Yeshiva Bible International தமிழ் வேதாகம பாடசாலை

  • Home
  • India
  • Ooty
  • Yeshiva Bible International தமிழ் வேதாகம பாடசாலை

Yeshiva Bible International தமிழ் வேதாகம பாடசாலை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Yeshiva Bible International தமிழ் வேதாகம பாடசாலை, Religious organisation, Yeshiva, Ooty.

12/08/2024
02/12/2022

எங்கள் விசுவாச பிரமாணம் (OUR FAITH CREED):

வானத்தையும் பூமியையும் தனது ஒரே பேறான குமாரனை கொண்டு படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன்.

அவருடைய ஒரே பேறான குமாரனான நம்முடைய இரட்சகர் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன். பரிசுத்த வேதாகமத்தின் தீர்க்கதரிசன வசனங்களின்படி அவர் பரிசுத்த ஆவியினால் கன்னி மரியாளிடத்தில் உற்பவித்து பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் என்னுடைய பாவங்களுக்காக பாடுபட்டு கோர சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம்பண்ணப்பட்டு பாதாளத்துக்கு இறங்கினார். மூன்றாம் நாளில் மரித்தோரிடத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். உன்னதத்துக்கேறி பரலோகத்தில் சர்வ வல்லமையுள்ள பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார் அவர் தம்முடைய சொந்த இரத்தத்தினால் சம்பாதித்த தம்முடைய மணவாட்டியான திருச்சபையை தன்னிடத்தில் எடுத்துக்கொள்ளவும் பின்பு உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருகிறார்.

பரிசுத்த ஆவியானவரை விசுவாசிக்கிறேன். அவர் தமது ஆவியை எனக்குத் தந்து என்னை ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாக மாற்றுகிறார். அவர் கண்டித்து உணர்த்தி சகல சத்தியத்திற்கும் என்னை நடத்தி வருகிறார்.

நான் தேவசாயலாக படைக்கப்பட்டு இருக்கிறேன். ஆதலால் நான் ஆவி ஆத்துமா சரீரத்தை உடையவனாக இருக்கிறேன் என்னை படைத்த சர்வ வல்லமையுள்ள தேவன் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவராக இருக்கிறார். அவர் திரியேக தேவன். நான் உலகலாவிய கிறிஸ்து இயேசுவின் திருச்சபையில் ஒரு அங்கமாய் இருக்கிறேன்.

கர்த்தருடைய பரிசுத்தவான்களின் ஐக்கியத்தை விரும்புகிறேன். பாவ மன்னிப்பும் சரீரம் உயிர்த்தெழுதலும், நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறேன். ஆமென்.

Address

Yeshiva
Ooty
643006

Alerts

Be the first to know and let us send you an email when Yeshiva Bible International தமிழ் வேதாகம பாடசாலை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Yeshiva Bible International தமிழ் வேதாகம பாடசாலை:

Share