Valaiady, CSI Holy Trinity Church

Valaiady, CSI Holy Trinity Church தூய திரித்துவ ஆலயம், வாழையடி. Vazhayadi, Nazareth , Thoothukudi District, Tamil Nadu 628617 வாழையடி சேகரம், தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலம்.

17/05/2026

நமது வாழையடி தூய திரித்துவ ஆலயத்தின் 38வது அசன பண்டிகை சிறப்பாக நடைபெற துணைநின்ற தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்.

“தேவகிருபை நினைவு” ஆலய பணியாளர் இல்லத் திறப்புவிழாவும், அசன வைபவமும் சிறப்பாக நடைபெறவும், காலநிலை சாதகமாக அமையவும் நாம் ஜெபித்திருந்தோம்.

நாம் நினைத்ததைவிட பலமடங்கு ஆசீர்வாதமாகவும் எழுச்சியுடனும் அனைத்தையும் நடத்தித் தந்த எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு மகிமையும் ஸ்தோத்திரமும் உண்டாவதாக.

இந்த வருடம் அசன விழா நடைபெறக் கூடாது என பல தடைகளும் சவால்களும் ஏற்பட்டபோதிலும், தேவனுடைய கிருபையால் அனைத்தையும் வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் நடத்தி முடிக்கச் செய்தார். அதற்காக தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம்.

இந்த விழாவிற்காக அதிகமாக ஜெபித்து, உழைத்து, நன்கொடைகள் வழங்கி, பல்வேறு வழிகளில் உதவி செய்த அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், இந்த அசன பண்டிகை சிறப்பாக நடைபெற முக்கிய காரணமாக இருந்த
சேகர தலைவர் Rev. ஏசுவடியான் துரைசாமி ஐயா அவர்களுக்கும்,
அசன கமிட்டி நிர்வாகிகளுக்கும்,
முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய சபையார்களுக்கும்
எங்கள் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் மிகுதியாக ஆசீர்வதிப்பாராக.

நமது வாழையடி தூய திரித்துவ ஆலயத்தின் 38வது அசன பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆயத்தமாக கன்வேன்ஷன் கூட்டங்கள் மே 12 மற்றும...
14/05/2026

நமது வாழையடி தூய திரித்துவ ஆலயத்தின் 38வது அசன பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆயத்தமாக கன்வேன்ஷன் கூட்டங்கள் மே 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாள்களில் ஆவிக்குரிய எழுச்சியுடனும் சிறப்பாகவும் நடைபெற்றது.

இக்கூட்டங்களில் குரும்பூரைச் சேர்ந்த சகோதரர் டேனியல் பீட்டர் அவர்கள் கலந்து கொண்டு தேவசெய்தி வழங்கி, ஜெபித்து ஆசீர்வதித்தார்கள்.

நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் சேகரத் தலைவர் மதிப்பிற்குரிய அருள்திரு. P. ஏசுவடியான் துரைசாமி அவர்கள் தலைமையில் அசன கமிட்டி அங்கத்தினர்களால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.

VBS நிறைவு நாள் விழாகுழந்தைகள் பவனியுடன் தொடங்கிய VBS நிறைவு நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.இன்றைய VBS கலை நிகழ்ச்ச...
12/05/2026

VBS நிறைவு நாள் விழா
குழந்தைகள் பவனியுடன் தொடங்கிய VBS நிறைவு நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இன்றைய VBS கலை நிகழ்ச்சிகள் நமது ஆலயத்தில், சேகரத் தலைவர் மதிப்பிற்குரிய
Rev. P. ஏசுவடியான் துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றன. விழாவில் அவர் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி, ஆசிரியர்களைப் பாராட்டி வாழ்த்தினார். மேலும், குழந்தைகளுக்காக சிறப்புத் துதியேற்றி ஜெபித்து ஆசீர்வாதம் வழங்கினார்.
இந்த VBS நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற பொருளாதார உதவி, ஜெப ஆதரவு மற்றும் அன்பான ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து நன்கொடையாளர்களுக்கும் எங்கள் இதயங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கர்த்தர் தங்கள் குடும்பங்களையும் வாழ்க்கையையும் மிகுதியாக ஆசீர்வதிப்பாராக! ✨🙏

நமது ஆலயத்தின் 38-வது அசன பண்டிகையை சிறப்பாகவும் எழுச்சியுடனும் நடத்துவது தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் 02.05.2026 அ...
10/05/2026

நமது ஆலயத்தின் 38-வது அசன பண்டிகையை சிறப்பாகவும் எழுச்சியுடனும் நடத்துவது தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் 02.05.2026 அன்று அசன கமிட்டி நிர்வாகிகள் தலைமையில் நமது ஆலயத்தில் நடைபெற்றது. இதில் பண்டிகை ஏற்பாடுகள், பணிக் குழுக்கள் அமைப்பு, உணவு வழங்கல், சிறப்பு ஆராதனைகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஆலய பணியாளர் இல்லம் திறப்புவிழா குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அனைவரும் ஒன்றுபட்டு விழாவை சிறப்பாக நடத்த உறுதி கொண்டனர்.

09/05/2026

38வது ஆலய அசனப் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சிகளும் ஆராதனைகளும் சிறப்பாக நடைபெற ஜெபியுங்கள்; அனைவரும் பங்கேற்று ஆசீர்வாதம் பெறுங்கள்.

VBS , Day 7
07/05/2026

VBS , Day 7

VBS, Day 6
06/05/2026

VBS, Day 6

VBS, Day - 5
05/05/2026

VBS, Day - 5

The season of Advent begins very soon.
04/11/2024

The season of Advent begins very soon.

11/06/2024

Address

Church Street, Valaiady
Nazareth
628617

Alerts

Be the first to know and let us send you an email when Valaiady, CSI Holy Trinity Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Valaiady, CSI Holy Trinity Church:

Share