01/03/2017
செல்லன் குலம் :
குழந்தையைக் செல்லமாக வளர்ப்பவர்கள் வேளாளர் குழந்தைபோல் ஆனிரைகளையும், பயிர்களையும் செல்லமாக வளர்பவர்கள் செல்லன் கூட்டத்தினர் ஆயினர் . செல்லாக் காசாக இல்லாமல் வேளிர்களில் செல்லுகின்ற செல்வர்களாக இருப்பவர்கள் இவர்களே . பூந்துறை இணை நாடான பருத்திப்பள்ளி நாட்டை ஆட்சி புரிந்தவர்கள் இவர்கள் . செல்லன் குலத்தினர் `பருத்திப் பள்ளி ` நாடார் என்ற பட்டம் பெற்றவர்கள் . இராசிபுரம் , திருச்செங்கோடு சாலையில் வையப்பமலையில் இருந்து எட்டாவது கிலோ மீட்டர் தொலைவில் பருத்திப்பள்ளி உள்ளது . திருமணி முத்து ஆற்றங்கரையில் உள்ளது இவ்வூர் . அதன் அருகில் இருப்பள்ளி ஊரில் செல்லன் குலத்தில் இளையாக் கவுண்டன் இருந்தான் .ஏழு ஆண்மக்கள் பிறந்தனர். வேறு ஊர்களுக்குச் சென்று குடிபுகுந்தனர் . இவர்களின் வழியினர் எழுகரை செவ்வாய் குலத்தினர் என்று அழைக்கப்பட்டனர் . திருச்செங்கோட்டில் மடமும், மண்டபமும் கட்டினர். செங்குன்றை மையமாகக் கொண்டு பருத்திப்பள்ளி ,இருப்புலி கொன்னையாறு , கோக்கலை, இடையாறு ,அனுமன்பள்ளி , எழுமாத்தூர் , ஆகியவை செல்லங் குலத்தினரின் ஏழுகரை நாடுகளாம். 16 ஆம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் தாராபுரத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை அடக்கி மீட்டாள் தேவராயர் முதலிக்காமிண்டன் பட்டமும் , பருத்திப்பள்ளி ஆட்சி அதிகாரத்தையும் நல்கினான். இருப்பள்ளிப் பள்ளு இதனை கூறும் . இளையாக் கவுண்டரின் ஏழுமகன்களில் ஒருவன் இவன். இவனது வழியினர் தான் பருத்திப் பள்ளிச் செல்லங்குலத்தினர். இவர்கள் நாட்டார் எனப்பட்டனர் . 24 நாடுகளையும் ஆளும் உரிமை பெற்றவர்கள் இளையாக் கவுண்டர்களாக இருக்கின்றனர். எனவே ராசிபுர வட்டத்தின் நாட்டாக் கவுண்டர்கள் வேளாளக் கவுண்டர்களின் வழியில் வந்தவர்கள் என்பதற்கு இதுவே சான்றாகும் . காளிப்பட்டி நந்தர் கோட்டத்தைக் கட்டிய செல்லங்குலத்தார் காங்கேய நாட்டு வள்ளரையும் இரண்டாம் காணியாம்.
செம்பூத்தான் குலம் . கோத்திரம் , கூட்டம் என்பதெல்லாம் நன்கு தொன்மையானக் குலப் பெருமை உடையவர்கள் . இவர்கள் சங்ககால இலக்கியங்கள் ஒல்லையூர் தந்த பூதபாண்டியன் . ஈழத்துப் பூதன் சாத்தனார் . பூதஞ்சேந்தனார். நப்பூதனார் , மதுரைப் பூதன் இளநாகனார் . கோடை பாடிய பெரும்பூதனார் . சாத்தன் பூதனார் , பெரும் பூதன் கொற்றனார் முல்லைப் பூதனார் என்ற பெயர்கள் பூதன் என்பதற்குச் சான்றாகக் கூறுவர். இங்கெல்லாம் பூதன் என்ற சொல் ஐம்பூதத்து இயற்கைபோல் என்ற தொடர் பொருளையே குறிக்கும் . ஐந்து மூலங்களையே ஐம்பூதம் என்பர் . நிலம், நீர், தீ , வளி, விண்வெளி ஆகியன ஐம்பூதங்களாகும். உலகில் எல்லாம் இவைகளால் ஆக்கப்பட்டன செம்பூத்து , பறவை இடு குறிப்பெயர். செம்பூத்தான் குலத்தினர் வைத்துக் கொண்டனர். செம்போத்தைக் காண்பது நல்ல விரிச்சியாகும் . விரிச்சி - சகுனம் .இப்பறவை செம்போத்து , செங்காகம், செங்குயில், குக்கில் செண்பகம் , செண்பகப் பறவை என்று கூறப்படும் .
வேணாடர் தலைவன் பெரியான் கொற்றன் என்பவனுக்கு , செம்போத்து குலத்தான் அமைச்சனாக இருந்தானாம் . கொங்கு வளநாட்டுக்குப் பட்டியர் கூறும் , கொடுமணல் இலக்கியம் செம்பூதன் குலத்தைக் குறித்தது. அழகுமலைக் குறவஞ்சியும் , செம்யூர் என்று குறித்துள்ளது. வேளாளர் கீர்த்தியில் ,
"கற்புயர் செம்பூதத்தை குழற்" என்ற தொடர் உள்ளது .
கொங்கு நாடெங்கும் பரவியுள்ள செம்பூத்தான் குலத்தினர்க்கு 88 ஊர்கள் காணி ஊர்களாம் . குன்றத்தூர் (குன்னத்தூர்) அருகில் பெரிய நாச்சியம்மன் கோவில் செம்பூத்தாரின் குலதெய்வமாகும். கரூர் வட்டம் நொய்யல் ஆற்றங்கரையில் பெரிய சிறிய பொன்னாச்சியம்மன் கோவில்கள் அத்திபாளையத்தில் உள்ளது. சேரன் ஆட்டன் ஆத்தி ஆண்ட ஊர் இது. செம்பூத்தாரின் குல தெய்வம் இவை .பொன்னாச்சியம்மன் தலவரலாற்றை நாமக்கல் புலவர் தே.ப.சின்னசாமி அவர்கள் எழுதியுள்ளார் . பொன்னர் , சங்கர் மனைவியர்கள் தாம் பெரிய பொன்னாச்சியும் , சின்ன பொன்னாச்சியும் என்று எழுதியுள்ளார் . கீரம்பூர், எட்டிக்கையம்மனையும் , செம்பூத்தான் குலத்தினர் வழிபடுகின்றனர். 3000 குடும்பத்தினருக்கு எட்டுக்கையம்மன் குலதெய்வம் . இராசிபுரம் பாலைப்பாளையத்தில் ஆயாக் கோயிலைக் குலதெய்வமாகக் கொண்டனர் . சேலம் வட்டத்தில் கருப்பூர் வலசு , அத்தனூர் பனைப்பாளையம் , செம்பூத்தார்க்கு உரியது . பொங்கலூர் நாட்டில் வேடனூர், கரிய காளியம்மனையும் இவர்கள் வணங்குவர் . திருச்செங்கோடு பொன் மலை அருகில் மரப்பறையில் பொன்காளியம்மனை 500 செம்பூத்து குலத்தாரும் வழிபடுகின்றனர் வைகைப் பொன்மலை - வையப்பப் மலையில் உள்ள இறைவன் கோவில் அறங்காவலர் இவர்களே , வழிபாட்டில் முதல் மரியாதை இவர்களுக்குத்தான். கரூர் வட்டத்தில் காணி கொண்ட செல்லர்கள் கோட்டத்தூர், நன்செய் இடையாறு