28/08/2026
#மஸ்ஜிதுத்_தக்வா
பள்ளிவாசலில்
பொது (மசூரா) ஆலோசனைக் கூட்டம்
நேற்று 27.08.2026 #வியாழக்கிழமை,
இஷா தொழுகைக்குப் பிறகு
ிண்டுக்கல்_மாநகர_கிளையின்
பொது (மசூரா) ஆலோசனைக் கூட்டம்
#சகோதரர்_முஹம்மது_பிலால் (கேன்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்,
#இன்_ஷா_அல்லாஹ்....
வரும்
#செப்டம்பர்_மாதத்தில்
மேற்கொள்ள வேண்டிய
மார்க்க மற்றும் சமூகப் பணிகள் குறித்து ஆலோசித்து,
பின்வரும் பணிகளைச் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
1️⃣ #பெண்களுக்கான_பயான்_நிகழ்ச்சி சனிக்கிழமைகளான 05.09.2026 மற்றும் 19.09.2026 ஆகிய நாட்களில்
#மஸ்ஜிதுத்_தக்வா_பள்ளிவாசலில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடத்துவது.
2️⃣ #தர்பியா – #நல்லொழுக்கப்_பயிற்சி_வகுப்பு
வெள்ளிக்கிழமை 11.09.2026,
மஃரிப் தொழுகைக்குப் பிறகு
தர்பியா (நல்லொழுக்கப் பயிற்சி) வகுப்பு நடத்துவது.
3️⃣ #தெருமுனைப்_பிரச்சாரம் அழைப்பாளர்களைக் கொண்டு வாரத்தில் ஒரு நாள் தெருமுனைப் பிரச்சாரம் நடத்துவது.
4️⃣ #சமூக_சீர்திருத்தப்_பணி –
#தஃவா_டேபிள்
வாரத்தில் ஒரு நாள்
சமூக சீர்திருத்தப் பணியாக தஃவா டேபிள் நடத்துவது.
5️⃣ #துண்டுப்_பிரசுரம்_விநியோகம் பேகம்பூர் அமீருன்நிஸா (தர்கா உரூஸ்) சம்பந்தமான துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் விநியோகிப்பது.
ஆகிய பணிகளை மேற்கொள்வது குறித்து முடிவு செய்யப்பட்டது.
#அல்ஹம்துலில்லாஹ்!
#இன்_ஷா_அல்லாஹ்...., திட்டமிடப்பட்டுள்ள அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெறவும், அவற்றின் மூலம் மக்களுக்கு பயனும், சமூகத்தில் நல்ல மாற்றமும் ஏற்படவும் அல்லாஹ் நமக்கு தவ்ஃபீக் வழங்குவானாக! ஆமீன்.
🌿 நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
“ஒரு நன்மையைச் சுட்டிக்காட்டுபவருக்கும், அதைச் செய்தவருக்குக் கிடைக்கும் நன்மையைப் போன்றே நன்மை கிடைக்கும்.”
ஆதாரம்: திர்மிதி
🕌 ிண்டுக்கல்_மாநகர_கிளை #திண்டுக்கல்_மாவட்டம்.