Kneil Memorial Agasteeswaram CSI Church

Kneil Memorial Agasteeswaram CSI Church Ancient Church in kanyakumari district build in 1819.

12/01/2026

தெரிந்துக்கொண்ட துக்கம்!

இன்றைய சிந்தனைக்கான திருமறைப்பகுதி: மாற்கு 10:17-24.

ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது எவ்வளவு அரிதாயிருக்கிறது (மாற்கு 10:24).

அவன் ஒரு பணக்கார வாலிபன். மிகவும் கவனமாக கற்பனைகளைக் கைக்கொண்டு வாழ்ந்தவன். வாலிப வயதிலும் அப்படியொரு கட்டுப்பாடு. அவனுக்குள்ளும் ஒரு தாகம். அதற்குப் பதில் இயேசுதான் என்று நம்பி. இயேசுவிடம் ஓடிவந்தான். வந்தவன் அவருக்கு முன்பாக முழங்காற்படியிட்டான். அவன் கேட்ட கேள்வியோ இயேசுவையே அசைத்திருக்கும். வாலிபனுடைய மனதிலே இருந்த நித்திய ஜீவனைக் குறித்த வாஞ்சை அவனது கேள்வியிலே வெளிவந்தது. ஆண்டவர் அவனை அன்போடு பார்த்தார். அவனுடைய தாகம் உண்மையாயினும், அதற்குத் தடையாக அவனுக்குள்ளே மறைந்திருந்த வேறொரு உண்மையை உணர்த்தினார். செல்வத்தின்மீது அவனுக்கு இருந்த பற்றுதல் மிக ஆழமாக இருந்ததை வெளிப்படுத்தினார். ஆனால் அதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நித்திய சந்தோஷத்தை நாடித் தேடி வந்தவன், தனக்குத்தானே துக்கத்தைத் தெரிந்து கொண்டு திரும்பிப்போனான்.

இந்த வாலிபன் தன்னுடைய முக்கிய தேவையை அடைய முடியாதபடி முக்கியமான குறையொன்று அவனைத் தடுத்து விட்டது. நினைத்திருந்தால் அந்தக் குறையைத் தீர்த்து, தான் விரும்பிய சந்தோஷத்தைப் பெற்றிருக்கலாம். ஆனால் அவனுடைய வாழ்வில் அவனுடைய விருப்பத்தைப் பார்க்கிலும். முக்கியம் என்று அவன் எண்ணிய குறையானது முக்கியம் வாய்ந்ததாய் இருந்தது.

இந்த வாலிபனைப்போல இன்றும் பல வாலிபர்களும் பெரியவர்களும் உன்னதமான நோக்கங்களோடு வாழுகிறோம். இயேசுவிடம் வந்து முழங்காற் படியிடுகிறோம். எப்படியாவது பரலோக ராஜ்யத்தை அடைய வேண்டும் என்று தீராத தாகம்! யார்தான் நரகத்திற்குப் போக விரும்புவர்? ஆனால் இன்று அதிக பட்சமானவர்களின் வாழ்வு நித்தியத்திற்கு நிலைத்திராத பலவித நிச்சயமற்ற உலககாரியங்களில் மூழ்கிப் போயிருக்கிறது. உலகம் காட்டுகிற பலவித சந்தோஷங்களை நாடித் தேடுவதை நிறுத்த முடியாமல் தவிக்கிறது. இதனாலே தான் இவனைப்போல அநேகர் துக்கத்தைத் தெரிந்தெடுத்தவர்களாக தினமும் துக்கத்தோடே ஜீவிக்கிறோம். ஒருவேளை நம்மிடம் ஆண்டவரை முற்றும் முழு அர்ப்பணத்தோடு பின்பற்றுவதற்கு ஐசுவரியம் தடையாக இல்லாதிருக்கலாம். வேறு பல குறைகள் இருக்கும். அந்த முக்கிய குறைபாடுகளை இனங்கண்டுகொள்ளவே நாம் தயங்குகிறோம். இதனால் ஏற்படக்கூடிய இழப்புகளைக் குறித்தும் அறிவற்றவர்களாக இருக்கிறோம். நமது குறைபாடுகளைக் குறித்து நாம் அறிவீனமாக இருக்கலாமா? பிரியமானவர்களே, நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதைத் தீர்மானிப்போமா? நித்திய துக்கமா? நித்திய மகிழ்ச்சியா!

ஜெபம்:
கர்த்தாவே, முக்கியமானது என்று கருதினாலும், உமது பார்வையில் குறை என்று காண்பதை எனக்கு இப்போதே உணர்த்திக் காட்டும் ஐயா. ஆமென்

கர்த்தரோடு அதிகநேரம்!இன்றைய சிந்தனைக்கான திருமறைப்பகுதி: யாத்திராகமம் 34:27-31.மோசே … சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது...
03/01/2026

கர்த்தரோடு அதிகநேரம்!

இன்றைய சிந்தனைக்கான திருமறைப்பகுதி: யாத்திராகமம் 34:27-31.

மோசே … சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடே அவர்; பேசினதாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அவன் அறியாதிருந்தான் (யாத்.34:29).

"வெளிநாடொன்றில் வேலை பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியபோது, என் பேச்சின் போக்கு மாறிவிட்டதாக எல்லோரும் என்னைக் கேலி பண்ணினார்கள். அப்போதுதான் நானும் அதை உணர்ந்தேன். அந்த இடத்திலே வேலை பார்த்தது, ஆராதித்தது எல்லாம் அநேகமாக இந்தியர்களோடுதான். ஆகவே என்னையும் அறியாமல் அவர்களைப் போலவே பேசப்பழகிவிட்டேன் போலும்" என்றார் ஒரு வெளிநாட்டில் பணிபுரியும் ஒருவர். நாம் அதிகமாக யாரோடு பழகுகிறோமோ, யாரோடு அதிக நேரத்தைச் செலவிடுகிறோமோ, அவர்களுடைய பல காரியங்கள் காலப்போக்கில் நம்மிலே வெளிப்பட ஆரம்பிக்கும் என்பதை மறுக்கமுடியாது.

நாற்பது நாட்கள் என்பது இலகுவானதொன்றல்ல. அதிலும் சாப்பாடு தண்ணீர்கூட இல்லாமல் இரவும் பகலுமாய் ஒருவரோடு தரித்திருப்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அந்த சமயத்தில் ஒளியாகிய தேவனுடைய வெளிச்சம் மோசே மீது பிரகாசிக்க ஆரம்பித்தது. அந்த நாட்கள் முடிந்தபோது தனது முகம் பிரகாசித்திருப்பதுகூட மோசேக்குத் தெரியவில்லை. அந்தளவிற்கு மோசே தேவனோடு தரித்திருந்தார். திரும்பிவந்த மோசேயை நேருக்குநேர் சந்திக்க அவருடைய சகோதரன் ஆரோனே பயந்தார். தேவனுடைய மகிமையை ஜனங்கள் மோசேயின் முகத்திலே கண்டார்கள். ஜனங்கள் பயந்ததினாலே மோசே ஒரு முக்காடு போடவேண்டியிருந்தது. “என் இயேசுவைப்போல் ஆவதே என் வாஞ்சை” என்று ஆரவாரமாகப் பாடுகின்ற நாம், அந்த வாஞ்சை நிறைவேற என்ன செய்கிறோம்? இயேசுவைப்போல நாமும் மாற, அவரை நம் வாழ்வில் பிரதிபலிக்க, கடந்த ஆண்டிலே நாம் எடுத்த முயற்சிகள் என்ன? நாம் வீணடித்த தருணங்கள் எத்தனை? கிறிஸ்துவுடன் தரித்திருந்து அவரில் நிலைத்திருந்த வேளைகள் எத்தனை? “அவருக்குள் (கிறிஸ்துவுக்குள்) நிலைத்திருக்கிறேன்” என்று சொல்லுகிறோம்; ஆனால் அவர் நடந்தபடியே நாமும் நடக்கிறோமா (1யோவா.2:6) என்பதைச் சிந்திப்போம்.

கிறிஸ்து ஒரு மனிதனாக நமக்கு முன்மாதிரியாக நடந்த பாதையில் நடக்கும்போது நிச்சயம் ஆண்டவர் சாயல் நம்மில் பிரகாசிக்கும். அந்த சாயல் வெளிப்படவேண்டுமென்றால் இந்த உலகுக்குரிய பல காரியங்கள் நம்மைவிட்டு அகற்றப்படவேண்டும்! பேச்சிலும் செயலிலும் நடக்கையிலும் நாம் வைக்கும் விழாக்களிலும்கூட ஆண்டவரின் சாயல் வெளிப்படவேண்டும் என்ற வாஞ்சை இருந்தால், அதற்கு நாம் கவனிக்கவேண்டியது, தேவனோடு செலவழிக்கும் ஜெபநேரம், வாசிக்கும் தேவவார்த்தை, அதைத் தியானிக்கும் தியானம். இவை அதிகரிக்க அதிகரிக்க தேவனுடைய சாயல் தானாகவே நம்மில் அதிகமதிகமாக பிரதிபலிக்குமல்லவா! தேவனோடு என்றும் நாம் இணைந்திருக்க நம்மை அவரிடமே அர்ப்பணிப்போமாக.

2026ஆம் ஆண்டு புதிய வருடத்திற்குள்ளாக பிரவேசித்திருக்கின்ற அனைவருக்கும் நீல் ஞாபகார்த்த C.S.I திருச்சபை சார்பாக புத்தாண்...
01/01/2026

2026ஆம் ஆண்டு புதிய வருடத்திற்குள்ளாக பிரவேசித்திருக்கின்ற அனைவருக்கும் நீல் ஞாபகார்த்த C.S.I திருச்சபை சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். கடந்த ஆண்டு முழுவதும் நம்மை ஆதரித்து வழிநடத்தின நம் தேவனின் கிருபையும் நன்மையும் இந்தப் புதிய ஆண்டிலும் நம்மைத் தொடர்வதாக!!

Address

Agastheeswaram
Nagercoil
629701

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kneil Memorial Agasteeswaram CSI Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share