கம்பலராயன் மலை, நாமக்கல்/Kambalarayan Malai, Namakkal.

  • Home
  • India
  • Namakkal
  • கம்பலராயன் மலை, நாமக்கல்/Kambalarayan Malai, Namakkal.

கம்பலராயன் மலை, நாமக்கல்/Kambalarayan Malai, Namakkal. Kambalarayan Malai is located in Namakkal District, Tamilnadu, India. It areas cover 3 villages namely Thalambadi, Pommbatti and Kadapalli.

07/04/2021
19/09/2020

புரட்டாசி மாத முதல் வார திருக்கோடி பூஜை நேற்று கம்பலராயன் கோயிலில் சிறப்பாக நடைபெற்றது.

19/09/2020

கோவிலுக்கு செல்லும் சாலைகள் செப்பனிடப்பட்டு உள்ளதால் பொது மக்கள் பக்தர்கள் எளிமையாக கோவிலுக்கு சென்று வரலாம்

19/09/2020

நமது கம்பலராயன் கோவிலில் புரட்டாசி மாதம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடும் அன்னதானனும் வழங்கப்படும்.
புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். புரட்டாசி மாத சனிக்கிழமைகள் பெருமாள் விரதத்திற்கு உகந்தவை. இவ்வாண்டு நான்கு சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களுக்கு தவறாமல் சென்று வர வேண்டும்.
நவராத்திரி பூஜை இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. 9 நாட்களும் கொலுவைத்து பூஜை செய்து அன்னையை வழிபடுகின்றனர். இந்த புரட்டாசி மாதத்தில் பருவ நிலையில் ஏற்படும் மாற்றங்களால் உடலுக்கு ஏற்றவாறு உணவு கொள்ள வேண்டும் என்பதற்காக பெரியோர்கள் விரைவில் செரிமானம் ஆகாத அசைவ உணவை தவிர்க்கவே விரதம் வைத்ததாக ஒரு கருத்தும் உள்ளது.

ஆடி அமாவாசை பூஜை
01/08/2019

ஆடி அமாவாசை பூஜை

30.09.2018
29/09/2018

30.09.2018

29/03/2018

 
பிராணாயாமத்தின் பலன்கள்

ஒரு சூழ்நிலை நீங்கள் நினைத்தவாறு நடக்கவில்லை என்றால், உங்களை பதற்றமும், மன அழுத்தமும் தொற்றிக் கொள்கிறது. பதற்றம் அதிகரித்தால் உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரித்து நோய் உண்டாகிறது.

இன்று மனிதர்களைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் 70% மனரீதியானவை என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். வெறும் 30% நோய்களுக்கு மட்டுமே காரணி வெளியிலிருந்து வருகிறது. ஆக, மனதின் செயல்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் பல நோய்கள் உண்டாகிறது – அதாவது 70% நோய்கள் உள்ளிருந்தே உருவாகின்றன.

யோகப் பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் போது உங்கள் உடல் இயக்க அமைப்பு அமைதியாகவும் ஸ்திரமாகவும் செயல்படுகிறது. இதனால் மன அழுத்தம் என்ற பேச்சிற்கே இடமிருக்காது. சில வாரங்கள் பயிற்சி செய்வதிலேயே உங்கள் மனம் சமநிலையாக இருப்பதையும், உங்கள் உடல் திடமாக செயல்படுவதையும், நீங்கள் கவனிக்க முடியும்.

இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் மனம் அமைதி பெற, உடல் நலம் காக்க
பிராணாயாமம் போன்ற யோக பயிற்சிகள் மிக அவசியமே.

Purattasi first week poojai.
24/09/2017

Purattasi first week poojai.

22/09/2017

சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் நாம் புரட்டாசி மாதம் என்கிறோம். இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது.மறைந்த நம் முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எமதர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார்.

அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர். புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர். இதையே, "மகாளய பட்சம்` என்பர்; "பட்சம்` என்றால், "15 நாட்கள்' எனப் பொருள். இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். தகுதியானவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும். சிலர் புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு.

பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி பூஜை இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். எனவே இம்மாதத்தில், தவறாமல் வழிபாடுகளைச் செய்து, தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் நல்லருளும், நல்லாசியும் பெறுவோம்.

Source: Maalaimalar

22/09/2017

புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். புரட்டாசி மாத சனிக்கிழமைகள் பெருமாள் விரதத்திற்கு உகந்தவை. இவ்வாண்டு நான்கு சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களுக்கு தவறாமல் சென்று வர வேண்டும்.

நவராத்திரி பூஜை இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. 9 நாட்களும் கொலுவைத்து பூஜை செய்து அன்னையை வழிபடுகின்றனர். இந்த புரட்டாசி மாதத்தில் பருவ நிலையில் ஏற்படும் மாற்றங்களால் உடலுக்கு ஏற்றவாறு உணவு கொள்ள வேண்டும் என்பதற்காக பெரியோர்கள் விரைவில் செரிமானம் ஆகாத அசைவ உணவை தவிர்க்கவே விரதம் வைத்ததாக ஒரு கருத்தும் உள்ளது.

22/09/2017

புரட்டாசி மாத முதல் வார திருக்கோடி பூஜை இன்று கம்பலராயன் கோயிலில் நடை பெறும்.

Address

Sedapattipudhur, Thalambadi
Namakkal
637019

Website

Alerts

Be the first to know and let us send you an email when கம்பலராயன் மலை, நாமக்கல்/Kambalarayan Malai, Namakkal. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share