அல் அக்ஸா பள்ளிவாசல் பெரியகுளம்

  • Home
  • India
  • Periyakulam
  • அல் அக்ஸா பள்ளிவாசல் பெரியகுளம்

அல் அக்ஸா பள்ளிவாசல் பெரியகுளம் மறுமை சிந்தனை

நேபாளம் மக்களுக்காக இறைவன் இடத்தில் பிரார்த்திப்போம். நேபாளத்தில் கடுமையான வெள்ளம் காரணமாக மிக பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது...
26/08/2026

நேபாளம் மக்களுக்காக இறைவன் இடத்தில் பிரார்த்திப்போம்.

நேபாளத்தில் கடுமையான வெள்ளம் காரணமாக மிக பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது அந்த மக்கள் மிக பெரிய துன்பத்தை சந்தித்து உள்ளனர்.

இந்த மிக பெரிய கொடூரமான வெள்ள சேதத்தில் இருந்து அந்த மக்கள் மீண்டு வர அவர்களுகாக இறைவன் இடத்தில் பிரார்த்திப்போம்..

இப்படிக்கு.
I.முஹம்மது முனீர்
மாநில துணை தலைவர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்..

ிரிவு

கட்டுரை போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் 30 ம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.கம்பம் நகர இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ச...
25/08/2026

கட்டுரை போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் 30 ம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

கம்பம் நகர இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கம்பம் மக்கா பள்ளிவாசல் நடத்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு கட்டுரை போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ்.

30.08.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கம்பம் 24 மனை தெலுங்கு செட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட வரலாற்றை பதிவு செய்த வரலாற்று சகோதரர்கள் சகோதரிகள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படும்.

கல்லூரி பேராசிரியர்கள் அடங்கிய குழு தேர்வு செய்த

முதல் பரிசு இரண்டாம் மூன்றாம் பரிசுகள் பெறுபவர்கள் குறித்த விபரங்கள் நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும்.

கட்டுரை எழுதிய அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படும்.

வரலாற்றை அறிய எடுத்த முயற்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இறைவன் அருள் செய்வானாக.

வரலாற்றை அறிவோம் வரலாறு படைப்போம்..

அனைவரையும் அன்புடன் அழைக்கிறது
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
கம்பம் நகரம்
தேனி மாவட்டம்..

பெரியகுளம் நகரம் சார்பில் ஈமானிய அமர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டம் பெரியகுளம் நகரம் சார்ப...
24/08/2026

பெரியகுளம் நகரம் சார்பில் ஈமானிய அமர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டம் பெரியகுளம் நகரம் சார்பில் நேற்று அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது தலைமையில் ஈமானிய அமர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் காயல்பட்டினம் தாஃவா குழு சகோதரர்கள் தாஃவா பணி குறித்து பவர் பாயிண்ட் மூலம் வகுப்பு எடுத்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

ிரிவு

கம்பத்தில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டம் மேகமலை வருசநாடு பகுதியில் உள்ள மக்களை வெளியேற்ற ச...
23/08/2026

கம்பத்தில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் மேகமலை வருசநாடு பகுதியில் உள்ள மக்களை வெளியேற்ற சொல்லும் உச்ச நீதிமன்றம் உத்தரவை மறு பரிசீலனை செய்ய கோரி கம்பத்தில் வ.உ.சி திடல் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேகமலை வருசநாடு பகுதியில் உள்ள மக்கள் சார்பில் லிங்கம் மற்றும் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டி தலைவர் ஜெயினூலாபுதீன் அம்பா அவர்கள் தலைமை தாங்கி துவக்க உரையாற்றினார்..

மனித நேய மக்கள் முன்னேற்றக் கழகம் மாவட்ட தலைவர் பக்கீர் மைதீன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் யாசர் அராபத்,

இதில் திமுக மாநில கொள்கை பரப்பு செயலாளர் இரா பாண்டியன் வடக்கு நகர செயலாளர் வீரபாண்டியன் தெற்கு நகர செயலாளர் பால்பாண்டி ராஜா

திமுக தலைமை பேச்சாளர் பாண்டித்துரை வழக்கறிஞர் துரை நெப்போலியன் மற்றும் நிர்வாகிகள்.

தேமுதிக மாவட்ட செயலாளர் செல்லத்துரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஏரியா குழு தலைவர் லெனின், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மா து. தலைவர் கல்யாண சுந்தரம் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி, எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் அபுபக்கர் சித்தீக், திராவிடர் கழகம் மாவட்ட தலைவர் செந்தில் குமார், ஜாக் மாவட்ட தலைவர் யாசர் அராபத்,மக்கள் நீதி மைய்யம் நகர தலைவர் ராஜா முஹம்மது மற்றும் பல்வேறு கட்சிகள் ஜனநாயகக் அமைப்புக்கள் நிர்வாகிகள் உரையாற்றினார்கள்.

கண்டன‌கோஷங்கள் தமுமுக அன்சாரி மற்றும் INTJ அஜ்மீர் ஆகியோர் எழுப்பினர்

நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்..

23/08/2026

மேகமலை வருசநாடு பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்ற சொல்லும் உச்ச நீதிமன்றம் உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரி

கம்பத்தில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் யாசர் அராபத் உரை.

தேனி மாவட்டம் ஆலோசனை கூட்டம் மாநில செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டம் ஆலோசனை கூட்டம் 21....
21/08/2026

தேனி மாவட்டம் ஆலோசனை கூட்டம் மாநில செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டம் ஆலோசனை கூட்டம் 21.08.2026 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகை முடித்து பெரியகுளம் அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில்.

மாநில செயலாளர் யாசர் அராபத் தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் மாவட்ட தலைவர் ஜமால் முஹையதீன் ,மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது,மாவட்ட செயலாளர் முபாரக் அலி, மாவட்ட பொருளாளர் சிட்டி சாகுல் ஹமீது மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் அஜ்மீர் காஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆலோசனை கூட்டத்தில்.

1.பெரியகுளத்தில் இன்ஷா அல்லாஹ் மூன்று மாத செயல் திட்டமாக மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம் மற்றும் தாஃவா பணிகளை முன் எடுப்பது.

2. கம்பத்தில் சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரை போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சியை இன்ஷா அல்லாஹ் ஆகஸ்ட் 30 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடத்துவது.

3. போதை ஒழிப்பு குறித்து மாவட்ட முழுவதும் தெருமுனை பிரச்சாரம் முன் எடுப்பது ‌

4.மாவட்ட முழுவதும் மார்க்க பணிகளை முன் எடுப்பது மற்றும் வரும் ஞாயிறு கிழமை பெரியகுளத்தில் தாயிக்கள் கலந்து ஆலோசனை கூட்டம் வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

இதில் பெரியகுளம் நகர நிர்வாகிகள் கம்பம் நகர நிர்வாகிகள் தேனி நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ிரிவு

சேப்பாக்கம் லாக் நகரில் மாநில தலைவர் சுதந்திர தின உரையாற்றுகிறார்.. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சேப்பாக்க...
10/08/2026

சேப்பாக்கம் லாக் நகரில் மாநில தலைவர் சுதந்திர தின உரையாற்றுகிறார்..

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சேப்பாக்கம் லாக் நகர் குடியிருப்பு சங்கம் இணைந்து நடத்தும் சுதந்திர தின நிகழ்ச்சியில்.

மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சுதந்திர தின உரை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் முஹம்மது சித்திக் அவர்கள் உரையாற்ற உள்ளார்.

ிரிவு

மாஷா அல்லாஹ் ♥️ ♥️ ♥️ பெரியகுளம் அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் அல் மதரஸத்துஸ் ஸாலிஹீன் அரபி கல்லூரி மாணவர்கள் உடன் முத...
06/08/2026

மாஷா அல்லாஹ் ♥️ ♥️ ♥️

பெரியகுளம் அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் அல் மதரஸத்துஸ் ஸாலிஹீன் அரபி கல்லூரி மாணவர்கள் உடன்

முதல்வர் மெளலவி சாகுல் ஹமீது பாக்கவி அவர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் யாசர் அராபத், மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது, மாவட்ட செயலாளர் முபாரக் அலி,மாவட்ட பொருளாளர் சிட்டி சாகுல் ஹமீது,ஆசிரியர் ஹிதாயத்துல்லாஹ், கம்பம் நகர செயலாளர் சாகுல் நகர நிர்வாகி உமர் பாருக் ஆகியோர்..

எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ...
04/08/2026

எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்..

தமிழ்நாட்டில் ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறதா,அல்லது சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறதா என்ற கேள்வியை எழுப்பும் வகையில் இந்த கைது நடவடிக்கை அமைந்துள்ளது.கருத்து வேறுபாடுகளையும்,அரசியல் விமர்சனங்களையும் ஜனநாயக ரீதியாக எதிர்கொள்ள வேண்டிய அரசு,கைது நடவடிக்கைகளை கையில் எடுப்பது ஜனநாயகத்திற்கு நல்ல அறிகுறி அல்ல.

நாளை சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில்,அதற்கு முன்பாகவே அவசர அவசரமாக எதிர்க்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை கைது செய்திருப்பது,சட்டப்பேரவையில் எழுப்பப்படவிருந்த கேள்விகளுக்கும்,அரசின் மீது முன்வைக்கப்படவிருந்த விமர்சனங்களுக்கும் பதிலளிக்க முடியாத அச்சத்தையே வெளிப்படுத்துகிறது.

அநாகரிகமான பேச்சுகளுக்கு கைது செய்வதுதான் தீர்வு என்ற கொள்கையை இந்த அரசு பின்பற்றுவதாக இருந்தால்,கடந்த காலங்களில் பல்வேறு தருணங்களில் தரக்குறைவான மற்றும் நாகரிகமற்ற கருத்துகளை வெளியிட்ட ஆளுங்கட்சியான தவெகவைச் சேர்ந்த பல பொறுப்பாளர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டுமே தவிர,எதிர்க்கட்சியினருக்கு மட்டும் தேர்ந்தெடுத்து பயன்படுத்தப்படும் ஆயுதமாக மாறக் கூடாது.

எதிர்க்கட்சிகளை மிரட்டி அமைதிப்படுத்தலாம் என்று அரசு நினைத்தால் அது மிகப்பெரிய தவறான கணிப்பாகும்.ஜனநாயகத்தின் குரலை அடக்க முயலும் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களிடையே ஆட்சியின் மீது அதிருப்தியை அதிகரிக்கும்.

இத்தகைய சர்வாதிகாரப் போக்கை விஜய் அரசு உடனடியாக கைவிட்டு,ஜனநாயக மாண்புகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் மதிக்க வேண்டும். இல்லையெனில்,ஜனநாயக விரோத செயல்பாடுகளால் மக்களின் நம்பிக்கையை இழந்து,இந்த சர்வாதிகார ஆட்சி மக்களால் தூக்கி எறியப்படும் நாள் வெகுதூரத்தில் இருக்காது.

A.முஹம்மது ஷிப்லி
பொதுச் செயலாளர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்..

ிரிவு

புது வட்டார கிளை சந்தித்து நிர்வாகிகள் மத்தியில் மாநில தலைவர் உரையாற்றினார். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் புது ...
02/08/2026

புது வட்டார கிளை சந்தித்து நிர்வாகிகள் மத்தியில் மாநில தலைவர் உரையாற்றினார்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் புது வட்டார கிளை சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் முஹம்மது சித்திக் அவர்கள் நிர்வாகிகள் சகோதரர்கள் மத்தியில் ஜமாஅத் பணிகள் குறித்து உரையாற்றினார்.

இதில் மாநில துணை பொதுச் செயலாளர் சையத் அலி மாநில செயலாளர் சுக்கு அலி காஞ்சி மாவட்டம் தலைவர் கானத்தூர் யூசுப் மாவட்ட செயலாளர் அசன் அலி மாவட்ட பொருளாளர் அணஸ் ரஹ்மான் மாவட்ட துணை தலைவர் முஹம்மது அலி மாவட்ட துணை செயலாளர் முஹம்மது மைதீன் மற்றும் நிர்வாகிகள் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் ஏற்கனவே மிக பெரிய அளவில் பணிகளை செய்த சகோதரர்கள் கலந்து கொண்டனர் அடுத்த கட்ட பணிகள் குறித்து சகோதரர்கள் மத்தியில் கலந்துரையாடல் நடைபெற்றது.

ிரிவு

Address

AL AQSA MASJID, QUAID-E-MILLAT NAGAR, VADAKARAI PERIYAKULAM
Periyakulam
625601

Opening Hours

Monday 5am - 9:30pm
Tuesday 5am - 9:30pm
Wednesday 5am - 9:30pm
Thursday 5am - 9:30pm
Friday 5am - 9:30pm
Saturday 5am - 9:30pm
Sunday 5am - 9:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when அல் அக்ஸா பள்ளிவாசல் பெரியகுளம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category