நமது கோயில்கள்

Directions

நமது கோயில்கள் நமது கோயில்களின் சிறப்பை பகிரீந்து கொள்வோம்

உத்திர கர்நாடகவில் உள்ள முருகீஸ்வரர். ..
22/07/2024

உத்திர கர்நாடகவில் உள்ள முருகீஸ்வரர். ..

அனேகமான பழைய கோயில்கள் அனைத்தும் தகவல் களஞ்சியங்கள். அவற்றையெல்லாம் நாம் தான் கூர்ந்து  கவனித்து கற்றுக்கொள்ள வேண்டும். ...
23/06/2024

அனேகமான பழைய கோயில்கள் அனைத்தும் தகவல் களஞ்சியங்கள். அவற்றையெல்லாம் நாம் தான் கூர்ந்து கவனித்து கற்றுக்கொள்ள வேண்டும். கோயில்கள் சும்மா பிரார்தனைக்காக மட்டும் கட்டப்பட்டவையல்ல. அவை காலம் காலமாக நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் எடுத்துரைப்பவை.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் சோழமாதேவி அருள்மிகு குங்குமவள்ளி உடன்மர் குலசேகர சுவாமித் திருக்கோயில்.

சோழமாதேவி என்பதே தற்சமயம் சிற்றூர். மெயின் ரோட்டிலிருந்து உள்ளடங்கிய. ஊர். இப்போது இந்த கோயிலுக்கு போவதென்றால் மடத்துக்குளம் ... கணியூர் மெயின் ரோட்டிலிருந்து கிழக்காக போகும் ரோட்டில் போக வேண்டும். அந்த ரோட்டிலிருந்து வடக்கு நோக்கிப் போகும் சிறிய சாலையில் இன்னும் உள்ளடங்கிய இடத்தில் உள்ளது அருள்மிகு குங்குமவள்ளி உடன்மர் குலசேகர சுவாமித் திருக்கோயில். இந்த கோயிலைப்பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னால் சோழர்கள் பற்றி சிறிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். சோழர் என்றாலே அனைவருக்கும் தெரிந்தவர் ராஜராஜ சோழன். இவரைத் தாண்டி சோழர்களைப் பற்றிய தகவல்களைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. முற்காலச் சோழர்கள் .. இடைக்காலச் சோழர்கள் .. பிற்கால சோழர்கள். என மூன்று வகையாக பிரித்துள்ளார்கள். ராஜராஜ சோழன் வகையறா இடைக்காலச் சோழர்கள். இவர்களைத் தாண்டி கொங்குச் சோழர்கள் என ஓர் சாம்ராஜ்ஜியம் இருந்தது. இவர்களைப் பற்றி பின்னொரு நாளில் தனியாக விலாவாரியாக எழுதுகிறேன்.

சோழமாதேவி அருள்மிகு குங்குமவள்ளி உடன்மர் குலசேகர சுவாமித் திருக்கோயில்.

கொங்கு சோழ சாம்ராஜ்ஜியத்தின் 3ம் மன்னரான வீரசோழன் என்பவரால் கட்டப்பட்ட கோயிலிது. கிழக்குப் பார்த்துக் கட்டப்பட்ட கோயில். சோழர் தேவி நல்லூர் எனபதே மறுவி சோழமாதேவி என்றாகியுள்ளது. அமாராவதி நதிக்கரையில் அமைந்துள்ள கோயில். கொழுமம் முதல் கரூர் வரையில் அமாராவதி நதிக்கரையில்
அமைந்துள்ள 11 சிவன் கோயில்களில் இந்தக் கோயிலும் ஒன்று. கிழக்குப் பார்த்து அமைந்துள்ள இரட்டைக் கோயில்கள். ஆம் சிவனுக்கு தனி கற் கோயில் அதை ஒட்டி வலது புறத்தில் தாயாருக்கு தனி கோயில். சிவன் லிங்க வடிவிலும் தாயார் நின்ற கோலத்திலும் உள்ளார்கள். எப்போதும் தாயார் சன்னாதி இடது பக்கம் தான் அமைந்திருக்கும். இங்கே வலது பக்கத்தில் அமைந்திருக்கிறது.
சிவனின் கோயில் முழுவதும் கற் கோயில். கர்ப்பக்கிருகம் சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
கோயிலின் முன்பு பலி பீடம், நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. நுழைவு வாயில் ராஜ கோபுரம் சுற்றுச்சுவர் ஏதுமில்லை. வயல் வெளிகளின் நடுவே அமைந்துள்ள கோயில். கருவரை அல்லது விமானம் அதை அடுத்து அந்தராளம் ( முன்கூடம் (அ) முற்றம். இது கருவரைக்கும் அர்த்தமண்டபத்திற்கும் இடையே கட்டப்படுவதாகும். ) அடுத்து அர்த்தமண்டபம்.. அதற்கு அடுத்து மகாமண்டபம் இதில் 16 கற் தூண்கள் கூரையை தாங்கியுள்ளன. கோயில் பாதபந்த அதிஷ்டானம் முறையில் உள்ளது. கோயில்கள் பாதபந்த அதிஷ்டானம்
பிரதிபந்த அதிஷ்டானம்
பத்மபந்த அதிஷ்டானம் முறைகளில் கட்டப்பட்டிருக்கும் இவற்றை வைத்து காலத்தை ஓரளவு கணக்கிடலாம். இந்த கோயில் பூதகணங்களுடனும் யாழி வரிகளுடனும் கட்டப்பட்டுள்ளது. இரண்டு அடுக்கு விமானம் கொண்டது இந்த கோயில். விமானம் செங்கற்கலால் ஆனது. கருவரையை சுற்றியுள்ள கோஷ்டம் என்ற சுற்றுச் சுவற்றில்
தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்க்கை அமைக்கப்பட்டுள்ளது. கோயில் சுவர்களில் கல்வெட்டுகள் உள்ளன இவை 12 முதல் 13 ஆம் நூற்றாண்டு கொங்கு சோழர்கள் விக்ரம சோழர் மற்றும் வீர ராஜேந்திரனின் கல்வெட்டுகள் ஆகும். சித்திரை 1,2,3. தேதிகளில் இந்த கோயிலின் மூலவர் மற்றும் அம்மன் விக்கிரஹங்கள் மேல் சூரிய ஒளி படும்படி கட்டப்படுள்ளாதே இந்த கோயிலின் கட்டிட கலையை பறை சாட்டும். கோயில்களுக்கு போவது தரிசனம் செய்ய என்றாலும் பாரம்பரியத்தை அறிந்து கொள்ளவும் சிறிது முயற்சி செய்யலாம். வயல் வெளிகளில் கோயில் அமைத்திருந்தாலும் தற்சமயம் வேடப்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவர் மேகம் பவுண்ட்டேஷன் என்ற அறக்கட்டளை மூலம் கோயிலை பராமரித்து வருகிறார்கள். அவருக்கு ஆயிரம் கோடி நமஷ்காரங்கள். நேரம் கிடைக்கும் போது போக எண்ணாதீர்கள். நேரத்தை அமைத்து இந்த கோயில்களை காணுங்கள். ஓம் நமச்சிவாய.

எந்த ஒரு கோயிலிலும் ஏதாவது ஒரு விசேசம் இருக்கும்.   ஊர் கோயில்கள் எப்போதும்   மகத்தானது. குடகன் ஆற்றின் கரையில் அமைந்துள...
26/04/2024

எந்த ஒரு கோயிலிலும் ஏதாவது ஒரு விசேசம் இருக்கும்.
ஊர் கோயில்கள் எப்போதும் மகத்தானது. குடகன் ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஊர் வேடசந்தூர். வேட்டைகாரன் சந்தை என்பது காலப் போக்கில் வேடசந்தூர் என மாறியிருக்கலாம். அந்த வகையில் வேடசந்தூர் நீதிமன்ற வேலைக்கு முன்பாக என் மனதிருப்திக்காக வேடசந்தூர் விசாலாட்சி காசி விஸ்வநாதர் கோயில், மற்றும் வேடசந்தூர் மாரியம்மன் கோயில் தரிசனம்.
வேடசந்தூர் கடை வீதிக்கு அருகே உள்ளது விசாலாட்சி காசி விஸ்வநாதர் கோயில். சிறிய கோயில். விநாயகர் முருகன் சண்டிகேஸ்வரர் சிற்றாலங்களை உள்ளடிக்கிய சிறிய கோயில். மூலவர் காசி விஸ்வநாதர் அழகா சிறிய லிங்க மேனியர். விசாலாட்சி அம்மனும் அழகிய தோற்றமுடையவள். சிறிய கோயிலென்றாலும் சுத்தமான அழகிய கோயில். கிழக்கு பார்த்துள்ள கோயில். சுற்றிலும் குடியிருப்புகள் சூழ்ந்துள்ள கோயில்.
மேற்படி கோயிலுக்கு தென் கிழக்காக அமைந்துள்ளது வேடசந்தூர் மாரியம்மன் திருக் கோயில். அம்மன் அவ்வளவு அழகு. மிகச் சிறிய அம்மன். ஆனால் வசீகரமான முகப் பொழிவு. அறநிலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில். ஊர் கோயில் என்பதால் அதன் மீது பற்றும் பக்தியும் சேர்ந்தேயிருக்கும் என்பதை பக்கதர்களின் வருகை ஈடுபாட்டால் அறிய முடிந்தது. இதே ஊரில் நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது இன்றைய தினம் பூட்டியிருந்தது. பின்னொரு நாளில் ....

திருவண்ணாமலை
25/12/2023

திருவண்ணாமலை

08/05/2023

Address

Palani
Palani

Website

Alerts

Be the first to know and let us send you an email when நமது கோயில்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category