தீப்பெட்டித் தொழிற்சாலை நடத்தி வந்த திரு. இராமசாமி என்பவர் இருந்தார்! டாக்டர் திரு.ராஜசேகரன் அவர்களின் மூத்த சகோதரி திருமதி. காந்திமதி அம்மாள் அவர்களின்ழ கணவனும் ஆவார்.

நமது சுவாமி அவர்கள் அங்கு அமைதியாக நின்று கொண்டிருந்தார். கூட்டத்தின் நடுநாயகமாக அமர்ந்து பாடிக் கொண்டிருந்த நமது டாக்டரின் தாயார் திருமதி.M.சுந்தரம்மாள் அவர்கள் சுவாமியைப் பார்த்து விட்டு, "தம்பி இங்கே வந்து நீயும் உட்கார்ந்து கொள். நாங்கள் எல்லோரும் தியானம் செய்கிறோம். நீயும் கண்களை மூடி "ஓம் ஈஸ்வராய குருதேவா" என்று தியானம் செய்யப்பா" என அன்புடன் கூறினார்கள்.

சிவன் கோயில் வாயில் படி முன்பு ஒரு சிறிய படம் வைக்கப்பட்டது. படத்தில் தவத்திரு வேணுகோபால சுவாமியும் மற்றொரு பாதியில் ஒன்பது தீ நாக்குகள் கொண்டு எரியும் அக்கினியின் நடுவே ஒரு பெரியவரின் தலை அச்சிடப்பட்டு, சமுத்திர நீர் இரத்தமயமாக ஒளிர, ரத்தக்கடலின் மீது மஞ்சள் வண்ணத்தில் சூரியன் தகதகவென உதயமாகி, ஆகாயமும் இரத்த மயமாகக் காட்டப்பட்டிருந்தது.

ஆகாயத்தில் பச்சை நிற எழுத்தில் 'ஓம் ஈஸ்வரப்பட்டாய குரு தேவர் அருளிய அருள் வாக்கு' என்றும் அதன் கீழே அரை வட்ட வடிவில் 'ஓம் ஈஸ்வராய குருதேவர்' எனவும் வித்தியாசமாக இருக்க, அது ஏதோ ஒரு கருத்தைக் கூற வருவது போன்று மனதில் பட்டது. அந்தப் படத்திற்கு முன்பு வைக்கப் பட்டிருந்த தட்டில் பேக்கரியில் இருந்து வாங்கி வந்த பன்கள், மற்றும் முறுக்கு வகைகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த நைவேத்தியம் சற்று வித்தியாசமாக இருந்தது.

படத்தில் இருந்த தவத்திரு வேணுகோபால சுவாமி என்பவரை எங்கேயோ பார்த்த மாதிரி மனதில் உதயமாகியது. சுவாமி அவர்களுக்கு அகக் காட்சிகள் உதயமானது. தவத்திரு வேணுகோபால சுவாமி மட்டுமல்லாது, டாக்டர் திரு. ராஜசேகரன் அவர்களின் தாயார் திருமதி சுந்தரம்மாள் அவர்களும், தனக்குச் ஜென்மாந்திரத் தொடர்பு உள்ளவர்கள் என்பதை அகக்காட்சியில் கண்டு மனம் சந்தோஷப்பட்டாலும் சுவாமிக்கு வெளியில் அதைச் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை.

அமைதியாக தியானத்தில் ஆழ்ந்து போனார். மெதுவாகக் கண்விழித்த போது எல்லோரும் சுவாமியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். பிறகு தங்களுக்குள் அவர்களின் பாஷையில் பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது திரு. இராமசாமி அவர்கள், " இதக் கேளுங்க! வீட்டில் அவரவர்கள் சொந்த மொழியில் பேசிக் கொள்ளுங்கள். இது பொது இடம். இங்கு தமிழில் பேசினால்தானே மற்றவர்களுக்கும் புரியும்" என்று தனது கண் கண்ணாடியை அணிந்து கொண்டு, சற்று கரகரப்பான குரலில் கணீரென்று பேசினார். அவர் பேசிய உண்மை அங்கிருந்த சிலருக்குப் பிடிக்க வில்லை என்பது அவர்களின் முகபாவனையில் இருந்து தெரிந்தது.

சுவாமிக்கு இன்னும் ஒரு சந்தோஷ அதிர்ச்சி காத்திருந்தது. "தியானத்தில் இருந்தவர்கள் எல்லோரும் அவரவர்களுக்குக் கிடைத்த காட்சிகள் பற்றிக் கூறுங்கள்" என டாக்டரின் தாயார் கூறியதும் அதிர்ந்து போனார் நமது சுவாமி!
'ஆஹா.. அகக்காட்சிகள் பற்றி நன்றாக அறிந்தவர்கள் போலத் தெரிகிறது. அதன் உண்மைகளை இவர்கள் எப்படிப் பெற்றார்கள் என்பதை அறிந்து கொள்ள வழி கிடைக்கும் போல வருகிறது. எப்படியும் இவர்களிடம் அறிந்து கொள்ளலாம்.எதற்கும் பொறுமையாக இருக்க வேண்டும்' என மனதில் நிம்மதி கொண்டார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!
-- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.

13/10/2016

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

07•09•2016,
புதன்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(60) மனிதனே புனிதன் --
தியானக் கூட்டம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அமைதியையும், நிம்மதியையும் விரும்பாதவர்கள் யார்? அவைகளை அடைவதற்கு உரிய வழிகள் மிகவும் சுலபமானவை என்று பேசிக் கொள்பவர்கள் ஏராளம்! ஆனால் அடையும் வழிகள் பற்றியோ ஒன்றும் பேசமாட்டார்கள். இது எல்லாவற்றையும் விடச் சுவாரஸ்யமானவை,
மற்றவர்களைவிடத் தாங்கள் தான் உலகிற் சிறந்த மேதாவிகள் என்ற எண்ணத்தில் "நான் சொல்வது புரிகிறதா? " என்று வார்த்தைக்கு வார்த்தை பேசும் போது அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

வாழ்வில் நாம் பல விஷயங்களைப் பலரிடமும் பேசிவிட்டு, ஏன்தான் இப்படிப் பேசினோம் என்று பல தடவைகள் வருத்தம் வேறு பட்டிருப்போம். எதைப்பற்றிப் பேசுவதானாலும், பேசுவதற்கு முன்பு, இந்த விஷயத்தை இவரிடம் 'சொல்லலாமா, அல்லது பேசக்கூடாதா' என ஒரு தடவை சிந்தித்துப் பார்த்து விட வேண்டும்.பிறகு பேசுவோமேயானால் அதனால் எந்தவிதத் துக்கங்களும், வருத்தங்களும் அவரிடம் சென்றடையாது.

அதையும்விடக் காலநேரம், இடம், பொருள் அறிந்த பிறகே நாம் வார்த்தைகளை வெளியில் விட வேண்டியது அவசியம் என்பதை உணர்தல் அவசியமானதாகும். அதனால் நமது, அமைதி, நிம்மதி, மகிழ்ச்சியும கூடக் காப்பாற்றப் பட்டிருக்கும்.

பிறர் நம்மிடம் பேசும் போது பேசுவதைப் கேட்டுக் கொண்டும், கவனித்துக் கொண்டுமிருத்தல் மிகவும் அவசியமானது. பிறர் பேசும்பொழுது, இடையிடையே ஏதாவது மறுத்துப் பேசாமல் இருப்பது மிகவும் அத்தியாவசியமானது. இதை ஒருமுறை கடைப்பிடித்துப் பார்த்தோமானால், நம்முடைய அமைதி எங்கே மறைந்து இருந்தது என்பதைக் கண்டு பிடித்து விடுவோம்.

பிறகு யாரும், எதையும், எப்பொருளையும் பற்றிப் பேச வரும் போது, அவர்களுக்கு மதிப்புக் கொடுத்து, மறுத்து எதிர் வார்த்தையாடாமல் பொறுமை காத்திட வேண்டும். அமைதியை, சந்தோஷத்தை நாம் நம்மிடம் தக்கவைத்துக கொள்ள இதைக் கைக்கொள்ள வேண்டும்.

புத்தியுள்ளவர்கள் பிழைத்துக் கொள்வார்கள். மனதைத் திருத்தி அமைத்து நன்மையைப் பெறுவார்கள். தனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் வந்துவிட்டால், மற்றவர்கள் பேச வரும் போது, மறுத்து மறுத்துப் பேசிக் கொண்டிருப்பவர்கள் உலகின்
உண்மையாகிய நிம்மதியை உணராதவர்களே. காலம் அவர்களுக்கு அமைதியைத்தரத் தயாராகவே உள்ளது. ஆனால் அதில்தான் இறையருள் முழுமையாக உள்ளது என அவர்களும் உணரும் காலம் வெகு அண்மையில் தான் இருக்கிறது. தேடி அடைய முயற்ச்சிக்க வேண்டுமல்லவா?

உலகில் உள்ள எல்லா இறை மார்க்கங்களும் சொல்லுகின்ற ஒரே உண்மை இயற்கையின் இயல்பு நிலையில் ஒத்து வாழ்தல் என்பதே. தீமை சக்திகள் மனிதனை, இறை நெறியில் செல்ல முயல்பவனை, தடுத்து தவறான பாதைக்கு அழைத்துச் சென்று விடுகின்றன. இதில் எத்துனை ஜாக்கிரதையாக வாழ வேண்டிய கட்டாயம் நியாயமாக, அவசியமாக ஏற்படுகிறது. உண்மையை உணர்வோம்! இறையருளை நாடுவோம்!

நமது சுவாமி அவர்கள் டாக்டர் திரு.ராஜசேகரன் அவர்களை ஒரு மாலை நேரம் சந்திக்கப் போனார். நல்ல விஷயங்கள், ஆன்மிக சம்பந்தப்பட்ட பல தகவல்களின் சுரங்கமாக அவர் அந்த சமயத்தில் திகழ்ந்தவர். பொள்ளாச்சி பாம்பே டையிங் அருகே அவரது மருத்துவ ஆலோசனைகள் கூடத்தில் வைத்து மீண்டும் ஒரு சந்திப்பு ஆக்கபூர்வமாக நிகழ்ந்தது. டாக்டரும் சுவாமியும் மனம்திறந்து உரையாடினார். சுவாமியைப்பற்றி எல்லா விஷயங்களையும் கேட்டறிந்து கொண்டார். சுவாமி தியானத்தில் இருப்பவர் என்று தெரிய வந்ததும் அவர் முகத்தில் மகிழ்ச்சி வெளிப்பட்டது.

டாக்டர் திரு. ராஜசேகரன் அவர்கள் ஒரு முக்கிய தகவலைத் தந்தார். "பொள்ளாச்சி சொளடேஸ்வரியம்மன் கோயிலில் தேவாங்கர்குல சமூகத்தினர், வாரவழிபாடாக கூட்டுதியானம் செய்து வருகின்றனர். இதில் யார் வேண்டுமானாலும் கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொள்ளலாம். வரும் ஞாயிறன்று எல்லோரும் சேலத்தில் நடைபெற்ற பெறும் ஒரு விஷேசத்தில் கலந்து கொள்ளச் செல்கின்றனர். அடுத்த ஞாயிற்றுக்கிழமை சந்திப்போம். உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள். அவர்களிடம் உங்களைப் பற்றிய தகவல்களைச் சொல்லி வைக்கிறேன்.நன்றி " என்று அவர் கூற சுவாமியும் நன்றி சொல்லி விடை பெற்றுக் கொண்டார்.

குறிப்பிட்ட கிழமையில் மாலை ஐந்து மணிக்குச் சென்ற சுவாமிக்கு, அங்கு யாரும் காணப்படாததால் டாக்டரைப் பார்க்கப் போனார். டாக்டர் அன்றைய தினம் வெளியூர் சென்றிருந்தார். அதற்கு அடுத்த வார ஞாயிற்றுக்கிழமை கோயிலில் சுமார் பத்துபேர் இருந்தனர். வசதி படைத்த அவர்களில் பெரும்பாலோர் பெண்கள். சுவாமிக்கு ஆச்சர்யம்!

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
-- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.

13/10/2016

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

06•09•2016,
செவ்வாய்க்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(59) மனிதனே புனிதன் --
நல்ல குணங்கள் மேலோங்கும்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுவாமி அவர்களிடம் நாங்கள் பழகிய காலம் தொட்டு இன்று வரையில் சிறுகச்கிறுக நமது குணங்களில் நல்ல மாற்றமும் அவர் எதிர்பார்க்கும் நல்ல குணங்கள் நம்மிடம் வளர்ச்சி பெற்று வருவதை நம்மால் உணர முடிகிறது.

தெயவீக பக்தி உணர்வுகளும், பணிவு குணங்களும் குடும்பத்தினரிடம் வளர்ந்து இருக்கிறது. நாவடக்கம் மற்றும் பிறருக்கு மரியாதை செலுத்தும் தன்மைகள் வளர்ந்து வருகிறது. குரு ஈஸ்வராலயத்தில் நமக்கு இது அனுபவமாகிறது. மற்றவர்களுடைய கருத்துக்கும் மதிப்பு தரும் பக்குவம் வருகிறது.இது எனது தாழ்மையான அபிப்பிராயம்.நன்றி!

நாச்சியார் மீனாம்பாள் அவர்களிடம் தாம் உணர்ந்த வழிமுறைகளை முதலில் எடுத்துக் கூறியதால் இறையருளுக்கு இருவருமே பாத்திரமானார்கள்.
இறைவனைப் பற்றி ஆன்றோர்கள் கூறியுள்ள கருத்துக்களைப் பற்றி சுவாமியம்மா அவர்களிடம் சுவாமி கூறுவதைக் கேட்டு, அப்படியே தியானத்தில் ஆழ்ந்து போய் விட்டார். சுவாமியும் தியானத்தில் அமர்ந்து இருந்தார்.

ஒருமுறை தம்பதிகள் இருவரும் பூஜை அறையில் அமர்ந்து இருந்தனர். சுவாமி அவர்கள் தனது துணைவியாரிடம்,"நீங்கள் இல்லறத்தில் நாட்டம் அற்று இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்டார். அதற்கு அவர்," அது என்னுடைய இயல்பான விருப்பம். பெற்றோர் உங்களை எனக்குத் தகுந்த துணை என்று தேர்வு செய்து விட்டனர். உங்கள் கிராமத்து ஜனங்கள் உங்களுடைய தெய்வீகத் தன்மையைப் பற்றி, எனது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். எனது துறவர நெறிக்கு உறுதுணையாக இருப்பீர்கள் என்று நம்பி உளப்பூர்வமாக உங்களை எனது கணவனாகவே மனதில் வரித்து விட்டேன்.உண்மையைச் கூறி விட்டேன் இனி உங்களது இஷ்டம்தான் எனது வாழ்வு" என்று சொல்லி அமைதியானார்.

என்ன ஒற்றுமை இருவருக்கும்!
மறுநாள் தனது குருநாதரை சந்திக்கும் பாக்கியம் கிட்டியது. தனது மனையாளின் கருத்து பற்றி அவரிடம் தெரிவித்தார். அதற்கு குருநாதர்," நாகராஜா அவளுக்கு வயது உன்னைவிட பன்னிரெண்டு ஆண்டுகள் குறைவு. மனதில் பக்குவம் வந்து விட்டது. இல்லறம் ஏற்றுக் கொள்ளும் உடல் பக்குவம் பெறாதவள். நாங்கள் உருவாக்கியுள்ள குருஈஸ்வராலயத்திற்குப் பணிபுரிய இரண்டு ஆண் குழந்தைகள் உங்களுக்குப் பிறப்பார்கள். அக்குழந்தைகள் பிறப்பதைக் கனவின் மூலம் அவள் பார்த்து ஆசை கொள்வாள். நீயும் உனது மனைவியும் தியானமிருப்பதை உங்கள் குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். நீ பொறுமையாக அவைகளைச் சமாளிக்க வேண்டும் " என்று கூறி தான் கேரள வனப்பகுதியில் உள்ள சித்தர்களைப் பார்த்து விட்டுப் பழனி திரும்பும் போது உன்னிடம் சில விஷயங்கள் கூற இருக்கிறேன். எதற்கும் தயாராக இரு" என்றவர் சென்று விட்டார்.

கணவனும் மனைவியும் இருவருமே ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதி ஆண்டவரை இடைவிடாத கருத்தில் கொண்டு புனித வாழ்வு வாழ்ந்தனர். நமது சுவாமியும் பராபரமே ஸ்ரீ ஈஸ்வரராக வெளிப்பட்டுத் தனக்கு குருநாதராக வந்து ஆன்மிகப் பாதையில் வழி காட்டி வருவதை தனது துணைவியாரிடம் எடுத்துரைத்தார். அவர்களும் குருநாதரை தரிசிக்க விருப்பம் உள்ளதாகத் தெரிவித்தார் . அவரிடம் அனுமதி பெறவேண்டும். எதற்கும் மனதினுள் அந்தக் கருத்திற்கு ஜீவன் உண்டாக்கு என சுவாமி தெரிவித்தார்.

இந்த சமயத்தில் சுவாமி அவர்களின் மூத்த சகோதரி திருமதி விஜயலக்ஷ்மியின் கணவர் திரு.தெண்டபானி அவர்கள் பொள்ளாச்சி தேங்காய் வியாபாரிகளுடன் வட இந்திய யாத்திரை செல்வதாகவும், வந்தால் சுவாமியை அழைத்துப் போவதாகவும் செய்தி அனுப்பினார். அவரும் தனது தகப்பனார் தாமரைக்குளம் திரு.கருப்பண்ணன் அவர்கள் செய்து வந்த தேங்காய் வியாபாரத்தைக் கவனித்து வந்தார். பொள்ளாச்சி திரு.இரத்தினம் லாரி புரோக்கர் அலுவகத்தில் அவரது தம்பி திரு.பாலு அவர்கள் இந்தப் பிரயாண ஏற்பாட்டைக் கவனித்து வந்தார். சுவாமியின் பெற்றோர் தங்கள் மருமகன் கருத்துக்கும் புறம்பாக எதுவும் சொல்ல மாட்டார்கள். மகனை வடஇந்திய யாத்திரை அனுப்ப சம்மதம் எனக் கூறினர்.
(மனிதனே புனிதன் வரலாறு தொடர்ந்து இன்னும் வரும் )

நன்றி! வணக்கம்!
-- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.

13/10/2016

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

05•09•2016,
திங்கட்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(58) மனிதனே புனிதன் --
உபதேசம் கடைப்பிடித்தல்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒரு மனிதனுக்கு உலக சாதனையாளராக மாற விருப்பம் இருந்தால் அவனுக்குத் துணையாக நிற்கின்ற ஒரு பெண்ணின் மனோபலம் மட்டும் கிடைத்து விட்டால், அந்த மனிதன் பெரும் ஆற்றல் சக்தி மிக்கவனாக, உலக சாதனையாளர்களின் வரிசையில் வைத்து மதிப்பும், மரியாதைக்கும் உரியவனாக ஆகி விடுவான். அப்படி அம் மனிதன் முன்னேற்றம் அடைவதற்குத் தேவையான நல்ல குணங்களுள் மிகவும் முக்கியமானவைகளில் ஒன்று உறுதியான தன்னம்பிக்கையும், மற்றொன்று ஞானிகள் சொன்னவற்றில் இறை சக்தியின் மீது பற்றும் அக்கருத்தில் நம்பிக்கை கொள்ளவும் வேண்டும். இதைத்தான் சுவாமி அவர்கள் தனது துணைவியாரிடம் கூறிக் கொண்டிருந்த ஞானசாரம்.

சுவாமியம்மா அவர்கள் உயரிய ஞான செய்திகளைக் கேட்டு விட்டு, இறைவன் நமக்கு என்ன செய்வார் என்று குழந்தையைப்போல கேட்டதும், சுவாமி சிரித்து விட்டார். இருந்தும் இக் கேள்வி அன்று தொட்டு இன்றுவரை எல்லோராலும் கேட்கப் படுவதால், குறிப்பாக திருமதி மீனாம்பாள் நாச்சியார் மனதினுள் என்றும் நிலையாகப் பதிவு ஏற்படுமாறு நிதானமாகக் கூறத் தொடங்கினார்.

*"ஒவ்வொரு உயிர்களுக்குள்ளும் ஆன்மா என்ற இறைசக்தி தங்கி இருக்கும். முழுமை பெற்ற அறிவின் சக்தியாய் அது மனிதனுக்கு இராமல் அறிவின் ஏக்கத்துடன், அறிவைத் தேடும் முயற்சியில் இருக்கும். காரணம் படைப்பின் தன்மை அதுதான்."

*"குழந்தையாய் இருக்கும் போது அறிவைத் தேடும் பக்குவம் வராமல் இறைவனை உணராமல் இருப்போம். அறிவின் முழுமை அதனைத் தேடும்போது தான் கிடைக்கும். அறிவைத் தேடுபவனுக்கு ஆன்மா பக்குவம் அடையும். ஆன்ம பக்குவம் பெற்றவர்களுக்கு இறை சிந்தனை அதிகரிக்கும். இதுதான் இயற்கையின் இயல்பு என்று சொல்லப்படுகிறது" என சுவாமி கூறியதும் சுவாமியம்மாவுக்கு ஆர்வம் அதிகமாகியது.

*"எந்த விஷயங்களைக் கேட்பதானாலும் தன்னை நிதானப் படுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன் நீங்கள் ஜெபம் செய்து கொண்டே கேட்பதால், நமக்குத் தேவையானவைகள் நமது ஆன்மாவில் பதிவாகும்" என்று சுவாமி கூறியதும் "ஓம் ஸ்ரீ ஈஸ்வரா" என்று மனதினுள் அவர் ஜெபம் ஆரம்பமாகி விட்டது.

தனது துணைவியார் நாவசையாமல் மனதினுள் ஜெபம் செய்யும் காட்சி சுவாமிக்கு அவரிடத்தில், பெரும் மதிப்பும் மரியாதையையும் ஏற்படச் செய்தது. சுவாமி இறைசக்திக்கு நன்றி கூறினார்.

"இறைவன் நமக்குச் செய்யும் நன்மைகள் இறைவன் மீது நாம் கொள்ளும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் கிடைக்கும். நமக்கு மாத்திரமல்ல! இறைவனால் படைக்கப்பட்ட அகில உலகங்களும் இறை நம்பிக்கையின் அடிப்படையில் தான் இயங்கி வருகின்றன! அதனால் இறைவன் மீது நம்பிக்கை கொண்டவர்கள் நிச்சயமாகப் பலன்களை அடைவார்கள்" என்றார்.
அதற்கு சுவாமியம்மா,"இறை நம்பிக்கை உடையவர்கள் தானே மிகத் துன்பத்தை அடைகிறார்கள். அதனை ஆண்டவன் நீக்க வருவாரா?" என்று வினவினார்.

"நீங்கள் பள்ளிக்கூடம் சென்று பாடம் கற்றுக் கொள்ளும் சமயத்தில் பரீட்சை எதற்காக வைக்கின்றார்கள்?"-சுவாமி.

சுவாமியம்மா,"அப்போதுதான் நான் படித்து அடைந்த தகுதி எனக்குக் கிடைக்கும்! எனது ஆற்றல் தெரியவரும்!" என்றார்.

"இறைவனும் மனிதனின் ஆத்மா தகுதி பெறவேண்டும் என்று தான் சோதனைகளைச் செய்வார். அப்போது துன்பத்தில் கலங்காமல் இறைவன் நிச்சயமாக நம்மைக் காப்பாற்றுவார் என்ற அசையா உறுதியும் நம்பிக்கையும் வந்து விட்டால் வாழ்வு வெற்றிதான்!" எனச் சிரித்தார். இன்முகம் காட்டித் சொல்லும் எந்த விஷயமும் தைரியத்தை உண்டாக்கும். அது தனது மனைவி முகத்தில் தோன்றுவதை சுவாமி கண்டார்.

"இனி முக்காலமும் எனக்கு இறைவன் மீது கொண்ட நம்பிக்கையை எதனாலும் , எவராலும் மாற்றமுடியாது" என்ற மீனாம்பாள் நாச்சியார் அவர்கள் முகத்தில் இறையருள் சுடர்விட்டுப் பிரகாசித்தது. இறைவனுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

" அப்படியே ஆகட்டும்" -- சுவாமி.

* "இறை நம்பிக்கை உடையவர்களை அகில உலகமும் நேசிக்கும்."
*"சகல செளபாக்கியங்களுடன் வாழ இறையருள் வழிகாட்டும்."
*"இறைக்கின்ற கேணி ஊருவதைப்போல ஏழை எளியவர்களுக்குத் தர்மம் செய்து வருவதால் மீண்டும் மீண்டும் செல்வம் பெருகும்."
*"தர்மம் செய்யாதவனுடைய செல்வத்தை இறைவன் அவனை விட்டு நீக்கி விடுகிறான்."
*"இறைசக்தி நம்முடைய சகல தோஷங்களையும் நீக்கி உத்தமமான நிலையைத் தருகின்றது."

*"தொழில் முதலிய உலகக் கடமைகளில் வரும் தடங்கல்களை எல்லாம் அகற்றி முன்னேற உதவும் "
*"எப்படி வாழ வேண்டும்? எப்படிப் பிழைக்க வேண்டும்? எப்படி ஜெயிக்க வேண்டும்? எனவழிகாட்டும்."
*"இறைவனை ஜெபம் செய்யும் போது தெய்வீக எண்ணங்கள் உதயமாகி, மனம் தூய்மை பெறும்"
*"நமது வினைகள் நல்ல வினைகளாக மாறும்"
*"இறைநம்பிக்கை உடையவர்களின் குணநலன்களும், நடபடிக்கைகளும் சிறப்புப் பெறும்."
(தொடர்ந்து வரும்)
-- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்! மதுரை M.மேகநாதன்.
நன்றி!

13/10/2016

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

04•09•2016,
ஞாயிற்றுக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(57) மனிதனே புனிதன் --
உபதேசம் கூறுதல்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தவத்திரு நாகராஜன் சுவாமி அவர்கள் தவத்திருமதி மீனாம்பாள் நாச்சியார் அவர்களுக்குக் கூறிய அறிவுரைகள் ஏற்கனவே பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை மீண்டும் ஒருமுறை சொல்லுவதில் எனக்கும் ஆனந்த அனுபவமே! இது "இறை பக்தி" என்ற தலைப்பில் வெளியானது.

"நம்மைப் பற்றி மற்றவர்கள் நினைக்க வேண்டும் என்று நாம் நினைப்பதற்குக் காரணம் உலகத்தின் மீது நமக்குள்ள பற்றும், ஆசையுமாகும். ஆனால் நம்மைப் பற்றி இறையருள் நினைக்கும்படி செய்வதே அவனருள் பெறும் செயலாகும். இதனையே ஆன்றோர்கள் தன்னை அறியும் வழி என்றும் கூறினார்கள்."

"நம்முடைய நல்ல செயல்களினாலும், சிந்தனைகளினாலும் நமது உள்ளம் முதலில் பக்குவம் அடைய வேண்டும். பக்குவப் பட்ட உள்ளத்தில் இறைவனைப் பற்றிக் கொள்ளுதலே சிறந்த பக்தி என்பது ஞானியர் வாக்கு! இறைவனது கருணை உள்ளத்தில் நாம் என்றும் நிலையாக இருப்போம். அதனால் நமக்கும் நன்மைகள் கிடைப்பதுடன் உலகத்திற்கும் அது பயனாகும்."

"நான் என்றும் என்னுடையது என்றும் நாம் நினைத்துக் கொண்டும், அதனைப் பிறரிடம் சொல்லிக் கொண்டு திரிவதாலும், அது நமது மனதில் அகங்கார குணத்தை வளர்த்து விடும். நம்மிடம் உள்ள அனைத்தும் சர்வேஸ்வரனாகிய ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியின் உடையது என்று எண்ணுவதால், எண்ணியதை நினைவினில் இருத்தி செயல் படுவதால் மட்டுமே நம்முடைய பேராசை குணங்கள் நம்மை விட்டு நீங்கிவிடும்."

"அதனால் நமக்குத தானதரும சிந்தனைகள் மேலோங்கி, நமது உள்ளத்தின் அன்பு குணம் வெளிப்பட்டு அது நம்மை உயர்த்தும்! வாழும் வாழ்க்கையும் சிறப்படையும்! மற்றவர்களுக்கு உபகாரமாக இருத்தலே, இறையருளைப் பெற்றவர்களின் கடமையாகும். உதவி மனப்பான்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல நல்ல ஆலோசனைகளைக் கூட அப்படித்தான் கேட்டு நம்மை(நமதறிவு) வளர்ச்சி பெறச் செய்து கொள்ள வேண்டும்."

இப்போதேு சுவாமி அம்மா (மீனாம்பாள் நாச்சியார்) சுவாமியிடம்," துக்கப்படுபவர்கள் என்ன செய்யவேண்டும்?"என்று கேட்டார்.

சுவாமி, "இறை பக்தியின் பால பாடமே முதலில் தனக்குத்தானே கேடுகள் செய்து கொள்வது கூடாது என்பதுதான். துக்கப்பட்டுக் கொண்டே இருப்பவர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள். அவர்களால் எக்காலத்திலும் இறைவன் அருளைப்பெற முடிந்திடாது. முதலில் தன்னை நேசிக்கப் பழக வேண்டும். அதனால் நமக்கு நம்மீது ஒரு மரியாதையையும், தகுதியும் ஏற்படும். அப்படிப் பட்ட உள்ளம் உடையவர்களால் தான் உலகத்தையும், இறைவனையும் நேசிக்க முடியும்."

உலகத்தை நேசிப்பவன் தான் 'இறைபக்தி' என்னும் 'பயிர்த் தொழில்' செய்யத் தகுதியுள்ள விவசாயி என்கின்றனர். 'இறை நம்பிக்கை' உடையவனால்தான் மக்களின் மனதில் 'நல்ல பண்பையும்', 'ஆற்றல் சக்தியையும்' விளைவிக்க முடியும். உலக மக்களை நேசிப்பதன் மூலமே இறைவனை அறிந்து கொள்ள முடியும்" என்றார்.

சுவாமியம்மா," இறைசக்தியைப் பெற வேறுவழிகள் இருக்கிறதா?" என்று சுவாமியிடம் கேட்டார்கள்.
அதற்கு சுவாமி, " இறைவன் நம்மைக் கைவிடாது காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை கொண்டு செயற்படும் போது தான், இறைவனின் மகிமை மனிதனிடத்தில் வெளிப்படுகிறது. இறைவன் அருள் பெற முடிவதோடு மனிதனின் நிலையும் அதனால உயர்வடைகிறது. அப்படிப்பட்ட உள்ளத்தில் இறையருளின் மெய்ப்பொருள் உண்மைகள் (சத்தியம் - வாய்மை); நேர்மையான நடத்தைகள் (தர்மம் - ஒழுக்கம்); தன்னைத்தானே கேடுறுத்தாமல் உலகத்தவர் மேல் செலுத்தும் அன்பு (நியாயம் - கடமைகள்) என்ற வழிகளில் 'சேவை செய்தல்' ஆகியவைகளில் நிச்சயமாக இறையருளை அடைய முடியும்" என்று கூறித்தனது மனைவியின் முகத்தைப் பார்த்து அன்புடன் சிரித்தார்.

சுவாமியம்மா," இறையருளில் மனம் இலயமாவது எவ்வாறு? சற்று விளக்கமாகக் கூற வேண்டுகிறேன்" என்றார்.
சுவாமி அதற்கு, "இன்னும் புரியும்படிக் கூறுவதென்றால் முதலில் சொன்னதைப்போல, எவனொருவன் தனக்குத்தானே நிந்தனைகள் செய்து கொள்கிறானோ அவனே இறைவனை நிந்திப்பவன் ஆகின்றான். இறைவனை உள்ளத்தில் வைத்துப் பூஜிப்பவன் தனது மனநிலைக்கொப்ப, 1.தலைவனாகவும்,
2.தாயாகவும், 3.தந்தையாகவும், 4.மாறாகவும், 5.நண்பனாகவும் பாவிக்கின்றனர்."

"அந்த அனுபவத்தில் 'மனோலயம்' ஏற்படுவதும் உண்மையே. அதனால் இறைவன் மீது நமக்கு ஓர் உரிமையும், பற்றும், பிடிப்பும் ஏற்படும் விடும். அதனால் 'சரணாகதி' தனித்துவம் உண்டாகிறது. தனது மெய்யறிவினால் தன்னைப் பக்குவப் படுத்திக்கொண்டு, இன்னும் சிறந்த முறையில் உலக மக்களின் நேசத்தையும் பெற்றுவிடுகின்றனர். சகல செளபாக்கியங்களுடன் வாழ இறைவன் மேல் கொண்ட பக்தி உதவுகிறது" எனக் கூறி மெளனமாக வீற்றிருந்தார்.

காத்திருந்து சுவாமியம்மா மற்றும் ஒரு கேள்வி கேட்டார்கள்," எந்தெந்த வகைகளில் இறையருள் உதவிபுரியும்? கூறுங்கள்" என்றார்.(இன்னும் வரும்)
நன்றி! வணக்கம
-ஸ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன்!

13/10/2016

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

04•09•2016,
ஞாயிற்றுக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(57) மனிதனே புனிதன் --
உபதேசம் கூறுதல்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தவத்திரு நாகராஜன் சுவாமி அவர்கள் தவத்திருமதி மீனாம்பாள் நாச்சியார் அவர்களுக்குக் கூறிய அறிவுரைகள் ஏற்கனவே பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை மீண்டும் ஒருமுறை சொல்லுவதில் எனக்கும் ஆனந்த அனுபவமே! இது "இறை பக்தி" என்ற தலைப்பில் வெளியானது.

"நம்மைப் பற்றி மற்றவர்கள் நினைக்க வேண்டும் என்று நாம் நினைப்பதற்குக் காரணம் உலகத்தின் மீது நமக்குள்ள பற்றும், ஆசையுமாகும். ஆனால் நம்மைப் பற்றி இறையருள் நினைக்கும்படி செய்வதே அவனருள் பெறும் செயலாகும். இதனையே ஆன்றோர்கள் தன்னை அறியும் வழி என்றும் கூறினார்கள்."

"நம்முடைய நல்ல செயல்களினாலும், சிந்தனைகளினாலும் நமது உள்ளம் முதலில் பக்குவம் அடைய வேண்டும். பக்குவப் பட்ட உள்ளத்தில் இறைவனைப் பற்றிக் கொள்ளுதலே சிறந்த பக்தி என்பது ஞானியர் வாக்கு! இறைவனது கருணை உள்ளத்தில் நாம் என்றும் நிலையாக இருப்போம். அதனால் நமக்கும் நன்மைகள் கிடைப்பதுடன் உலகத்திற்கும் அது பயனாகும்."

"நான் என்றும் என்னுடையது என்றும் நாம் நினைத்துக் கொண்டும், அதனைப் பிறரிடம் சொல்லிக் கொண்டு திரிவதாலும், அது நமது மனதில் அகங்கார குணத்தை வளர்த்து விடும். நம்மிடம் உள்ள அனைத்தும் சர்வேஸ்வரனாகிய ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியின் உடையது என்று எண்ணுவதால், எண்ணியதை நினைவினில் இருத்தி செயல் படுவதால் மட்டுமே நம்முடைய பேராசை குணங்கள் நம்மை விட்டு நீங்கிவிடும்."

"அதனால் நமக்குத தானதரும சிந்தனைகள் மேலோங்கி, நமது உள்ளத்தின் அன்பு குணம் வெளிப்பட்டு அது நம்மை உயர்த்தும்! வாழும் வாழ்க்கையும் சிறப்படையும்! மற்றவர்களுக்கு உபகாரமாக இருத்தலே, இறையருளைப் பெற்றவர்களின் கடமையாகும். உதவி மனப்பான்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல நல்ல ஆலோசனைகளைக் கூட அப்படித்தான் கேட்டு நம்மை(நமதறிவு) வளர்ச்சி பெறச் செய்து கொள்ள வேண்டும்."

இப்போதேு சுவாமி அம்மா (மீனாம்பாள் நாச்சியார்) சுவாமியிடம்," துக்கப்படுபவர்கள் என்ன செய்யவேண்டும்?"என்று கேட்டார்.

சுவாமி, "இறை பக்தியின் பால பாடமே முதலில் தனக்குத்தானே கேடுகள் செய்து கொள்வது கூடாது என்பதுதான். துக்கப்பட்டுக் கொண்டே இருப்பவர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள். அவர்களால் எக்காலத்திலும் இறைவன் அருளைப்பெற முடிந்திடாது. முதலில் தன்னை நேசிக்கப் பழக வேண்டும். அதனால் நமக்கு நம்மீது ஒரு மரியாதையையும், தகுதியும் ஏற்படும். அப்படிப் பட்ட உள்ளம் உடையவர்களால் தான் உலகத்தையும், இறைவனையும் நேசிக்க முடியும்."

உலகத்தை நேசிப்பவன் தான் 'இறைபக்தி' என்னும் 'பயிர்த் தொழில்' செய்யத் தகுதியுள்ள விவசாயி என்கின்றனர். 'இறை நம்பிக்கை' உடையவனால்தான் மக்களின் மனதில் 'நல்ல பண்பையும்', 'ஆற்றல் சக்தியையும்' விளைவிக்க முடியும். உலக மக்களை நேசிப்பதன் மூலமே இறைவனை அறிந்து கொள்ள முடியும்" என்றார்.

சுவாமியம்மா," இறைசக்தியைப் பெற வேறுவழிகள் இருக்கிறதா?" என்று சுவாமியிடம் கேட்டார்கள்.
அதற்கு சுவாமி, " இறைவன் நம்மைக் கைவிடாது காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை கொண்டு செயற்படும் போது தான், இறைவனின் மகிமை மனிதனிடத்தில் வெளிப்படுகிறது. இறைவன் அருள் பெற முடிவதோடு மனிதனின் நிலையும் அதனால உயர்வடைகிறது. அப்படிப்பட்ட உள்ளத்தில் இறையருளின் மெய்ப்பொருள் உண்மைகள் (சத்தியம் - வாய்மை); நேர்மையான நடத்தைகள் (தர்மம் - ஒழுக்கம்); தன்னைத்தானே கேடுறுத்தாமல் உலகத்தவர் மேல் செலுத்தும் அன்பு (நியாயம் - கடமைகள்) என்ற வழிகளில் 'சேவை செய்தல்' ஆகியவைகளில் நிச்சயமாக இறையருளை அடைய முடியும்" என்று கூறித்தனது மனைவியின் முகத்தைப் பார்த்து அன்புடன் சிரித்தார்.

சுவாமியம்மா," இறையருளில் மனம் இலயமாவது எவ்வாறு? சற்று விளக்கமாகக் கூற வேண்டுகிறேன்" என்றார்.
சுவாமி அதற்கு, "இன்னும் புரியும்படிக் கூறுவதென்றால் முதலில் சொன்னதைப்போல, எவனொருவன் தனக்குத்தானே நிந்தனைகள் செய்து கொள்கிறானோ அவனே இறைவனை நிந்திப்பவன் ஆகின்றான். இறைவனை உள்ளத்தில் வைத்துப் பூஜிப்பவன் தனது மனநிலைக்கொப்ப, 1.தலைவனாகவும்,
2.தாயாகவும், 3.தந்தையாகவும், 4.மகனாகவும்,
5.நண்பனாகவும் பாவிக்கின்றனர்."

"அந்த அனுபவத்தில் 'மனோலயம்' ஏற்படுவதும் உண்மையே. அதனால் இறைவன் மீது நமக்கு ஓர் உரிமையும், பற்றும், பிடிப்பும் ஏற்படும் விடும். அதனால் 'சரணாகதி' தனித்துவம் உண்டாகிறது. தனது மெய்யறிவினால் தன்னைப் பக்குவப் படுத்திக்கொண்டு, இன்னும் சிறந்த முறையில் உலக மக்களின் நேசத்தையும் பெற்றுவிடுகின்றனர். சகல செளபாக்கியங்களுடன் வாழ இறைவன் மேல் கொண்ட பக்தி உதவுகிறது" எனக் கூறி மெளனமாக வீற்றிருந்தார்.

காத்திருந்து சுவாமியம்மா மற்றும் ஒரு கேள்வி கேட்டார்கள்," எந்தெந்த வகைகளில் இறையருள் உதவிபுரியும்? கூறுங்கள்" என்றார்.(இன்னும் வரும்)
நன்றி! வணக்கம
-ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!

13/10/2016

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

03•09•2016,
சனிக்கிழமை.,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(56) மனிதனே புனிதன் --
இனிய வார்த்தைகள் கூறு!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நல்ல குணம் உடையவர்களின் சேர்க்கை நமக்கு எக்காலத்திலும் நன்மையும், மனதிற்குள் இன்ப உணர்வுகளை உண்டாக்கும்.

திருமண நிகழ்வு நடந்து கொண்டிருந்த சமயத்தில் தனது குருநாதர் பற்றியே சுவாமி சிந்தித்துக் கொண்டிருந்தார். அவருக்கு அது ஏக்கமாகவே இருந்தது. மணமக்களைச் சுற்றிலும் ஓதுவார்கள் அமர்ந்து தேவாரம் பாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பின்புறமாக ஒரு நாற்காலியில் அமர்ந்து தனது கையில் ஒரு வளைந்த சர்பம் போன்று விளங்கும் கம்பைப் பிடித்தபடி தனது குருநாதர் அமர்ந்து இருக்கும் காட்சி கண்டு ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார் நமது சுவாமி! வலது கையை உயர்த்தி ஆசி கூறும் அவரைக் கண்டு கையெடுத்துக் கும்பிட்டு "ஓம் ஸ்ரீ ஈஸ்வபட் ஆய சச்சிதானந்த சற்குரு தேவா சரணம்" என்ற தாரக மந்திரத்தை உச்சரித்தபடியே இருந்தார். குரு சிஷ்ய மனோபாவனை என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அது ஓர் அனுபவ ஞானம்! நமது சுவாமிக்கு சந்தோஷம்!

சுவாமி அவர்கள் வாழ்க்கையில் அவருடைய சந்தோஷம் எல்லோருடைய சந்தோஷமாக மாறி விடும். இதனை அனுபவத்தில் கண்டிருக்கிறோம். திருமண விழாவிற்கு வந்திருந்த அனைவருடைய மகிழ்ச்சிக்கும் இதுதான் காரணமாக இருக்கும்! திருமணம் இனிதே நடந்த பிறகு நண்பர்கள் தங்களின் சில கருத்துக்களைச் சுவாமியிடம் கூறினார்கள். அதற்கு சுவாமி," மறுவீடு அழைப்பிற்கு அவர்கள் வரும்போது நாம் எப்படிப் பட்டவர்கள் என்பதைப் புரிய வைத்து விடுவோம்" என்றதும், திரு.ஜியாவுத்தீனும், திரு.சுப்பிரமணியும்," சரிசரி அப்படியே செய்து விடுவோம்" என்றனர்.

மாப்பிள்ளை, பெண்ணையும் கோலாகலமாக கிராமத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்று பட்டாசுகள் வெடித்தும் , ஆடியும் பாடியும் ஆனந்தம் கொண்டாடினர். ஊரே தங்கள் வீட்டு நிகழ்ச்சியாக விருந்து கொடுத்து உபசரித்தனர். பெண் வீட்டார் உறவினர்கள் தட்டுமுட்டு சாமான்களுடன் அலட்சியமாக வந்தனர். ஊர் மக்கள் திரண்டு அவர்களுக்குக் கொடுத்த மரியாதையும், உணவு உண்ணச் செய்தபோது செய்த உபசரிப்புகளில், சற்றுத்தட்டுத் தடுமாறிக் கிறங்கி அசட்டுச் சிரிப்புடன் அவர்கள் இருப்பதைக் கண்டு நண்பர்கள் பொறுப்புடன் நடந்து கொண்டனர். மேலும் அவர்களிடம் நட்புடன் அளவளாவி மகிழ்ந்தனர். இதனைக் கண்டு அவர்களுக்கு மாப்பிள்ளை வீட்டாரிடமும், கிராமத்தினரிடமும் மிகவும் பிரியம் ஏற்பட்டு விட்டது. நன்கு சந்தோஷத்துடன் கலகலப்பாக மாறி விட்டனர்.

சுவாமியின் மாமனார் ஐயா தெய்வீக உணர்வு உள்ளவர். தனது தகப்பனார் இறந்த காலத்தில் தனது உடன் பிறந்தவர்கள் அனைவருக்கும் நல்ல முறையில் திருமணம் செய்து வைத்தவர். அவர்களுக்குத் தேவையான வசதி வாய்ப்பு க்களை உண்டாக்கிக் தந்தவர். தனது கடைசி காலம் வரையில் சுவாமியின் கூடவே அவர் வாழ்ந்தார். திருமதி. மீனாம்பாள் நாச்சியார் அவர்கள் தனது தியான ஏக்கத்தை சுவாமியிடம் வெளிப்படுத்தினார். எப்போது தெரியுமா?

திருமணத்திற்குப்பிறகு மூன்று மாத காலம் எதுவுமே பேசாமல் மெளனத்தைக் கடைப்பிடித்து வந்தார் திருமதி மீனாம்பாள் நாச்சியார் அவர்கள்! சுவாமி தியானத்தில் ஆழ்ந்து இருப்பதை உண்ணிப்பாகக் கவனித்து வந்தார். அது அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. பூஜை அறையில் உள்ள ஒரு தட்டில் பொறித்திருந்த சில வாசகங்களைத் தினமும் படித்து வந்தவர், மூன்று மாதம் கழித்து சுவாமி அவர்களிடம் மனம் திறந்து பேசினார். இந்த வாசகங்கள் தனக்கு மிகவும் பிடித்துப் போனதாகவும், தியானத்தைக் கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளதாகவும் கூறி, சுவாமிக்கு தகடு கிடைத்த விவரங்களைக் கேட்டறிந்து கொண்டார்கள். அந்த வாசகம் இதுதான் :
புகழ் கண்டு மயங்காதே!
புகழ் தேடிச் செல்லாதே!
புகழாரம் பாடாதே!

இன்னல் கண்டு கலங்காதே!
இகழ்ச்சி கண்டு பதறாதே!
இகழ்ந்துரைக்க எண்ணாதே!

சுவாமி அவர்கள் தனக்கு வாய்த்த மனைவி தனது மனம் போல் இருப்பது கண்டு இறைசக்திக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். சுவாமி அம்மா என்று அனைத்து பக்தர்களும் அன்புடன் அழைக்கப்பட்ட அந்த மாதரசியிடம் தனது தியான அனுபவங்களைத் தவத்திரு நாகராஜன் சுவாமி அவர்கள் எடுத்துரைத்தார். இனி அந்த விபரங்களைக் பற்றி அறிந்து கொள்வோம்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

-- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.

Address

Nagavanam Palli Konda Sri Selva Anjaneyar Parihara Sthalam, Vaaikalmedu, Nanjegoundan Pudur, Coimbatore Main Road
Pollachi
642002

Opening Hours

Monday 6am - 8pm
Tuesday 6am - 8pm
Wednesday 6am - 8pm
Thursday 6am - 8pm
Friday 6am - 8pm
Saturday 6am - 8pm
Sunday 6am - 8pm

Telephone

+919894439049

Alerts

Be the first to know and let us send you an email when Nagavanam Palli Konda Sri Selva Anjaneyar Parigara Sthalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Nagavanam Palli Konda Sri Selva Anjaneyar Parigara Sthalam:

Share

Category