அருள்மிகு சிவலோக நாயகி உடனுறை சிஷ்டகுருநாதர் திருக்கோவில், திருத்துறையூர்

  • Home
  • India
  • Panruti
  • அருள்மிகு சிவலோக நாயகி உடனுறை சிஷ்டகுருநாதர் திருக்கோவில், திருத்துறையூர்

அருள்மிகு சிவலோக நாயகி உடனுறை சிஷ்டகுருநாதர் திருக்கோவில், திருத்துறையூர் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from அருள்மிகு சிவலோக நாயகி உடனுறை சிஷ்டகுருநாதர் திருக்கோவில், திருத்துறையூர், Religious organisation, Sri Shista Gurunathar Temple, Thiruthuraiyur Post, Panruti Taluk, Cuddalore District Tamil Nadu – 607 205, Panruti.

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்கள்

15. திருத்துறையூர் ( திருத்தளூர் )

மூலவர் – சிஷ்டகுருநாதேஸ்வரர் ( பசுபதீஸ்வரர் )
அம்பாள் – சிவலோகநாயகி ( பூங்கோதைநாயகி )
தலமரம் – கொன்றை மரம்
தீர்த்தம் – சூரிய தீர்த்தம்
புராண பெயர் – திருத்துறையூர்
ஊர் – திருத்தளூர்
மாவட்டம் – கடலூர்
மாநிலம் – தமிழ்நாடு
பாடியவர்கள் – சுந்தரர்
• தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் 15 வது தலம் இது
• சுந்தரர் தவநெறி

வேண்டிப்பெற்ற தலம்
• அருணந்தி சிவாச்சாரியார் பிறந்த தலம். இவருடைய சமாதிக்கோயில் கோயிலுக்கு நேரெதிரில் அமைந்துள்ளது
• நாரதர் , வசிஷ்டர் , அகத்தியர் , பீமன் , சூரியன் , ராமர் , சீதை , பிரம்மன் , திருமால் முதலியோர் வழிபட்ட தலம்
• பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ள சிறிய ஊரில் அமைந்துள்ளது இச்சிவத்தலம். சுந்தரர் காலத்தில் தென்பால் ஓடிய பெண்ணையாறு தற்போது வடபால் ஓடுகின்றது. பழைய பெண்ணையாறு மலட்டாறு என்ற பெயரில் தென்பால் உள்ளது.
• கோயிலுக்கு எதிரில் தீர்த்தக்குளம் உள்ளது
• இத்தலத்திற்கு வந்த சுந்தரரை சிவனார் கிழவனார் வடிவில் தோன்றி ஆட்கொண்ட இடமான கிழப்பாக்கம் இத்தலத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. இக்கிழப்பாக்கத்தில் சிவலிங்கத்திருமேனியும் , கோவிலும் உள்ளன.
• சுந்தரரை ஆட்கொண்ட திருவடிவங்களே பசுபதீஸ்வரர் , பூங்கோதைநாயகி
• இத்தலத்தில் உள்ள அஷ்டபுஜ பத்ரகாளி சந்நிதி மிக விசேஷமானது. இச்சன்னிதி கோயிலுக்கு வெளியே தனியாக அமைந்துள்ளது. பௌர்ணமி நாட்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன
• சிவனார் பெரிய லிங்கத்திருமேனியராக கம்பீரமாக ஆவுடை வலப்பக்கம் கொண்டு மேற்கு நோக்கியும் , அம்பாள் நின்ற கோலத்தில் வடக்கு நோக்கியும் தரிசனம் தருகின்றனர்
• கோபுர நுழைவுவாயிலைக் கடந்ததும் வலப்புறம் அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது
• நடராஜார் சபை
• சிவனார் சுந்தரருக்கு திருவடி சூட்டி குருவடிவுடன் எழுந்தருளி அருமறைகளை உபதேசித்த தலம் இது. ரிஷபாரூடர் சுந்தரருக்கு அருள்செய்த திருக்கோலமும் , சுந்தரர் கைகூப்பி வணங்கும் நிலையும் கொண்ட வடிவங்கள் கோயிலில் உள்ளன
• உற்சவத்திருமேனிகளுள் சாட்டை பிடித்த நிலையில் காட்சி தரும் குதிரைச்சொக்கர் வடிவம் அழகு நிறைந்தது
• கருவறை முன்மண்டப தூணில் சுந்தரர் ஓடத்தில் இத்தலம் வந்தடைந்த வரலாறு சிற்பமாக உள்ளது. இம்மண்டபத்தின் வலப்புறம் நால்வர் சந்நிதி உள்ளது
• வெளிப்பிரகாரத்தில் நவக்கிரகங்கள் , பைரவர் , சூரியன் , ராமர் மற்றும் பீமன் வழிபட்ட சிவலிங்கத் திருமேனிகளின் சந்நிதிகள் , சூரியனின் சந்நிதி முதலியவை உள்ளன
• வரதராஜப்பெருமாள் சந்நிதி சிறப்பானது
• கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர் , தட்சிணாமூர்த்தி , லிங்கோத்பவர் , பிரம்மா , துர்க்கை முதலியோர் திருக்காட்சி
• நர்த்தன விநாயகர் தனிச்சன்னதியில் கிழக்கு நோக்கி திருக்காட்சி தருகிறார்
• புகழ்ப்பெற்ற குருத்தலங்களில் இத்தலமும் ஒன்று
• தட்சிணாமூர்த்தி சந்நிதிக்குப் பக்கத்தில் உமாமகேஸ்வரர் சுந்தரருக்கு காட்சி தந்த சிற்பம் சாட்சி விநாயகருடன் உள்ளது
• அம்பாள் சந்நிதி எதிரில் தலமரம் உள்ளது. இத்தல மரத்தின் அருகில் அகத்தியர் வழிபட்ட லிங்கத்திருமேனி உள்ளது
• வைகாசியில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது
• வைகாசி விசாகம் , மாசிமகம் , பங்குனி உத்திரம் , திருவாதிரை , நவராத்திரி , மகாசிவராத்திரி , கார்த்திகை தீபம் , கந்தசஷ்டி , ஐப்பசி அன்னாபிஷேகம் முதலான உற்சவங்களும் சிறப்புடன் நடைபெறுகின்றன
• வியாழக்கிழமைகள் மிக விசேஷமானவை
• பிரதோஷத்தின் போது நந்திக்கு அருகில் நந்திக்கொடி கட்டப்பட்டு நந்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்க ஒன்று
• சித்திரைமாத முதல் வாரம் சூரிய வழிபாடு நடைபெறுகிறது
• கல்வி-கேள்விகளில் சிறந்து விளங்க வழிபடவேண்டிய தலம்
• தேரடி விநாயகர் மூன்றடி உயரத்தில் பெரிய வடிவினராக திருக்காட்சி தருகிறார்.
• புரட்டாசி மாத பூர நட்சத்திரத்தன்று அருணந்தி சிவாச்சாரியார் குருபூஜை நடைபெறுகிறது
• அருகில் திருநாவலூர் , திருவதிகை , திருமாணிக்குழி , திருவடுகூர் , திருப்பாதிரிப்புலியூர் ( கடலூர் ) முதலான தேவாரத்தலங்கள் உள்ளன

தரிசன நேரம்

காலை 06:00 am – 1௦:00 pm &
மாலை 05:00 pm – 08:00 pm

தொடர்புக்கு

04142-248498 ,
94448-07393

பண்ருட்டியில் இருந்து சுமார் 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம்
பண்ருட்டி துணை மின் நிலையம் உள்ள இடத்தில் வலப்பக்கமாக செல்லும் சாலையில் சென்று , தேர்முக்கு உள்ள இடத்தில் இடப்பால் செல்லும் சாலையில் ( பண்ருட்டி – அரசூர் வழி: புதுப்பேட்டை )சுமார் 10 கிமீ சென்று மீண்டும் கரும்பூர் சாலையில் திரும்பி சுமார் 5 கிமீ சென்றால் இத்தலத்தை அடையலாம்.
சென்னை – கும்பகோணம் புறவழிச் சாலையில் பெண்ணையாற்றை கடந்து கன்றக்கோட்டை வழியாக சுமார் 3 கிமீ சென்றால் இத்தலத்தை அடையலாம்

04/05/2025
04/05/2025

மகா கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது

02/05/2025

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், திருத்துறையூர் அருள்மிகு சிவலோக நாயகி உடனுறை சிஷ்ட குருநாதர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக முதற்கால யாக சாலை பூஜை சிறப்பாக நடைபெற்றது ஓம் நமச்சிவாய

02/05/2025

யாகசாலை பூஜை தொடங்கியது

பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு எம்பெருமான் ஆசிபெருமாறு வேண்டிக்கொள்கிறோம்.
29/04/2025

பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு எம்பெருமான் ஆசிபெருமாறு வேண்டிக்கொள்கிறோம்.

மஹா கும்பாபிஷேகம்
08/04/2025

மஹா கும்பாபிஷேகம்

திருத்துறையூர் சிவன் கோவில்🙏🙏🙏🙏🙏
09/03/2024

திருத்துறையூர் சிவன் கோவில்🙏🙏🙏🙏🙏

🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏
27/11/2023

🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏

விநாயகர் சதுர்த்தி
18/09/2023

விநாயகர் சதுர்த்தி

Address

Sri Shista Gurunathar Temple, Thiruthuraiyur Post, Panruti Taluk, Cuddalore District Tamil Nadu – 607 205
Panruti
607205

Alerts

Be the first to know and let us send you an email when அருள்மிகு சிவலோக நாயகி உடனுறை சிஷ்டகுருநாதர் திருக்கோவில், திருத்துறையூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share