ஓதிப் பார்க்கலாம் வாங்க

  • Home
  • India
  • Perambur
  • ஓதிப் பார்க்கலாம் வாங்க
Directions Website

ஓதிப் பார்க்கலாம் வாங்க இப்பக்கத்தில் இணைவோருக்கு இலகுவான ம?

அடியேன் மௌலவி, A. R. ஃபரீதுத்தீன்  ஆலிம் மஹ்ளரி M. A. ஆகிய நான் காதிரிய்யா தெய்வீக மையத்தின் உரிமையாளர் ஆவேன்.எனது பதினா...
21/05/2024

அடியேன் மௌலவி, A. R. ஃபரீதுத்தீன் ஆலிம் மஹ்ளரி M. A. ஆகிய நான் காதிரிய்யா தெய்வீக மையத்தின் உரிமையாளர் ஆவேன்.

எனது பதினாறாம் வயதில் பள்ளிப்படிப்பை முடித்ததும் இஸ்லாமிய மதகுருமார்களுக்குரிய ‘மௌலவி ஆலிம்’ ஏழு ஆண்டு காலப் பட்டயப் படிப்பை தொடர்ந்தேன். அதன் ஆரம்பமாக 1992 ஆம் ஆண்டில் சென்னை சைதாபேட்டையில் அப்போதிருந்த ஹிஸ்புல்லாஹ் அரபிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தேன். அதைத்தொடர்ந்து வேலூரிலுள்ள அல்-பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் பயின்றேன். பிறகு, சென்னை ஜமாலியா அரபிக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் பயின்று இறுதியாக 1998 ஆம் ஆண்டு காயல்பட்டினத்திலுள்ள மஹ்ளறதுல் காதிரிய்யா அரபிக் கல்லூரியில் ஏழாம் ஆண்டு பயின்று அங்கேயே ‘மௌலவி ஆலிம்’ பட்டமும் பெற்றேன். அதற்குப் பிறகு சென்னைப் பல்கலைக்கழத்தில் அரபு மொழி இயல் துறையில் இளங்கலைப் பட்டமும் சென்னை புதுக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் முதுகலைப் பட்டமும் பெற்றேன்.

காதிரிய்யா தெய்வீக மையம் 1963 ஆம் ஆண்டில் எனது அன்புக்குரிய தந்தை மறைந்த மௌலானா, எம். அப்துர் ரஷீத் ரஹ்மானி காதிரி அவர்களால் நிறுவப்பட்டது. மேலும் எனது தந்தை அவர்கள், பொது மக்களிடையே “பம்மல் ஹஸ்ரத் & பர்மா ஹஸ்ரத்” என்று பிரபலமாக அறியப்பட்டவர் ஆவர்.

அவர் ஒரு புகழ்பெற்ற இஸ்லாமிய ஆன்மீக சிகிச்சை நிபுணர், எண்ணற்ற நோயாளிகளுக்கு மருந்து இல்லாமல் தனது ஆன்மீக சிகிச்சை முறைகள் மூலம் சிகிச்சையளித்தார். பல நபர்களுக்கு மன ரீதியான மற்றும் உடல் ரீதியான பல்வேறு பிரச்சினைகளை சமாளிக்க ஆலோசனை வழங்கினார். அவர் தனது இறுதி மூச்சு வரை எண்ணற்ற நோயாளிகளுக்கு சேவை செய்தார்.

என் தந்தையின் சேவை நின்று விடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில் அவர்களின் ஆன்மீக வழிகாட்டுதலுடன் ஆன்மீக சிகிச்சை முறைகளின் அனைத்துப் பகுதிகளையும் நான் கற்றுக் கொண்டேன். எனது தந்தையிடமிருந்து ஆன்மீக சிகிச்சைமுறை துறையில் மிகச்சரியான அறிவைப் பெற்ற பிறகு, 1998 முதல் சாதி, மதம் பொருட்படுத்தாமல் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சேவை செய்ய அதே பயிற்சியை இன்று வரை மேற்கொள்கிறேன். மனிதகுலத்திற்கு என்னால் முடிந்த சேவையை வழங்கி வருகிறேன்.

சூனியம், கண்ணேறு, பிரேத ஆத்மா தொந்தரவு, மனச்சோர்வு, மனக் கோளாறு, தற்கொலை எண்ணங்கள், அனைத்து வகையான புற்றுநோய், மாரடைப்பு, மார்பு வலி, முதுகுவலி, மூட்டு வலி, தோல் எரிச்சல், அரிப்பு, அஜீரணம், முகப்பருக்கள், தூக்கமின்மை, அடிக்கடி தலைவலி, மருத்துவரின் சிகிச்சையால் குணப்படுத்தப்படாத நாள்பட்ட வியாதி, குழந்தையின்மை, ஒழுங்கற்ற மாதவிடாய், இயலாமை எண்ணம் அதிகரிப்பு, நினைவாற்றல் இழப்பு, வியாபாரத்தில் தொடர் நட்டம், வணிக வளர்ச்சியில் தடை, வெளிநாட்டுப் பயண முயற்சியில் தொடர் தோல்வி, திருமணத் தடை, குழந்தைகள் / மாமியார் அட்டூழியம், அராஜகம், கணவன்/மனைவி இருவருக்கிடையில் எப்போதும் சண்டை – சச்சரவு, கணவன்/ மனைவிக்கு மத்தியில் சந்தேகம், அதனால் ஏற்படும் மனக்கசப்புகள், கணவன்/ மனைவி சட்டவிரோத கள்ள உறவு இன்னும் இதுபோன்ற எண்ணற்ற பிரச்சினைகளுக்கான தீர்வை திருக்குர்ஆன் வசனங்கள், அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் ஆகியவற்றோடு எனது முன்னோர்கள் காண்பித்த இணையற்ற வழிகாட்டளுடன், இந்த துறை சார்ந்த புராதானமான அரபு மொழி நூல்களின் மேற்கோள்களுடன் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும் மிக அற்புதமான தீர்வை வழங்க முடியும். சவால்!

*இது நமது சிகிச்சை முறை*
ஆன்மிக சிகிச்சை முறையில் பல வகை உள்ளன என்பதை அறிந்திருப்பீர்கள். அந்த வகையில், இறை வசனங்கள், அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களின் மூலம் பிரதிபலிக்கும் ‘முஅக்கலாத்’ எனப்படும் தெய்வத் தூதர்கள் மற்றும் துஆ எனப்படும் பிரார்த்தனை ஆகியவற்றோடு நமது முன்னோர்களின் ஒப்பற்ற வழிகாட்டுதல்களையும் மூலதனமாகக் கொண்டு மட்டுமே அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வை வழங்கி வருகிறோம். இதற்கு மாறாக நம் அடிப்படை சித்தாந்தத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் ஜின், ஷைத்தான், ஆவி போன்றவற்றின் உதவிகளை ஒருபோதும் நாம் பயன்படுத்துவது இல்லை.

*கொள்கை மற்றும் நெறிமுறை*
நாங்கள் சுன்னி முஸ்லிம்கள், அல்லாஹ்வை மட்டுமே வணங்குகிறோம், அல்லாஹ்வின் கடைசி தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுகிறோம், மேலும் அல்லாஹ்வின் அனைத்து தூதர்களையும் தீர்க்கதரிசிகளையும் நம்பிக்கைக் கொள்கிறோம். அவ்லியாவை (அல்லாஹ்வின் நண்பர்கள்) நேசிக்கிறோம். ஹனஃபி, ஷாஃபி, ஹம்பளி மற்றும் மாலிகி ஆகிய நான்கு இமாம்களால் வடிவமைக்கப்பட்ட இஸ்லாத்தின் கொள்கைகளை நாங்கள் ஏற்றுக்கொண்டு பின்பற்றி வருகிறோம். இதற்கு முரணாக உள்ள வஹாபிகள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானவர்கள் என்று தீர்மானிக்கிறோம்.

*அறிவும் அனுபவமும் நம் தனித்துவம்*
“மௌலவி ஆலிம்” பட்டமும் சென்னைப் பல்களைக்கழகத்தில் “அரபு மொழியியல்” துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றிருப்பதால் அரபி, ஆங்கிலம், உருது, பார்ஸி மற்றும் நம் தாய் மொழியாம் தமிழ் ஆகிய மொழிகளில் போதிய அளவு புலமை உண்டு. இம்மொழிகளில் அமைந்துள்ள இக்கலைக் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, புராதான நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள செய்முறைகளைப் பயன்படுத்தி, பண்ணூற்றுக்கணக்கான பிரச்சினைகளுக்கு இறைவன் அருளால் தீர்வு கண்டுள்ளோம். பொதுவாக இத்துறையில் கல்வி அறிவு பெற்றவர்களைக் காண்பது அரிது. அதிலும் இது போன்ற உயர் கல்வி மற்றும் அனுபவத்தைப் பெற்றவரைப் பார்ப்பது அரிதிலும் அரிது என்பது நம் தனித்துவங்களில் பிரதானமானது.

*பிணி தீர்க்கும் வரை சிறப்பு கண்காணிப்பு*
மருத்துவர்களால் கைவிடப்பட்ட நாள்பட்ட வியாதி எதுவாகிலும் குணப்படுத்த முடியும் என்பது சவால். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோய்கள் குறிப்பாக மார்பகப் புற்றுநோய், தோல் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய் போன்றவற்றை எவ்வித வேதிப்பொருளின் துணையின்றி குணப்படுத்தி வெற்றிக் கண்டுள்ளோம். நோயாளிகள் தங்களின் வியாதி முற்றாக குணம் அடையும் வரை அவர்களைக் கண்காணிப்பதற்காக சிறப்புக் குழு அமைக்கப்படும். அக்குழுவினர் நோயாளியை காலை, மாலை இரு வேளையும் நேரில் சந்தித்து அவர்களின் உடல் நலம் முன்னேற்றம் எப்படி இருக்கிறது என்று கண்டறிந்து அதற்கு ஏற்றார் போல் அடுத்தடுத்து செய்ய வேண்டிய ஆன்மிக நோய்நிவரானப் பணிகளை உற்சாகத்துடன் செய்து வருவர்.

*காரணத்தை மிகத் துல்லியமாக அறிதல்*
சூனியம்-செய்வினை, ஜின் – ஷைத்தான், ரூஹானி-பேய் பிசாசு போன்ற அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் காரணத்தை துல்லியமாகக் கண்டறிந்து மிகச் சரியான முறையில் தீர்வு வழங்கப்படும். அதேசமயம் பிரச்சனைகளுக்கான தீர்வை நாடி நம்மிடம் வரும் எல்லோரும் சாத்தான், செய்வினை போன்ற அமானுஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள்தான் என்று கூறிவிட முடியாது. மாறாக, அது அல்லாத வேறு காரணங்களாலும் அவதிப்படலாம். காரணம் எதுவாக இருப்பினும் அதை துள்ளியமாகக் கண்டறிந்து தீர்வு வழங்கப்படும். ஒருவேளை அதற்கான தீர்வு நம்மிடம் இல்லை எனும் போது மாற்றுவழி என்னவென்று மனிதநேயத்தோடு ஆலோசனை வழங்கப்படும்.

*வெற்றிக்குப்பின் இருக்கும் இரகசியம்*
இவன் படித்தவன், அவன் பாமரன், இவன் ஏழை, அவன் பணக்காரன், இவன் தெரிந்தவன், அவன் தெரியாதவன் போன்ற மனிதநேயமற்ற பண்புகளைக் களைந்து நம்மிடம் பாரபட்சமின்றி எல்லோருக்கும் ஒரே மாதிரியான கருணை, கவனிப்பு. யாரும் எப்பொழுதும் தொடர்பு கொண்டு மனம் திறந்து பேசலாம். நேரில் சந்திக்கலாம். அவர்களின் பிரச்னைகளுக்கான தீர்வைப் பற்றியே சிந்திப்பதும், அதற்கான விடியலைத் தேடி தருவதும், அதற்காக கால நேரம் பாராமல் கடினமாக உழைப்பதும், பாதிக்கப்பட்டவர்களும் துன்பத்தில் சிக்கியவர்களும் “இவர் நமக்கானவர்” என்ற நம்பிக்கையை அவர்களின் உள்ளங்களில் விதைப்பதும் தான் நம் வெற்றிக்கான இரகசியம்.

*எளிமை, இனிமை அதுவே நம் மகிமை*
பொதுவாக இத்துறையைச் சார்ந்தவர்கள், இதையே தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள், தங்களுக்கென்று ஒரு தனிப்பட்ட அடையாளத்தைப் பெற்றிருப்பார்கள். அது அவர்களுக்கான நடமாடும் விளம்பரப் பலகையாக வெளிப்படும். அதனால் அவர்களைப் பார்த்தவுடனே அவர்களின் பால் நெருங்கவிடாமல் சிலருக்கு ஒரு வகையான ஒவ்வாமையும், வேறு சிலருக்கு அச்சத்தையும் உண்டாக்கும். இவ்விசயத்தில் முற்றிலுமாக மாறுபட்டு எவ்வித ஒப்பனைகளும் அலங்கார அலட்டலுமின்றி மிகவும் எளிமையான, இயல்பான தோற்றத்துடன் சந்திக்கும் எல்லோரிடமும் இனிமையாகப் பழகும் பழக்கமே நமது தனித்துவங்களில் வெள்ளிடை மலை போல் வெளிப்படுகிறது.

*மனித உயிர்க் காக்கும் ஆலோசனைகள்*
கவலைப்பட வேண்டாம்! நாங்கள் இருக்கிறோம்! இனி எல்லாம் சரியாகிவிடும்!” போன்ற ஆரோக்கியமான சொற்கள் தான் மனித உயிர்க் காக்கும் ‘முதலுதவி’ என்று நம்மில் எத்தனை பேர் அறிவர்! “வெறுமனே நஞ்சு வார்த்தைகளால் பிறர் மனதை துன்புறுத்த முடியுமெனில் நல் வார்த்தைகளால் பிறர் வலியை போக்க முடியாதா?” என்கிறது ஒரு ஜென் தத்துவம். மந்திரம், மருந்து மாத்திரைகளைத் தாண்டி நல் ஆலோசனைகளுக்கு மிகப் பெரிய வலிமையுண்டு என்பதை நம்மிடம் பேசும் போதே அவர்களின் பிரச்னைகளுக்கான தீர்வு கிடைத்தது போல் உணருவர். எனவே, ஆலோசனைகள் மருந்தல்ல அவை நம் உள்ளத்திற்கான விருந்தாகும்.

*மானுடம் வளர்ப்போம்! மனித உயிர்க் காப்போம்!*
மனிதத்தை சீர்குலைப்பதில் மிக முக்கிய காரணிகளான சாதி, மதம், இனம் போன்றவற்றைக் கடந்து ‘மனித உயிர் எல்லோருக்கும் பொதுவானது, ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்ற சமத்துவச் சிந்தனையை மட்டுமே மையமாகக் கொண்டு அரை நூற்றாண்டைக் கடந்து, பாரம்பரியமாக சேவை செய்து வருகிறோம். இவ்வாறு நாம் கடந்து வந்த நாட்களில் நமது சேவையைப் பயன்படுத்தியவர்களில் பெரும்பாலோர் ” இவர் நேர்த்தியானவர், உண்மையானவர், நம் ரகசியங்களை பாதுகாப்பதில் நம்பிக்கைக்குரியவர், ” என்பன போன்ற நற்சான்றுகளைத் தவிர சொத்து, செல்வம், சேகரம் போன்ற எதையும் இந்த சேவையின் மூலம் சம்பாதிக்கவில்லை. அதற்கான வழியும் இதுவல்ல என்பதே நம் கோட்பாடு. அதுவே இன்றளவும் நம் நிலைப்பாடு.

*முகவரி*
கதவு எண்: 2/1, ஜட்ஜ் பரமசிவம் தெரு,
பெரம்பூர், சென்னை - 600011,
தமிழ் நாடு, இந்தியா.

*இணையம்:* https://onlineqdc.in

*மின்னஞ்சல் செய்யுங்கள்*
[email protected]
[email protected]

*பேச அழையுங்கள்*
+91-99621 99621
044-4867 6464

*சிறப்பு ஆலோசனை நேரம்:*
வெள்ளி மற்றும் ஞாயிறு:
வெள்ளி: காலை 7 மணி முதல் 9 மணி வரை. {அவசர ஆலோசனைகளுக்கு மட்டும்}
ஞாயிறு: காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை. {அவசர ஆலோசனைகளுக்கு மட்டும்}

ஹோரை அறிந்து நடப்பவனை . யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர்கள் வாக்கு. அப்படிப் பட்ட ஒரு மகத்தான விஷயம் பற்றி நாம் இன...
29/03/2024

ஹோரை அறிந்து நடப்பவனை . யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர்கள் வாக்கு. அப்படிப் பட்ட ஒரு மகத்தான விஷயம் பற்றி நாம் இன்று பார்க்க விருக்கிறோம். இது உங்களுக்கு அளப்பரிய பலன்கள் தரும்.

ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஓரை கிடையாது.

பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஓரைகளும் உருவாக்கப்பட்டன. சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஓரைகளை கணக்கிட்டுள்ளனர்.

சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின் அமைப்பைக் கொண்டு வானவியல் அறிஞர்கள் ஓரைகளை உருவாக்கினர். இதன்படி வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல் ஓரையை சூரியனுக்கு அளித்தனர்.

அதற்கு அடுத்து சுக்கிரன் , அதற்கு அடுத்து புதன் ஓரை , 4வது இடம் சந்திரனுக்கும், 5வது இடம் சனிக்கும், 6வது இடம் குருவுக்கும், 7வது இடம் செவ்வாய்க்கும் வழங்கினர்.

இதற்கு சுற்றுப்பாதை, கிரகங்களின் கதிர் வீச்சுதான் காரணம்.

இவற்றில் சுக்கிரன் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை ஆகிய மூன்றும் நல்ல ஓரைகள் எனப்படுகிறது. எந்த ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்றாலும் - இந்த ஹோரைகளில் துவங்கலாம்.

ஓரை என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. அந்த நாளின் கிழமை அதன் முதல் ஓரையாக கொள்ளப்படுகிறது. உதாரணமாக ஞாயிறு காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை.

இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன் ஓரை, 8-9 மணி வரை புதன் ஓரை, 9-10 வரை சந்திரன் ஓரை, 10-11 வரை சனி ஓரை, 11-12 மணி வரை குரு ஓரை, 12-1 மணி வரை செவ்வாய் ஓரை. இதையடுத்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும்.

இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை, புதன் கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை, அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஓரை கணக்கிடப்படும்.

பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஓரைகள் கணக்கிடப்படுகின்றன.

6 - 1- 8 - 3

இந்த வரிசையை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். காலை 6 மணிக்கு வரும் ஓரை , திரும்பவும் மதியம் 1 மணிக்கும், இரவு 8 மணிக்கும் , பின்பு அதிகாலை 3 மணிக்கும் வரும்.

சூரிய ஓரை :

சூரியன் ஓரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும். உங்கள் மேலதிகாரிகளை சந்தித்தல், போன்ற பெருந்தலைகளை சந்திக்கும் காரியம் செய்யலாம்.

இந்த நேரத்தில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன் பாடுகளையோ செய்வது நல்லதல்ல, சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஓரை ஏற்றதல்ல. இந்த ஓரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்குமானால் மிகவும் தாமதித்து அப்பொருளின் நினைவு மறைந்தபின் கிழக்கு திசையில் கிடைக்கலாம்.இந்த நேரத்தில் உயில் சாசனம் எழுதலாம்.

சுக்கிர ஓரை :

சகல சுப காரியங்களுக்கு வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்கவும் மிகவும் ஏற்றது. குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட சகல காரியங்களிலும் நன்மை ஏற்படும். விவசாய்த்திற்கும், பயணங்கள் செய்யும் நல்லது. இந்த ஓரையில் காணாமல் போன பொருள் மேற்கு திசையில் சில நாள்களில் கிடைக்கும்.

புதன் ஓரை :

கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம்.இந்த ஓரையில் காணாமல் போகும் பொருள் விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும்.

சந்திர ஓரை :

வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும் நல்ல ஓரையாகவே கருதப்படுகிறது.

இந்த ஓரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல் ஆகியற்றைச் செய்யலாம். இந்த ஓரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம்.குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்களையும் மிகவும் ஏற்றது. வியாபார விஷயமாகவோ அல்லது புனித யாத்திரையாகவோ பயணம் செய்ய ஏற்றது.பிறரைச் சந்தித்துப் பேசவும் செய்யலாம். இந்த ஓரையில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் கிடைக்காது.

சனி ஓரை :

இதில் சனி ஓரை ஒரு சில காரியங்களுக்கு நன்றான பலனைத் தரும். கடனை அடைப்பதற்கு ஏற்ற ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது.

உதாரணமாக சனி ஓரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, பாத யாத்திரை , நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது.

குரு ஓரை :

எல்லாவகை சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம், வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது. ஆடை ஆபரணப் பொருள்கள் வாங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது.எதுவும் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியமாக இருக்கக்கூடாது. கப்பற்பயணம் செய்வதற்கு இந்த ஓரை சிலாக்கிய்மானது அல்ல. இந்த நேரத்தில் காணாமல் போனபொருள்களைப் பற்றி வெளியில் சொன்னாலே போதும் . உடனே கிடைத்து விடும்.

செவ்வாய் ஓரை

செவ்வாய் ஓரை நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சனைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். இந்த ஓரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும். செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம் . அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய். எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷய்ங்களையோ, சண்டை சச்சரவுக்கான் விஷயங்களையோ பற்றிய் பேசலாம். இருப்பினும் இந்த ஓரையை தவிர்ப்பது நல்லது. இந்த ஓரை நேரத்தில் பொருள்கள் காணாமல் போனால் உடனே முயன்றால் தெற்கு திசையில் கிடைத்துவிடும்.தாமதித்தால் கிடைக்காது.

ஒரு சிறந்த ஜோதிடராக நீங்கள் ஹோரை சம்பந்தமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயமும் உண்டு. நவ கிரகங்களில் - ஒன்றுக்கொன்று கடும் பகை கிரகங்களும் உண்டு. அல்லவா ? அதையும் நீங்கள் மனதில் கொண்டு , ஹோரை தேர்ந்தெடுங்கள். என்னதான் குரு ஓரை சுப ஓரை என்றாலும், வெள்ளிக் கிழமை - குரு ஹோரை தேர்ந்தெடுக்க வேண்டாம்.

சரி, நிஜமாகவே இந்த ஹோரையின் செயல்பாடு அறிய - நீங்களே ஒரு சில விஷயங்களில் , துவங்கிப் பாருங்கள். வியந்து போவீர்கள். மனித வாழ்வில் ஓரைகளின் பங்களிப்பு முக்கியமானது. நம்மை அறியாமலேயே ஓரைகளின் கதிர்வீச்சை உணர முடியும். அதை உணர்ந்து நடந்தால் நலம் பெறுவீர்கள்.

குறிப்பாக கணவன் , மனைவி ஏதாவது வாக்குவாதம் செய்யத் துவங்கினால் , செவ்வாய் அல்லது சனி ஓரை வந்தால், அடக்கி வாசியுங்கள். அது மிகப் பெரிய சண்டையாகிவிடும். கணவன் . மனைவி என்றில்லை. மற்றவருக்கும் பொருந்தும். ஆதலால் , காலத்தின் இந்த ரகசிய கணக்கு - நீங்களும் தெரிந்து வைத்திருப்பதில் தவறில்லை...

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் - மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

தினமும் சுபுஹு தொழுகைக்கு பிறகு, மஃரிப் தொழுகைக்கு பிறகு பதினொரு தரம் சலவாத் ஓதி ஆயிரம் தரம் பிஸ்மில்லாஹிர் ரஹ்மான் னிர்...
13/11/2023

தினமும் சுபுஹு தொழுகைக்கு பிறகு, மஃரிப் தொழுகைக்கு பிறகு பதினொரு தரம் சலவாத் ஓதி ஆயிரம் தரம் பிஸ்மில்லாஹிர் ரஹ்மான் னிர்ரஹீம் என்று ஓதி பிறகு பதினொரு தரம் சலவாத் ஓதி

இந்த ஹிஸ்பு பிஸ்மி யை ஏழு தரம் ஓதி உங்கள் நாட்டங்கள் தேவைகள் இன்னும் நீங்கள் பல வருடங்களாக முடியாத காரியங்களும் இறைவனின் அருளால் நிறைவேறும்.

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க பிfபழ்லி பிஸ்மில்லாஹிர் ரஹ்மான் னிர்ரஹீம். வபி ஹக்கி பிஸ்மில்லாஹிர் ரஹ்மான் னிர்ரஹீம். வபி ஹைபதி பிஸ்மில்லாஹிர் ரஹ்மான் னிர்ரஹீம். வபி மன்ஜிலதி பிஸ்மில்லாஹிர் ரஹ்மான் னிர்ரஹீம். இர்fபஃ கத்ரீ. வயஸ்ஸிர் அம்ரீ. வஷ்ரஹ் ஸ்த்ரீ. யா மன் ஹுவ காfப் ஹா யா அயின் ஸாத் . ஹா மீன் அயின் ஸீன் காfப் . அலிfப் லாமீம். அலிfப் லாமீம் ரா. அலிfப் லாமீம் ஸாத். அல்லாஹு லாயிலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கைய்யூம். பிஸ்மில்லாஹி ஹைபதி வல் குத்தரதி வபிஸ்மி ஜபரூதி வல் அழமதி இஜ்அல்னீ மின் இபாதிகஸ் ஸாலிஹீன். முத்தகீன். வ அஹ்லுத் தாஅதிக முக்பிதீன். யா ரப்பல் ஆலமீன்.

(இந்த ஹிஸ்பு ஹஜ்ரத் கௌஸுல் ஆழும் முகைதீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அவ்ராது காதிரிய்யா என்ற கிதாபில் வரக்கூடிய மிக நீண்ட பிஸ்மில்லாஹிர் ரஹ்மான் னிர்ரஹீம் ஹிஸ்பு அதன் ஒரு பகுதியாகும்)

13/09/2023

*ஒடுக்கத்துப் புதன் என்றால் என்ன?*
அன்று நாம் செய்யவேண்டியதென்ன?

இன்ஷா அல்லாஹ்
*நாளை 13/09/2023*
*புதன்கிழமை அன்று ஒடுக்கத்து புதன்*

ஒடுக்கத்து புதன் என்பது ஸபர் மாதத்தின் இறுதிப் புதன் கிழமையைக் குறிக்கும். இந்நாளில் தான் முன் சென்ற சமுதாயம் பல சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்தது என்பது குர்ஆன், ஹதீஸ் வழியே ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவலாகும்.

*குளித்தல், குடித்தல், தொழுதல்*

“புதன் கிழமையில் சுவர்க்கத்து நீர் உலகத்து நீருடன் கலக்கப்படுவதால் அன்று குளிப்பது சிறந்தது” என்று கூறப்பட்டுள்ளது. தண்டனை பெற்ற எந்தவொரு கூட்டமாயினும் அது புதன்கிழமையே தண்டிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் (ரூஹுல் பயான் வால்யும் 08, பக்கம் 328ல் இடம் பெற்றுள்ளது)

“இஆனதுத் தாலிபீன்” என்ற சட்டக்கலை நூலை எழுதியவரும், மக்காவில் பிறந்து திரு மதீனா நகரில் மறைந்தவர்களுமான அஷ்ஷையித் முஹம்மத் ஷதாஅத் திம்யாதி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் தங்களின் “நிஹாயத்துல் அமல்” என்ற சட்டநூல் 208ம் பக்கத்தில் ஒடுக்கத்துப் புதன் பற்றிக் குறிப்பிடுகையில், “ஒவ்வொரு வருடத்திற்கெனவும் அல்லாஹ்வால் ஏற்படுத்தப்படுகின்ற பலாய்கள், கஷ்டங்கள், சோதனைகள் “லவ்ஹுல் மஹ்பூல்” பலகையிலிருந்து பூமியை அடுத்துள்ள முன் வானத்திற்கு ஸபர் மாத இறுதிப் புதன் அன்று இறக்கப்படுகின்றன”.

ஆகையால் கீழ் காணும் திருகுர்ஆன் வசனங்களைப் பாத்திரங்களில் இலைகளில் எழுதி அதை தண்ணீரால் கரைத்து குடிப்பவர்களுக்கு சோதனைகள் ஏற்பட மாட்டாது என்று கூறியுள்ளார்கள்.

*விஷேச தொழுகை*

ஸபர் மாதத்தின் கடைசிப் புதன் கிழமையில் முன்னூற்று இருபதாயிரம் சோதனைகள், துன்பங்கள் இறங்குவதாகவும் வருட நாட்களில் அந்த நாள் ஒன்று மட்டுமே மிகவும் கஷ்டமான நாள் என்றும் இறைஞானிகள் சொல்லியிருப்பதாக “முஜர்றபாதுத் தைறபீ” என்ற நூல் 103ம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒடுக்கத்துப் புதன் அன்று நான்கு “ரக்அத்” நஃபில் தொழுகை தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும்

பாத்திஹா சூரா ஒரு முறை “இன்னா அஃதைனா கல் கவ்தர்” சூரா 17 முறை “குல்குவல்லாஹ் 5 முறை “குல் அஊது பிறப்பில் பலக்” ஒரு முறை “குல் அஊது பிரப்பின்னாஸ்” ஒரு முறை ஓதி தொழுதால் அந்த வருடம் முழுவதும் அவன் சகல பலாய்களில் இருந்தும் பாதுகாக்கப்படுவான்.

பின்பு “ஸலாம்” என்ற சொல் கொண்டு துவங்கப்படுகின்ற திருக்குர்ஆன் வசனங்களை பன்னீர், கஸ்தூரி, குங்குமம் கொண்டு பீங்கானில் எழுதிக் குடிக்கவும் வேண்டும். (நூல்: பழாயிறுஷ்ஷுஹூரில் ஹிஜ்ரிய்யஹ் பக்கம் 33, 34)

"ஒடுக்கத்துப் புதன் இஸ்ம்"

“ஸலாம்” என்ற சொல் கொண்டு துவங்கப்படுகின்ற கீழ்காணும் திரு வசனங்களை பன்னீர், கஸ்தூரி, குங்குமம் கொண்டு பாத்திரங்களில் எழுதி அதை தண்ணீரால் கரைத்து குடிக்க வேண்டும் என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளார்கள். ஆகையால் அருள்பெற நாடி திருக்குர்ஆன் வசனங்களை ஓதவும் ஓதி ஊதவும், எழுதி குடிக்கவும் வேண்டும்.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்

سَلاَمٌ قَوْلاًَ مِّنْ رَّبِّ رَّحِيْمٍ.
ஸலாமுன் கவ்லம் மின் ரப்பிர் ரஹீம்

وَسَلٰمٌ عَلٰى عِبَادِهِ الَّذِيْنَ اصْطَفٰى.
வ ஸலாமுன் அலா இபாதிஹில்லதீனஸ்தபா

سَلاَمٌ عَلَى نُوْحٍ فِى الْعَالَمِِيْنَ. ஸலாமுன் அலா நூஹின் ஃபில் ஆலமீன்

سَلاَمٌ عَلىَ اِبْرَاهِيْمَ. ஸலாமுன் அலா இப்ராஹீம்

سَلاَمٌ عَلَى مُوْسٰى وَهَارُوْنَ. ஸலாமுன் அலா மூஸா வ ஹாரூன்

سَلاَمٌ عَلٰى اِلْيَاسِيْنَ. ஸலாமுன் அலா இல்யாஸீன்

سَلاَمٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوْهَا خَالِدِيْنَ.

ஸலாமுன்அலைக்கும் திப்தும் ஃபத்குலூஹா காலிதீன்

سَلاَمٌ هِيَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ. ஸலாமுன் ஹிய ஹத்தா மத்லயில் ஃபஜ்ர்

اَللّٰهُمَّ اَعْصِمْنَا مِنَ الْبَلآءِ وَدَرْكِ الشَّقَآءِ وَسُوْءِ الْقَضَآءِ وَشَمَاتَةِ الْآعْدَآءِ وَمَلْجُوْمِ الْوَبَآءِ وَمَوْتِ فُجْاءَةٍ وَمِنْ زَوالِ الْبَرَكَةِ وَالنِّعْمَةِ وَمِنَ الْبَرَصِ وَالْجُذَامِ وَالْجُبْنِ وَالْبَرْصَامِ وَالْحُمّٰى وَالشَّقِيْقَةِ وَمِنْ جَمِيْعِ الْاَمْرَاضِ وَالْاَسْقَامِ بِفَضْلِكَ وَجُوْدِكَ يَاذَالْجَلاَلِ وَالْاِكْرَامِ بِرَحْمَتِكَ يَااَرْحَمَ الرَّاحِمِيْنَ

وَصَلَّى اللهُ عَلىَ خَيْرِ خَلْقِهِ مُحَمَّدٍ وَعَلىَ اٰ لِهِ وَاَصْحَابِهِ وَسَلَّمْ وَالْحَمْدُ لِلّهِ رَبِّ الْعَا لَمِيْنَ اٰمِيْنَ .

அல்லாஹும்மஃஸிம்னா மினல் பலாயி, வ தர்கிஷ் ஷகாயி, வ சூயில் கழாயி, வ ஷமாதத்தில் அஃதாயி, வ மல்ஜுமில் வபாயி, வ மவ்தி ஃபுஜ் அதின், வமின் ஜவாலில் பரகதி வன் நிஃமதி, வ மினல் பரஸி, வல் ஜுதாமி, வல் ஜுப்னி வல் பர்ஸாமி, வல் ஹும்மா, வஷ் ஷகீகதி, வ மின் ஜமீஇல் அம்ராழி, வல் அஸ்காமி, பி ஃபழ்லிக, வ ஜுதிக, யாதல் ஜலாலி வல் இக்ராம். பிரஹ்மதிக யா அர்ஹமர் ராஹிமீன்.

வ ஸல்லல்லாஹு அலா கைரி கல்கிஹி முஹம்மதின் வ அலா ஆலிஹீ வ அஸ்ஹாபிஹீ வஸல்லம். வல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.

குறிப்பு: இதில் குர்ஆன் ஓதுதல், ஊதுதல், தொழுதல் என்ற மார்க்கத்தின் நடைமுறைகள் தான் இருக்கின்றனவே அன்றி மார்க்கத்திற்கு முரணான எதுவும் இல்லை. ஆகையால் இதில் மாற்று அபிப்ராயம் கொண்டவர்கள் விரும்புவோர் செய்யட்டும், விரும்பாதோர் விட்டு விடட்டுமென்று அவர்களை அன்பாய் கேட்டுக் கொள்கின்றோம்.

தொடர்ந்து ஓர் ஊரில் தொன்று தொட்டு நடந்துவந்த ஒரு வழக்கம் “முபாஹ்” ஆகுமாக்கப்பட்ட ஒன்றாக இருந்தால் அதை அப்படியே விட்டு விட வேண்டுமேயன்றி அதை தடுத்து நிறுத்துவதும், அதை கருவாகக் கொண்டு ஊர் மக்களிடம் பிளவையும், பிரச்சினையையும் உருவாக்குவதும் கடும் குற்றமாகும்.

எனவே உண்மையை உணர்ந்து உள்ளச்சத்துடன் செயல்பட இறைவன் தௌபீக் செய்வானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

மௌலவி T.S.A. அபூதாஹிர் ஃபஹீமீ, மஹ்ழரி.
ஆசிரியர் - அல் அஸ்ரார் மெய்ஞ்ஞான மாத இதழ்
98415 67213

13/09/2023

ஒடுக்கத்து புதன் பற்றி !!!

ஒடுக்கம் எனும் தமிழ் வார்த்தைக்கு கடைசி என்பது பொருளாகும். ஸஃபர் மாதத்தின் கடைசி புதன்கிழமைக்கு ஒடுக்கத்து புதன் என்ற சொல்லுக்கு தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் பிரபல்யமாக உள்ளது.

ஒடுக்கத்து புதனில் இஸ்லாமியர்கள் தங்களது நோய்கள் அகல்வதற்காக குர்ஆன் வசனங்களை எழுதி கரைத்துக் குடிக்கிறார்கள் ஏனென்றால், பிணி தீர்க்கும் அருமருந்தாக குர்ஆன் அமைநதுள்ளது. இறைவன்
கூறினான். “இறைநம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும்,நோய்களுக்கு நிவாரணமாகவும் அமைந்துள்ள குர்ஆன் வசனங்களை இறக்கி வைப்போம். 17.82

அதை எந்த நாளிலும் செய்யலாமென்றாலும் இஸ்லாமியர்கள் புதனை தேர்ந்தெடுத்தற்கும் சில காரணங்கள் உண்டு.

-தொழுநோயின் ஆரம்பம் புதன்கிழமை.
-அய்யூப் அலை அவர்களின் நோயின் துவக்கம் புதன் கிழமை.
-துர்ப்பாக்கியமுள்ள நஹ்ஸுடைய நாள் புதன் கிழமை.
-இறைத்தூதர் ஸல் அவர்களின் இறுதிகட்ட நோய் ஆரம்பமானது ஸஃபர் மாத கடைசி புதன் கிழமை.
நோயின் துவக்கம்.

عن ابن عمر رضي الله عنهما قال إني سمعت رسول الله صلي الله عليه وسلميقول ما نزل جذام ولا برص إلا في ليلة الأربعاء[الحاكم في المستدرك علي الصحيحين]

இறைத்தூதர் صلي الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள். வென்குஷ்டமும் கருங்குஷ்டமும் புதன்கிழமை இரவில்தான் இறங்கும். அறிவிப்பாளர்.
உமர் ரலி நூல் ஹாகிம்.

عن عبدالله بن عمر رضي الله عنهماقال إني سمعت رسول اللهصلي الله عليه وسلم يقول اجتنبوا الحجامة يوم الأربعاء فإنه الذي ابتلي الله أيوب فيه بالبلاء وما يبدو جذام ولا برص إلا في يوم الأربعاء أو في ليلة الأرباء[ابن ماجه، الحاكم في المستدرك علي الصحيحين]

இறைத்தூதர் صلي الله عليه وسلمஅவர்கள் சொன்னார்கள்.புதன்கிழமையன்று
(உடம்பிலிருந்து)இரத்தம் வெளியேற்றுவதை தவ்ர்த்துக் கொள்ளுங்கள் ஏனென்றால், புதன்கிழமையில்தான் அய்யூப்(அலை)அவர்கள் சோதிக்கப்பட்டார்கள். வென்குஷ்டம் மற்றும் கருங்குஷ்டமென்ற தொழுநோய் புதன்கிழமை பகலிலோ அல்லது இரவிலோதான் ஆரம்பமாகும்.

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلي الله عليه و سلم قال من احتجم يوم الأربعاء ويوم السبت فرأى وضحا فلا يلومن إلانفسه[البيهقي]

இறைத்தூதர் صلي الله عليه وسلمஅவர்கள் இயம்பினார்கள். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஒருவர் தன் உடம்பிலிருந்து இரத்தம் வெளியேற்றி அதன் காரணமாக தொழுநோயின் அடையாளத்தை தனது உடம்பில் பார்த்தால் அவர் தன்னைத்தானே பழித்துக் கொள்ளட்டும்..அறிவிப்பாளர் அபூஹூரைரா رضي الله عنهநூல்.பைஹகீ
நஹ்ஸுடைய நாள்.
நஹ்ஸ் என்ற அரபிச் சொல்லுக்கு தீங்கு மற்றும் துர்ப்பாக்கியம் என்பது பொருளாகும்.,ஆத் கூட்டத்தினருக்கு தண்டனை இறக்கிவைத்த நாளை இறைவன் நஹ்ஸுடைய நாள் என குர்ஆனில் பெயரிடுகிறான்.

إنا أَرْسلْنا عليهم رِيْحًا صرْصرًا في يوم نحسمسْتمر

இறைவன் கூறினான். தொடராக துர்ப்பாக்கியமுள்ள நாளில் கடும்புயல் காற்றை அவர்கள் மீது நாம் அனுப்பி வைத்தோம்54:19
அந்த நஹ்ஸுடைய நாள் புதன் கிழமையென்பதை கீழ்க்கானும் ஹதீஸ்கள் அறிவிக்கின்றன.

عن جابر قال نزل جبريل عليه السلام علي النبي صلي الله عليه وسلم فقال اقض باليمين مع الشاهد،وقال يوم الاربعاء يوم نحس مستمر[الطبراني في المعجم الاوسط]

இறைதூதர் صلي الله عليه وسلمஅவர்களிடம் ஜிப்ரில்அலைஹிஸ்லாம் அவர்கள் வந்து கூறினார்கள் ஒரு சாட்சியோடு சத்தியமிடுதலைக்கொண்டு தீர்ப்பு வழங்குங்கள்! புதன்கிழமை தொடர்பான தீங்குள்ள நஹ்ஸுடைய நாளாகும்.
அறிவிப்பாளர்.ஜாபிர் رضي الله عنهநூல்.தப்ரானி(அவ்சத்)

عن جابر بنلاعبدالله قال قال رسول الله صلي الله عليه وسلم أتاني جبريل عليه السلام فأمرني أن أقضي باليمين مع الشاهد وقال إن يوم الاربعاء نحس مستمر[البيهقي]
عن جابر قال قال النبي صلي الله عليه وسلم [أتاني جبريل فأمرني باليمين مع الشاهد وقال إن يوم الاربعاء يوم نحس مستمر[مسند أبي عوانة]

இறைத்தூதர் صلي الله عليه وسلمஅவர்கள் மொழிந்தார்கள்.
ஜிப்ரீல் عليه السلامஅவர்கள் என்னிடம் வந்து, ஒரு சாட்சியுடன் சத்தியமிடுதலும் இருந்தால் அவற்றைக்கொண்டு தீர்ப்பு வழங்கு எனக்கு கட்டளையிட்டார்கள். மேலும்,கூறினார்கள் புதன்கிழமை தொடர்ந்து தீங்குள்ள(நஹ்ஸுடைய) நாளாகும். அறிவிப்பாளர் ஜாபிர் رضي الله عنهநூல்.பைஹகீ.

நபிகளாருக்கு நோயின் தொடக்கம்.

قال الواقدي وقالوا بدأ رسول الله صلي الله عليه وسلم يوم الأربعاء لليلتين بقيتا من صفر،وتوفى يوم الاثنين لثنتي عشرة ليلة خلت من ربيع الأول[السيرة النبوية لابن كثير]

ஸஃபர் மாதத்தில் இரு நாட்கள் மீதமிருந்த நிலையில் நோய் ஆரம்பமானது. ரபீவுல்அவ்வல் பனிரெண்டாம் நாள் திங்கட்கிழமை இவ்வுலகைவிட்டும் மறைந்தார்கள்.

عن الزهري أخبرني أنس بن مالك قال أول ما اشتكىرسول الله صلي الله عليه وسلم كان ذلك يوم الأربعاء لليلتين بقيتا من صفر وهو في بيت ميمونة حتى أغمي عليه من شدة الوجع [السيرة الابن حبان]

இறைத்தூதர் صلي الله عليه وسلمஅவர்கள் முதன்முதலாக நோய்வாய்ப்பட்டது புதன்கிழமையாகும், ஸஃபர் மாதம் முடிய இருநாட்கள் மீதமிருந்தன. அந்த நேரத்தில் அருமைத் துணைவியார் மைமூனாரலி அவர்களின் இல்லத்தில் இருந்தார்கள். கடுமையான வலியின் காரணமாக மயக்கமுற்றார்கள்.
அறிவிப்பாளர் அனஸ்رضي الله عنهநூல்.:சீரா,,ஆசிரியர்.:இப்னுஹிப்பான்.

قال أبوعمر ثم بدأ برسول الله صلي الله عليه وسلم مرضه الذي مات يوم منه يوم الأربعاء، لليتين بقيتامن صفر سنة إحدى عشرة في بيت ميمونة، ثم انتقل حين اشتد مرضه إلي بيت عائشة،رضي الله عنها، وقبض يوم الاثنين ضحى في الوقت الذى دخل فيه المدينة لاثنتي عشرة خلت من ربيع الأول[أسد الغابة]

இறைத்தூதர் صلي الله عليه وسلمஅவர்கள் இவ்வுலகைவிட்டும் மறைவதற்கு காரணமாக இருந்த நோய் புதன் கிழமைதான் ஆரம்பமானது.ஸஃபர் முடிவிற்கு இருநாட்கள் மீதமிருந்தன. அப்போது மைமூனாரலியல்லாஹ் அன்ஹா அவர்களின் இல்லத்தில் இருந்தார்கள். நோய் கடுமையானபோது ஆயிஷாரலியல்லாஹூ அன்ஹா அவர்களின் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். ரபீவுல்அவ்வல் பிறை 12 ஆம் நாள் திங்கட்கிழமை ளுஹா நேரத்தில் அவர்களின் உயிர் பிரிந்தது.

[ தொகுத்து வழங்கியவர்கள் ]

[ என்றும் தங்களன்புள்ள ]

[ மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அல்லாமா எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாகவி ஹழரத் || தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா ]

01/05/2023

ஓதி பார்த்து மந்திரிப்பதற்கு கூலி வாங்கலாமா?

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ رَهْطًا، مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم انْطَلَقُوا فِي سَفْرَةٍ سَافَرُوهَا، حَتَّى نَزَلُوا بِحَىٍّ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ فَاسْتَضَافُوهُمْ، فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمْ، فَلُدِغَ سَيِّدُ ذَلِكَ الْحَىِّ، فَسَعَوْا لَهُ بِكُلِّ شَىْءٍ لاَ يَنْفَعُهُ شَىْءٌ، فَقَالَ بَعْضُهُمْ لَوْ أَتَيْتُمْ هَؤُلاَءِ الرَّهْطَ الَّذِينَ قَدْ نَزَلُوا بِكُمْ، لَعَلَّهُ أَنْ يَكُونَ عِنْدَ بَعْضِهِمْ شَىْءٌ. فَأَتَوْهُمْ فَقَالُوا يَا أَيُّهَا الرَّهْطُ إِنَّ سَيِّدَنَا لُدِغَ، فَسَعَيْنَا لَهُ بِكُلِّ شَىْءٍ، لاَ يَنْفَعُهُ شَىْءٌ، فَهَلْ عِنْدَ أَحَدٍ مِنْكُمْ شَىْءٌ فَقَالَ بَعْضُهُمْ نَعَمْ، وَاللَّهِ إِنِّي لَرَاقٍ، وَلَكِنْ وَاللَّهِ لَقَدِ اسْتَضَفْنَاكُمْ فَلَمْ تُضَيِّفُونَا، فَمَا أَنَا بِرَاقٍ لَكُمْ حَتَّى تَجْعَلُوا لَنَا جُعْلاً. فَصَالَحُوهُمْ عَلَى قَطِيعٍ مِنَ الْغَنَمِ، فَانْطَلَقَ فَجَعَلَ يَتْفُلُ وَيَقْرَأُ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} حَتَّى لَكَأَنَّمَا نُشِطَ مِنْ عِقَالٍ، فَانْطَلَقَ يَمْشِي مَا بِهِ قَلَبَةٌ. قَالَ فَأَوْفَوْهُمْ جُعْلَهُمُ الَّذِي صَالَحُوهُمْ عَلَيْهِ، فَقَالَ بَعْضُهُمُ اقْسِمُوا. فَقَالَ الَّذِي رَقَى لاَ تَفْعَلُوا حَتَّى نَأْتِيَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَنَذْكُرَ لَهُ الَّذِي كَانَ، فَنَنْظُرَ مَا يَأْمُرُنَا. فَقَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرُوا لَهُ فَقَالَ "" وَمَا يُدْرِيكَ أَنَّهَا رُقْيَةٌ أَصَبْتُمُ اقْسِمُوا وَاضْرِبُوا لِي مَعَكُمْ بِسَهْمٍ "".
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒரு குழுவினர் பயணமொன்றை மேற்கொண்டார்கள். அவர்கள் பயணம் செய்து (வழியில்) அரபுக் குலங்களில் ஒரு குலத்தார் (தங்கியிருந்த இடத்துக்கு) அருகில் தங்கினார்கள். நபித் தோழர்கள் அக்குலத்தாரிடம் தமக்கு விருந்தளிக்கும்படி கேட்க அவர்களுக்கு அக்குலத்தார் விருந்தளிக்க மறுத்துவிட்டார்கள். பின்னர், அந்தக் குலத்தாரின் தலைவனைத் தேள் கொட்டிவிட்டது. எனவே, அவனுக்காக அ(க் குலத்த)வர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பர்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், 'இதோ! இங்கே நமக்கருகில் தங்கியிருக்கும் கூட்டத்தாரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் (மருந்து) இருக்கலாம்!' என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித்தோழர்களிடம் வந்து, 'கூட்டத்தாரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; எதுவுமே அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது (மருந்து) ஏதேனும் இருக்கிறதா?' என்று கேட்டனர்.
அப்போது நபித்தோழர்களில் ஒருவர், 'ஆம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து அளிக்காததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப்பார்க்க முடியாது!' என்றார். அவர்கள் (முப்பது ஆடுகள் கொண்ட) ஓர்ஆட்டு மந்தையை அளிப்பதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். அந்த நபித்தோழர், தேளால் கொட்டப்பட்டவர் மீது 'அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்..' என்று ஓதி (இலேசாக) உமிழ்ந்தார். உடனே பாதிக்கப்பட்டவர் கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். எந்த வேதனையும் அவரிடம் தென்படவில்லை. பிறகு அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். 'இதைப் பங்குவையுங்கள்!' என்று (நபித் தோழர்) ஒருவர் கூறியபோது, 'இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக் கூடாது!' என்று ஓதிப்பார்த்தவர் கூறினார். நபி(ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அது (அல்ஹம்து ) ஓதிப்பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்டுவிட்டு, 'நீங்கள் செய்தது சரிதான்; அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்!' என்று கூறினார்கள். 74
ஸஹீஹ் புகாரி : 5749.
அத்தியாயம் : 76. மருத்துவம்

Address

Judge Paramasivam Street
Perambur
600011

Alerts

Be the first to know and let us send you an email when ஓதிப் பார்க்கலாம் வாங்க posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share