St John Of The Cross Church Siluvaipuram

St John Of The Cross Church Siluvaipuram Siluvaipuram parish comes under kuzhithurai diocese. It has around 650 families.The patron saint of our church is "ST.JOHN OF THE CROSS" J.

�பெயர் : புனித சிலுவை அருளப்பர் ஆலயம்

�இடம் : சிலுவைபுரம், கொல்லங்கோடு

�மாவட்டம் : கன்னியாகுமரி
�மறை மாவட்டம் : குழித்துறை

�நிலை : பங்குதளம்
�கிளை : புனித குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், சந்தனபுரம்

�பங்குத்தந்தை : அருட்பணி. அஜின்

�குடும்பங்கள் : 650
�அன்பியங்கள் : 16

�ஞாயிறு திருப்பலி : காலை 08.30 மணிக்கு

�வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்கு திருப்பலி, நற்கருணை ஆராதனை

�திங்கள், வியாழ

ன், சனிக்கிழமைகளில் காலை 06.30 மணிக்கு திருப்பலி

�திருவிழா : டிசம்பர் மாத இறுதியில்

சிலுவைபுரம் ஆலய வரலாறு :
**********************

�அமைவிடம் :

�கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையான கேரளக் கரையோரமாய் சிலுவைபுரம் என்ற ஊரில் புனித சிலுவை அருளப்பர் ஆலயம் அமைந்துள்ளது.

�நூற்றாண்டுகளுக்கு முன் வெளிநாட்டினர் பலர் இந்தியாவில் மறை பரப்புப் பணியை மேற்கொண்டனர். அதில் போர்ச்சுகீசிய மிஷனும் ஒன்று. சுமார் கி.பி 17- ம் நூற்றாண்டில் வாராபுழை மறை மாவட்டம் கடலோரம் மற்றும் அதனுடன் இணைந்த மக்களுக்கு சேவை செய்து வந்தனர்.

�வறுமை, அறியாமை, கொடிய நோய்களிலும் சிக்கிக் கொண்டு வாழும் மக்களைக் கண்ட மிஷனரீஸ், அவர்களுடன் நெருங்கி இரண்டற பழகினர். அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு நோய்களுக்கு மருந்தும், அறியாமையைப் போக்க அறிவையும் கல்வியையும் இவற்றுடன் இறைவனைப் பற்றிய போதனைகளுமாய் நம் மறையை பரப்பி வந்தனர்.

�கி.பி 19- ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் போர்ச்சுகீசிய மிஷனரீஸ் வல்லுவ பொற்றை -யை மையமாகக் கொண்டு இவ்வூர் மக்களிடம் இறைவனைப் பற்றிய போதனைகளை மேற்கண்டவாறு போதிக்க தொடங்கினர். இவர்களைத் தொடர்ந்து வந்த கார்மலீத் சபையினர் (கார்மெல்) இங்கு ஆலயம் கட்டியது முதல் இவ்வூர் வரலாறு துவங்கியது.

பெயர்க்காரணம் :

�வெளிநாட்டினர் ஆலயங்களை உயரமான இடங்களில் அமைப்பது வழக்கம். அவ்வகையில் இவ்வூரில் வல்லுவ பொற்றையை தேர்வு செய்து, ஆலயம் கட்டும் பணியை கார்மலீத் சபையை சார்ந்தவர்கள் செய்தனர். அவர்கள் கார்மலீத் சபையில் குருவாக பணி செய்த புனித சிலுவை அருளப்பரை பாதுகாவலாகக் கொண்டு ஒரு சிறிய ஓலைக் கோயிலை கட்டினார்கள்.

�பின்னர் அருட்பணி. இன்னசென்ட் (பெல்ஜியம்) அவர்கள், ஆலயத்தை சார்ந்த இப்பகுதிக்கு சிலுவைபுரம் எனப் பெயரிட்டார்.

ஆலயம் வளர்ந்த வரலாறு :

துவக்க காலத்தில் சிறு ஓலைக் குடில் ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றி வந்தார்கள். அக்காலத்தில் சுமார் 30 குடும்பங்கள் இப் பங்கில் இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு நிலையான ஆலயத்தின் தேவையை உணர்ந்து இக் குடும்பத்தினரின் உதவியுடனும், வெளி நாட்டினரின் நிதி உதவியுடனும் ஓட்டுக் கூரையாலான ஆலயம் கட்டப்பட்டு அருட்பணி. லாரன்ஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
அப்போது மங்குழி, சூழால், பிராகோடு, போராங்கோடு, சந்தனபுரம், காக்கவிளை, பின்குளம் ஆகிய பகுதிக்குட்பட்ட இடம் இப்பங்கின் எல்லைகளாக இருந்தது.
பின்னர் அருட்பணி. லூக்காஸ் அவர்கள் பணிக்காலத்தில் பொதுநிலையினரின் பங்கேற்பு அதிகமானதால், அனைவரும் ஆலயத்தின் உட்பகுதியில் இருந்து திருப்பலியில் பங்கேற்க முடியாததால் ஆலயத்தின் முன் பக்கம் இரண்டு வாயில்கள் கூடுதலாக அமைத்து வெளியில் நின்று கொண்டும் திருப்பலியில் பங்கேற்க வழிவகை செய்தார்.
அதனைத் தொடர்ந்து வந்த அருட்பணி. ஜஸ்டஸ் அவர்கள் அன்றைய பங்குப்பேரவையின் ஒத்துழைப்புடன், அழகிய வடிவில் கான்கிரீட்டால் ஆலய இருபுறமும் விரிவாக்கம் செய்யப்பட்டு இட நெருக்கடியை குறைத்தார்.
தற்போதைய புதிய ஆலயமானது அருட்பணி. சதீஷ்குமார் ஜாய் அவர்களின் பணிக்காலத்தில், பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பு மற்றும் நன்கொடைகள், பங்குத்தந்தையின் வழி நடத்துதலில் சிறப்பாக நிறைவு பெற்று 28-12-2014 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

கொடிமரம் :

திருவிழா காலத்தில் ஆலயத்தில் திருக்கொடியேற்றும் நிறைவேற்றப் படுவது வழக்கம். அதன் அடிப்படையில் ஆரம்ப காலத்தில் கமுகு மரம் (பாக்கு மரம்) வெட்டி, நட்டு வைத்து திருக்கொடியேற்றினர்.
பின்னர் அருட்தந்தை இராபர்ட் அவர்கள் காலத்தில் இரும்பு குழாயாலான 60 அடி உயர கொடிமரம் நாட்டப்பட்டது.
மழை, காற்று போன்றவற்றால் இக்கொடிமரம் பாதிப்படைந்ததால் கான்கிரீட்டாலான கொடிமரம் திரு குருசுமுத்து அவர்களின் நன்கொடையில் உருவாக்கப்பட்டு அருட்பணி லூக்காஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
தற்போதைய, கல்லால் ஆன கொடிமரம் அருட்பணி சதீஷ்குமார் ஜாய் அவர்களால் நிறுவப்பட்டு மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் 28-12-2014 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

கிணறு :
ஓலைக் கோயில் இருக்கையிலேயே இவ்வாலய வளாகத்தில் அமையப் பெற்றிருக்கும் கிணறு வெட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மின்சாரம் :

1962-ம் ஆண்டிலிருந்து அருட்பணி வலேரி மெலாட் அவர்கள் ஆலயத்திற்கு மின்சாரத்தை பெற்றுத் தந்தார்கள்.

பலிபீடம் :

அக்காலத்தில் இலத்தீன் மரபுப்படி பின்னோக்கி இருந்த பீடம், இரண்டாம் வத்திக்கான் சங்க முறைப்படி அருட்தந்தை ஏசுதாசன் தாமஸ் அவர்கள் காலத்தில் மாற்றி அமைக்கப்பட்டு பொது நிலையினரை நோக்கி திரும்ப, திருப்பலி நிறைவேற்றும் வழக்கம் நடைமுறைப்படுத்தப் பட்டது.
ஓட்டுக்கூரையாலான ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்ட போது அருட்பணி. ஜஸ்டஸ் அவர்கள் புதிய பீடத்தை நிறுவினார்.
தற்போதைய அழகிய பலிபீடம் விவிலிய சிந்தையில் அருட்பணி. சதீஷ்குமார் ஜாய் அவர்கள் நிறுவினார்.

புனித சூசையப்பர் குருசடி:

மக்களின் நம்பிக்கையை பறைசாற்றும் விதமாக பழமையான சூசையப்பர் குருசடி சிலுவைபுரம் சாலையோரம் அமைந்துள்ளது. பல இடங்களுக்கு பயணம் செய்வோர் இக்குருசடியில் வேண்டி காணிக்கை செலுத்திவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

மாதா குருசடி:

சிலுவைபுரம் சந்திப்பில் பங்கு மக்களின் ஜெப தேவைக்காக, ஒரு அழகிய புனித ஆரோக்கிய அன்னை குருசடி திரு. அப்புமணி அவர்கள் குடும்பத்தார் சார்பாக நன்கொடையாக கட்டித்தரப்பட்டு ஆலயத்தின் பெயரில் பதிவு செய்து 2017 ம் ஆண்டு டிசம்பர் மாதம் அர்ச்சிக்கப்பட்டது.

கன்னியர் இல்லம் :

இவ்வூருக்கு திருத்துவபுரத்திலிருந்து கன்னியர்கள் நடந்து வந்து சேவை புரிந்தனர். அவர்களின் சேவையின் சிறப்பையும், தேவையையும் உணர்ந்து அருட்பணி. போர்ஜியோ அவர்கள் 1947 -ல் ஒரு சிறு கட்டிடத்தை அமைத்து அவர்களை இங்கேயே தங்கி பணிபுரிய செய்தார். தற்போதைய கட்டிடம் 1978 ம் ஆண்டு அருட்பணி அலெக்ஸாண்டர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1982- ம் ஆண்டு அருட்பணி. லூக்காஸ் அவர்களின் முயற்சியால் கட்டப்பட்டு அப்போதைய ஆயர் மேதகு ஆரோக்கியசாமி ஆண்டகையால் அர்ச்சிக்கப்பட்டது. C சமூக நலக்கூடம் :

J. C சமூக நலக்கூடமானது 04-01-1998 அன்று அருட்பணி அகஸ்டின் அவர்களது முயற்சியால் அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப் பட்டது. பின்னர் அருட்பணி. பிரைட் சிம்சராஜ் அவர்களின் முயற்சியால் முதல் தளம் கான்கிரீட் செய்யப்பட்டது.
தொடர்ந்து அருட்பணி. காட்வின் செல்வ ஜஸ்டஸ் அவர்களின் முயற்சியால் வேலைகள் அனைத்தும் நிறைவு பெற்று 03-01-2010 ல் திறப்பு விழா கண்டு, இன்று உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களின் பயன்பாட்டிற்கு உதவுகின்றது.

மாலை நேரக் கல்வி :

மாலைநேரக் கல்வியானது அருட்பணி. காட்வின் செல்வ ஜஸ்டஸ் காலத்தில் துவக்கப் பட்டது. மாலை 06.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். ஏராளமான மாணவர்கள் இதில் பயின்று பயன் பெற்று வருகின்றனர்.

பள்ளிக்கூடம் :

1950 -ம் ஆண்டு அருட்பணி பிரான்சிஸ் போர்ஜியோ பீட்டர் அவர்களால் பள்ளிக்கூடம் அமைக்கப் பட்டது.
1953 - ம் ஆண்டில் அருட்பணி. ஜோசப் அடிகளாரால் பள்ளிக்கு அரசு அங்கீகாரம் பெறப்பட்டது.
இடைநிலைப் பள்ளியாக செயல்பட்டுக் கொண்டிருந்ததை அருட்பணி லூக்காஸ் அவர்களின் முயற்சியால் 1980 ல் நடுநிலைப் பள்ளியாக மாற்றப் பட்டது.
அருட்பணி. ஜஸ்டஸ் அவர்களின் முயற்சியால் புதிய கட்டிடமும் கட்டப்பட்டு, உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்து விளங்குகின்றது.

மறைக்கல்வி :

பங்கின் தொடக்க காலம் முதலே மறையைக் குறித்த அறிவை வளர்க்க மறைக்கல்வி பயிற்றுவிக்கப் பட்டது. தொடக்க காலத்தில் அருட்சகோதரிகள் இப்பணியை செய்தனர். மாணவர்களின் திறமைகளை வளர்க்கும் பொருட்டு மூன்று மாதத்திற்கொரு முறை மறைக்கல்வி மன்ற கூட்டம் நடத்தப்பட்டு, மாணவர்கள் ஊக்கப்படுத்தப் படுகிறார்கள்.

சபைகள், சங்கங்கள், இயக்கங்கள் :

சிலுவைபுரம் பங்கில் அனைத்து பங்கேற்பு அமைப்புகளும், தங்களுக்கான நோக்கங்களுடன் பங்குத்தந்தையின் வழிகாட்டுதலில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இன்றைய நிலை :

ஒரு காலத்தில் கல்வியறிவிலும், பொருளாதாரத்திலும் குன்றியிருந்த இப்பங்கானது தற்போது சிறந்த கல்வியாளர்களையும், வல்லுநர்களையும், பல்வேறு துறைகளிலும் சிறந்து வளர்ந்து உயர்ந்து நிற்கின்றது.
மேலும் தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி. அஜின் அவர்கள் பங்கு மக்களை ஒருங்கிணைத்து சிறப்பாக வழி நடத்தி, சிலுவைபுரம் தலத்திருச்சபையை வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி கொண்டு செல்கிறார்.

நூற்றாண்டு விழா :

சிலுவைபுரம் பங்கானது 19.09.1919 முதல் 19.09.2019 முடிய நூற்றாண்டை நிறைவு செய்து "நன்றியோடு நூற்றாண்டு" என்ற மையசிந்தனையோடு அருட்பணி. விக்டர் குரூஸ் பணிக்காலத்தில் 19.09.2019 முதல் 29.09.2019 முடிய 11 நாட்கள் சிறப்பாக கொண்டாடியது. நூற்றாண்டு நினைவாக பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டு 07.09.2019 அன்று மேதகு ஆயர் ஜெறோம் தாஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. நூற்றாண்டு விழா முதல் நாள் 100 மாணவிகளின் வரவேற்பு நடனம் அனைவரையும் பிரமிக்க வைத்தது. தொடர்ந்து ஆடம்பர திருப்பலி மற்றும் சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் அனைத்து சபை மற்றும் மதத்தை சார்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு பங்கின் பெருமைகளை எடுத்துரைத்தனர். தொடர்ந்து பங்கின் முதியவர்கள் கவுரவிக்கப்பட்னர். அன்றைய தினம் "சிலுவைபுரத்தினிலே" என்ற இசை குறுந்தகடு வெளியிடப்பட்டது. நூற்றாண்டு விழா பவனி சிறப்பாக இருந்ததாக பிற பகுதி மற்றும் சபையை சார்ந்த மக்கள் வெகுவாக பாராட்டினர். மேலும் அனைத்து நாட்களும் அன்புவிருந்து மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நூற்றாண்டு விழாவை உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மண்ணின் இறையழைத்தல்கள் :

1. அருட்பணி. மா. பா ஏசுதாஸ் (தாகம் உட்பட ஐந்திற்கும் மேற்பட்ட கத்தோலிக்க பாடல் குறுந்தகடுகளை வெளியிட்டவர்)
2. அருட்பணி. அமல் ராஜ் (வாரனாசி மறைமாவட்டம்)
3. அருட்சகோதரி. லீமாறோஸ்

கோட்டார் மறைமாவட்டம் உதயமான பிறகு பங்கில் பணிபுரிந்த பங்குத்தந்தையர்கள்:
Fr. ஜெரோட்
Fr. ஸ்டீபன் நாசரேத்
Fr. ஆம்ப்ரோஸ் பட்டன்
Fr. டொம்னிக்
Fr. பெஞ்சமின் விளாஸ்
Fr. பிரான்சிஸ் போர்ஜியோ பீட்டர்
Fr. ஜோசப்
Fr. சூசை மரியன்
Fr. ஸ்டென்லியஸ்
Fr. அந்தோணி முத்து
Fr. வல்லேரி மெல்லத்
Fr. ஜே.ஜி. யேசுதாஸ்
Fr. லெசிலின் .எஸ். அலெக்சாண்டர்
Fr. த.யேசுதாசன்
Fr. வி.ராபர்ட்
Fr. பெனடிக்ட். ஜே.ஆர். அலெக்சாண்டர்
Fr. லூகாஸ் .ஜே
Fr. ஜஸ்டஸ்
Fr. மரியா கிளாட்ஸ்டன்
Fr. அகஸ்டின்
Fr. ஜூலியஸ்
Fr. மைக்கேல் ராஜ்
Fr. பிரைட் சிம்ச ராஜ்
Fr. பெர்க்மான்ஸ்
Fr. கிறிஸ்து ராஜா மணி
Fr. காட்வின் செல்வ ஜஸ்டஸ்
Fr. சதீஷ் குமார் ஜாய்

தற்பொழுது குழித்துறை மறைமாவட்டம் உதயமான பிறகு

Fr. விக்டர் குரூஸ்
Fr. அஜின்....

வழித்தடம் :

�கொல்லங்கோடு செல்கிற பேருந்தில் பயணித்து சிலுவைபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இவ்வாலயம் செல்லலாம்.

�Bus : 382, 82A, 82B, 82D, 82F, 82G, 82M,
PCG

https://www.cbci.in/news-detail/Rev-Dr-M-Christu-Rajamony-Assumes-Office-as-Secretary-of-CBCI-Office-for-Justice-Peace-a...
07/07/2026

https://www.cbci.in/news-detail/Rev-Dr-M-Christu-Rajamony-Assumes-Office-as-Secretary-of-CBCI-Office-for-Justice-Peace-and-Development?fbclid=IwdGRjcAS5WZRjbGNrBLlZc2V4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1MDY4NTUzMTcyOAABHuzUo5bFZUoyuDCZPaTYx5RdsEcbK0ayy9IEEMwVrloC5KK-bz2TLlXozcDV_aem_twDucRclHKxMM0Bbj6KYaA

New Delhi, 6 July 2026, CBCI: Rev. Dr. M. Christu Rajamony (M. C. Rajan) has assumed office as the Secretary of the CBCI Office for Justice, Peace and Development (JPD). He will function from the Na

*அன்பு அருள்பணியாளர்களே, அருள்சகோதரிகளே, இறைமக்களே!**நம் குழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயரான மேதகு ஆயர் ஜெறோம்தாஸ் வற...
24/03/2026

*அன்பு அருள்பணியாளர்களே, அருள்சகோதரிகளே, இறைமக்களே!*

*நம் குழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயரான மேதகு ஆயர் ஜெறோம்தாஸ் வறுவேல் SDB, (வயது 74)அவர்கள் இன்று அதிகாலை(மார்ச் 24, 2026) 12.10 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.*

*அன்னாருடைய நல்லடக்க திருப்பலியானது நாளை (25-03-2026) புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மூவொரு இறைவன் பேராலயம், திரித்துவபுரத்தில் வைத்து நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.*

அனைவரையும் இந்த இறுதி சடங்கில் கலந்து கொள்ள அழைக்கிறேன். ஆயர் ஜெறோம்தாஸ் வறுவேல் அவர்களின் ஆன்மா இறைவனில் இளைப்பாற இணைந்து இறைவேண்டல் செய்வோம்.

Address

Siluvaipuram, Kollamcode
Parassala
629160

Opening Hours

Monday 6am - 6pm
Tuesday 6am - 6pm
Wednesday 6am - 6pm
Thursday 6am - 6pm
Friday 6am - 6pm
Saturday 6am - 6pm
Sunday 6am - 6pm

Telephone

+919947514574

Website

Alerts

Be the first to know and let us send you an email when St John Of The Cross Church Siluvaipuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to St John Of The Cross Church Siluvaipuram:

Shortcuts

Share