ஆன்மீக வீடியோ / Devotional Videos

  • Home
  • India
  • Palani
  • ஆன்மீக வீடியோ / Devotional Videos

ஆன்மீக வீடியோ / Devotional Videos Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஆன்மீக வீடியோ / Devotional Videos, Hindu temple, 7/251 Rmk Nagar New Dharapuram Road, Palani.

நாளை என்பது நரஸிம்மனிடத்தில் இல்லை. எதுவாயினும், அங்கேயே... அப்போதே... அப்படியே....
06/07/2025

நாளை என்பது நரஸிம்மனிடத்தில் இல்லை.
எதுவாயினும், அங்கேயே... அப்போதே... அப்படியே....

02/07/2025
பலி பீடம்அனைத்து ஆலயங்களிலும் கொடி மரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது.ஆகம விதிகளின் படி அமைக...
18/05/2025

பலி பீடம்

அனைத்து ஆலயங்களிலும் கொடி மரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆகம விதிகளின் படி அமைக்கப்பட்டுள்ள சிவாலயங்களிலும், வைணவத் தலங்களிலும் உள்ள பலி பீடங்கள், நம் வாழ்வை மேம்படுத்தும் ஒன்றாக கருதப்பட்டு போற்றப்படுகின்றன._

பலி பீடங்கள் என்பது ஆடு, கோழி போன்ற உயிர்கள் பலி கொடுக்கும் இடம் இல்லை. நம் மனதில் உள்ள மோசமான குணங்களையும், எண்ணங்களையும் பலியிடும் இடம்.

மனிதர்களாகிய நமக்கு ஆழ்மனதில் கெட்ட குணங்கள் இருக்கும். எவ்வளவுதான் பக்குவப்பட்ட பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்கள் மனதுக்குள்ளும் போட்டி, பொறாமை, காமம், குரோதம், கோபம், தாபம், சூது, வாது, வஞ்சனை போன்றவைகளில் ஏதாவது ஒன்றிரண்டு கெட்ட குணங்கள் நீக்க முடியாததாக இருக்கும். இப்படிப்பட்ட கெட்ட குணத்தை கருவறையில் இருக்கும் கடவுளிடம் கூற இயலாது.

நம் மனது எந்த ஆசாபாசமும் இல்லாமல், தெள்ளத்தெளிவாக, ஒன்றுமே இல்லாமல் சுத்தமாக, வெற்றிடமாக இருந்தால்தான் நம் பக்கம் இறைவன் வருவார்.

எதுவும் இல்லாத, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனநிலை உடையவர்களால்தான் கடவுள் பக்கம் செல்ல முடியும்.

எனவே நம் மனதில் உள்ள தீய குணங்களை எல்லாம் வெளியேற்ற வேண்டும். அதாவது கெட்ட நினைவுகளை பலி கொடுக்க வேண்டும். இது ஆலய வழிபாட்டில் மிகவும் முக்கியமானது. ஏனெனில் நாம் நம் மனதில் உள்ள தீய அழுக்குகளை விரட்டும் போது நாம் நல்ல மனிதனாக மாறி விடுவாம்.

இத்தகைய அற்புத மாற்றத்தை ஒவ்வொரு பக்தனிடமும் ஏற்படுத்தும் அருமையான இடம்தான் பலிபீடம்.

இந்த பலி பீடத்தை அமைப்பதற்கு என்று விதிகள் உள்ளன.

பலி பீடத்தின் உயரம், மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மூலவரின் பீடத்து உயரத்துக்கு சமமாக இருக்க வேண்டும்.

எக்காரணத்தைக் கொண்டும் வழிபாட்டின் போது, பலிபீடத்தை தொட்டுக் கும்பிடுவதோ, உரசிச் செல்வதோ கூடாது.

பசுவில் உள்ள தெய்வங்கள் - பசுவை ‘கோ மாதா’ என்று சிறப்பித்து அழைக்கின்றன வேதங்களும், புராணங்களும். பசுவை தெய்வமாக வழிபடும...
15/05/2025

பசுவில் உள்ள தெய்வங்கள் -

பசுவை ‘கோ மாதா’ என்று சிறப்பித்து அழைக்கின்றன வேதங்களும், புராணங்களும். பசுவை தெய்வமாக வழிபடும் முறை நம்மிடையே இருக்கிறது. பசுவிற்கு உணவளிப்பதே பலவற்றுக்கும் பரிகாரமாக சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட கோ மாதா பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தது பசுதான். எனவேதான் அவரை கோபாலகிருஷ்ணன் என்று அழைக்கிறோம்.

கோ பூஜை நடத்தும் போது கண்டிப்பாக பசுவுடன் அதன் கன்றும் இருக்க வேண்டும். கோபூஜை செய்வதால் பணக் கஷ்டம் நீங்கும். சஷ்டியப்பூர்த்தி, சதாபிஷேகம் ஆகியவற்றின்போது, பசு தானம் செய்தால் கூடுதல் புண்ணியம் சேரும்.

ஒரு பசு தன்னுடைய முதன் கன்றை பிரசவிக்கும் போது அதனை “தேனு” என்பார்கள். இரண்டாவது கன்றை பிரசவித்ததும் அந்த பசுவை “கோ” என்பார்கள். இரண்டாவது கன்றை பிரசவித்த பசுவைத் தான் கோ பூஜைக்கு பயன்படுத்துவார்கள்.

பசுவின் வாய் பகுதியில் கலி தேவதை இருக்கிறது. அதனால் தான் பசு பின் பகுதியை தொட்டு வணங்கும் முறை வழக்கத்தில் உள்ளது.
காமதேனு பசு, மூவுலகிற்கும் தாயாக கருதப்படுகிறது. பசுவுக்கு தினமும் பூஜை செய்வது என்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும்.

பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், நவக்கிரகங்களும் வீற்றிருந்து ஆட்சி செய்கின்றனர்.

பசுவை 108 போற்றி சொல்லி வழிபட்டால், பல புராதனக் கோவில்களுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும். வீட்டில் பசு வளர்ப்பது செல்வ செழிப்பை உண்டாக்கும். பசுவுக்கு அகத்திக்கீரை கொடுக்க இயலாவிட்டால். வாழைப்பழம் கொடுக்கலாம்.

உங்களால் வீட்டில் உள்ள பசுவை பராமரிக்க இயலாவிட்டால், அதை அடி மாடாக விற்காமல், ஏதாவது ஒரு கோ சாலையில் சேர்த்து விடுவது நல்லது. பசுக்களை அடிக்கடி நீர் நிலைகளில் நீந்தி குளிக்க வைப்பது நல்லது.

பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கின்றனர் என்பது பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

தலை – சிவபெருமான்
நெற்றி – சிவசக்தி
வலது கொம்பு – கங்கை
இடது கொம்பு – யமுனை
கொம்புகளின் நுனி – காவிரி, கோதாவரி முதலிய புண்ணிய நதிகள்.
கொம்பின் அடியில் – பிரம்மன், திருமால்
மூக்கின் நுனி – முருகன்
மூக்கின் உள்ளே – வித்யாதரர்கள்
இரு காதுகளின் நடுவில் – அஸ்வினி தேவர்
இரு கண்கள் – சூரியன், சந்திரன்
வாய் – சர்ப்பாசுரர்கள்
பற்கள் – வாயுதேவர்
நாக்கு – வருணதேவர்
நெஞ்சு – கலைமகள்
கழுத்து – இந்திரன்
மணித்தலம் – எமன்
உதடு – உதய அஸ்த்தமன சந்தி தேவதைகள்
கொண்டை – பன்னிரு ஆதித்யர்கள்
மார்பு – சாத்திய தேவர்கள்
வயிறு – பூமிதேவி
கால்கள் – வாயு தேவன்
முழந்தாள் – மருத்து தேவர்
குளம்பு – தேவர்கள்
குளம்பின் நுனி – நாகர்கள்
குளம்பின் நடுவில் – கந்தர்வர்கள்
குளம்பின் மேல்பகுதி – அரம்பெயர்கள்
முதுகு – ருத்திரர்
யோனி – சப்த மாதர் (ஏழு கன்னியர்)
குதம் – லட்சுமி
முன் கால் – பிரம்மா
பின் கால் – ருத்திரன் தன் பரிவாரங்களுடன்
பால் மடி – ஏழு கடல்கள்
சந்திகள் – அஷ்ட வசுக்கள்
அரைப் பரப்பில் – பித்ரு தேவதை
வால் முடி – ஆத்திகன்
உடல்முடி – மகா முனிவர்கள்
எல்லா அவயங்கள் – கற்புடைய மங்கையர்
சிறுநீர் – ஆகாய கங்கை
சாணம் – யமுனை
சடதாக்கினி – காருக பத்தியம்
வாயில் – சர்ப்பரசர்கள்
இதயம் – ஆகவணியம்
முகம் – தட்சரைக் கினியம்
எலும்பு, சுக்கிலம் – யாகத் தொழில்

பிரம்மதேவன் பசுவைப் படைத்தவுடன் அதன் ஒவ்வொரு உறுப்புகளிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் இடம் அளித்தார். ஆனால் லட்சுமி தேவி காலம் தாழ்த்தி வந்து தான் வாசம் செய்யவும் பசுவிடம் இடம் கேட்டாள்.

அப்போது பசு லட்சுமிதேவியிடம், “நீ சஞ்சல குணம் உள்ளவள். எனது அவயங்களில் எல்லா இடங்களும் அனைவருக்கும் ஒதுக்கப்பட்டு விட்டது. மலம் கழிக்கும் இடம் மட்டுமே மீதம் உள்ளது”, என்று சொன்னது.

லட்சுமி தேவியும், “அந்த இடத்தையாவது எனக்கு ஒதுக்கித் தர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டதோடு, பசுவின் பின்புறத்தில் தனக்கான இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்தாள். லட்சுமி தேவியைப் போலவே ஆகாயகங்கையும் தனக்கான இடமாக பசுவின் சிறுநீரைத் தேர்ந்தெடுத்தாள். அதனால்தான் பசுவின் சாணம் லட்சுமியின் அம்சமாகவும், சிறுநீர் கங்கையின் அம்சமாகவும் கருதப்படுகிறது.

கோமாதாவை பூஜிப்பது இந்து மதத்தில் சம்பிரதாயமாக உள்ளது. இதை தான் கோபூஜை என்பர். இது நம் புராணங்களில் விசேஷமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கோக்ஷீரத்தில் (பசும்பால்) நான்கு சமுத்திரங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. பசுவின் அனைத்து உடல் உறுப்புகளிலும் அனைத்து புவனங்களும் (லோகங்கள்) ஒளிந்திருப்பதாக வேத பண்டிதர்கள் கூறுவதுண்டு.
பசுவின் உடல் பாகங்களில் ஒளிந்திருக்கும் தேவதைகளின் விவரங்களை ஆராய்வோம்.

பசுவின் நெற்றி, கொம்பு பாகத்தில் சிவபெருமான் வீற்றிருக்கிறார். ஆகையால் கொம்பின் மேல் தெளிக்கப்பட்ட நீரை உட்கொண்டால், த்ரிவேணி சங்கமத்திலுள்ள நீரை ப்ரோக்ஷணம் செய்து கொண்ட பலன் கிட்டும் என்று புராணங்கள் கூறுகின்றன.

அதுமட்டுமல்லாமல் சிவாஷ்டோத்திரம், ஸஹஸ்ரநாமம் சொல்லி வில்வத்தினால் பசுவை பூஜை செய்தால், ஸாக்ஷாத் காசி விஸ்வநாதரை பூஜை செய்த பலன் கிட்டும் என்று வேத பண்டிதர்கள் கூறுகிறார்கள்.

நாசி துவாரத்தில் ஸுப்ரமண்யர் (முருகன்) குடியிருப்பதால், நாசி துவாரத்தை பூஜித்தால் புத்திர சோகம் இராது.

பசுவின் காதுகள் அருகே அஸ்வினி தேவர்கள் கொலுவிருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். அதனால் பசுவின் செவிகளை பூஜித்தால் அனைத்து விதமான நோய்களிலிருந்தும் விடுபடலாம்.

பசுவின் கண்களில் சூரிய சந்திரர்கள் இருப்பார்கள் என்றும், அவற்றை பூஜிப்பதால் அஜ்ஞானம் என்ற இருள் விலகி, ஞான ஒளி, சகல விதமான சம்பத்துகளும் கிட்டும் என்று கூறுகிறார்கள். பசுவின் நாக்கில் வருண தேவர் இருப்பதனால், அதை பூஜிப்பதால் உரிய காலத்தில் சந்ததி உண்டாகும் என்று கூறுகிறார்கள்.

பசுவின் கால்களுக்கு மேலே உள்ள ஸரஸ்வதியை பூஜித்தால் வித்யா ப்ராப்தி உண்டாகும். பசுவின் வலது கன்னத்தில் யமதர்மராஜரும், இடது கன்னத்தில் தர்மதேவதைகள் இவர்களை பூஜித்தால் யமனின் தொல்லை இராது. மேலும் புண்ணிய லோக ப்ராப்தி கிட்டும்.

பசுவின் உதடுகளில் உள்ள ப்ராத: ஸந்தியாதி தேவதைகளை பூஜித்தால் நமது பாபங்கள் நசிக்கும்.

பசுவின் கண்டத்தில் (கழுத்தில்) இந்திரன் உள்ளபடியால், இதை பூஜித்தால் இந்த்ரியங்களை அடக்கும் சக்தி ஏற்படும். புத்திர பாக்கியம் உண்டாகும்.

பசுவின் மடியில் நான்கு புருஷார்த்தங்களும் உள்ளன. அதை பூஜித்தால் தர்மார்த்த காம மோக்ஷம் கிட்டும் மற்றும் பூமியில் நாகங்களின் பயம் இருக்காது.

பசுவின் குளம்பில் கந்தர்வர்கள் உள்ளபடியால் குளம்பினை பூஜித்தால் கந்தர்வ லோக ப்ராப்தி கிட்டும்.

பசுவின் குளம்பின் அருகில் அபஸரஸுகள் இருப்பதால் இதை பூஜித்தால் அன்யோன்யமும், ஸௌந்தர்யமும் கிட்டும்.

அதனால்தான் கோமாதாவை ஸகல தேவதா ஸ்வரூபமாக பாவித்து பூஜை செய்கிறார்கள்.

செல்வச்செழிப்பை வழங்கும் மீன்குளத்தி பகவதி கோவில், பாலக்காடு மாவட்டம் பாலக்காட்டில் உள்ள மீன்குளத்திப் பகவதி அம்மன் கோவி...
09/04/2025

செல்வச்செழிப்பை வழங்கும் மீன்குளத்தி பகவதி கோவில், பாலக்காடு மாவட்டம்

பாலக்காட்டில் உள்ள மீன்குளத்திப் பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபடும் வணிகர்களுக்கு, அவர்களது வணிகம் பெருகிச் செல்வச் செழிப்பு ஏற்படும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

கேரள மாநிலம், பாலக்காடு அருகில் பல்லசேனா எனும் கிராமத்தில் அமைந்திருக்கும் மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபடும் வணிகர்களுக்கு, அவர்களது வணிகம் பெருகிச் செல்வச் செழிப்பு ஏற்படும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. மேலும், இங்கு வழிபடும் பக்தர்களுக்குத் திருமணப்பேறு, குழந்தைப்பேறு ஆகியவை கிடைப்பதுடன் எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும் என்கின்றனர்.

ாறு :

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் சிதம்பரம் பகுதியில் வைர வணிகம் செய்து வந்த வீரசைவ வேளாள (மன்னாடியார்) வகுப்பைச் சேர்ந்த மூன்று குடும்பத்தினர், அப்பகுதியில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தால் தங்களது வணிகத்தைத் தொடர்ந்து செய்ய முடியாமல் அங்கிருந்து வெளியேறினர்.
சிதம்பரத்திலிருந்து வெளியேறிய அவர்கள், முதலில் அவர்களது குலதெய்வமான மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் சென்று வணங்கினர். அவர்களில் இளம் வயதினராக இருந்த ஒருவன், கோவிலின் பொற்றாமரைக் குளத்திலிருந்து ஒரு சிறிய கல்லை எடுத்துத் தன்னுடன் வைத்துக் கொண்டான். அக்குழுவினர் மதுரையிலிருந்து, தாங்கள் வாழ்வதற்கேற்ற ஒரு நல்ல இடத்தைத் தேடித் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். சில நாட்கள் பயணத்திற்குப் பிறகு, கேரள மாநிலம், பாலக்காடு அருகிலுள்ள பல்லசேனா என்னுமிடத்தைச் சென்றடைந்தனர்.
அந்த இடம் அதிக வளமுடையதாக இருந்ததால், அங்கேயே தங்கிக் கொள்வதென முடிவு செய்தனர். தொடக்கத்தில், அந்தப் பகுதியில் வைர வணிகத்தைச் செய்யத் தொடங்கிய அவர்கள், நாளடைவில், வெளியூர்களுக்கும் சென்று வைர வணிகம் செய்து வளமடைந்தனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் குளத்திலிருந்து கல்லை எடுத்து வந்தவர், அருகிலுள்ள ஊர்களுக்கு வணிகம் செய்யச் செல்வதாக இருந்தால், அவர் எடுத்து வந்த கல்லை மதுரை மீனாட்சியம்மனாக நினைத்து வழிபட்டுக் கொள்வார், அதிகத் தொலைவிலிருக்கும் ஊர்களுக்குச் செல்ல வேண்டியிருந்தால், மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு நேரடியாகச் சென்று வழிபட்ட பிறகு வணிகத்துக்குச் செல்வது என்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.
அவர் எப்போது வணிகத்துக்குச் சென்றாலும், அவர் கோவில் குளத்திலிருந்து எடுத்து வந்த சிறிய கல்லையும் எடுத்துக் கொண்டு செல்வார்.

இந்நிலையில் ஒருநாள், அவர் வணிகத்துக்காகத் தொலைவிலுள்ள வெளியூர் ஒன்றுக்குச் செல்ல வேண்டியிருந்தது.
அவர் வணிகத்துக்குத் தேவையான பொருட்களை ஒரு மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொண்டு, கையில் பனை ஓலை குடை ஒன்றையும் பிடித்துக் கொண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்வதற்காகப் புறப்பட்டார்.
செல்லும் வழியில் ஊருக்கு வெளியிலிருந்த குளம் ஒன்றில் நீராடிவிட்டுச் செல்ல விரும்பிய அவர், பனை ஓலை குடையை விரித்து வைத்து, அதன் கீழ் அவர் கொண்டு வந்திருந்த மூட்டையையும் இறக்கி வைத்து விட்டுக் குளத்தில் இறங்கி நீராடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு, வயதான காலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் செல்ல முடியாதே என்று புதிய கவலை தோன்றியது. அந்த கவலையுடனேயே நீராடிவிட்டுக் கரைக்குத் திரும்பினார்.

குளக்கரையில் அவர் வைத்திருந்த மூட்டையையும், குடையையும் எடுக்க முயன்றார்.
அவர் பல முறை முயற்சித்தும் அதை எடுக்க முடியவில்லை. அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களை அழைத்து, அங்கிருக்கும் குடையையும் மூட்டையையும் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு வீட்டுக்குச் சென்று, குடும்பத்தினர்களை அழைத்துக் கொண்டு திரும்பினார். அவர்களாலும், அவைகளை எடுக்க முடியவில்லை.
அப்போது அவர்களுக்குக் குடை இருந்த இடத்தில் சிறியதாக ஒரு ஒளிவட்டம் இருப்பது தெரிந்தது.
அதனைக் கண்ட அவர்கள் ஜோதிடர் ஒருவரை அழைத்து வந்து, குடையையும் மூட்டையையும் எடுக்க முடியாமல் போனதையும், குடை இருக்குமிடத்தில் ஒளிவட்டம் தோன்றி மறைந்ததையும் தெரிவித்தனர்.

அந்த ஜோதிடர், அங்கேயே சிறிது நேரம் அமர்ந்து தியானித்து விட்டு, அந்த குடை இருக்குமிடத்தில் மதுரை மீனாட்சியம்மன் குடியேறி இருப்பது பற்றிச் சொன்னார். அந்தக் குடும்பத்தினர் அவ்விடத்தில் அம்மனுக்குப் புதிதாகக் கோவில் எழுப்பி வழிபடத் தொடங்கினர். அங்கிருக்கும் அம்மன் குடையில் குடியமர்ந்த காரணத்தால், அந்த இடம் குடைமன்னு (குடமந்து) என்று முதலில் அழைக்கப்பட்டது.
அதன் பின்னர், நானூறு ஆண்டுகள் கடந்து விட்டன. அந்தக் கோவிலின் அர்ச்சகர் கனவில் தோன்றிய அம்மன், தனக்குப் புதிதாகப் பெரிய கோவில் ஒன்று கட்டி, அங்கு தன்னை இடமாற்றம் செய்யும்படிச் சொன்னார்.
அதன் பிறகு, ஊருக்கு நடுவில் பெரிய அளவிலான கோவில் கட்டப்பட்டது.

#கோவில்_அமைப்பு :

கேரள மாநிலக் கோவில்களைப் போன்று கட்டப்பட்டுள்ள இக்கோவிலுக்கு வடக்கு மற்றும் மேற்கு திசையில் நுழைவாயில்கள் உள்ளன.
தேக்கு மரத்தால் செய்யப்பட்ட கொடிமரத்தைச் செப்புத் தகடு கொண்டு அலங்கரித்துள்ளனர். கோவில் கருவறையில் அம்மன் பகவதியம்மனாகக் கோவில் கொண்டிருக்கிறார். மீன்கள் அதிகமாகக் குதித்து விளையாடிக் கொண்டிருந்த குளத்தினருகே இந்த அம்மன் தோன்றியதால், அம்மனுக்கு மீன்குளத்திப் பகவதி அம்மன் என்றே அழைக்கப்படுகிறது.

#வழிபாட்டுப்பலன்கள்:

இக்கோவிலுக்கு வந்து வழிபடும் பக்தர்களுக்குத் திருமணப்பேறு, குழந்தைப்பேறு ஆகியவை கிடைக்கும். மேலும், இங்கு வழிபடும் பக்தர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் என்கின்றனர். இக்கோவிலில் இருக்கும் அம்மன் வணிகம் செய்து வந்த குடும்பத்தினரின் வணிகத்தைச் செழிக்கச் செய்தவர் என்பதால், இங்கு வந்து வழிபடும் வணிகர்களின் வணிகம் பெருகிச் செல்வம் அதிகரிக்கும் என்கின்றனர். கோவிலுக்கு வெளியிலுள்ள குளத்தில் நீராடிவிட்டு வந்து, அம்மனை வழிபடும் பக்தர்களுக்குத் தீராத நோய்கள் தீர்ந்து போய்விடும் என்பதும் இக்கோவிலுக்கு வந்து வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

#அம்மன்_ஊர்வலம்: மீன்குளத்திப் பகவதி அம்மன் தோற்றத்திற்கு முன்பாக வைக்கப்பட்ட பனை ஓலைக் குடையையும், பொருட்களையும் எடுக்க முடியாமல் போன போது, அவைகளைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொண்டிருந்த மாடு மேய்க்கும் சிறுவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மீன்குளத்திப் பகவதி அம்மன் ஊர்வலத்தில் அச்சிறுவர்களின் வழிவந்த குடும்பத்தினர் வீரவாள், திருவிளக்கு போன்றவைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

#அமைவிடம்: கேரள மாநிலம், பாலக்காடு நகரிலிருந்து
18 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழகத்தின் கோயம்புத்தூரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கும் பல்லசேனா எனுமிடத்தில் அமைந்திருக்கிறது...

ஸ்ரீரங்கத்தின் தெற்க்கே ஜீயர்புரம் என அழகான க்ராமம்..அங்கே பாட்டியும் பேரனும் வசித்து வந்தனர்...பாட்டிக்கும் பேரனுக்கும்...
04/04/2025

ஸ்ரீரங்கத்தின் தெற்க்கே ஜீயர்புரம் என அழகான க்ராமம்..
அங்கே பாட்டியும் பேரனும் வசித்து வந்தனர்...
பாட்டிக்கும் பேரனுக்கும் அரங்கன்பால் அளவடந்த பக்தி..
பேரனுக்கு ரங்கநாதன் என்றே பெயர் வைத்தார்..
ஒருங்கே பாசமாக வாழ்ந்து வந்தனர்..

பெயரன் ரங்கநாதன் தான் ஷவரம் பண்ணிக்கொண்டு வருகிறேன் பாட்டி எனக்கு கீரை சமைத்து வைய் நான் வந்து சாப்பிட வருகிறேன் என்று சொவல்லிவிட்டுச்சென்றான்.. பாட்டியும் சரிடா என பெயரனுக்கு பிடித்த கீரையை சமைத்து வைத்து காத்திருந்தாள்..

ஷவரம் பன்ன போன சிறுவன், அசந்தர்பமாக காவிரியின் ப்ரவாகத்திற்க்கு உண்டாகி ஆற்றுடன் அடித்து செல்லப்பட்டான்..
ஆனால் காவிரி அவனை ஸ்ரீரங்கத்திற்கு கரை ஒதுக்கினாள்.. தப்பச்சோம் என பிழைத்து ஸ்ரீரங்கத்தில் ஒரிரு நாட்கள் தங்கி காவிரி நீர் சிறிது வடிந்ததும் தன் ஊருக்கு செல்லலாம் என ஸ்ரீரங்கத்திலேயே தங்கி இருந்தான்..

பாட்டி இங்கே கீரைகளை சமைத்து வைத்து விட்டு, பெயரன் வரவில்லையே என ரங்கா ரங்கா ரங்கா எங்கடா போனே என அழுது காத்திருந்தாள்...

பாட்டி ஏன் பாட்டி அழர நான் இங்க தானே இருக்கேன்னு வந்தான் பெயரன், இல்லடா காணுமே உண்ண எங்க போன நீ தவிச்சுட்டேன் டா... இங்கதான் பாட்டி ஷவரம் பண்ணி குளிச்சணவந்தேன் என்றான்...

சரி வா கீரை கேட்டியே சாப்பிட வா...
சரி வா பாட்டி...

நன்னா கீரை சாப்பிடான், பாட்டி கூடவே இருந்தான், வேண்டியவற்றை செய்தான் கடை கன்னிக்கு சென்று வாங்கி கொடுத்தான், பாட்டியோடே ஓரிரு நாள் தங்கினான்...

அங்கே காவிரி நீர் சிறிது வடிந்ததும் தன் ஊருக்கு வந்து பாட்டிஇஇஇஇஇஇஇஇஇஇஇ.....

என்ன பாட்டி எப்படி இருக்க ஓஓஓஓஒஒஒஒஒஒஓ நு அழுதான், என்னடா என்ன சமாசாரம் பாட்டி ஷவரம் பன்னிக்க போனேன் காவிரி அடிச்சுட்டு பொய்டுத்து, பயந்தேன்... அரங்கன் க்ருபையில் தப்பபிச்சேன்...

நீ என்ன பன்னியோ ஏது பன்னியோ, தவிச்சுட்டேன் பாட்டி... நீ எப்படி இருக்கே, சாப்டியா நா இல்லாம தூங்கினியா... எப்படி இரண்டு நாள் கழிச்ச....

டேய் பய்தியமே நீதான் இரண்டு நாள் என் கூட இருந்தியே என்னோட தானே இருந்த..

பாட்டி என்ன சொல்றனதும் பாட்டிக்கு புரிந்துவிட்டது... வா இங்கே என ஷவர கடைகாரனிடம் கூட்டிச்செடன்று விசாரித்நாள்...

ஷவர கடை காரன் பாட்டிஇவர்தான் வந்தார் ஷவரம் பண்ணிச்சே என்றான்...

அனைவருக்கும் புரிந்தது அரங்கனின் லீலை என...

பாட்டி கண்ணார ஜலம் விட்டாள்

ரங்கா இந்த கிழவி ஒருத்தி வருத்தப்படுவளே என இரங்கி எனக்காக வந்தாயே..

ஷவர கடை காரன் அரங்கனுக்கு ஷவரம் செய்தேனா... என இருவரும் கண்ணார ஜலம் விட்டனர்...

அரங்கனின் லீலையை எவன் சொல்ல...

வருடா வருடம் கிழவிக்கு அருள் செய்ய புறப்படுகிறான் அரங்கன்..

மாஹாத்ம்யம் தெரிந்து அனுபவிபோம்...

ஏழைகளுக்கு இரங்கும் பெருமாள்...

*பக்தி என்றால் மாணிக்கவாசகா் போல் இருக்க வேண்டும்...*மாணிக்கவாசக பெருமானிடம் ஈசனே நேரில் வந்து என்ன வரம் வேண்டும் கேள் எ...
11/02/2025

*பக்தி என்றால் மாணிக்கவாசகா் போல் இருக்க வேண்டும்...*

மாணிக்கவாசக பெருமானிடம் ஈசனே நேரில் வந்து என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார்...

சிவபெருமானே நேரில் வந்து நம்ம கிட்ட என்ன வேணுன்னு கேட்டா நாம என்ன சொல்லி இருப்போம்..

ஒரு பெரிய பட்டியலே போட்டு கடைசியா,

அதோ உன் முன்னாடி ஒருத்தன் கைய கும்ப்பிட்டு உங்கிட்ட கேக்குறான்ல அத ஒன்ன கூட செஞ்சு தந்துராதான்னு முடிச்சிருப்போம்.

ஆனால் மணிவாசக பெருமான் என்ன கேட்கிறார் பாருங்கள் ...

பாடல்

வேண்டதக்கது அறியோய் நீ !
வேண்ட முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன்மாற்கு அறியோய் நீ!
வேண்டி என்னைப் பணி கொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்,
அதுவும் உந்தன் விருப்பன்றே...!

பாடல் விளக்கம்:

எனக்கு என்ன தர வேண்டும் என்று உனக்குத் தெரியும்... எனக்கு எவ்வளவு தர வேண்டும் என்றும் உனக்குத் தெரியும்.... எனக்கு ஏதாவது வேண்டும் என்று நான் நினைத்தால் , அதுவும் உன் விருப்பமே என்று மணிவாசகர் ஈசனிடம் உருகி பாடுகிறார்....

ஆனாலும் சிவ பெருமான் மணிவாசக பெருமானை விடுவதாக இல்லை.்

அடுத்த சான்ஸ் உனக்கு.மறுக்கா கேக்குறேன் உனக்கு என்ன வேண்டும் கேள் என கேட்க

மீண்டும் மணிவாசகர் பாடுகிறார்....

பாடல்

உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;

கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்;

குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,

கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே...!

பாடல் விளக்கம்:

சொந்தங்கள் எனக்கு வேண்டாம், ஊர் வேண்டாம், நல்ல பெயர் வேண்டாம், நல்ல படிப்பு அறிவு வேண்டாம் உன் அருள் இருந்தால் அது தானாக கிடைக்கும்.

குற்றாலத்தில் அமர்ந்து இருக்கும் ஆனந்த கூத்தனே நான் உன் திருவடிகளை தேடி தாயை கண்ட கன்று போல அன்பில் உருக வேண்டும்.

பக்தனைப் போல, ஒரு கன்றை ஈன்ற பசுவின் மனம் போல உருக வேண்டுவனே என்கிறார்....

என்று பக்தியால் மனம் உருகி வேண்டுகிறார் மாணிக்கவாசகர் பெருமான்...

என்ன ஒரு உயர்ந்த உன்னத பக்தி. இது தான் பக்தியின் உச்சம் அல்லவா?

திருச்சிற்றம்பலம்

ஓம் நமசிவாய
04/02/2025

ஓம் நமசிவாய

04/02/2025

ஆண்டவா எல்லோரும் நல்லா இருக்கனும்

Address

7/251 Rmk Nagar New Dharapuram Road
Palani
624601

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆன்மீக வீடியோ / Devotional Videos posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category